
வசந்தம் முழுதும் விழித்திருக்க
பனி முடியும்வரை
தூங்கிக்
கொண்டிருந்தேன்
வசந்தத்தின் துவக்கத்தை
அதிகாலைப் பறவை
அறிவித்துச்
சென்ற பின்புதாம்
கருணை மரங்கள்
கடைசியாய் பனியுதிர்த்திருக்க
வேண்டும்
மொத்தமாய் சுருட்டிக் கொண்டு
பூட்டியிருந்த
மரக்கதவிடுக்கின்வழி
நுழைந்த பனி
கடந்தேயாக வேண்டியதற்காக
என் முன் அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும்
12 comments:
எப்ப கேட்டதுக்கு கவிதை எப்ப வருது? :-)
ஜோக்ஸ் அபார்ட், கவிதை - வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும் - நல்லாயிருக்கு!
இது போன்ற எழுத்துகளையும் கவிதைகளையும் படிக்கும் பொழுது என் பிளாக்க இழுத்து மூடிடலாம்னு தோணுதுங்க.. அற்புதப் படைப்பு.
//என் முன் அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும்//
அட அட கவிதை நல்லா இருக்குங்க அய்யனார்
நல்லா இருக்கு அய்ஸ்.
//அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும்//
பனி பற்றிய இந்த வரிகளைப் படிக்கையில், வெகுநாட்கள் முன் தமிழ்நதி எழுதிய
//இத்தனை கொலை செய்தும்
இன்னமும்
வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது
வெயில்! //
என்ற வரிகளுடன் முடியும் கவிதையும் ஞாபகம் வந்தது.
'உறைந்திருந்த கொடும்பனியும்
திரிந்தலைந்த சுடு வெயிலும்'
என்று துவங்கி யாரேனும் கவிதை எழுதக் கூடும் :)
அனுஜன்யா
ரொம்ப சில்லுனு இருக்கு தல.. ரொம்பவே நல்லா இருக்கு.. :)
http://www.ayyanaarv.com/
இது எப்போ?? கலக்கல். வாழ்த்துக்கள்.
நிறைய நிறைய எழுதுங்க. முக்கியமா நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.
வாழ்வயும் , சாவையும் பனிக்குள் அடக்கிய விதம் மிகவும் அழகு . பகிர்வுக்கு நன்றி !
நல்லாயிருக்கு அய்யனார்.
படித்து முடித்ததும் விவரிக்க முடியா உணர்வு.
@நர்சிம்
கமெண்டை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
//அசையாது
காத்திருக்கிறது
வாழ்வைப் போலவும்
சாவைப் போலவும்//
சில நொடிகள் அமைதியாக இருக்க வைத்த வரிகள், இதுவே இக் கவிதையின் வெற்றியும்கூட
Very Nice Poem Ayyanar after your book release..keep writing.
//
நர்சிம் said...
இது போன்ற எழுத்துகளையும் கவிதைகளையும் படிக்கும் பொழுது என் பிளாக்க இழுத்து மூடிடலாம்னு தோணுதுங்க.. அற்புதப் படைப்பு.
Wednesday, May 5, 2010 10:45:00 AM GMT+04:00
//
எனக்கும் நர்சிம் போலவே தோன்றுகிறது அய்யனார்...உஙக்ளைப் போல சிலர் கூடையை பூக்களால் நிரப்பும் போது நான் குப்பையால் நிறைக்கிறேனோ என்றே ஐயமாக இருக்கிறது...
Post a Comment