Showing posts with label ஓரிதழ்ப்பூ. Show all posts
Showing posts with label ஓரிதழ்ப்பூ. Show all posts
Monday, April 2, 2018
ஓரிதழ்ப்பூ - ராம்கி
ஓரிதழ்ப்பூ-
அய்யனார் விஸ்வநாத்
------------------------------------------------------
அய்யனாரை
நான் முதலில் சந்தித்தது ஜெயமோகன்
தங்கியிருந்த விடுதியில். அங்குதான் முதலில் கேட்டேன் இந்தத்
தலைப்பை.
...
வெயில் கொளுத்தும் களம். மற்ற உணர்வுகளுக்கு
இடம் இருக்குமா? இந்த உலகமும் மனிதனும்
உருவான காலத்திலேர்ந்தே ஆணும் பெண்ணும் உறவாடிய
சிக்கல்களும் தோன்றியிருக்க வேண்டும். மனதின் அடித்தளத்தில் உருவாகும்
அர்த்தமற்ற அல்லது அர்த்தமுள்ள நிஜமான
உணர்வுகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில்
தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய கதை.
அது
ஒரு மலைகளால் சூழப்பட்ட வெயில்
நகரம். தன்னுடைய எண்ண சூழல்களை
வைத்து பிடித்தும் பிடிக்காமலும் போகும் இடங்கள். சங்கமேஸ்வரன்
மலர்விழியின் ஆசைக்கு அவளைக் காவுக்
கொடுத்துவிட்டு மான் முகத்தோடு, சிறு
வயது முதல் மானைப் பற்றிய
கனவுகளோடு வளர்ந்து, நரி முகத்தோடு வரும்
ரவியைக் கைப்பிடிக்கும் அங்கையை வசீகரிக்கிறான்.
எப்போதும்
குடியோடும் அமுதாக்காவின் நினைவுகளோடும் அங்கையை அண்ட முடியாமல்
இருக்கும் ரவி.
பூவைத் தேடி
அல்லது பூவின் அர்த்தத்தைத் தேடி
, துர்காவில் முங்கி கண்டெடுத்த மாமுனி.
துர்காவின் அரை புருஷன் சாமிநாதன்.
இவர்களிடயே நிகழும் பத்து பதினைந்து
நாட்களின் சங்கமம்.
மலையை விட்டு
மாமுனி கடும் கோபத்தோடு இறங்குவதோடு
தொடங்கி ரவி வீட்டைவிட்டு இலக்கில்லாமல்
வெளியேறும் வரை முன்னும் பின்னும்
பயணிக்கும் அதே சமயத்தில் நகரத்தின்
மொத்த சீதோஷ்ண நிலையையும் பதிவு
செய்கிறார்.
மலையும், மலைச் சார்ந்த
மழையும், கொளுத்தும் வெயிலும் , விஸ்கி மற்றும் ஏமாற்றங்களும்
கொண்ட கதம்பம். நுகர்ந்தால் நாசியில்
குருதி பெருகிடும் மலரை ஒத்து இந்தக்
கதையில் போதை சலிப்பின்றி பயன்படுத்தப்
பட்டிருகிறது.
தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம்,
போதை அல்லது அதிகமான புத்துணர்ச்சி
என்ற இரண்டு தீவிர நிலைமைகளைக்
கொண்டு நகர்கிறது.
நல்ல பசி வேலையில்
உள்ளிறங்கும் உணவுப் போல சரசரவென்று
சரியும் எழுத்து.
குளத்தின் மீது
எறியப்பட்ட கல் ஏற்படுத்தும் வெவ்வேறு
தவளைப்பாய்ச்சல் போல எழுத்து – ஒவ்வொரு
முறை படிக்கும் பொழுதும் வெவ்வேறு உணர்வுகளை
உயிர்த்தெழச் செய்கிறது.
பெண்களே ஆண்களின் உந்து
சக்தியாக இருந்திருக்கிறார்கள். அகத்தியராக நினைத்துக் கொள்ளும் நபர் துர்காவில்
கண்டதும், ரவி தேடிய அமுதா
அக்காவிலும், சங்கமேஸ்வரன் மலர்விழியில் கண்டதும் இந்த சக்திதான்.
சம்பவங்கள் துரத்தத் துரத்த ஓடுபவன்
ஒருவன், தன் வினையில் இலக்கில்லாமல்
ஓடுகிறவன் இன்னொருத்தன் என்று வாழ்க்கை ஒரு
சின்ன வட்டத்தில் சுழற்றி சுழற்றி அடிக்கும்.
நம்மில் பல பேர் அதை
உணராமலே வெகு வாழ்க்கையைக் கடந்து
விடுவோம்.
எழுத்தாளன் ஒரு கணம் நின்று
திரும்பிப் பார்த்து விட்டுச் செல்கிறான்.
அதனாலேயே ஓடிய வேகத்துக்கு ஒரு
ஆசுவாசம் போல ஆற்றுப் படுத்தும்
அவனுடைய எழுத்துக்கள்.
ஊரைப் பற்றிய விவரங்கள்
நாவலின் ஊடே விவரிப்பது காட்சியின்
நம்பகத்தன்மைக்கு வலு சேர்கிறது.
“திருவண்ணாமலை
ஒரு வறட்சிப் பகுதி. வெயில்
நகரம். இந்த உயரத்தில் பார்க்கும்
பொழுது எவ்வளவு மரங்கள் தென்படுகின்றன.
ஒரு நாள் கூட இவ்வளவு
மரங்கள் சூழ வாழ்கிறோம் என்ற
எண்ணமே தோன்றாமல் இருந்திருக்கிறோம்.”
நாவலை உருவாக்குவதில் நாவலாசிரியரின் உழைப்பும் அக்கறையும் தெரிகிறது. சில இடங்களில் உரையாடல்கள்
தேவைக்கு அதிகமாகவும் , சில அம்சமான விவரணைகளுக்குப்
பிறகு வரும் வட்டார உரையாடலும்
நெருடலாக இருக்கிறது. இந்த நாவலின் பிரதான
பாத்திரம் ரவியின் தோல்விக்கான காரணம்
அவனின் பொறுப்பற்றத் தன்மையும் (ஆனால் அவன் பாவமாகவே
படைக்கப் பட்டிருப்பான்) காரணமோ என்றும் யோசிக்க
வைக்கிறது.
மாமுனியின் பாத்திரம் அட்டகாசம். கனவுப் பாதையில் கொஞ்ச
நேரம் இவ்வுலகை மறக்க வைக்கிறார்
.
இந்தாருங்கள் ஓராயிரம் பூக்கள் அய்யனார்.
வாழ்த்துகள்.
Sunday, April 1, 2018
ஓரிதழ்ப்பூ - ஜீ.முருகன்
ஓரிதழ்ப்பூ
...........
அய்யனார்
விஸ்வநாத்
………
திருவண்ணாமலை
மலைக்கும் அந்த நகரத்துக்கும் அசாதாரணங்கள்
நிறைந்த வசீகரங்கள் பல இருக்கின்றன. பெரிய
கோபுர வாசலில் இருந்த மண்டபம்
(தீ விபத்தில் அது சரிந்துவிட்டது) என்னை
ஈர்த்தது போல வெவ்வேறு விதங்களில்
அவை உலகத்தின் பல திசைகளிலிருந்து மனிதர்களை
ஈர்க்கின்றன. ஆன்மிகம், பக்தி, கிரிவலம், தத்துவம்
எல்லாம் மேலுக்கான காரணங்கள் மட்டுமே.
‘மரம்’ நாவலின் பிரதான பாத்திரங்களை
உருவாக்கிவிட்டு அவர்களை எங்கே உலாவ
விடுவது என்று சுமார் ஆறு
மாத காலங்கள் யோசித்துக்கொண்டிருந்த போது திருவண்ணாமலை
நிலவெளியை ஞாபகம்கொண்டதும் சட்டென்று அவர்கள் அங்கே குடியேறிவிட்டார்கள்.
அப்படித்தன்
அய்யனார் விஸ்வநாத்தின் ஓரிதழ்ப்பூ நாவலில் வரும் பாத்திரங்கள்
அந்த வினோத நிலவெளியில் பொருந்திப்
போயிருக்கிறார்கள். அகத்திய முனி, சாமிநாதன்,
ரவி, அங்கையர்க்கன்னி, மலர்ச்செல்வி, சங்கமேஸ்வரன், துர்க்கா, அமுதா, ரமா எல்லோருமே
தங்களுக்குள் ஒரு அசாதாரணத்தை சுமந்து
திருவண்ணாமலை மண்ணில் வலம்வருகிறார்கள்.
‘கொம்பில்லா
இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம் கண்டு
தெளிந்து உண்டு நீங்கி நிலையில்
நிறுத்து பிளவில் பூக்கும் மலரை
யறிய வேணுங் கண் யறிந்த
கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து
யடைவாய் உன்மத்தம்’
என்ற புதிரில் ஒளிந்திருக்கும் ஓரிதழ்
பூவை இருநூறு ஆண்டுகளாகத் தேடியும்
கிடைக்காமல் பொதிகை மலையிலிருந்து திருவண்ணாமலைக்கு
வருகிறார் அகத்திய முனி.
ஒரு நாள் ரவி கோபத்தில்
அவரிடம் சொல்கிறான், “ங்கொம்மா, பாவடையத் தூக்கிப் பாரு
இருக்கும்” என. விடை கிடைத்த
மகிழ்ச்சியில் திளைக்கிறார் முனி. பிறகொருநாள் ‘அண்ணாமலை’
தான் அந்த ஓரிதழ்ப்பூ என்றும்
கண்டுகொள்கிறார்.
ரமணாஸ்ரமம்,
சேஷாத்திரி மகரிஷி ஆஸ்ரமம், கந்தாஸ்ரமம்,
தேனிமலை, சமுத்திரம் ஏரி என ஒரு
நாடங்க அரங்கு போல திருவண்ணாமலை
மயக்கம் கொள்ள முனி, சாமி,
ரவி, துர்க்கா, அங்கை எல்லோரும் நாடக
நடிகர்களாக மாறிவிடுகிறார்கள். யாதார்த்தத்தில் காலூன்றாத அவர்களின் வினோதப் பண்புகளே இந்த
நாவலின் பெரிய வசீகரம். காமமும்
காதலும் போதையும் பைத்திய நிலையும்
அவர்களை இயங்கும் விசைகளாகின்றன.
‘மான்’ என்ற படிமம் ரொமான்டிஸத்தை
நோக்கி நாவலை இழுத்தாலும் பெரும்
காமத்தை நோக்கிய பாத்திரங்களின் விழைவு
அதை ஈடு செய்துவிடுகிறது.
நம்ப முடியாத, நாடகீயமான சம்பவங்களே
நாவலின் கட்டமைப்பு என்பதால் நாவலுக்கு பலவீனமாக
இல்லாமல் அவையே பலமாகவும் மாறிவிடுகின்றன.
இந்த நாவல் வேண்டி நிற்கும்
தத்துவார்த்த தளம் ஒன்று கைகூடாமல்
போனதும் நடந்திருக்கிறது.
மண் வாசனை உத்தரவாதத்தோடு, வட்டார
மொழிப் பேசி, ரத்தமும் சதையுமான
மனிதர்கள் உலாவும் யாதார்த்த வகை
என்ற பாதுகாப்பான எல்லைக்குள் நீதிக் கதைகள் எழுதுபவர்களுக்கு
மத்தியில் அபூர்வமாக மலர்ந்துள்ளது கனவுத் தன்மை கொண்ட
இந்த ஓரிதழ்ப்பூ.
..........
வெளியீடு
கிழக்குப் பதிப்பகம், பக்கங்கள் 166, விலை ரூ.150.
Thursday, March 29, 2018
ஓரிதழ்ப்பூ - அமுதமொழி
ஓரிதழ்ப்பூ
- அய்யனார் விஸ்வநாத் அவர்களின் புதினம். அதன் இறுதி
வடிவ நகலை அச்சுக்கு முன்
படித்து கருத்து சொல்லும்படி அனுப்பி
வைத்துள்ளார் . படித்துகொண்டிருக்கிறேன் . அகத்திய முனிவரின் தேடலும்
போகனின் பதிலுமாய் தேடல் தொடரும் ஆரம்பம்
திகைப்பை தருகிறது .
"கொம்பில்லா
இலையில்லா காம்பில்லா ஓரிதழ் பூவாம்
கண்டு தெளிந்து உண்டு நீங்கி
-நிலையில் நிறுத்து
பிளவில்
பூக்கும் மலரை யரிய வேணுங்
கண்
யறிந்த கண்ணை சுவைத்த நாவை
அறிந்தறிந்து அடைவாய் உன்மத்தம் "
இந்த பாடல் தேடலுக்கான உந்துதலாக
இயக்குகிறது கதை
ஓரிதழ்ப்பூ - என் பார்வையில் .
வாழ்க்கை
மனிதர்களை இடம் மாற்றி சேர்த்தே
வேடிக்கை காட்டுகிறது. அதிலிருந்து தப்பித்து அவர்கள் அவர்களுக்கான இடத்தை
கண்டடைய செய்யும் முயற்சிகளின் சிராய்ப்புகள்
வலிகள் வேதனைகள் பரிதவிப்புகளை எல்லாம்
விரிவாய் பேச ஒரு கதையாகிறது
ஓரிதழ் பூ.
தனக்குள்
உரைவுற்றிருக்கும் மென்மையை எழுப்பத் தெரிந்த
புரிதல் தேடி ஆண்களும் பெண்களும்
இப்பிரபஞ்ச வெளியெங்கும் அன்பை தொலைத்த அகதிகளாய்
அல்லலுற்று அலைவதை படிப்பவர் மனதில்
அழுத்தமாய் பதிய வைக்கிறார். தன்னை
தன் கதா பாத்திரங்களில் ஒளிந்துகொண்டு
கதை ஆசிரியர் பேசாமால் கதை
மாந்தர்களின் வாழ்க்கை நகர்வில் அதை
உணர்த்திப் போவது இந்தப் புதினத்தின்
சிறப்பு.
காமத்தை
அதன் அகவியல் சார்ந்த நிறைவை
எய்த யத்தனிக்கும் இவரது கதை மாந்தர்கள்
நம்முள் நம் அருகில் எதிரில்
எங்கும் வியாபிதமாகி நிறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்திப் போகிறார்.
கதையின்
ஓட்டம் ஆரம்பத்தில் உள்ளே நுழைய முடியாத
ஒரு சின்ன சிக்களை வைக்கிறது.
கதை மாந்தர்களின் அறிமுகம் இன்னும் தெளிவான
நிறைவில் நேரடியான அறிமுகத்தில் நிகழ்த்தப்பட்டிருந்தால்
இந்த நெருடல் உணராமல் சுலபமாய்
கதைக்குள் ஒன்றி இருக்க முடியும்
கதையின்
முடிச்சுகள் அவிழ்க்கப்படும் இடங்கள் புதிய சுவாரஸ்யமான
பரவசத்தில் படிப்பவரை ஆழ்த்துகிறது.
மாமுனியின்
ஓரிதழ் பூவுக்கான தேடல் அது பெண்ணின்
அந்தரங்க உறுப்பின் கலை வடிவாய் பரிமளிப்பதை
ஆசிரியர் கதை முழுவதும் தொடர்ந்து
வரைந்துப் போகிறார். சில இடங்களில் அது
சலிப்பையும் எட்டி பார்க்கச் செய்கிறது
.
பெண்ணுடன்
கூடல் என்பது உடல் தேவையின்
உச்சம் என்பதை விட மனத்திருப்தி,
ஆத்மா நிறைவுக்கான தாகம் என்பதான புரிதலை
முன் மொழிந்து நகரும் புதினம்
இறுதி பக்கங்களில் வேகமெடுத்து ஓடுகிறது .
புத்தகத்தை
தரையில் வைக்க முடியாத ஈர்ப்பை
கொட்டியிரைத்து நகர்கிறது. இதோ முடிந்து விடுமோ
என்ற பரவச தவிப்பை படிப்பவரின்
அனுபவத்தில் விட்டுச்செல்கிறது.
துர்க்கா, அங்கையற்கண்ணி, அமுதா, மலர் எல்லாம்
தங்கள் தீரா காதலின் சுதந்திர
வேட்கை துரத்த துரத்த அதை
கண்டடைய ஓடிய ஓட்டத்தின் களைப்பில்
விடுதலை நோக்கி பயணிப்பதாக கதையை
முடிக்கிறார்.
இவர் பெண் பாத்திரங்கள் தங்களின்
மினுங்கலான அக அழகின் ஒளிர்வில்
நிறைந்திருக்கிறார்கள். துர்காவுடன் அங்கையற்கண்ணி பயணமாகிறாள். சங்கமேஸ்வரன்
எனும் குறியீட்டு வடிவின் நிஜ உருவின்
அன்பில் திளைக்கிறாள் .
அமுதா தனித்தே இப்பிரபஞ்ச அழகை
தேடிக்கொண்டு போகிறாள். அதில் அவளுக்குத் துணையாக
அவளே போதுமென்ற நிறைவை எட்டுகிறாள்.
மாமுனி துர்காவால் அவரது மனைவி வசம்
ஒப்படைக்கப் படுகிறார்.
சில மனிதர்களின் அறிமுகத்தில் நாம் தரிசணங்கள் கண்டடைந்த
பரவசத்தில் சிலிர்ப்பதை துர்கா மூலம் நிகழ்த்துகிறார்
. அது கேலி செய்கிறாரோ அப்படியான
புரிதலை என்றும் கேள்வி எழுப்புகிறது
.
இன்னுமொரு
வாசிப்பில் வேறு புரிதலையும் தரலாம்
இந்தப்பூ. இன்னுமொருவர் வாசிப்பில் பல் வேறு புரிதலும்
வசப்படலாம் .
அனைத்தையும்
கருத்தேற்று பதிப்பித்தால் இன்னும் மெருகேறலாம் இந்தப்பூ.
நிறை நன்றியும் வணக்கமும் அய்யனார் விஸ்வநாதன். வாழ்த்துகள்
.
ச. கனியமுது
காவேரிப்பட்டினம்.
ஓரிதழ்ப்பூ - கனவுப் பிரியன்
“ புத்தக
அறிமுகம் "
" ஒரு
இடத்துல இருக்கமாட்டேன்கிறான். துருதுறுன்னு வாரான். எது கொடுத்தாலும்
கொஞ்ச நேரம் தான் வேலையாடுறான்.
அடுத்ததுக்கு போயிறான் “ என்பது தான் என்
குழந்தைகளைப் பற்றி யாரேனும் சொல்லும்
அதிகபட்ச குற்றச்சாட்டாக இருக்கும்.
“ மனசுக்குள்ள
நினச்சுக்குவேன் தக்காளி, நெல்லு வச்சா
நெல்லு தானே வெளையும்ன்னு “
என்னை ஒருமுகப்படுத்துவது கஷ்டம். என்னை மட்டுமல்ல
கூடுதல் சிந்தனை கொண்டவனை நிலைப்படுத்தவே
முடியாது. சதா ஏதேனும் ஓடிக்கொண்டே
இருக்கும் அவனுள்.
“ தட்டலிஞ்சு
திரியிறான் “ என்பார்கள் ஊருக்குள்.
வெளிகாட்டுவதற்கு
அவனுக்கு ஏதேனும் தடம் கிடைக்கும்
போது வார்த்தை வடிவில் கொட்டத்
துவங்கி விடுகிறது அவனது அலைகழிப்பு.
அதிலும்
என்னமாதிரி அகங்காரம் கொண்டவனுக்கு குக்கர்ல மூணு விசில்
எல்லாம் பத்தாது. ஏழு விசில்
வைக்கணும் அப்போ தான் எதுவுமே
வேகும்.
எதையாவது
வாசிக்கிறப்போ அல்லது எதையாவது பாக்கிறப்போ
அதுக்குள்ளே என்ன மறந்து நிக்கனும்.
அப்போ தான் எதுவுமே தொடரும்.
இல்லைன்னா சட்ன்னு நான் சுய
நினைவுக்கு வந்துடா அதுக்குள்ளே பயணப்பட
என்னால முடியாது.
கொஞ்சமேனும்
எளிமையான புரிதல் இருக்கணும்
புதுசா ஏதாவது இருக்கணும்
தகவல் இருக்கணும்
நூறு இருபது வார்த்தைகள் கொண்டு
ஏன் இந்த எழவெல்லாம் சொல்லுறேன்னு
பாக்குறீங்களா. என்ன எதையாவது வாசிக்க
வைக்கிறது கஷ்டம்ங்கிறதை சொல்லவேண்டி இவ்வளவு மெனக்கெடல்.
எப்போமாவது,
இத விடக்குடாது முழுசா
வாசிச்சிரனும் எனும் இந்த அற்புதம்
நிகழும்.
“ அய்யனார்
விஸ்வநாத் “ அவர்களின் “ ஓரிதழ்ப்பூ “ புத்தகம் அதை சாத்தியப்படுத்தியது.
உண்மையிலே
“ ஓரிதழ்ப்பூ “ ன்னா என்ன தெரியுமா
ஆறாவது அத்தியாயத்தில் வாத்தியார் கோவத்துல சொல்லுவான் பாரு
“ என்று நண்பன் பீடிகை போட
பூங்காவனத்தின்
புருஷன் மாமுனி போல நானும்
“ கொம்பில்லா
இலையில்லாக் காம்பில்லா ஒரிதழ்ப் பூவாம் கண்டு
தெளிந்து உண்டு நீங்கி – நிலையில்
நிறுத்து பிளவில் பூக்கும் மலரை
யரிய வேணுங் கண் யறிந்த
கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து
யடைவாய் உன்மத்தம் “
எனும் வரிகளில் குடியிருக்கும் அந்த
ஒரிதழ்ப்பூ பற்றி தெரிந்து கொள்ளும்
ஆசையில்
பெய்யும்
பேய் மழையையே ஒரு முறை
வானத்தை உற்றுப் பார்த்து நிறுத்தும்
வரம் கொண்ட மாமுனிவனோடு சேர்ந்து
தேடத் துவங்கினேன்.
ரவி – அமுதாக்கா
அமுதாக்கா
– அவ புருஷன்
ரவி – ரமா
ரவி – அங்கயர்க்கண்ணி
அங்கயற்கண்ணி
– சங்கமேஸ்வரன்
சங்கமேஸ்வரன்
– மலர்ச்செல்வி
அங்கயற்கண்ணி
– துர்க்கா
துர்க்கா
– சாமிநாதன்
சாமிநாதன்
– லட்சுமி
துர்க்கா
– அய்யனாரு
அய்யனாரு
– பூங்காவனம்ன்னு கதையில் சம்பவங்கள் ஊடே
அஞ்சு ஓரிதழ்ப்பூவை ஆசிரியர் வார்த்தையில் பரப்பிக்
காட்டுகிறார்.
கதை அப்படியே திருவண்ணாமலையை சுத்தி
பேயா சுத்துது. பேய்ன்னா அப்படி ஒரு
பேய்த்தனம்.
இந்த புத்தகத்தின் கதையை நிஜம்ன்னு நம்புறதா,
புனைவுன்னு சொல்லுறதா இல்லை அதீத புனைவுன்னு
எடுக்கவான்னு, வாசிப்பவனை உன் தரத்துக்கு ஏத்தமாதிரி
நீயே எது எதுல சேத்தின்னு
தேடிக்கோ என்று கொடுத்துவிடுகிறார்.
அகத்திய
முனியா கண்டா அகத்திய முனி
அதுவே அய்யனாரா கண்டா அய்யனாரு.
ஓரிதழ்ப்பூ
வைத்தேடி அலைஞ்சா ஓரிதழ்ப்பூ, இல்ல
ஊருக்குள்ள நடக்கத்தானே செய்யுதுன்னு எடுத்துக் கிட்டா சம்பவம் அவ்வளவு
தான்.
ஆனா சொல்லுற விதம் இருக்கே
அது ரொம்ப கிளாசிக்கா இருக்கு.
ஆசிரியரே
முன்னுரையில் சொல்லுவது போல முதல் ஏழு
அத்தியாயம் மிரட்டாலா இருக்கு.
உண்மையிலே
வந்திருக்கிறது முனிவன் தானா.
மகரிஷியைத்
தேடி வந்தவனா.
ஓரிதழ்ப்பூ
என்ற அந்த வரிகளை எழுதியது
யார்.
உண்மையிலே
போகர் யாரு.
இதெல்லாம்
மானிட வடிவமா.
மலர்ச்செல்வி
உண்மையிலே அந்த பர்வதமலை காட்டுல
காணாம போயிட்டாளா.
மனிதத் தலை கொண்ட மான்
வருமா அங்கயர்கன்னியை தேடி.
இது எந்த காலத்துல நடக்குது.
இப்படி பல கேள்விகள் வாசிப்பவன்
முன் அடிபட்ட திறந்து இருக்கும்
புண் மீது சுற்றிவரும் ஈ
போல கோய்ங்ங்ங்.. என்று சுற்றுகிறது.
மகரிஷி,
அகத்தியர் எல்லாம் கதையில் வருகிறார்கள்.
அதற்காக கொதிக்காமல் விசுவாமித்திர்ராக சிவாஜி நடித்த " ராஜரிஷி
" யும் தமிழ்ப்படம் தான் என்பதை சமூகம்
நினவில் கொள்ள வேண்டும்.
ஓரிதழ்ப்பூ
என்று பெயர் வைத்ததாலோ என்னவோ
ஏகப்பட பூக்கள் பூ மரங்கள்.
அதி அற்புதமான ஒரு வீதி வழி
நடப்பது போல உள்ளது.
மழைக்கு
இடையே ஒரிதழ்ப்பூவை ஒவ்வொருவரும் தரிசிக்கும் நிகழ்வுகளை எல்லாம் நல்ல கவிதைத்
தனத்துடன் விவரிக்கிறார். அதிலும் கூடுதலாக அவர்
பெண்கள் பகுதியில் இருந்து அவற்றை பேசுவதால்
இன்னும் அழகாக உள்ளது.
“ ஆதி உறவு அந்து போகும்
......உறவு அக்காது “ என்ற வட்டார வழக்கு
ஒன்று உண்டு.
காதல் என்றும் பெண் போக்கிலே
என்பார்கள்.
வாழ்வியலும்
பெண் போக்கில் தான்
அப்போ ஓரிதழ்ப்பூ.............?
எங்க ஊருல பஜாருல என்னோட
வண்டியை நிறுத்திட்டு ஏதாவது வாங்கப் போவேன்.
திரும்பி
வரும் போது சிலநேரம் அழுக்கு
உடையோட மெலிந்த பெண் நிற்பாள்.
என்னைக் கண்டதும் கையை நீட்டுவாள்.
நானும் சிரித்தபடி பணம் தருவேன். வாங்கிக்
கொண்டு எதுவும் பேசாமல் போய்
விடுவாள். ரோட்டில் யாராவது சீண்டினால்
ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கி விடுவாள்.
அந்த கிறுக்கச்சியை காணும் போதெல்லாம் எனது
நண்பர்கள் அது என்ன உன்கிட்ட
மட்டும் பணம் கேக்கிறா. நீயும்
கொடுக்கிற. பைத்தியக்காரிக்கி போய் பணம் கொடுக்கிற
என்றெல்லாம் கூறுவதுண்டு. நான் ஒன்றும் பதில்
சொன்னதில்லை.
ஆனால் கல்யாணம் ஆனதும் மனைவியுடன்
முதன் முதலாக அவளை சந்திக்க
நேர்ந்த போது மனைவி அவள்
என்னிடம் பணம் வாங்கிக் கடந்ததும்
கேட்டாள்
“ யாரு இந்த கிறுக்கி “
“ ............ஸ்கூலோட
இங்கிலீஷ் டீச்சர் “ என்றேன்
திக் என்று பயந்தவளாக “ என்னது
“ என்றவளிடம்
“ நம்ம வீட்டுக்கு எதிரே இருக்கிற அல்லல்காத்தான்
வீட்டுக்கு டியுசன் எடுக்க வருவா.
நேருல அப்போ பாகிறப்போ ஒரு
சிரிப்பு சிரிப்பா அவ்வளவு தான்.
அப்போ அவளுக்கு கல்யாணம் ஆகல.
நல்ல அழகா இருப்பா. ............ளோட
ஆட்கள் அஞ்சாறு பேரு சேர்ந்து
கற்பழிச்சிட்டாங்க. பைத்தியம் மாதிரி திரியிறா. “ என்றேன்.
எல்லாமே
தோற்ற மயக்கம் தான்.
நீ எதுவாக காண்கிறாயோ அதுவாக
இருப்பேன்.
இந்த புத்தகமும் அப்படித்தான்.
x
ஓரிதழ்ப்பூ என்பது ஒரு பூ தானா?
நதியின் பெயர் பூர்ணா
முதல் விழுங்கலில் துவர்த்தாலும்
மறுமுறைக்கு தவித்தது நாக்கு
இரண்டாவது மடக்கில் தோளில் முளைத்தன சிறகுகள்
தக்கையாய் மிதந்தன கால்கள்
கருவறை விட்டெழுந்த அவசரத்தில்
பிருஷ்டங்கள் நடுவே சுருண்டிருந்தது உன் ஆடை
சருமத்தில் சந்தன வியர்வை
வெண்கல முலைகளில் ததும்பும் இனிமை
கனவின் படிகளில் இடறியோ
மதுவின் சிறகிலிருந்து உதிர்ந்தோ
உன் யோனிக்குள் துளியாய் விழுந்தேன்
“யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்”
பூர்ணா நதியின் மடிப்புகளில் ஒடுங்க மறுத்து
அலைகிறது சூரியவெளிச்சம்
ஆர்யாம்பாளின் கண்ணீரில் கரையாத
பிரம்மச்சாரியின் முதலைப் பிடிவாதத்தின்
காவி நெடியில் பூமி மயங்கி மீண்டும் விழித்தது
கற்படியின் குழியில் தேங்கிய நீர் வெதுவெதுப்பு
காற்று உந்திய புதிய அலையில்
குளிர் நதியும் அத்வைதிதான்-
போதையும் களவும் போல
கடவுளைப் புணர்ந்த ஆனந்தம் கொண்டாட நானும்
மனிதனைப் புணர்ந்த பாவம் தொலைய நீயும்
முழுகிக் கொண்டிருக்கிறோம் தேவி ஒரே நதியில்.
- சுகுமாரன்
நான் செய்த தவறுகள்
என்னுடைய முதல் தவறு
கடவுளில்லாத உலகத்தில் பிறந்தது
இரண்டாவது தவறு
கடவுளை எனக்காக உருவாக்கிக் கொண்டது
மூன்றாவது தவறு
பால்பேதமற்றிருந்த கடவுளை
இரண்டாகப் பகுத்து மனித சாயலில் ஆண்-பெண் ஆக்கியது நான்காவது கடைந்தெடுத்த முட்டாள் தனம்
இனப்பெருக்க உறுப்புகளைத் தூண்டி விட்டது
ஐந்தாவது தவறு
ஆண்கடவுளுக்கு ஆணுறை வழங்க மறுத்தது
ஆறாவதாக குட்டிக் கடவுளைக் கொண்டு போய் பள்ளியில் சேர்த்தது
ஏழாவது தவறு
எனது வீட்டுக்குப் பக்கத்திலேயே கோயிலைக் கட்டிக் குடியமர்த்தியது
எட்டாவது தவறு
என் துணைவியை ஆண்கடவுளிடம் சோரம் போக விட்டது ஒன்பதாவது பெருந்தவறு
பழி வாங்கும் எண்ணத்தோடு பெண்கடவுளை நான் வன்புணர்ச்சி செய்தது
பத்தாவது தவறு
என் துணைவியின் வயிற்றில் கடவுள் உண்டானதையும் பெண்கடவுளின் வயிற்றில் மனிதர் உண்டானதையும் கருவழிக்க மறந்தது
நான் செய்த பத்து தவறுகளுள் எனக்கு மிகவும் பிடித்த தவறு கடவுளை எனக்காக உருவாக்கியதுதான்.
- ரமேஷ் பிரேம்
தவறுகளின் நிமித்தம், நான் உட்செல்கிறேன். பின் வெளி வருகிறேன். அணைக்காமல் விட்டுச் சென்ற சிகரெட் புகைச்சுருள் சிவந்து பின் அமர்கிறது. காற்றுவெளியின் துகள்களின் நடுவே அதன் மீந்த சாம்பல் இன்னும் சின்னஞ்சிறு துகள்களாக, பின் துகள்கற்ற அகாலப்பரப்பாக, ஏதுமற்றதாக மறைகிறது. சுருண்ட புகை மென்மேலும் உயர்ந்து உயர்ந்து, அருகமர்ந்த நாசிகளில் நிரம்பி, சுவாசத்திற்குள் புகப்புக, அதன் திட்டுத்திட்டான அரூபம் படிந்து எண்ணங்களை உரசத் தொடங்கியது. எத்தனை முறை பார்த்திருக்கிறோம். என் முதல் தொடுகை எப்பொழுது நடந்தது. மாமா மறைத்து வைத்திருந்த நிர்வாணப்படங்களையும் அதன் தலைகீழான புணர்வுகளையும், குறிகள் எதன் பொருட்டு அலைக்கழிகின்றன என்றும் நினைத்துக் கொள்கிறேன். கடவுளர்களும் மனிதர்களும் புரளும் நிலையற்ற பரப்பில் தொடர்ச்சியாக உள் நுழைவதும் வெளித் தள்ளுவதும். கனவின் நிலத்தில் தவறுகளினால் (தவறுகளா) உருவாக்கிய உடல்களை விடாது கடித்துக் கொண்டே இருக்கிறது ஆண் மனம். பற்களாலான குறிகள் கொண்டிருக்கிறேன். எண்ணிலடங்கா உடல்களின் சுழலில் மீள மீள உள் செல்கிறேன் வெளித் தள்ளுகிறேன். ஆனால் தொடர்ச்சியாக பீய்ச்சப்பட்ட விந்துவிற்கு பின் எளிய உயிரியாக தன்னை பாவித்துக் கொள்ளாத ஆண்களே இல்லை போலும். எதனையோ தூக்கி சுமந்து கொண்டிருக்கும் பொழுது கால்கள் நழுவி அத்தனையும் கரையற்ற நீர்ப்பரப்பில் கரைந்து ஒன்றுமில்லாமலாவது.
“கொம்பில்லா இலையில்லாக் காம்பில்லா ஓரிதழ்ப் பூவாம் கண்டு தெளிந்து உண்டு நீங்கி நிலையில் நிறுத்தி பிளவில் பூக்கும் மலரையறிய வேணுங் கண் யறிந்த கண்ணைச் சுவைத்த நாவை அறிந்தறிந்து யடைவாய் உன்மத்தம்”
ஓரிதழ்ப்பூ பெண்குறி. அகத்தியர், போகர், ரமணர், சங்கமேஷ்வரன், அய்யனார், ரவி, சாமிநாதன், ஜோசியர், பெரியசாமி, மான், திருவண்ணாமலை. மையமற்று அங்கும் இங்குமாக செல்லும் கதை உத்தி. பெண்கள், காளி, துர்கா, லட்சுமி, அங்கயற்கண்ணி, மலர்ச்செல்வி, ரமா, அமுதா, டீச்சர் அம்மா. அவர்களுடைய ஒவ்வோரு ஓரிதழ்களும். திரும்பத் திரும்ப பூக்கள். இவர்களின் உலகிற்குள், கனவிற்குள், உறக்கத்திற்குள், நிலத்திற்குள், உணவிற்குள் என சமனின்றி பாயும் கதையில் தொடர் கண்ணியாக ஒரே பெண்கள். இந்தப் பெரும் சங்கிலியில் ஊளையிட்டுக் கொண்டே இருக்கும் வன மிருகம் ஒன்று கழுத்து கட்டுண்டு இருக்கிறது. கட்டுண்டால் மட்டுமே கிடைக்கும் ஊன். ஆனால் தன்னால் கட்டவிழ்க்க முடியும் என்று அறிந்து கொண்ட பின் தான் அந்த கனத்த சங்கிலியை தன் உடல் முழுதுக்குமாய் கட்டிக் கொள்ள முனைகிறது. பெரிதும் சிறிதுமான இந்தச் சங்கிலியின் அழுத்தம் அதன் உடலை ஒரு எரிவாயு போல உறிஞ்சிக் குடிக்கத் தொடங்குகிறது. ஒரு சமயம் இன்னும் இன்னும் என அந்த மிருகம் லயிக்கையில் நிகழ் உலகில் வெத்துக் கூடாக கிடக்கும் என்றால் அப்படியுமில்லை. அந்த சங்கிலிகள், மிருகம், லயிப்பு, கனவு எல்லாம் கதை சொல்லலில் மையமின்றி போய் விடுகிறது. காமம் தான், பெண் உறுப்பில் பூ பூத்திருக்கிறது.
அமானுஷ்ய குணாதீசயங்களுடன் இருக்கிறார்கள் பெண்கள். மான்களுடன் புணர்ந்து பிள்ளைகள் பெறுவார்கள். பித்தனுடன் கூடி இன்பம் துய்ப்பார்கள். நெஞ்சு மிதித்து காளியாவார்கள். கழுத்துடைந்து பலி ஆடாய்க் கிடக்க விரும்புவார்கள். எதற்கு இப்படி ஒரு பயம் அவனுக்கு அவள் யோனியைப் பார்த்ததும் தொற்றுகிறது. அவன் ஏன் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மூத்திரம் மலம் வாந்தி எனப் போய்க்கொண்டிருக்கும் பாதையில் திரும்பத் திரும்ப பெண் பூ பூ நாற்றம் நாற்றம் என்று எனக்கு தலைகீழாக்கம் ஆகியிருந்தது. உவர்த்த மத நீரின் ருசி, பிசுபிசுப்பு, மணம் என அதன் வாதையின் ரீங்கரிப்பு என்னுள் புகும் பொழுது, இன்னும் ஆழமாக அவள் விரல்கள் உள் நுழைந்து வெளியே பீய்ச்சிக் கொண்டிருந்தாள். திரும்பத் திரும்ப தெளிவற்ற பாதையினுள் போய்க்கொண்டிருப்பதைப் போலவே இருந்தது. ஆனால் சொல்ல விளைவது என்ற கருத்திற்குள் நான் நுழையவே இல்லை.
புனைவு மொழி படிமங்களால் ஆனது என்றே நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் அந்த ஒவ்வொருவனாகவும் ஆகிக் கொண்டிருக்க வேண்டும். விழுந்து எந்திரிக்க வேண்டும். மாயயதார்த்தம், யதார்த்தம், புனைவு, பின் நவீனத்துவம், மிகு கற்பனை, மீளுருவாக்கம், முரணான கதை சொல்லல் முறை என்று எதற்குள்ளும் செல்லவில்லை. ஆனால் வெகு காலமாக ஆண் மனம் உருவாக்கிய பிரக்ஞையைத் தேடிக் கொண்டிருந்தேன். சாத்தியமற்ற வழிகளில் அதன் பைத்தியக்களையைப் பிடித்து விடலாம் என்று நம்பினேன். பெண்கள் தேவதைகளாக இல்லை காளிகளாக உருவானவர்களா என்று நம்பவில்லை. இளகியவர்களா நிச்சயமில்லை. அரதப்பயலுக்கு பொறைந்தைகள, தேவடியாப்பய, புளையாடி மோன, புண்டாச்சி மவன, புண்டைக்கு பொறந்தைகள, தள்ளைய ஓத்தவன, அக்காள வோளி இப்படி உறவுகளுக்குள் தினமும் புணரும் வார்த்தைகளை பெண்களின் மொழி வழியாகவே அறிந்து உணர்ந்திருக்கிறேன். அதனால் அது மிக எளிதாக பெண்ணுக்கான வசை, பெண்களை மைய்யப்படுத்தி ஆணைக் குறிக்கும் வசை. ஆனால் ஆண் பெண் எனும் உறவிற்குள் காமம் அற்றுப் போகையில் அவர்களுக்குள்ளான உறவு என்பது எதனை அமைக்கிறது. எந்தப் பிடிமானம் இருக்கும்.
தன் எளிய தாழ்வுணர்ச்சியிலிருந்து அவன் பெண்களை அறிகிறான். அம்மையை விரும்பும் அகம், காதலியை அங்கு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. அதே நேரம் அம்மை காளியாகி விடுவதில்லை. காதலியின் காளியின் கணங்கள் அவனுக்கு தேவை. அதே நேரம் சந்தன வல்லியாக அவள் வந்து அணைத்துக் கொண்டு நெஞ்சில் மிதிக்க வேண்டும் என உள்ளூற ஆசைப்படுகிறான். காதலியின் முலையை சப்பாத ஆண் என்று யாரும் இருக்க மாட்டார்கள். அவன் குழந்தையாகவும் வன் மிருகமாகவும் திரும்ப காதலனாகவும், எளிய உயிரியாகவும், வெறும் உடலாகவும், புனைந்து கொண்டே இருக்கும் பாவனையில் பெண் தன்னை காதலியாக, அம்மையாக, தமக்கையாக, காளியாக, பிள்ளையாக, அனாதரவானவளாக உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்களோ?
பிம்பங்களுக்கான எதிர்பிம்பங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கையில் ஒன்றை உணர்கிறேன். பிம்பங்களின் ஆடி யார் வசம் இருக்கிறது என்று. அதனால் வானம் அழைக்க பொதி மூட்டையக் கொண்டு நகரும் ரவி என்னிடம் வசப்படவே இல்லை. வந்திருந்தால் அவன் தொங்கிக் கிடக்கும் மொன்னைக் குறியை நான் அறிந்து கொண்டிருக்ககூடும். கூடவே மொன்னை மனிதனாய் சாமி நாதனின் கால் இடுக்கில் அகப்பட்டுக் கிடக்கும் வெத்துக் களச்சிகளையும். பின் எதற்காக இந்தக் கவிதை. ஏன் அய்யனார் புத்தி பேதலித்திருக்கிறான். அவன் சுகித்த அந்த ஓரிதழ்ப்பூவை, இவர்கள் ஏன் விலக்கினார்கள். ஆமாம். ஒரு பித்து நிலை வேண்டும் போலும் இந்தப் பெண்களுக்கு. அய்யனாரின் பெண்களுக்கு மான் தான் வேண்டும். மான் தலை உள்ள ஆண்களிடம் விடைத்த குறிகள் உண்டோ. இல்லை. இது குறி சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை. ஏன்! திருவண்ணாமலையே ஒரு பெருத்து எம்பி நிற்கும் குறிதானே. வானம் அளக்க, உள் சென்று வெளி செல்கிறேன். மறுபடியும் நான் செய்த தவறுகள். உண்மையில் காமத்தின் பொருட்டு நான் சென்ற தூரத்தின் வழியில் தென்பட்டனர் இவர்கள்.
ஆனால், எனக்கு மிகவும் பிடித்த தவறு கடவுளை எனக்காக உருவாக்கியதுதான். போதைக்கும் களவுக்கும் இடைப்பட்ட காலமற்ற பொழுதில் வந்தாய் நீ
நன்றி,
நந்தகுமார்
http://nanthangl.blogspot.ae/
Tuesday, July 11, 2017
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பத்தி ஒன்று
"தீதிலிருந்து நன்மைக்கு
இருளிலிருந்து ஒளிக்கு
இறப்பிலிருந்து பெருநிலைக்கு”
வேட்டவலம் பஸ் ஸ்டாண்டிலேயே இறங்கிக் கொண்டேன். லாரி என்னை உதிர்த்துவிட்டு பை பாஸ் ரோட்டிற்காய் திரும்பியது. இறங்கி நடக்க ஆரம்பித்தேன். கை வலிக்க ஆரம்பித்திருந்தது. பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் சாலையை நிறைத்திருந்தார்கள். புளிய மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல ரமா தன் மகளோடு நின்று கொண்டிருந்ததை தூரத்திலேயே கவனித்து விட்டேன். அவசரமாய் திரும்பி வந்த வழியே நடக்க ஆரம்பித்தேன். அவள் என்னைப் பார்த்துவிடக் கூடாது. தலையைக் குனிந்து கொண்டே நடந்தேன். பின்னால் வண்டியின் ஹார்ன் சப்தம் கேட்டது. பல்லைக் கடித்தேன். சனியன் அவளாகத்தான் இருக்கும். திரும்பினால், அவளேதான்.
காலை ஊன்றி நின்றிருந்தாள். என்னைப் பார்த்து சிரிக்கவில்லை.
“ வண்டில வந்து உக்காரு ” என்றாள்.
நீ போ என முறைப்பாய் சொன்னேன்.
வந்து உக்கார் என அழுத்தமாய் சொன்னாள். மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போலப் போய் அமர்ந்தேன். வண்டியைக் கிளப்பினாள்.
”யாராவது பாக்கப்போறாங்க” என இரைந்தேன்.
”குடிச்சிட்டு தெருவில விழுந்து கெடக்கும்போது இந்த எண்ணம் வந்தா பரவால்லடா “
அமைதியானேன். அவள் ஒன்றும் பேசவில்லை. கோரிமேட்டுத் தெரு வழியாய் வண்டி தண்டராம்பட்டு சாலையை அடைந்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் என் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினாள். இறங்கிக் கொண்டேன்.
இனி வேட்டவலம் ரோடு வழியாய் போகவே கூடாது என நினைத்துக் கொண்டே உள்ளே போனேன்
ரமா பின்னாலேயே வந்தாள். அம்மா, ரமாவைப் பார்த்து சிரித்தாள்.
”வா ரமா, இவன எங்க புடிச்ச?” என்றாள்.
”தொர என்ன பாத்துட்டும் பாக்காத மாதிரி நைசா திரும்பிப் போனாரு இழுத்துட்டு வந்துட்டேன்”
அவளை முறைத்தேன்.
அவளே கேட்டாள்
“சாவுலாம் நல்ல படியா முடிஞ்சதா ”
”ம்ம்”
”பாவம் அந்த அக்கா, இனிமேலாச்சும் நல்லா இருக்கட்டும்”
நான் எதுவும் பேசவில்லை. அவளே தொடர்ந்தாள்.
”ரவி, நேத்துதான் அம்மா மொத்த கதையும் எனக்கு சொன்னாங்க. நீ அந்த பொண்ண டைவர்ஸ் பண்ணிடு.., ஊர் உலகத்துல பொண்ணா இல்ல, நல்லதா நாம பாப்பம்.”
எனக்கு கோபமும் ஆத்திரமும் பொங்கியது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டேன்.
வாசலில் யாரோ கூப்பிட்டார்கள். அம்மா போனாள்.
”பூக்காரம்மா வீட்டுக்காரரா.., ஓ வாங்க வாங்க” என்றாள்.
யாரென்று எட்டிப் பார்த்தேன். சாமி
ஏனோ திடீரென நிம்மதி படர்ந்தது. கண்டிப்பாக இவனிடம் சரக்கு இருக்கும்
”வா சாமி” என்றேன்
ரமா எழுந்து நின்றாள்
அட உக்காரும்மா என்றபடியே சாமிநாதனும் உள்ளே வந்து அமர்ந்தான்.
”வாத்தி நீ கெளம்பு. வா என்னோட”.
அதற்காக காத்திருந்தேன்.
போலாம் சாமி என எழுந்து கொண்டேன்.
”போய் பட்னு கால்ல வூந்திரு”
”யார் கால்ல?”
”உம் பொண்டாட்டி கால்லதான்”
”என்ன ஒளற்ற சாமி”
”உம் பொண்டாட்டி எங்கூட்லதான்யா இருக்கா, வந்து சமாதானமா பேசி கூட்டிட்டு வந்துரு”
எனக்கு திகைப்பாய் இருந்தது.
”அவ எப்படி உங்கூட்ல?”
”நேத்து ஏரில வூந்து சாவப் போயிருக்கா. நல்ல வேளையா வீட்லயும் நானும் அங்க இருந்தோம். பேசி கூட்டி வந்து வீட்ல வச்சிருக்கோம்”
”அவ என்ன சாவடிக்க பாக்குறா சாமி. அவளைப் போய் கூப்டு வந்து என்ன பன்றது.., சாவறதா?”
”வாத்தி, உனக்கு தெரியாதது இல்ல. ஆயிரம் இருந்தாலும் இந்த வாழ்க்கய வாழ்ந்துதான ஆவனும்.., அதோட இல்லாம. சின்ன பொண்ணு.., உலகம் தெரியாது.., நாமதான் சொல்லித்தரணும்., ”
சாமி பேசிக் கொண்டே போனான்.
சாமி இவ்வளவு பொறுப்பாய் பேசுபவனா என எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. அம்மா அவன் பேச்சில் கரைந்தாள்.
”நான் வரேன்., நான் வந்து அவள கூட்டிட்டு வரேன்., ரமா நீயும் வா போகலாம்.,, என எழுந்தாள்.
நான் உள்ளே போய் படுத்துவிட்டேன்.
மூவரும் வெளியே வந்தபோது சரியாய் அங்கையின் அம்மாவும் அப்பாவும் வந்து சேர்ந்தார்கள்.
சரியான நேரத்துல வந்தீங்க என்றான் சாமி
”இருங்க வாத்தியையும் கூப்டு போய்டலாம். எல்லாத்தையும் பேசினா தீர்த்திட முடியாதா என்ன!”
உள்ளே வந்தவன் என்னை எழுப்பினான். நான் பலமாய் மறுத்துவிட்டேன்.
”அவ வர்ரதுல எனக்குப் பிரச்சின இல்ல. போய் கூட்டி வாங்க”
என திரும்பிப் படுத்துக் கொண்டேன்.
சாமி வெளியே வந்தபோது ஒரு ஆட்டோ வந்து நின்றது. துர்க்காவும் அங்கையும் அதிலிருந்து இறங்கினார்கள்.
வாசலில் இருந்த கும்பலைப் பார்த்து அங்கை தயங்கி துர்க்காவின் விரல்களைப் பிடித்துக் கொண்டாள்.
துர்க்கா நின்றிருந்தவர்களைப் பார்த்து
“உள்ள போய் பேசலாம் ” என்றாள்
இருக்கைகள் அனைவருக்கும் போதாது. ரமா உள்ளே போய் பாய் கொண்டு வந்து தரையில் விரித்தாள்.
சாமி என்னை வந்து எழுப்பி, ஒம் பொண்டாட்டியே வந்துட்டா எனச் சொல்லிச் சிரித்தான்.
நம்ப முடியாமல் எழுந்து வெளியில் வந்தேன்.
பாயில் அங்கையும் துர்க்காவும் அமர்ந்தார்கள். மற்றவர்களையும் உட்காரச் சொன்னார்கள்.
துர்க்கா பேச ஆரம்பித்தாள்.
”நடந்தது நடந்து போச்சு. யாருக்கும் எந்த கோபதாபமும் இல்லாம இத அப்படியே முடிச்சுக்கலாம்”
அம்மா பதறினாள். முடிச்சுக்கலாம்னா?
”உங்க புள்ளைக்கு வேற பொண்ண பாருங்கம்மா”
”என்னம்மா இப்படி சொல்ற.,” என்ற அம்மாவின் குரலை மீறி
அங்கையின் அப்பா சத்தமாய் கத்தினார்.
“ நீ யாரு இத சொல்ல”
துர்க்கா அவருக்காய் திரும்பி நிதானமாய் சொன்னாள்.
“இனிமே இவளுக்கு எல்லாம் நான் தான். இவள பெத்து வளத்தீங்க அதுக்கு ஒரு கும்பிடு போட்டுக்கறேன். இனிமே இவள பத்தின கவல உங்களுக்கு வேண்டாம்.”
அங்கையின் அம்மா மெளனமாக இருந்தாள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. துர்க்காவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் இரவில் மட்டுமல்ல பகலிலும் அம்மனைப் போலவே தான் இருந்தாள்.
துர்க்கா என்னை நிமிர்ந்து பார்த்து.
“ரவி நீ யார வேணா கல்யாணம் பண்ணிக்கலாம். அதுல இவளுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லன்னு எழுதி கொடுத்திடுறோம். ஒரு பேப்பர் எட்த்தா”
”அதுக்கு அவசியம் இல்ல.., அங்கைக்கு எது சரின்னு படுதோ அதைப் பண்ணட்டும் ”
எனச் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டேன்.
அங்கை, அவள் அம்மாவைப் பார்த்துச் சொன்னாள்,
“நான் இவங்களோட கொஞ்ச நாள் இருக்கம்மா”
அங்கையின் அம்மா எழுந்து கொண்டாள்.
அவளின் அப்பா கத்த ஆரம்பித்தார்,
“ என்னா வேல பாத்துட்டு என்னா திமிரா இருக்கா பார்” என்றபடியே அங்கையை அடிக்கப் பாய்ந்தார். அங்கையின் அம்மா அவரை இழுத்துக் கொண்டு வெளியேறினாள்.
ரமா தன் மகளின் பள்ளிப் பேருந்து வந்துவிடும் எனச் சொல்லியபடியே கிளம்பினாள்.
துர்க்கா, சாமியிடம் சொன்னாள்
”நாங்க வெளியூர் போறம். அப்புறமா வருவோம். நீ வீட்டையும் கடையையும் பத்திரமா பாத்துக்க”
சாமிக்கு திகைப்பாய் இருந்தது. மறைத்துக் கொண்டே சரியென தலையாட்டினான்.
ரவியின் அம்மாவிடம் அங்கையும் துர்க்காவும் சொல்லிக் கொண்டு வெளியே வந்தார்கள். அரச மரத்தடி பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேருந்து புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்தது.
துர்க்கா, அங்கையைப் பார்த்துக் கேட்டாள்.
“அந்த பஸ்ஸ உன்னால புடிக்க முடியுமா.?”
அங்கை தீவிரமாய் முடியும் என்றாள்
இருவரும் பேருந்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.
- முற்றும்

ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் முப்பது
”அசதோமா ஸத் கமய
தமஸோமா ஜ்யோதிர்கமய
மிருத்யோர்மா அமிர்தம் கமய ”
”நீ சாப்ட்டு கெளம்பிடு”
நிமிர்ந்து பார்த்தேன். அமுதா அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டே என்னைப் பார்க்காமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தாள். ஈரக் கூந்தல் ஜாக்கெட்டின் பின்புறத்தை நனைத்திருந்தது.
எழுந்து அவள் அருகில் போனேன். அடுப்பருகில் உட்கார்ந்திருந்தவளை கைப்பிடித்து மேலே இழுத்தேன். எழுந்தவளை அணைத்துக் கொண்டு சொன்னேன்
”இன்னிக்கு காலைலதான் நான் புதுசா பொறந்த மாதிரி தோணுச்சி., விடிகாலைல பெஞ்ச மழையில என் துக்கம் எல்லாம் போய்டுச்சி., இனிமே எனக்கு எல்லாம் நீதான்.., உன்ன விட்டு எங்கயும் போவப்போறதில்ல”
”சொன்னா கேள் ரவி. எனக்கு நேத்து ஒரு ராத்திரி உன்னோட இருந்தது வாழ்நாள் முழுக்க போதும்.., நீ வாழ வேண்டிய பையன்.., கெளம்பு”
”நான் எங்க போவேன். எல்லாமும் அடைஞ்சு போச்சு. இனி எனக்கு வாழ ஒரு பிடிமானமும் இல்லங்கிறப்பதான் இது நடந்தது. இத விட மாட்டேன்”
எனப் பிடியை இறுக்கி முரட்டுத்தனமாய் அவளை முத்தமிட்டேன்.
என்னை விலக்கித் தள்ளி நின்று கொண்டாள்.
”நான் வாழ்ந்திருக்க வேண்டிய வாழ்க்கை எல்லாம் பீ முத்திரத்த அள்ளி அள்ளியே போய்டுச்சி. நீ வேற புதுசா உள்ள வந்து அதே குழிக்குள்ள தள்ளாத ரவி”
”என்ன சொல்ற?”
”உனக்கு புரியலையா எனக்கு இந்த குடும்ப வாழ்க்கை வேணாம். நல்லவேளையா குழந்தைங்க எதுவும் பொறக்கல. பொறக்கற மாதிரியும் எதுவும் நடக்கல. அப்படியே நான் போய்டுறேன்”
”எங்க போவ நீ., யார் இருக்கா உனக்கு?”
”எனக்கு நான் போதும் ரவி. காரியம் முடிஞ்சதும் இந்த வீடு, இருக்கிற கொஞ்ச நெலம் எல்லாத்தையும் வித்துட்டு எங்காய்ச்சும் போய்டுவேன்”
”எங்காச்சும்னா எங்க? ஏன் இப்படி உளற்ற., உனக்கு இந்த ஊர்ல என்னோட இருக்க கூச்சமா இருக்கும்., நாம இங்க இருந்து போய்டலாம்., கீழ்பெண்ணாத்தூர்ல ஒரு வீடு எடுத்து தங்கிக்கலாம். என் ஸ்கூல் பக்கமா., நாம ரொம்ப நல்லபடியா ஒரு வாழ்க்க வாழலாம் அமுதா.., ப்ளீஸ் ”
”போதும் ரவி. போதும். எனக்கு நானா மட்டும் வாழ ஆசையா இருக்கு. சின்ன வயசுல இருந்தே ரொம்ப தூரம் ரயில்ல போகனும்னு ஆச தெரியுமா? ஆனா இதுவரைக்கும் நான் ரயில்ல கால் கூட வச்சதில்ல.”
”நான் கூட்டிப் போறேன் அமுதா. உனக்கு என்னல்லாம் பிடிக்குமோ எனக்கு என்னலாம் பிடிக்குமோ எல்லாத்தையும் சேந்து பண்ணலாம்.”
”சொன்னா புரிஞ்சிக்க ரவி. நீ போய் உம் பொண்டாட்டி கால்ல விழுந்து வீட்டுக்கு கூட்டிப் போய் நல்ல படியா வச்சுக்க. அம்மாவ பத்திரமா பாத்துக்க. பத்து நிமிசம் அப்படி உக்கார். சாப்டு கெளம்பிடு”
பதிலையும் எதிர்பார்க்காமல் அமுதா அடுப்பருகில் போய் உட்கார்ந்து கொண்டு தீயை அதிகப்படுத்தினாள்.
அவள் குரலிலிருந்த உறுதி என்னை நிலை குலைய வைத்தது. எதுவும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியே வந்து செருப்பைப் போட்டேன். ஒரு வார்த்தை கூட சொல்லாமல் கிளம்பினேன்
ரவி என்றபடி வெளியில் வந்தவளிடம்
சாவு வீட்டுக்கு வந்துட்டு சொல்லிட்டுப் போவ கூடாது என்றபடி அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்தேன்.
என் வாழ்க்கை அவ்வளவுதான் எனத் தோன்றியது. போய் மூச்சு முட்ட அந்த மூத்திர ஒயின்ஷாப்பில் குடித்து மட்டையாக வேண்டும் என்கிற வெறி வந்தது. பேருந்து நிறுத்தத்திற்கு வந்து விட்டிருந்தேன். அரை மணி நேரம் நின்றும் பேருந்து வரும் வழியைக் காணோம். ஒரு மண்பாடி லாரி என்னைக் கடந்தது. வெறி பிடித்தவன் போல அதன் பின்னே ஓடினேன். மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்ததை ஓட்டுனர் தாமதமாய் கவனித்து வண்டியை நிறுத்தினான். பாய்ந்து ஏறிக் கொண்டேன். இதயம் உடைந்துவிடுவது போல திம் திம் என அதிர்ந்தது. இன்னோரு கையயும் ஒட்ச்சுக்கணுமா என அவன் என்னை திட்டிக் கொண்டே வண்டியைக் கிளப்பினான்.
0
அங்கை கண் விழித்தபோது துர்க்கா தயாராய் காபி போட்டு வைத்திருந்தாள். எழுந்து பல் துலக்கிவிட்டு வந்து அந்தக் காபியைக் குடித்தாள். ஒரே ஒரு அறைதான். அதை ஒட்டினார்போல் தடுப்புச் சுவர் மட்டும் வைத்த சமையலறை. வீட்டிற்குப் பின்னால் தனியாக கழிவறையும் குளியலறையும் இருந்தன. ஏதோ அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த உணர்வு அங்கைக்குத் தோன்றியது. இத்தனைக்கும் நேற்று இரவு மட்டும்தான் அங்கு தங்கியிருந்தாள். சொல்ல முடியாத பிணைப்பை எப்படி முதல் சந்திப்பிலேயே சங்கமேஸ்வரனிடம் உணர்ந்தாளோ அப்படி ஒரு பிணைப்பை துர்க்காவிடமும் கண்டாள். அவளிடம் கோவில் சிலைகளின் சாயல் இருப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். சாகப்போன தன்னை காக்க வந்த தெய்வமாக அவளை நினைத்தாள். அவள் அணைப்பு அத்தனை ஆதூரமாக இருந்தது. யாரோ அருகில் வருவதை உணர்ந்துதான் நேற்று அவள் அணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டாள்.
ஏரிச் சரிவிலிருந்து இறங்கி வந்த சாமி நாதன் துர்க்காவைப் பார்த்து திகைத்தான்.
” இங்க என்ன பன்ற, ஒடம்பு சரியில்லன்னு வீட்ல படுத்திருந்த”
துர்க்கா அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு,
“ ஏரில வூந்து சாவலாம்னு வந்தேன்” எனச் சொல்லி சிரித்தாள்
அங்கை திடுக்கிட்டு நெஜமாவா எனும்படிப் பார்த்தாள்.
”நெசந்தான் நானும் இங்க சாவலாம்னுதான் வந்தேன்”
சாமி அவளைப் பார்க்காமல் மெதுவாய் சொன்னான்.
“நீ சாகறதுக்கு முன்னாடி என்ன கொன்னுட்டு அப்புறம் சாவு. இந்த ஈனத்தனமான வாழ்க்கை நீ எனக்கு போட்ட பிச்சதான”
துர்க்கா எதுவும் பேசவில்லை. அங்கைக்காய் திரும்பி
இவரு என் வூட்டுக்காரு என்றாள்.
அங்கை சாமியைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். சாமி அங்கையை அப்போதுதான் சரியாகப் பார்த்தான்.
“நீ ரவி வாத்தியார் சம்சாரந்தானே?”
அங்கை மருண்டாள்.
”உன் போட்டவ வீட்ல பாத்தனே., இங்க இன்னாமா பன்ற?”
துர்க்கா இடையிட்டாள்
”யாரு ரவி?”
”அட அன்னிக்கு உன்ன பாத்து மெரண்டு ஓடினானே”
துர்க்காவிற்கு நினைவு வந்தது.
“ஓ ராம்சாமி வாத்தியார் மொவன்”
”அவனேதான்”
”அதான் எங்கயோ பாத்த மாதிரியே இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தன்.., இவ்ளோ லட்சணமான பொண்டாட்டிய கூட பாத்துக்காத அவன்லாம் இன்னா மனுசன்”
”அவனுக்கு ஏதோ கிறுக்கு. ஆனா சரியாய்டுவான். சரி கெளம்புங்க போலாம். இருட்டப் போவுது”
சூரியன் மேற்கில் இறங்கியிருந்ததை இருவருமே கவனிக்கவில்லை. மறுபடியும் கொண்டுபோய் ரவி யிடம் விட்டு விடுவார்களோ என அங்கைக்குப் பயமாக இருந்தது. தயக்கமாய் எழுந்து கொண்டாள்.
துர்க்கா சாமிக்காய் திரும்பி
“நாங்க வீட்டுக்கு போறோம். நீ இவங்க வீட்டுக்கு போய் அங்கை எங்களோட இருக்குன்னு சொல்லிடு. பயப்பட வேணாம்னு பாத்து பதமா சொல்லிட்டு வா”
சாமி, அங்கையிடம் அவள் வீட்டு முகவரியை வாங்கி கொண்டான். அரசு கலைக்கல்லூரி வரை ஒன்றாய் நடந்து போனார்கள். பிறகு சாமி அங்கை வீட்டிற்காய் நடக்க ஆரம்பித்தான். இவர்கள் தேனிமலைக்காய் நடக்க ஆரம்பித்தார்கள். இருட்டத் துவங்கியிருந்தது. துர்க்கா கறி சாப்பிடுவியாம்மா என்றதற்கு அங்கை தலையாட்டினாள். வழியில் கோழிக்கறி வாங்கிக் கொண்டாள். வீட்டை அடைந்தார்கள்.
வூடு சின்னதுதான் உனக்கு புடிக்குமோ இன்னாவோ என்றபடியே துர்க்கா பூட்டைத் திறந்தாள். அங்கை அவள் தோளில் கை போட்டு அணைத்து சிரித்தாள்.
துர்க்கா பரபர வென சமையலை ஆரம்பித்தாள். அவள் எதுவும் கேட்காமலேயே அங்கை நடந்த கதை மொத்தத்தையும் சொன்னாள். அவளின் சிறு பிராயம் முதல் இன்று மதியம் நடந்தது வரை ஒன்றுவிடாமல் சொன்னாள். துர்க்காவிற்கு அவள் கதைகளைக் கேட்க கேட்க அழுகை முட்டியது. தன் இள நிழலாய் அவளிருந்தாள். ரகசியமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு. சாப்பாடு ஆய்டுச்சி சாப்டுடலாம் என்றாள்.
கறிக்குழம்பின் மணம் அந்தச் சிறுவீட்டை நிறைத்தது. அஙகையும் துர்க்காவும் தட்டு நிறைய கறியையும் சோறையும் வாரிப்போட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள். அவர்களின் மொத்த துக்கமும் உணவாய் தட்டிலிருந்தது. அள்ளி அள்ளி சாப்பிட்டார்கள். வயிறும் உள்ளமும் நிறைந்ததில் அங்கை,
என் வாழ்நாளில இப்படி ஒரு ருசியான சாப்பாட்ட சாப்டதில்ல என்றாள்.
துர்க்கா சிரித்துக் கொண்டே அவளின் தட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு பின் வாசலுக்குப் போனாள். தட்டிலிருந்த எலும்புகளை வாரி ஜீஜீஜீ என நாயைக் கூப்பிட்டு அதற்கு வைத்தாள். கையைக் கழுவிக் கொண்டு உள்ளே வந்தாள். அங்கை அதற்குள் பாயை விரித்திருந்தாள். இருவரும் படுத்துக் கொண்டார்கள். முன் கதவையும் பின் கதவையும் திறந்துவிட்டிருந்தார்கள். வெக்கை இல்லை. குளுமையாய் காற்று வீசியது.
“பக்கத்துல எங்கயோ மழ பெய்யுதுன்னு நினைக்கிறேன்” என்றாள் அங்கை.
“ம்ம் பெய்யும்” என்றபடியே துர்க்கா உறங்கிப் போனாள்.
அங்கையும் தூக்கத்திலாழ்ந்தாள்.
காலையில் சமையல் செய்யும் ஓசைதான் அங்கையை எழுப்பியது. எழுந்து காபிக் குடித்துக் கொண்டிருக்கும்போது சாமி வந்தான். துர்க்கா அவனைப் பார்த்து
“குளிச்சிட்டு வா சாப்டுட்டு கடைய போய் தொற” என்றாள்
சாமி அவளையே பார்த்தான்.
“ஏன் அந்த சாமியாரு இல்ல?”
”அவரு வூட்டுக்கு போய்ட்டாரு”
சாமிக்கு சகலமும் புரிந்தது போலிருந்தது. வேறு எதுவும் கேட்காமல் பின் வாசலுக்குப் போய் குளித்தான். உள்ளே வந்து இட்லியையும் நேற்று மீந்திருந்த கறிக்குழம்பையும் சாப்பிட்டான். கடை சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
துர்க்கா அவனை நிறுத்திச் சொன்னாள்,
“வாடின பூவ காளியம்மன் கோவிலுக்கு கொடுத்திரு. நான் ஜோதி மார்கெட் போய்ட்டு உதிரி வாங்கிட்டு கடைக்கு வரேன்”
சாமிக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. கடைசியில் அவள் தன்னை மன்னித்தே விட்டாள். வெளியே வெயில் சுத்தமாய் இல்லை. மேகம் அடர்ந்திருந்தது. சாலையில் யாரோ பேசிக் கொண்டார்கள்.
“ரெயில்வே கேட்டுக்கு அந்தாண்டலாம் மழயாம்.., விடிகால்ல வேளனந்தலு, ஆவுரு கிட்ட லாம் ஊரப்பட்ட மழையாம்.., ”
இன்னொருத்தர் சொன்னார். ” அப்ப இங்கயும் வரும். ”
சாமி உற்சாகமாய் நடக்க ஆரம்பித்தான்.
- மேலும்
Monday, July 10, 2017
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து ஒன்பது
சாமி பூக்கடையைச் சுற்றிச் சுற்றி வந்தான். வழக்கமாய் காலை ஏழு மணிக்கெல்லாம் துர்க்கா வந்து கடையைத் திறந்துவிடுவாள். இன்றோ மணி ஒன்பதாகப் போகிறது. இதுவரை அவளைக் காணோம். இன்னிக்கு என்னாச்சின்னு தெரியலயே என முனகிக் கொண்டான். வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என நடக்க ஆரம்பித்தான். ரமணாசிரம நூலகத்தை ஒட்டியுள்ள இறக்கமான சாலை நடக்க ஏதுவாக இருந்தது. இந்தச் சாலையில் மட்டும் இன்னும் மரங்கள் இருக்கின்றன. காலை வெயில் தெரியாத அளவிற்கு மரங்கள் அச்சாலையை மூடியிருந்தன. மயிலின் அகவலோசை அந்த அமைதியை அவ்வப்போது கிழித்துக் கொண்டிருந்தது. தாமரை நகர் வேலைக்குச் செல்லும் மனிதர்களால் அடர்ந்திருந்தது. இருசக்கர வாகனங்களின் ஓசை சாலையை நிறைத்தது. வெயில் முகத்தில் வந்து இறங்க சாமி மிக சோர்வாய் உணர்ந்தான்.
நேற்று சாயந்திரம் ரவியின் வீட்டிலிருந்து மிதமாய் இறங்கினான். நடந்து நடந்து மலை சுற்றும் பாதையிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்காய் வந்தான். அங்கு எந்தக் காலத்திலும் காற்று அவ்வளவு குளுமையாய் இருக்கும். கிளை விரித்துப் படர்ந்திருந்த கல்யாண முருங்கை மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்துவிட்டான். சாமி இந்த நகரை நடந்து நடந்தே தேய்த்தான். அவனால் அரை மணி நேரம் ஒரு இடத்தில் இருக்க முடியாது. கிட்டத்தட்ட உயிருக்குப் பயந்துதான் திருவண்ணாமலைக்கு வந்தான். அன்று அதிகாலை சங்கராபுரத்திலிருந்து இவர்களைச் சுமந்து வந்த லாரி தேனிமலையில் இறக்கிவிட்டது. அவன் ஆயா வீடு நினைவிற்கு வரவே துர்க்காவுடன் முதலில் அங்குதான் போனான்.அங்கு அவனை உட்காரச் சொல்லக் கூட யாருமில்லை. துர்க்கா அதை எதிர்பார்க்கவும் இல்லை. அவளாக அக்கம் பக்கம் விசாரித்து காலியாக இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தாள். கழுத்தில் போட்டிருந்த தாலி மட்டும்தான் தங்கம். அதை யோசிக்காமல் போய் விற்றுவந்தாள். இந்த வேலைதான் என்றில்லாமல் எல்லா வேலையையும் செய்தாள். ஒரு கடை வைத்து உட்கார்ந்த பிறகுதான் வாழ்வு நிமிர்ந்தது. சாமி அப்போதும் ஊரைச் சுற்றி வந்தான். இதோ இன்றளவும் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
முகத்திலறையும் சூரியனை ஒரு கையால் மறைத்துக் கொள்ள முயன்றபடியே வேக வேகமாய் நடந்து வீட்டை நெருங்கினான். கதவு சாத்தியிருந்தது. வாசல் கூட்டவில்லை. வெளியூர் எங்காவது போய்விட்டாளா என யோசனையாய் அருகில் வந்தவன் கதவில் பூட்டு இல்லை என்பதை கவனித்தான். துர்க்கா துர்க்கா என அழைத்தபடியே கதவை வேகமாய் தட்டினான். உள்ளே அவள் வரேன் என மெல்ல முனகும் ஓசை கேட்டது.
“இன்னா ஒடம்பு கிடம்பு சரியில்லயா, கதவ தெற மே”
கதவு திறந்தது
துர்க்கா சிவந்த விழிகளுடன் கதவைத் திறந்துவிட்டு மீண்டும் போய் படுத்துக் கொண்டாள்.
”என்னா ஒடம்புக்கு?”
”ஒண்ணுல்ல. அந்த மாடத்துல அம்பது ரூபா இருக்கு எடுத்துட்டு போ ” எனச் சொல்லிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.
சாமி ஒரு கணம் அவமானத்தில் கூசினான். பின்பு சகஜநிலைக்குத் திரும்பி விளக்கு மாடத்தில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறினான். முதன் முறையாய் அவள் மேல் பரிவு எழுந்தது. தன்னை நினைத்துக் குறுகினான். அதற்குள் தண்டராம்பட்டு சாலையைத் தொட்டு விட்டிருந்தான். சிற்றுண்டிக் கடை ஒன்றைப் பார்த்து நின்றான். உள்ளே நுழைந்து பத்து இட்லிகளையும் நான்கு வடைகளையும் கட்டிக் கொண்டான். வீட்டிற்குத் திரும்பி நடந்தான். வீட்டின் கதவு திறந்திருந்தது. துர்க்கா எழுந்துவிட்டிருந்தாள். இவன் திரும்பியதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
சாமி இட்லிப் பொட்டலத்தை நீட்டினான். துர்க்கா எதுவும் பேசாமல் வாங்கி அதைப் பிரித்து ஒரு வட்டிலில் ஐந்து இட்லிகளையும் இரண்டு வடைகளையும் போட்டு அவனிடம் நீட்டினாள். அவளும் கீழே உட்கார்ந்து கொண்டு அந்த இலையிலேயே சாம்பார் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தாள். நேற்று மதியமும் இரவும் அவள் சாப்பிட்டிருக்கவில்லை. இருவரும் எதுவும் பேசாமல் உண்டார்கள். சாப்பிட்டதும் சாமி எழுந்து கொண்டான். கட இன்னிக்கு தெறக்கலயா என மட்டும் கேட்டான். துர்க்கா இல்லை என தலையசைத்தாள்.
அப்ப ரெஸ்ட் எடு எனச் சொல்லியபடி வெளியேறினான். நடக்கையில் ஏதோ ஒரு நல்லதைச் செய்ததைப் போன்ற உணர்வு அவனிற்குள் தோன்றி மறைந்தது.
அவன் போனதும் துர்க்கா கதவை அடைத்தாள். பாயை விரித்துப் போட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். இப்படி ஒரு துக்க உணர்வை அவள் வாழ்நாள் முழுக்க அனுபவித்ததில்லை. தன்னை திடமானவளாக தைரியமானவளாகத்தான் நினைத்துக் கொள்வாள். அதன் படி நடந்தும் கொள்வாள். நேற்று அகத்திய மாமுனியை ஆட்டோவில் ஏற்றிவிட்ட பிறகு ஏனோ அவள் மனம் அதற்கு முன்பில்லாத பாரத்தை உணர்ந்தது. நினைவு முழுக்க அவரோடு நடந்த முதல் காட்டுக் கலவியே நிறைந்திருந்தது. ஒன்றன் பின் ஒன்றாய் இதேப் பாயில் நிகழ்ந்த கலவிகளையும் நினைத்துக் கொண்டது. எவ்வளவு ஆழமான உறவது. மாமுனி அத்தனை பரிசுத்தமானவராக இருந்தார். அவரோடு முழுமையாய் முயங்கினாள். முழுமையாய் வாழ்ந்தாள். பத்து நாட்கள் இருக்குமா? தான் இழந்த எல்லாமும் தனக்குத் திரும்பி வந்து விட்டதாய் உணர்ந்தாள்.
இந்த நொடி வரை சாமிநாதனை அவள் மன்னிக்கவில்லை. அவனோடு படுக்கவும் இல்லை. அந்தத் தெருவின் எல்லா காமக் கண்களையும் அவள் அசாதாரணமாகக் கடந்தாள். அவளுக்கு யாரைப் பிடித்திருந்ததோ அவர்களோடு கூடினாள். ஆனாலும் அவர்களை தூரத்திலியே வைத்திருந்தாள். மாமுனியைத்தான் முதன் முறையாய் வீட்டிற்குள் அனுமதித்தாள். அவரின் அமைதியும் களங்கமின்மையும் அவளிற்குள் உறைந்திருந்த ஒரு மென்மையை கண்டறிந்தது. காதலுணர்வு என்பதை முதன் முறையாய் உணர்ந்தாள். அதில் மூழ்கியும் திளைத்தாள். பத்தே நாட்களில் எல்லாம் போனது. துர்க்காவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பெருங்குரலில் உடைந்து அழுதாள். சூரிய வெப்பம் ஓடுகளில் இறங்கி அவ்வீட்டைத் தகிக்கச் செய்தது. உயிர் வாழ்வதின் மீது அவளுக்கு முதன்முறையாய் அலுப்பு தோன்றியது. அப்படியே உறங்கிப் போனாள்.
0
அங்கை கண்விழித்தபோது நேரம் உச்சியைக் கடந்திருந்தது. யாரும் அவளை எழுப்பவில்லை. நேற்று முழுக்கத் தூங்கியிருக்கிறாள். முந்தின நாள் பின்னிரவில் வீட்டிற்கு வந்து படுத்ததுதான். அப்படி ஒரு தூக்கம். நேற்று மதியம் விழிப்பு வந்ததும் எழுந்து போய் குளித்துவிட்டு லேசாய் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிட்டாள். இரவு முழுக்கத் தூங்கி இதோ இன்றையப் பகல் முழுக்கத் தூங்கியும் சோர்வும் அசதியும் அவளை விட்டு நீங்கவில்லை. வீட்டில், அமைதி இருளைப் போல நிரம்பி இருந்தது. உடல் வலி தாங்க முடியாததாய் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து போய் குளித்தாள். குளிர் நீர் பட்டதும் மனம் சற்று சாந்தமானது. வெகு நேரம் குளித்தாள். முந்தா நாள் நிகழ்ந்த சம்பவங்கள் யாவும் மீண்டும் மனதில் வந்து உட்கார்ந்து கொண்டு தலையை அழுத்தின. அங்கைக்கு ஏனோ மீண்டும் சமுத்திர ஏரிக்கரைக்குப் போக வேண்டும் போலிருந்தது. அவளும் சங்கமேஸ்வரனும் கலவிய மரத்தடியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். உடையணிந்து கொண்டாள். வாசல் கதவு மூடியிருந்தது. அப்பா வேலைக்குப் போய்விட்டிருப்பார். தம்பி பள்ளிக்கூடத்திற்கு. அம்மா கடைக்கு ஏதாவது போயிருக்கலாம். வந்ததும் சொல்லிவிட்டுப் போகலாமா என யோசித்தாள். ஆனால் அதுவரை காத்திருக்க முடியாது. அங்கை உள்ளே போய் தம்பியின் நோட்டிலிருந்து ஒரு தாளை கிழித்தாள். கோவிலுக்குப் போகிறேன் என எழுதி கதவிடுக்கில் வைத்துவிட்டு கதவை மூடிவிட்டு கிளம்பினாள்.
உச்சி வெயில் மண்டையில் இறங்கியது. நேற்று மதியம் லேசாய் சாப்பிட்டிருந்ததோடு சரி. வயிறு எரிந்தது. பசியிலும் சோர்விலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. மயங்கி விழுந்துவிடுவோமோ எனப் பயந்தாள். மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள். சமையலறையில் சாதம், ஈயக் குண்டானிலிருந்து அகலக் கிண்ணத்தில் கஞ்சி வடிந்து கொண்டிருந்தது. நிமிர்த்தினாள். சூடு ஆறியிருந்தது. அம்மா நேரத்திலேயே போய் இருக்க வேண்டும். கையினாலேயே சாதத்தை எடுத்து வடிந்திருந்த கஞ்சிப் பாத்திரத்தில் போட்டு கரைத்துக் குடித்தாள். காலி வயிறு சப்தம் எழுப்பியது. நிதானமாய் குடித்துவிட்டு சாதத்தைக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு முன்பு போலவே வெளியே வந்தாள். தகிக்கும் வெயிலை அவள் பொருட்படுத்தவில்லை பத்தடி நடந்ததும்தான் செருப்பு போடாமல் வந்ததை தார்ச்சாலை நினைவுபடுத்தியது. திரும்பி வீட்டிற்குப் போக அலுப்பாக இருந்தது. சாவப் போகும்போது செருப்பெதுக்கு என வாய்விட்டு சொல்லிக் கொண்டாள். உண்மையாகவேவா சாகப் போகிறோம் என மனதிற்குள் கேட்டுக் கொண்டாள். திடீரென சாவின் மீது ஆசை வந்தது. செத்துதான் போனால் என்ன? ஒரு வேளை சங்கமேஸ்வரனும் அங்கிருப்பானோ? நேற்றுப் போனவன் இன்று வரும் என்னை ஆசையாய் கட்டிக் கொள்வானில்லையா திடீரென அவள் மனம் துள்ளியது. தானும் இதே சாலையில் வேகமாய் வரும் ஒரு வாகனத்தின் முன்பு விழுந்து செத்து விடலாம் என முடிவு செய்தாள். ஆனால் ஆனால் அதற்கு முன்பு அந்த இடத்தை ஒரு முறை பார்த்து விட வேண்டும். அங்கை சமுத்திர ஏரிக்கரையை நோக்கி நடந்தாள்.
0
துர்க்கா மூச்சிற்காக ஏங்கினாள். அவ்வளவு பெரிய நீர்ப்பரப்பு மற்ற ஆண்களைப் போலவே அத்தனை ஆசையுடன் அவளை விழுங்கப் பார்த்தது. கால்களை உதறி உதறி நீரின் மேற்பரபரப்பிற்கு வந்து மீனைப் போல வாயைத் திறந்து காற்றிற்கு ஏங்கினாள். ஆனால் நொடிக்கும் குறைவாய் அவள் உடலை நீர் உள்ளே இழுத்தது. தண்ணீரை மேலும் குடித்தாள். உடல் வீங்க வீங்க மேலே வரும் வழிகளனைத்தும் அடைத்துக் கொண்டன. கடைசி சுவாசத்திற்கான வாய்ப்பு அறுபட்டபோது துர்க்காவிற்கு விழிப்பு வந்தது. அலறி எழுந்தாள். வியர்வையில் குளித்திருந்தாள். அணிந்திருந்த ஜாக்கெட் முழுவதும் வியர்வையால் நனைந்திருந்தது. அறை தகித்துக் கொண்டிருந்தது. எழுந்து போய் அடைந்திருந்த கதவுகளைத் திறந்தாள். துண்டை எடுத்து முகத்தை துடைத்தாள். அணிந்திருந்த உடைகளை கழட்டிப் போட்டு துண்டைக் கட்டிக் கொண்டு பின் வாசலுக்குப் போய் குளித்தாள்.
என்ன மாதிரியான கனவிது. அந்த நீர்ப்பரப்பு அவ்வளவு பெரிதாய் இருந்தது. அதை எங்கேயோ பார்த்திருக்கிறோம். யோசிக்க யோசிக்க அது சமுத்திர ஏரி என்பது அவள் நினைவிற்கு வந்தது. ஒரு அடர்ந்த மழைக்காலத்தில் அவள் அங்கு போயிருக்கிறாள். அந்தப் பரந்த நீர்பரப்பை லேசான பயத்தோடு பார்த்து வந்திருக்கிறாள். பூக்கடை வைத்தபிறகு அவள் உலகம் சுருங்கிப் போனது. கடையையும் வீட்டையும் தாண்டி எங்கும் போவது கிடையாது. ஏனோ இன்று அவளுக்கு அங்கே போக வேண்டுமெனத் தோன்றியது. குளித்து விட்டு வந்ததும் உடையணிந்து கொண்டாள். தலைவார பொறுமையில்லாமல் கூந்தலை உதறி பெரிய கொண்டை போட்டுக் கொண்டாள். சாந்து பொட்டை மட்டும் வைத்துக் கொண்டு வெளியில் வந்தாள். கதவை சாத்தி எரவாணத்தில் சொருகி வைத்திருந்த செருப்பை இழுத்து கீழே போட்டு காலில் அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். வெயில் உக்கிரமாய் இருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது பொருட்படுத்தாமல் நடக்க ஆரம்பித்தாள். தாமரை நகர் தாண்டி, அரசுக் கல்லூரிக்கு குறுக்கில் நடந்து சமுத்திர ஏரி செல்லும் சாலைக்கு வந்து சேர்ந்தாள். இடைப்படும் கிராமத்தில் நிறைய மரங்களிருந்தன. வெயிலின் உக்கிரம் தெரியவில்லை. ஏரிக்கரை அடிவாரப் பாதையில் அடர்ந்த மரங்கள் துவங்கும் இடத்திற்கு வந்ததும் அவள் மனம் சமாதானமாகியது. உயர்ந்த மரங்களின் குளுமையும் காற்றும் அவள் பசியை மட்டுப்படுத்தியது. மெதுவாய் நடக்க ஆரம்பித்தாள். கிளைகள் விரித்துப் படர்ந்திருந்த அரச மரமொன்று முதலில் வந்தது. இந்தச் சரிவில் ஏறிப்போய் நீர்ப்பரப்பை வெயிலில் பார்க்க அலுப்பாய் இருந்தது. மரத்தடியில் கொஞ்ச நேரம் படுத்திருந்து விட்டு மாலையானதும் ஏரி மீது ஏறலாம் என்கிற நினைப்பில் அரசமரத்தடிக்காய் சென்றாள்.
அரசம் பழங்கள் மண்ணில் உதிர்ந்து கிடந்தன. ஏராளமான பறவைகளும் கிளிகளும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. எறும்பில்லாத இடமாய் பார்த்து அமர்ந்தவள் சுற்று முற்றம் பார்த்தாள். யாரும் கண்ணிற்குத் தென்படவில்லை. தொலைவில் ஆடுகளும் மாடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. முந்தானையை அவிழ்த்து தரையில் போட்டுப் படுத்துக் கொண்டு கண் மூடினாள். அவ்வளவு நிம்மதியாக இருந்தது. தூக்கத்தில் விழ இருந்தவளை வெடித்த அழுகைக் குரலொன்று அடித்து எழுப்பியது. அரண்டு எழுந்தவள் அழுகை வந்த மரத்தின் பின்புறத்தை நோக்கி நடந்தாள். அங்கை மண்ணில் குப்புற விழுந்திருந்தாள். அவள் துக்கம் அழுகையாய் வெடித்திருந்தது. பதறிய துர்க்கா ஓடிப்போய் அவளைத் தூக்கினாள்
யார் யார் மா நீ ? ஏன் இங்க வந்து கிடக்குற என்றவளை அங்கை நிமிர்ந்து பார்த்தாள். துர்க்காவின் அகலப்பொட்டும் ஆகிருதியான உடலும் அவளை என்னவோ செய்ய அம்மா எனக் கதறியபடியே அணைத்துக் கொண்டாள். துர்க்கா அவளை அணைத்தபடியே மண்ணில் அமர்ந்தாள். அவளை வாரி மடியில் போட்டுக் கொண்டு முதுகை நீவினாள். அழதாடா அழாதடா எனத் தட்டினாள். அங்கை தன் வாழ்நாளில் உணர்ந்திராத வெதுவெதுப்பை சமாதானத்தை உணர்ந்தாள். எழ மனமில்லாமல் எழுந்து அமர்ந்தாள். துர்க்கா அவள் கூந்தலைக் கோதி மண்ணைத் தட்டிவிட்டு புடவையில் ஒட்டி இருந்த மண்ணையும் தட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அங்கை மீண்டும் அவள் மடியில் சுருண்டு படுத்துக் கொண்டாள்.
துர்க்காவிற்கு அந்தப் பெண் மீது அளவில்லா வாஞ்சை தோன்றியது. அடிக்கடிப் பார்த்த முகமாகத்தான் இருந்தது. அவளிடம் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.
“உனக்கு என்னனாலும் அம்மா இருக்கண்டா.., அம்மா இருப்பண்டா எப்பவும்..”
என்றெல்லாம் சொல்லி அவளைத் தேற்றிக் கொண்டிருந்தாள். அங்கை படாரென எழுந்தாள்.
“நான் இங்க சாகலாம்னுதான் வந்தன். ஏன்னு தெரியல உங்களப் பாத்ததும் சாகிற எண்ணம் போய்டுச்சி. உங்களோடவே வந்து இருந்துடவா?”
”வந்துடு தங்கம். சத்தியமா சொல்றேன் என்னோட வந்துடு. எனக்கும் யாருமே கெடையாது “
துர்க்காவும் உடைந்தாள். இருவரும் அணைத்துக் கொண்டார்கள்.
ஏரிச்சரிவிலிருந்து ஒரு உருவம் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அங்கைதான் முதலில் கவனித்து யாரோ வராங்க எனச் சொல்லியபடி அணைப்பிலிருந்து விலகினாள்.
துர்க்கா திரும்பிப் பார்த்தாள். சாமிநாதன் சிவப்புத் துண்டை தலைக்கு தலைப்பாகயாய் கட்டிக் கொண்டு வெயிலில் குளித்தெழுந்து வந்து கொண்டிருந்தான்.

Saturday, July 8, 2017
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்து எட்டு
காலையில் எழுந்து வேளானந்தல் போய் கொண்டிருந்தேன். நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து வந்த அம்மா,
" அமுதா ஊட்டுக்கார் செத்துட்டார்டா. போய்ட்டு வந்துரு. பக்கந்தான் வேளானந்தலாம். நம்ம ஆவூர் மாமா வூட்டதாண்டி. என்னால முடில நீ போய்ட்டு வந்துரு" எனப் படுத்துவிட்டாள்.
நானும் நிறைப் போதையில் இருந்தேன். சாமி அப்போதுதான் கிளம்பிப் போயிருந்தார். வீட்டு ஹாலிலேயே குடித்து விட்டு போட்டிருந்த நான்கு குவாட்டர் பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. நான் ரகசியமாய் வீட்டில் குடிப்பேனே தவிர இப்படி வெளிப்படையாய் குடித்தது இதுவே முதன் முறை. இனிமேல் ரகசியமாய் இருந்து என்னாகப் போகிறது என்கிற வெறுப்பு. சாமி ஏதோதோ சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் பழைய வாழ்க்கை. சிறு பிராயம். மூங்கில் துறைப்பட்டுக் கதை. துர்க்காவை மணமுடித்த கதை. பாண்டல வாழ்க்கை. அவர் கொடிகட்டிப் பறந்தது. பின் வீழ்ந்தது. என எல்லாமும் சொல்லிக் கொண்டிருந்தார். இடையில் பெரியசாமி செத்தாரா பொழச்சாரா என்கிற கேள்வியை மட்டும்தான் கேட்டேன். அவன் பொழச்சதனாலதான் எங்கள யாரும் தேடி வரல என்றார் சாமி.
துர்க்காவிற்கு அங்கை பரவாயில்லை எனத் தோன்றியது. அங்கை ஒரு பூச்சி. ஏதேதோ பகற்கனவுகளில் மூழ்கியிருந்த பேதைப் பெண். நான் மட்டும் சரியாக இருந்திருந்தால் அவள் எனக்காக உயிரையே கொடுத்திருப்பாள். எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன். சில நாட்கள் போகட்டும். மெதுவாய் போய் அவள் காலில் விழுந்து கெஞ்சியாவது திரும்ப இந்த வீட்டிற்கு கூட்டி வந்துவிட வேண்டும். இந்தக் குடி எழவு எல்லாவற்றையும் விட்டுவிட்டு சுத்தமாய், மிகத் தூய்மையாய் ஒரு வாழ்வை வாழ்ந்துவிட வேண்டும். என் நேற்றை திரும்பிப் பார்க்க எனக்கே கூசியது.
அதிகாலையிலே போதை சுத்தமாகத் தெளிந்தது. கைவலி இல்லை. கழுத்தில் மாட்டியிருந்த கயிறை அறுத்துவிட்டேன். உடை மாற்றிக் கொண்டு வேளானந்தல் கிளம்பினேன். இந்தக் கையை வைத்துக் கொண்டு பஸ் ஏறிப் போவது சிரமம். அரச மரத்தடி ஆட்டோ ஸ்டேண்டிற்குப் போனேன். என்னோடு ஐந்தாவது வரை படித்த சங்கர் அங்கிருந்தான். என்னைப் பார்த்து
"இன்னா வாத்தி" என சிரித்தான்.
"வேளானந்தல் போய்ட்டு வரலாமா அமுதாக்கா வூட்டுக்காரர் செத்துட்டார் டா"
அவன் பரபரப்பானான்.
"அய்யோ எப்ப?"
நேத்து எனச் சொல்லி முடிப்பதற்குள் ஆட்டோவைக் கிளப்பி இருந்தான். ஏறி அமர்ந்து கொண்டேன். வேட்டவலம் சாலையில் ஆட்டோ விரைந்தது. சங்கர் மெதுவாகக் கேட்டான்.
" கைல ன்னா கட்டு? "
"கீழ வூண்டண்டா"
" குட்ச்சிட்டு வண்டில இருந்து வூண்டியா? இன்னாபா ரொம்ப குடிக்கறன்னு கேள்விபட்டேன்."
ம்ம். ஆமாடா."
" உனுக்கு இன்னா கொற? கவுர்மெண்ட் வேல. கண்ணுக்கு லெட்சணமா பொண்டாட்டி. சொந்த வூடு. அப்புறம் இன்னாடா?
"ஒண்ணும் இல்லடா. ஏதோ கிறுக்கு. வுடு. "
"ம்ம். எல்லாம் அப்படித்தான் பேசிக்கிறாங்க. நீ சின்ன வயசுல இருந்தே பட்ச்சுகினே இருப்ப. அதான் இப்படி. "
"எப்படி?"
" ஹாங் லூசாயிட்ட இல்ல அத சொன்னேன்."
எனக்கு சிரிப்பு வந்தது. ஃப்ரியா வுட்றா டேய் என்றேன்
"சரி சரி கைல ஏதாவது வச்சிருக்கியா?"
" என்னது?"
" இல்லடா நீ எப்பவும் சரக்கும் கையுமாதான் இருப்பன்னு சொல்லிகிட்டாங்க. சாவுக்கு வேற போறம் அதான்" என இளித்தான்.
ரெயில்வே கேட்டை வண்டி தாண்டி இருந்தது.
" கைல இல்லடா போற வழில வாங்கிக்கலாம்."
நல்லவேளையாக கடை எதுவும் திறந்திருக்கவில்லை. அப்புறம் பாத்துக்கலாம்டா நீ ஓட்டு என்றேன். வேளானந்தலுக்குள் வண்டி நுழைந்தது. மிகச் சிறிய கிராமம். சாவு வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் எதுவுமில்லை. சாவு மேளம் உக்கிரமாய் இருந்தது. பாட்டுக்கார லட்சுமி உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தாள். பத்துப் பதினைந்து பெண்கள் முதுகை சேர்த்தணைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அமுதாக்கா பிணத்தின் தலை மாட்டில் உட்கார்ந்திருந்தாள். பெயருக்கு கூட அவள் அழுததாய் தோன்றவில்லை. எங்களை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. வாங்கி வந்திருந்த மாலையை பிணத்தின் கழுத்தில் போட்டேன்.
அமுதாக்கா எழுந்து வந்து வா என்றாள். அம்மாவுக்கு முடில என்றேன். நீ வந்ததே பெரிசு என புன்னகைக்க முயன்றாள். மேளம் அடிப்பவர்களிடம் போய் பத்து ரூபாய் கொடுத்தேன். பறை உக்கிரமாய் ஒலிக்க ஆரம்பித்தது. பாடை கட்டும் ஏற்பாடுகளை யார் பார்க்கிறார்கள் என விசாரித்தேன். ஒருவர் அதற்கான முயற்சியில் இருந்தார். அவரிடம் இருபது ரூபாய் தாளொன்றை நீட்டினேன்.
அவர் பூ வோணும் சார் கொஞ்சம் தென்னங்கீத்து வேணும் என்றார்.
சங்கரை அழைத்து இருநூறு ரூபாய் கொடுத்தேன். அவனுக்கு கோட்டர் வாங்கிக் கொண்டு பூ வாங்கி வரச் சொன்னேன். இளிப்பாய் நகன்றான்.
அந்த ஓட்டு வீட்டிற்குள் போய் கத்தியைத் தேடி எடுத்துக் கொண்டு தோப்பிற்குப் போனேன். மரம் ஏறத் தெறிஞ்சவங்க யாராவது இருக்கீங்களா என்றதற்கு இரண்டு இளைஞர்கள் முன் வந்தனர். போய் தென்னங் கீற்றுகளை வெட்டி வந்தோம். பாடை தயாரானது. சங்கர் பூக்கூடையை கொண்டு வந்து கொடுத்து விட்டு ஆட்டோவில் போய் படுத்துக் கொண்டான்.
பிணம் கிளம்பியது. கழியின் முன் பாகத்தைத் தாங்கிக் கொண்டு சுடுகாடு போனோம். குழி தயாராக இருந்தது இறக்கி வைத்துவிட்டு சடங்குகளை கவனித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். அமுதாக்கா வீட்டை நீரால் கழுவி இருந்தாள். அங்கிருந்த சிறு திண்ணையில் அமர்ந்து கொண்டேன். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. உடன் யாருமே இல்லை. எல்லோருமே கிளம்பிப் போயிருந்தார்கள். சங்கரிடம் மேலும் ஒரு நூறு ரூபாய் தாளைத் தந்து போய்விடச் சொன்னேன். அம்மாவிடம் நாளை வருவதாய் சொல்லச் சொன்னேன். அதற்குள் அமுதாக்கா குளித்திருந்தாள். என்னையும் குளிக்கச் சொன்னாள். அணிந்திருந்த உடையோடு போய் தலைக்கு நீரூற்றிக் கொண்டேன். ஒரு புது வேட்டியை எடுத்து வைத்திருந்தாள். கட்டிக் கொண்டு வெறும் உடம்போடு வாசலில் அமர்ந்தேன். அமுதாக்கா யாரையோ அழைத்து பால் வாங்கி வரச் சொன்னாள். ஏழு மணி வாக்கில் எவர் சில்வர் டம்பளரில் டீ வந்தது . களைத்திருந்தேன். டீயை அமிர்தமாய் குடித்தேன்.
அமுதாக்காவும் ஒரு புதுப்புடைவையை அணிந்து கொண்டு உலை வைத்திருந்தாள். இருள் அடர்ந்து வந்தது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் இவள் எப்படி இத்தனை வருடம் வாழ்ந்தாள் என்கிற எண்ணம் வந்து போனது. எட்டு மணி வாக்கில் சுடச்சுட சாதத்தையும் குழம்பையும் எடுத்து வந்து வாசலில் வைத்தாள். அவளையும் சாப்பிடச் சொன்னேன். சேர்ந்து சாப்பிட்டோம். சாவு வீட்டின் காமம் துலக்கமாய் என்னுடலில் ஏறியது. குண்டு பல்பு வெளிச்சத்தில் அமுதா ஒளிர்ந்தாள். வெளியே பாய் கொண்டு வந்து போடச் சொன்னேன். அவள் மறுத்து உள்ளே வந்து படுக்கச் சொன்னாள். ஒரு புதுப் பாயை அந்தச் சிறுவீட்டின் நடுவில் விரித்து தலையணைகளைப் போட்டாள். சாவு வீட்டுப் பூ வாசம் இன்னும் மீதமிருந்தது. உடலளவிலும் மனதளவிலும் நான் நசுங்கி இருந்தேன்.
வாசல் கதவைத் தாழிட்டுவிட்டு, தன் புடவையைக் களைந்து விட்டு என்னருகில் வந்து படுத்துக் கொண்டாள். நான் மிக மெதுவாய் மிக ஆழமாய் அவள் உதடுகளில் முத்தினேன். அவ்வளவு தவிப்போடும் அவ்வளவு ஆசையோடும் என்னை ஏந்திக் கொண்டாள். அதுவரை எனக்குப் பழகிய உடல்கள் யாவும் உடலின் பழக்கங்களைப் போலவே இல்லை. அத்தனை புத்தம் புதிதாய் ஒரு கதவு திறந்தது. உடலின் மாய வெளி எங்கள் இருவருக்குமாய் திறந்து கொண்டது. அத்தனை துக்கங்களையும் அதுவரைக்குமான இழப்புகளையும் நாங்கள் பறிமாறிக் கொண்டோம். ஒரு தேவ ரகசியம் உடைந்து எங்களை எங்களுக்கே புதிதாய் அறிமுகப் படுத்தியிருந்தது. என் எல்லா பாவங்களும் அவள் உதட்டு நீரில் கரைந்தன. நான் மேலும் மேலும் எழுந்தேன். கரைந்தேன். அவளுடலில் தஞ்சமடைந்தேன். வறண்டு போன அவளின் உணர்வுகளனைத்தும் துளிர்த்தன. ஆழ்ந்த கலவிக்குப் பிறகு எங்களின் வெற்றுடல்கள் ஓய்ந்தன.
அதிகாலையில் கூரையின் மீது மழைத்துளி விழுந்த சப்தம்தான் என்னை எழுப்பியது. அப்படி ஒரு உறக்கம். என் வாழ்நாள் முழுக்கத் தூங்கியிராத உறக்கம். பால்யத்திற்குப் பிறகு அவ்வளவு ஆழமாய் போதையில்லாது உறங்கியிருக்கிறேன். மின்னல் வெட்டியது. படுத்த வாக்கிலேயே அவ் வெளிச்சத்தில் அமுதாவின் முகம் பார்த்தேன். அவள் அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தாள். யுகங்களாய் தீர்ந்திரா அலைவுறல்களின் முடிவு அவள் முகத்தில் துலக்கமாய் தெரிந்தது. இனி எழவே போவதில்லை என்பது போல் உறங்கிக் கொண்டிருந்தாள். நான் அதைக் கலைக்காது அந்த வீட்டின் மிகப் பழைய பின் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தேன். மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. இருள் விலகியிருக்கவில்லை. இடுப்பில் இருந்த வேட்டியையும் அவிழ்த்தெறிந்து விட்டு மழையில் போய் நின்றேன். உடல் சிலிர்த்து சிலிர்த்து அடங்கியது. நானொரு புதுப் பிறப்பெடுத்தேன்.
- மேலும்
ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இருபத்தேழு
" ஐயோ என்ன விட்டுடு"
அதிகாலையில் சாமிக்கு நினைவு திரும்பியது. ஒரு கணம் என்ன நடந்தது எனப் புரியாமல் விழித்தான். மெல்ல மெல்ல அந்த நாளின் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன. உடலை அசைக்க முடியவில்லை அடிவயிறும் நெஞ்சும் அப்படி வலித்தது. எழுந்து நின்றான். சமையலறைக்குப் போய் தண்ணீர் எடுத்துக் குடித்தான். பெரியசாமியைக் காணவில்லை. அவர் பிழைப்பது கடினம் எனத்தான் தோன்றியது. அவராகவே போயிருக்க வாய்ப்பில்லை. யாராவது வந்திருக்க வேண்டும். அவசரமாய் வெளியில் போனவன் திண்ணையில் சரிந்து கிடந்த துர்க்காவைப் பார்த்தான். செத்துப் போய்விட்டாளோ என்ற பய எண்ணம் அவனிற்குள் எழுந்தது. மெல்ல அருகில் போய் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தான். சுவாசம் இருந்தது. அவளைச்
சப்தம் போடாமல் உலுக்கினான். உள்ளே ஓடிப்போய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் அடித்தான். மூன்றாவது தண்ணீர் விசிறலுக்கு எழுந்து கொண்டாள்.
எதிரில் நின்றிருந்தவன் மீது பாயத் தயாரானாள். சாமி அவள் பாதங்களில் விழுந்தான்.
"மொத மொறையா புத்தி பிசகி தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சிரு" எனக் கதறினான்.
துர்க்கா சற்று சாந்தமானாள். சாமி தொடர்ந்தான்.
"கவுண்டனுக்கு என்னாச்சின்னு தெர்ல ஆனா பொழைக்கிறது கஷ்டம்னு தோணுது. விடிஞ்சதுன்னா நம்மள பொலி போட்ருவானுங்க" என நடுங்கினான்.
துர்க்கா எழுந்தாள். கூந்தலை உதறி முடிந்து கொண்டாள். வெளியில் எட்டிப் பார்த்தாள். தூரத்து வீடுகளில் லைட் எரிந்தது. தீர்மானமாய் உள்ளே வந்து இரண்டு மஞ்சள் பைகளில் கிடைத்ததெல்லாம் எடுத்து நுழைத்தாள். வா போகலாம் என அவனை இழுத்துக் கொண்டு பின்புறமாய் வெளியேறினாள். வயல்களில் புகுந்து பிரதான சாலை வந்தனர். நடந்தே சங்கராபுரத்தை அடைந்த போது கிழக்கு வெளுக்க ஆரம்பித்திருந்தது. ஒரு பால் லாரி ஹார்ன் அடித்துக் கொண்டு வந்தது. துர்க்கா ஓடிப்போய் நடு சாலையில் நின்றாள். வண்டி நின்றது இருவரும் ஏறிக்கொண்டார்கள். சாமி, வண்டி எங்கப் போவுது என விசாரித்தான். ஓட்டுனர் திர்ணாமல போவுது என்றார்.
சாமி முகத்தில் சாந்தம் படர்ந்தது. அயற்சியில் துர்க்கா கண்களை மூடிக் கொண்டாள்.
- மேலும்
என்கிற சாமிநாதனின் கதறலை துர்க்கா பொருட்படுத்தவில்லை. தரையில் மல்லாந்து கிடந்தவனின் மார்பில் இன்னொரு முறை ஆத்திரம் மிக மிதித்தாள். அவன் மார்பெலும்புக்கூடு உடைந்திருக்கலாம். சாமிக்கு நெஞ்சு அடைத்துக் கொண்டது. செத்தோம் என நினைத்ததுதான் அவன் கடைசி நினைவு. ஏற்கனவே போதையின் பிடியில் இருந்தவன் சுத்தமாய் மயங்கினான். மரண பயம் உறைய இன்னொரு மூலையில் பெரியசாமி மண்டை உடைந்து கிடந்தார். இரத்தம் வழிந்து அவர் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை மாற்றியிருந்தது. அவர் மண்டையைப் பிளந்த உலக்கை துர்க்காவின் கையில் இருந்தது. போதைக்கு அவள் தன்னை முழுமையாய் ஒப்புக் கொடுத்திருந்ததால் பச்சாதாபங்கள் காணாமல் போயிருந்தன. திருட்டுத் தாயோலிங்களா என ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தவளின் மூச்சிரைத்தது. உலக்கையை எறிந்துவிட்டு வெளித் திண்ணையில் போய் அமர்ந்து கொண்டாள். அக்கம் பக்கம் இருந்தவர்கள் வீட்டை நோக்கி வர ஆரம்பித்தார்கள். இவர்கள் போட்ட சப்தம் கேட்டு சற்றுத் தொலைவில் இருந்த பெரியசாமி கவுண்டர் வீட்டு விளக்குகள் சடாரென எரிந்தன. நான்கைந்து பேர் ஓடி வந்தார்கள். இவள் ஒரு பிசாசைப் போல வெளியே அமர்ந்திருந்ததைப் பார்த்து சந்தேகித்து உள்ளே ஓடினார்கள். அய்யய்யோ எனக் கத்தியபடியே பெரியசாமியைத் தூக்கிக் கொண்டு வெளியில் வந்தார்கள். கார எட்றா கார எட்றா எனக் கத்தினார்கள். கவுண்டர் வீட்டுப் பெண்கள் சூழ்ந்து கொண்டு கதற ஆரம்பித்தார்கள். அந்த இரவு அலங்கோலமாய் கிடந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை.
சாமிநாதனை யாரோ எழுப்பிப் பார்த்தார்கள். அவன் மயங்கி இருந்தான். செத்துட்டானா என சந்தேகித்து மார்பில் காதை வைத்துக் கேட்டார்கள். உசிரு இருக்குது. இவனையும் வண்டில தூக்கி போடுங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போங்க என்பதைக் கேட்க யாருமில்லை. வண்டி ஏற்கனவே மருத்துவமனையை நோக்கி விரைந்திருந்தது. துர்க்காவை கவுண்டர் வீட்டுப் பெண்கள் உலுக்கிக் கொண்டிருந்தனர். என்னாச்சின்னு சொல்லுடித் தேவ்டியா முண்ட என அவர் கன்னத்தில் பளார் பளாரென அறைந்தார்கள். துர்க்கா உறைந்திருந்தாள். அவளை யாரும் எதுவும் செய்துவிட முடியவில்லை. திருட்டு முண்ட குடிபோதையில இருக்கு என ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைந்தார்கள். துர்க்கா அப்படியே சரிந்தாள்.
பழைய பெட்டியில் ஒன்றையும் தேற்ற முடியாத ஆத்திரத்தில் வெளியே வந்த சாமிநாதன் நேராய் பெரியசாமி கவுண்டர் வீட்டு முன்பு போய் நின்றான். அவர் வெளியில் எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்து முன்பு போல சிரிப்பதில்லை. என்ன சாமி எனப் பொதுவாக கேட்டார். சாயந்திரம் வீட்டுப் பக்கம் வாங்க, உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் எனச் சொல்லிவிட்டு பதிலைக் கூட எதிர்பாராமல் வீட்டிற்குப் போனான். துர்க்கா இன்னும் எழவில்லை. அவள் உறங்கும் கோலம் பார்த்ததும் இவனிற்குள் ஆத்திரம் முசுமுசுவென மூண்டது. இவ ஆங்காரத்த மொதல்ல அடக்கனும். சாமியின் மூளை தீவிரமாக யோசித்தது. கட்டிலுக்கு கீழே வைத்திருந்த விஸ்கி பாட்டிலகளில் ஒன்றை வெளியே இழுத்து, மூடியைத் திருகி அப்படியே வாயில் சரித்துக் கொண்டான். வெளியில் போய் உட்கார்ந்து கொண்டான்.
துர்க்கா அவன் அரவம் கேட்டு விழித்தாள். அவளின் தினசரியைத் துவங்கினாள்.சாமி மெதுவாக குடித்தான். சமையல் ஆனதும் உள்ளே வந்து சாப்பிட்டான். மீண்டும் வெளியில் போய் அம்ர்ந்து கொண்டான். துர்க்கா அவனைப் பொருட்படுத்தவில்லை. வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்தாள். மதிய சாப்பாட்டை ஒரு தூக்கில் போட்டுக் கொண்டு போய் அப்பாவிற்கு கொடுத்து விட்டு வந்தாள். அசதியில் மீண்டும் போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
நான்கு மணி வாக்கில் பெரியசாமி வந்தார்.
இன்னா சாமி ஒரு மாதிரி இருக்கயே என்றபடியே திண்ணையில் அமர்ந்தார். சாமி அதுவரை மனதிற்குள் தீட்டிக் கொண்டிருந்த கணக்கை செயல்படுத்த ஆரம்பித்தான்.
இன்னிக்கு பவுர்ணமி காளி அப்படியே முழுசா எனக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கா அவள அமைதிபடுத்தத்தான் கொஞ்சம் போல குடிச்சேன் என்றபடியே திரும்பி பின்னால் வைத்திருந்த புட்டியை எடுத்து, தயாராய் வைத்திருந்த டம்ப்ளரில் கொஞ்சம் போல ஊற்றி பெரியசாமியிடம் நீட்டினான். குடிங்க என்றான். பெரியசாமி தயங்கினார். பொழுதோடவா என்றார். அட அடிங்க ஒண்ணும் ஆவாது என்றான். அவர் வாங்கி வாயில் சரித்துக் கொண்டார். நல்லாருக்கே என்றவரிடம் ஸ்காட்ச் என இளித்தான். இன்னொன்னு போடுங்க என்றபடி இரண்டாவது ரவுண்டை அதிகமாய் ஊற்றிக் கொடுத்தான். அதையும் வாங்கி ஒரெ மூச்சில் இழுத்தார்.
சாமி தெம்பானான் அவன் நினைத்ததை விட இவர் பெருங்குடிதான். தொண்டையைக் கனைத்துக் கொண்டே
"கேக்குறேன்னு தப்பா நினைச்சுகாதீங்க இவ்ளோ சொத்துக்கும் வாரிசே இல்லாம இருக்கே என்னன்னாவது யோசிச்சீங்களா?"
" எல்லாரும் கேக்குற கேள்விதான் சாமி, ஆனா என்ன செய்ய? காலம் கடந்திருச்சே., அவளுக்கும் ஒரு பொண்ணுக்கு மேல பொறக்கல..,"
"சரி அதுல போய் என்ன இன்னொன்னு கட்டுங்க"
"அட போய்யா., இந்த வயசுல போய் "
"என்னா வயசு போங்க. ஆள் பாக்க கிண்ணுதான இருக்கீங்க"
பெரியசாமி க்ளாசை நீட்டினார். இன்னொன்னு போடு.
சாமி ஆவலாய் நிரப்பிக் கொடுத்தான். அதையும் ஒரே மூச்சில் இழுத்து விட்டு எழுந்து போய் காறித் துப்பிவிட்டு வந்தார்.
சாமி, துர்க்கா எனக் கத்தினான்.
தூங்கிக் கொண்டிருந்தவள் அரண்டு எழுந்து வெளியில் வந்தாள். அவளைப் பார்த்ததும் சாமி இளித்தான்.
"கட்ச்சிக்க ஏதாவது எட்த்தாமே., அதிசியமா கவுண்டர் நம்மூட்டுக்கு வந்திருக்கார்"
சேலையை சரியாகப் போடாமல் வந்து நின்றதால் துர்க்காவின் முலைகள் பளிச்செனத் தெரிந்தன. பெரியசாமி அவளை அப்போதுதான் முதன் முறையாய் பார்ப்பதுபோல அவ்வளவு ஆசையாகப் பார்த்தார். அவர் பார்வையை உணர்ந்து அவசரமாய் துர்க்கா உள்ளே திரும்பிப் போனாள். காய்ந்த மல்லாட்டை இருந்தது. அதை வறுத்து எண்ணெய் மிளகாய்த்தூள் போட்டு ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்தாள். பெரியாசாமி கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக் கொண்டார். காரம் மூளையை எட்டியதும் ஹா என்னம்மா இருக்கு என்றார்.
சாமி அடுத்த ரவுண்டை ஊற்றியபடியே
"எல்லாம் நம்ம ட்ரைனிங்தான். அருமையா சமைப்பா, அத விட அருமையா குடிப்பா. போதையாயிட்டா அத விட அருமையா என்ன மேல தூக்கி போட்டுட்டு பண்ணுவா"
எனச் சொல்லியபடி பெருங்குரலில் சிரித்தான். முகத்தை சுளித்த துர்க்கா அவசரமாய் உள்ளே போனாள். பெரியசாமிக்கு போதை ஏறியிருந்தது. அவன் சொன்னதைக் கேட்டதும் குறும்பாய் சிரித்தார்.
"உன்ன மட்டும்தான் பண்ணுவாளா?" என்றார்.
"உங்களுக்கும் வேணுமா?" என நேரடியாக ஆரம்பித்தான்.
அவர் லேசாக தடுமாறினார்.
"இதுல போய் என்ன கவுண்டரே. உள்ள போங்க" என்றான்.
பெரியசாமிக்கு உடல் முறுக்கியது எழுந்து உள்ளே போனார். துர்க்கா கட்டிலில் அமர்ந்திருந்தவள் எழுந்தாள். என்ன வேணும் என்றாள். நீதாம்மே என ஆசையாய் அவள் மீது பாய்ந்தார். துர்க்கா இதை எதிர்பார்திருந்தாள். மேலே வந்து விழுவதற்குள் ஒதுங்கிக் கொண்டாள். கட்டிலில் போய் விழுந்தவர் சுதாரித்துக் கொண்டு எழுந்தார்.
"இத பாரு நீ இப்ப இருக்கிறது என் வூடு. இன்னும் உனக்கு என்ன வோணும்னு கேளு தரேன். நான் யார்னு தெரியுமில்ல"
என மீசையை நீவினார்.
துர்க்கா நிதானமாய் சொன்னாள். "என் வூட்டுக்காரனுக்கு புத்தி பிசகிடுச்சி. உங்க மரியாதைய காப்பாத்திகிட்டு வெளிய போய்டுங்க" என்றாள்.
பெரியசாமி ஆத்திரமானார். என்னடி பெருசா பத்தினி வேசம் போடுற என எழுந்து அவளைப் பிடித்து இழுத்து கட்டிலில் தள்ளி மேலே படர்ந்தார். துர்க்கா அவரைப் பிடித்து தள்ளினாள். தடுமாறியவரை எட்டி உதைத்தாள். கட்டிலிலிருந்து கீழே விழுந்தவரால் எழ முடியவில்லை. சத்தம் கேட்டு சாமி உள்ளே ஓடிவந்தான். துர்க்காவிற்கு ஆத்திரம் முற்றியிருந்தது.
"அடத் தேவ்டியாபையா கட்ன பொண்டாட்டியவா கூட்டி கொடுக்கிற?" எனக்கத்தியபடியே அவன் மீது பாய்ந்தாள். சாமி அவளை மடக்கினான். அதே நேரம் பெரியசாமி சுதாரித்துக் கொண்டு எழுந்து பின்புறமாய் அவள் சேலையை உருவி கைகளை பின்னால் வளைத்துக் கட்டினார். சாமி இன்னொரு பாட்டிலைத் திறந்து அவள் வாயில் ஊற்றினான். துர்க்கா முரண்டு பிடிப்பதை நிறுத்தியிருந்தாள். நிதானமாய் குடித்தாள். மயங்கியதைப் போல் உட்கார்ந்தாள். சாமி கள்ளச் சிரிப்புடன் வெளியேறினான். பெரியசாமி துர்க்காவை கட்டிலில் தள்ளி, பாவாடையே மேலே ஏற்றினார். அவள் அழகின் பிரம்மாண்டம் பார்த்த உடனேயே அவருக்கு கழண்டது. ஏற்கனவே பெரிய போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்ததால் உடல் விதிர்த்திருந்தது. அவளைத் தொடக் கூட இயலாமல் வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு வெளியேறினார்.
துர்க்கா கைகளை விடுவித்துக் கொண்டாள். சேலையை அணிந்து கொண்டாள். சமையலறைக்குப் போய் மூலையில் வைத்திருந்த உலக்கையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். சாமி அடுத்த ரவுண்டை பெரியசாமிக்கு ஊற்றிக் கொண்டிருந்தான். வந்து நின்றவளை இருவரும் கவனிக்கவில்லை. துர்க்கா உலக்கையை ஓங்கி பெரியசாமி மண்டையில் நச்சென இறக்கினாள். அலறக் கூட இயலாமல் அதிர்ச்சியில் சரிந்தார். சாமி மிரண்டான். அடுத்த அடி இறங்குவதற்குள் சுதாரித்து திண்ணையில் இருந்து இறங்கி ஓடினான். அவள் உலக்கையை எறிந்தாள். முதுகைப் பலமாய் தாக்கி தலைக் குப்புற விழுந்தான்.
சப்தம் வெளியில் கேட்கும் என யூகித்தவள் ஒரு கையால் பெரியசாமியின் தலைமுடியையும் இன்னொரு கையால் சாமியின் தலைமுடியையும் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உள்ளே போட்டாள். பெரியசாமி எழுந்து கொள்ள முயன்றார். சாமி கூப்பாடு போட்டான். துர்க்கா மீண்டும் வெளியில் போய் விழுந்து கிடந்த உலக்கையை எடுத்து வந்து பெரியசாமி தலையில் இன்னொரு பலமான அடியை இறக்கினாள். அவர் முழுமையாய் மயங்கினார். சாமி தவழ்ந்து வந்து அவள் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.
"போதைல புத்தி பிசகிடுச்சி மன்னிச்சு வுட்ரு" எனக் கதறினான். கால்களாலேயே அவனை விலக்கியவள். மார்பில் ஓங்கி மிதித்தாள். உலக்கையை வயிற்றில் இறக்கினாள். வலி தாங்க முடியாமல் மல்லாந்தவனின் மார்பில் இன்னொருமுறை ஆழமாய் மிதித்தாள்.
அவன் மூர்ச்சையானதும் உலக்கையை எறிந்துவிட்டு வெளியில் போய் அமர்ந்து கொண்டாள்.அதிகாலையில் சாமிக்கு நினைவு திரும்பியது. ஒரு கணம் என்ன நடந்தது எனப் புரியாமல் விழித்தான். மெல்ல மெல்ல அந்த நாளின் சம்பவங்கள் ஒவ்வொன்றாய் நினைவுக்கு வந்தன. உடலை அசைக்க முடியவில்லை அடிவயிறும் நெஞ்சும் அப்படி வலித்தது. எழுந்து நின்றான். சமையலறைக்குப் போய் தண்ணீர் எடுத்துக் குடித்தான். பெரியசாமியைக் காணவில்லை. அவர் பிழைப்பது கடினம் எனத்தான் தோன்றியது. அவராகவே போயிருக்க வாய்ப்பில்லை. யாராவது வந்திருக்க வேண்டும். அவசரமாய் வெளியில் போனவன் திண்ணையில் சரிந்து கிடந்த துர்க்காவைப் பார்த்தான். செத்துப் போய்விட்டாளோ என்ற பய எண்ணம் அவனிற்குள் எழுந்தது. மெல்ல அருகில் போய் மூக்கில் விரல் வைத்துப் பார்த்தான். சுவாசம் இருந்தது. அவளைச்
சப்தம் போடாமல் உலுக்கினான். உள்ளே ஓடிப்போய் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவள் முகத்தில் அடித்தான். மூன்றாவது தண்ணீர் விசிறலுக்கு எழுந்து கொண்டாள்.
எதிரில் நின்றிருந்தவன் மீது பாயத் தயாரானாள். சாமி அவள் பாதங்களில் விழுந்தான்.
"மொத மொறையா புத்தி பிசகி தப்பு பண்ணிட்டேன். மன்னிச்சிரு" எனக் கதறினான்.
துர்க்கா சற்று சாந்தமானாள். சாமி தொடர்ந்தான்.
"கவுண்டனுக்கு என்னாச்சின்னு தெர்ல ஆனா பொழைக்கிறது கஷ்டம்னு தோணுது. விடிஞ்சதுன்னா நம்மள பொலி போட்ருவானுங்க" என நடுங்கினான்.
துர்க்கா எழுந்தாள். கூந்தலை உதறி முடிந்து கொண்டாள். வெளியில் எட்டிப் பார்த்தாள். தூரத்து வீடுகளில் லைட் எரிந்தது. தீர்மானமாய் உள்ளே வந்து இரண்டு மஞ்சள் பைகளில் கிடைத்ததெல்லாம் எடுத்து நுழைத்தாள். வா போகலாம் என அவனை இழுத்துக் கொண்டு பின்புறமாய் வெளியேறினாள். வயல்களில் புகுந்து பிரதான சாலை வந்தனர். நடந்தே சங்கராபுரத்தை அடைந்த போது கிழக்கு வெளுக்க ஆரம்பித்திருந்தது. ஒரு பால் லாரி ஹார்ன் அடித்துக் கொண்டு வந்தது. துர்க்கா ஓடிப்போய் நடு சாலையில் நின்றாள். வண்டி நின்றது இருவரும் ஏறிக்கொண்டார்கள். சாமி, வண்டி எங்கப் போவுது என விசாரித்தான். ஓட்டுனர் திர்ணாமல போவுது என்றார்.
சாமி முகத்தில் சாந்தம் படர்ந்தது. அயற்சியில் துர்க்கா கண்களை மூடிக் கொண்டாள்.
- மேலும்
Subscribe to:
Posts (Atom)
Featured Post
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
-
தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக் கொண்டோம்.எலெக்ட்ரானிக்ஸ் லேப் முன்பா? அல்லது சிவில் நூலகத்தில...
-
நேற்றிரவு தின்று செரித்த பிரதியொன்று சில விலங்குகளை உயிர்ப்பித்துப்போனது கட்டுக்களுடைத்து வெளிவந்த புலியின் குரூரம் மட்டும் பிரதானமாயிருந்தத...