
வெறுமை வேண்டியும்
துக்க மன நிலைக்குமாய்
தஸ்தாயெவ்ஸ்கியுடன்
படுக்கையில் சரிகிறாள்
மொஹல் மெத்தையின்
வெல்வெட் வழவழப்பில்
விரைந்து பற்றவாரம்பிக்கிறது தீ
அகிரா,பிரஸ்ஸோன் மற்றும்
மொராக்கோ சகோதரர்களிடம்
சிக்கியிராத
தஸ்தாயெவ்ஸ்கியின் ஆன்மாவை
ஒளிப்படச் சுருளில்
பொதிந்துவைக்க
குளிர் விரவிய
தெருக்களில் மிதந்தபடி
விரல்சுடும் சிகரெட்டை
காற்றில் சுண்டி விடுகிறான்
பொறிகளை
சிதறவிட்டு
மெல்ல அணைகிறது
கங்கு
பின்பொரு
சலித்த கோடை இரவில்
மூத்திர இருள் சந்தில்
தஸ்தாயெவ்ஸ்கியை
கொல்வது குறித்த
சதியாலோசனையைத்
துவங்குகிறார்கள்
இதே போன்றதொரு
குளிர் இரவில்
இருபக்கமும் மரப்பிடிகொண்ட
ரம்பத்தை
பின்பும் முன்புமாய்
இழுத்து
தஸ்தாயெவ்ஸ்கியின்
தலையைக் கொய்ததை
நினைத்துக் கொள்கிறார்கள்
உட்கார்ந்தும் நின்றுமாய்
மூத்திரம் கழித்து
எதிரெதிர் திசைகளில்
திரும்புகிறார்கள்.
7 comments:
எப்பப் பாரு மூத்திரத்தை எழுதிக்கிட்டு... என்னடா இது:)
ரொம்ப நல்லா இருக்குங்க அய்யனார்
ஒண்டும் விளங்கேல அய்யனார்
அருமை
வடிவேலுவின் மூத்திர சந்து ஜோக் தான் ஞாபகம் வருகிறது.
முதல்ல மூணு பேர்தான் அடிச்சாங்கம்மா, அப்புறம் ஒரு மூத்திர சந்துக்கு அனுப்பினாங்க.
not that much catchy, i dont know why
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
இதுவரை தஸ்தாயெவ்ஸ்கி படித்ததில்லை. அகிரா,பிரஸ்ஸோன் மற்றும் மொராக்கோ சகோதரர் பார்த்ததில்லை, என்றாலும் கவிதை பிடித்திருந்தது. :)
Post a Comment