
நான் சகலத்தையும் வெறுக்கிறேன்
போலவே சகலமும்
பிறரை நம்ப வைத்துக்
கழுத்தறுக்கிறேன்
போலவே பிறரும்
எவருடனும் பேசப் பிடிப்பதில்லை
போலவே எவரும்
அருவியிலிருந்து குதித்து விடலாம்
விலங்கின் இரையாகிவிடலாம்
நீரில் அல்லது தீயில் பாயலாம்
மிகப் பழைய காதலியின்
மிகமிகப் பழகிய உதடுகளை
கவ்விக் கொள்ளலாம்
திடீர் உறைபனியில்
சிக்குண்ட தடித்த மீனின்
தலையை வெட்டுகிறேன்
இரு துண்
டாகிறது
14 comments:
//மிகப் பழைய காதலியின்
மிகமிகப் பழகிய உதடுகளை
கவ்விக் கொள்ளலாம்//
இதை மட்டும் நான் பண்ணிகிறேன்!
மத்ததையெல்லாம் நீங்களே பண்ணிகோங்க!
wow excellent, can feel your touch.
ஏன் இவ்வளவு சோகம்/கோபம் அய்யனார்?
வதை தான் .மூலத்தை கண்டு பிடித்தால் சரியாகிவிடும் :)) no pun intended
எவருக்கும்...என்றிருக்கலாமோ.
கவிதைக்கான மனோநிலையோடு இருப்பதே ஒருவிதமான வதைதானே அய்யனார், ஆனால் நீங்க அதை கட்டாயமா அனுபவிச்சே ஆகணும்.
:)
போலவே கவிதையும் நன்றாய் இருக்கிறது
:)
இப்படி உன்னால்தான் எழுத முடியும்..திடீர் உறைபனியில்
சிக்குண்ட தடித்த மீனின்' கிம் கி டுக் திரைப்படத்தை பார்த்த உணர்வு இக்கவிதை தருகிறது. குறிப்பாக ‘தி ஐல்' படம் ஏனோ நினைவுக்கு வருகிறது. .ஏதோ ஒரு மன அவசத்திற்குள்ளாகுகிறது இக்கவிதை..வதைபட்டதால்தான் வதைக்க முடிகிறது, அப்படித்தானே அய்யனார்?
வதை வதைதான்.வார்தைகள் கொண்டு வதை சொல்வது
மிகக் கஸ்டம்.
என்றாலும் சொல்லியிருக்கிறீர்கள்.
//மிகப் பழைய காதலியின்
மிகமிகப் பழகிய உதடுகளை
கவ்விக் கொள்ளலாம்
திடீர் உறைபனியில்
சிக்குண்ட தடித்த மீனின்
தலையை வெட்டுகிறேன்
இரு துண்
டாகிறது//
செதுக்கப் படும் வதை
Nalla irukkunga.. :)
எல்லோருக்கும் இருக்கும் வதை, மிகச்சிலரே உணர்ந்த வதை. நன்றாயிருக்கிறது.
//திடீர் உறைபனியில்
சிக்குண்ட தடித்த மீனின்
தலையை வெட்டுகிறேன்
இரு துண்
டாகிறது//
வார்த்தை துண்டானதின் காரணம்... புரியவில்லை. சொல்றீங்களா?
முத்துக் குமார்
இது கொஞ்சம் பழைய யுக்திதான்
இரு துண்டாவதை எழுத்தில் காட்சிப்படுத்துவது
துண்
டாகிறது
:)
நகுலனின்
//உலகத்தில் சும்மா இருப்பது
தான் குதூகலமாக
இருக்கிறது//
-போல் தானே?
விளக்கத்திற்கும் தங்கள் நேரத்திற்கும் நன்றி அய்யனார்.
Post a Comment