Friday, May 14, 2010

தாலாட்டு


குட்டிப் பையன்
தூங்க வேண்டும்
தொலைக்காட்சியை இருளில் மூழ்கடித்தாயிற்று
அலைபேசி எப்போதும் போல் அமைதியில்
முரட்டுத்தனமான நண்பர்களுக்கு பயந்து
அழைப்பு மணியையும் துண்டித்தாயிற்று
கோடை துவங்கிவிட்டதால்
குளிரூட்டியின் சபதத்தை
எதுவும் செய்ய இயலாது

மெல்லப் பாடுகிறேன்
மோசமான குரல்தாமென்றாலும்
தொடர்ச்சியாய் இப்பாடல்களைப் பாடி
இனிமையைப் பயிற்சியால்
நிறைத்திருக்கிறேன்
கற்பூர பொம்மையொன்று
ஆயர்பாடி மாளிகையில்
வரம் தந்த சாமிக்கு
ஒரு தெய்வம் தந்த பூவே
எழுதுகிறேன் ஒரு கடிதம்

திராட்சைக் கண்கள் ஒளிர
மென்னிருளில் சப்தமாய் கத்துகிறான்

என்னைப் புறந்தள்ளி
அவனுக்கு பிடித்த விளம்பரப் பாடல்களை
பாடுகிறாள்/ சொல்லத் துவங்குகிறாள்
ப னி துளி பனித்துளி
டூடுங் டூடுங்க் டொக்கோமோ
மிச்சம் இருக்க மூணு ரூபாய்ல ஐஸ்கிரீஸ்
சாப்டேன் ஆஆ
என்றதும்
சிரித்துச் சம நிலைக்கு
வருகிறான்
கடைசி அஸ்திரத்தை
லேசாய் சிரித்தபடியே
பிரயோகிக்கத் துவங்குகிறாள்
அம்மி அம்மி அம்மி மிதிச்சி

30 comments:

அபி அப்பா said...

அடங்கொய்யால இப்பவே அம்மி மிதிச்சு பாட்டு கேக்குதா பய புள்ள மொவனுக்கு! நடத்து சாமீ நடத்து!:-))

ஆயில்யன் said...

:))))

தாலாட்டுக்குன்னு டிவி விளம்பரங்களை/டைட்டில் பாடல்களை பதிவு செய்து தயாராக ப்ளே செய்யக்காத்திருக்கும் நிறைய குடும்பங்களை இப்பொழுது காண முடியும்!

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்.. :)

ராம்ஜி_யாஹூ said...

அற்புதம் அய்யனார்.

நெடும் தொடர்களால் இப்படி ஒரு நன்மை விளைகிறதோ, சூப்பர்.

VELU.G said...

கவிதை அருமைங்க

VELU.G said...

கவிதை அருமைங்க

க.பாலாசி said...

அருமைங்க... வடித்தவிதமும் அழகு....

Unknown said...

நல்லாயிருக்குங்க.

லேகா said...

கவிதை அழகு

குழந்தைகள் சார்ந்த எல்லாமுமே!!:-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

MSK / Saravana said...

தாலாட்டு நல்லா இருக்கு தல.. :)

MSK / Saravana said...

//அபி அப்பா said...

அடங்கொய்யால இப்பவே அம்மி மிதிச்சு பாட்டு கேக்குதா பய புள்ள மொவனுக்கு! நடத்து சாமீ நடத்து!:-))//

ஹா ஹா ஹா.. :)))

Ashok D said...

நல்லாயிருக்குங்க :)

கோபிநாத் said...

என்னதான் பினாவனாவாக இருந்தாலும் டிவி சீரியல் தான் தாலாட்டு....;))) அதான் நேரில் பார்த்தோமே உங்க நிலைமையை ;))

பா.ராஜாராம் said...

வாழ்வை எழுதுவதை விட வாழும்போது அழகாய் இருக்கிறான் அய்யனார், கவிஞன் (அ) எழுதுபவன்.

இல்லையா?

ரொம்ப நெகிழ்த்திய கவிதை இது.

மாதேவி said...

சீரியல் தூக்கமா :))

Anonymous said...

Beauty!

Vetrimagal

குணா கந்தசாமி said...

கவிதையில் இன்்னும் ஆழம் காண வேண்டியிருக்கிறது.கரையில் கால் நன்னைத்தவன் கத்திக்கொண்டிருப்பது கடல் கடல் என்றாலும் அது அலைதான்.

தமிழ்நதி said...

பையனும் உன்னை மாதிரித்தானா? சரி சரீ... இப்பிடிச் சொல்லிட்டாளே என்று அந்த்ரேய் தார்கோவ்ஸ்கி படம் போட்டு பையனைப் பார்க்கச் சொல்லிடாதே:)

anujanya said...

ரொம்ப நாட்களுக்குப் பின் அங்கதம் கலந்த user-friendly கவிதை. இப்படியும் எழுது தல. btw, உங்க சாய்ஸ் தாலாட்டு எல்லாமே வாவ். கடைசி பாட்டு கேட்டதில்ல. என்ன படம்?

அனுஜன்யா

சந்தனமுல்லை said...

:-) ரிலேட் பண்ணிக்க முடியுது!

/அம்மி அம்மி அம்மி மிதிச்சி/ - இது என்னன்னுதான் புரியலை!

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. இதை எழுதி ஒரு மாதமிருக்கலாம். கவிதை என்பதின் அடி முடி ஒன்றையும் காண இயலாத வஸ்து என ஓரமாய் தூக்கிப் போட்ட எத்தனையோ சுயபுலம்பலில் ஒன்றுதாம் இது. பொழுது போகாத வெள்ளியில் சிறிது தயக்கத்தோடுதான் பதிவிட்டேன். இத்தனை பேருக்குப் பிடித்திருப்பது ஆச்சரியம்தான்.

Ayyanar Viswanath said...

குணா
உண்மைதான். கவிதையின் ஆழம் என்பதையெல்லாம் கண்டுவிட முடியுமா என்பது தெரியவில்லை. இதுதான் ஆழம் என்று எவராலும் சொல்லி விட முடியாதுதானே. இயங்குதல் அல்லது இயக்கம் மட்டுமே அலையையும் ஆழத்தையும் தீர்மானிக்கின்றது.

தமிழ்
இந்த கவிதைக்கு கடைசியாய் பாஸ்கர் சக்திக்கு எனத்தான் போட நினைத்தேன். சற்றுத் தயக்கமாய் இருந்ததால் போடவில்லை. தர்க்கோயெவ்ஸ்கியா என் மகனுக்கு டொக்டர் விஜயைத்தான் பிடித்துத் தொலைகிறது :(

Ayyanar Viswanath said...

அனுஜன்யா : கல்கி படத்தில் வரும் பாடல் அது. கேட்டுப் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கலாம்.

முல்லை:/அம்மி/ மெட்டி ஒலி சீரியலின் துவக்கப் பாடல். இப்போது காலையில் ஒளிபரப்புகிறார்கள் போல இப்பாடல் வந்ததும் தூங்கிவிடுவானாம் :)

pavithrabalu said...

very nice.. It is universal among tamil families..

selventhiran said...

ஹைய்...!

Unknown said...

அருமையான கவிதை. தந்தையின் நெகிழ்ச்சி ;)) இன்னும் கொஞ்ச நாளில் டொரிமான், சின் சான், சூப்பர் சுஜி என்றெல்லாம் சொல்வான், தயாராக இரு ;)))

ராம்ஜி_யாஹூ said...

என்ன பையனுக்கு டாக்டர் விஜய் தான் பிடிச்சு இருக்கா.

என் உச்சி மண்டையில் கிர்ரு ங்குது

யாப்பு இலக்கணம் உள்ள இந்த பாடல் கேட்டா கையை காலை ஆட்டுகிறார உங்கள் பய்யன்.

மோனி said...

வழமையினும் அருமை...

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))

பையனுக்காக இன்னும் நிறைய கத்துக்கனும் போல நீங்க ;)))))

Featured Post

test

 test