Friday, July 27, 2007
நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!
தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக் கொண்டோம்.எலெக்ட்ரானிக்ஸ் லேப் முன்பா? அல்லது சிவில் நூலகத்திலா? எந்த இடம் என்பது மறந்து போய்விட்டது.ஐந்தாவது செமஸ்டர் ஆரம்பமாயிருந்த சமயம் மெர்க்குரிப்பூக்கள் திரும்ப நூலகத்தில் கொடுங்களேன்.. நான் படிக்க வேண்டும்.. எனக் கேட்டிருந்தாய்.தகவல் சொன்ன அந்த நூலகனை உதைக்க வேண்டும் என மனதில் கறுவிக்கொண்டே திருப்பிக் கொடுத்தேன்.கல்லூரி மலரில் உங்கள் கவிதை படித்தேனென்று ஒருமுறையும் நான் உங்க பக்கத்து ஊருதான் என்று ஒருமுறையும் கேண்டீனில் பார்த்துக்கொண்டபோது சொன்னாய்.நள்ளிரவு சீட்டுக் கசேரிகளினூடே ரவி சொன்ன அந்த பிகர் நல்லா கீரா மச்சி! தான் உன்னைப் பற்றி யோசிக்க வைத்தது.ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் ராமஜெயம் பஸ்ஸில் எனக்காக காத்திருந்ததை நான் எதிர்பார்க்கவில்லை.நேருக்கு நேர் எங்கெங்கே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்குமென்று சொல்லிக்கொண்டிருந்தாய்.நீ ஏதோதோ பேசிக்கொண்டு வர மிக அருகில் மல்லிகைப்பூ வாசனைகளுடன் ஒரு பெண்ணை எதிர்பார்த்திராததால் வாயடைத்து மெளனமாகவே வந்து கொண்டிருந்தேன்.சனிக்கிழமை காலை தொலைபேசியில் உன் குரல் கேட்கத் தவிப்பாய் இருந்தது.அந்த திங்கட்கிழமையா? அடுத்த திங்கட்கிழமையா? மெக்கானிகல் பில்டிங் பின்னாலிருந்த மைதானத்தில் வைத்து உன்னை காதலிப்பதாய் சொன்னேன் என நினைவு.சற்றுப் பெரிய விழிகள் உனக்கு சட்டெனக் குளமானதில் தவித்துப் போனேன்.பதிலெதுவும் சொல்லாமல் விலகிப்போனாய்.அகிலாவிடம் இந்த ஆம்பள பசங்க இப்படித்தான் என வன்மத்துடன் சொல்லியிருந்தாய்.அகிலா அவ கிடக்கிரா விடுறா என ஆறுதல் சொன்னபோது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
பிரியும் தருணங்களில் நட்புக்கரம் நீட்டியபோது குழந்தையின் குதூகலத்துடன் விரல் பிடித்துக் கொண்டாய்.என்றென்றைக்குமான தோழி ப்ரிய ஸ்நேகிதி என உளறிக் கொட்டி முப்பது பக்க கடிதம் கொடுத்தேன் (இன்னும் வைத்திருக்கிறாயா அதை?)உலகின் அடிவானத்தை மீறிய அழகு இரண்டு மிகச்சிறிய இதயங்களின் நட்பில் இருக்கிறதென அறிவுமதியை துணைக்கழைத்தேன்.ஓசூரிலிருந்த முதல் இரண்டு மாதங்களில் வாரம் இரண்டு முறையாவது பேசிக்கொண்டோமில்லையா?உனக்கு தொலைபேச எடுத்துக்கொண்ட சிரமங்கள் நீ அறியாதது.தொலைபேசியில் கூட ஆண் குரல் அனுமதியில்லை என்பாளே உன் வார்டன் அவள் பெயரென்ன ஏதோ பாட்டுடன் சம்பந்தப்படுத்தி கிண்டலடிப்போமே.அண்ணாமலை நகர் எஸ் டிடி பூத் பெண்கள் என்னை எங்கு பார்த்தாலும் நமுட்டு சிரிப்பொன்றை உதிர்ப்பார்கள்.குளிக்கும்போது எட்டிப்பார்த்ததுபோல் கூசிப்போவேன்.
அடுத்த எட்டு மாதங்கள் உன் பிறந்த நாள்,என் பிறந்த நாள், நியூ இயர், உன் நினைவு வந்தது என ஒருமுறை இப்படியாய் தொலைபேசிக்கொண்டோம்.நான் எத்தனை கடிதங்கள் போட்டேன் என நினைவில்லை.ஒரு நள்ளிரவில் உனக்கு கடிதமெழுதிக்கொண்டிருந்தபோது அண்ணா பார்த்து விட்டார் ஆனால் எதுவும் கேட்கவில்லை.பின்பு பாண்டிச்சேரிக்கு மாற்றலாகிப் போய்விட்ட இரண்டு மாதங்கள் கழித்து தொலைபேசினாய்.படிப்பு முடிந்தது வேலைக்கு முயற்சிப்பதாய் கேட்டவுடன் மகிழ்ந்து போனேன்.உடனடியாய் அலுவலக ஏ.ஜி எம் மை அருவி பாருக்கு கூட்டிபோய் உன் வேலையை உறுதி செய்தேன்.உனக்கு ஹாஸ்டல் தேடியது நினைவிருக்கிறதா? அந்த அப்ளிகேசனில் கார்டியன் என்ற இடத்தில் என் கையொப்பமிட்டது இன்னமும் மகிழ்வைத் தருகிறது.
இரண்டாயிரம் வருட ஜீன் மாத ஒன்றாம் தேதி விஜயன் பைக்கில் ஆஸ்டலில் இருந்து உன்னை கூட்டி வந்தேன்.அந்த ஆறு மணி குளிர்.. ஆளில்லாத நேரு வீதி.. என் காதோரத்தில் உன் மூச்சுக் காற்று.. மற்றும் உன் பிரத்யேக வாசனை(ஒரு நள்ளிரவில் இது என்னடி வாசனை என கிறங்கியபோது ஃபேர் எவர் க்ரீம் பா என சொல்லி என் முகம் சுருங்கியதைப் பார்த்து சிரித்தாயல்லவா) இவைகளோடு அலுவலகத்தில் இறக்கி விட்டது மறக்க முடியாத தருணம்.அதற்கெனவே தொடர்ந்து இரவுப்பணி வாங்கிக்கொண்டேன்.எல்லா மாலைகளிலும் கடற்கரைக்கு போவதை விடவில்லை இல்லையா? கடற்கரைக்கெதிர்த்தார் போலிருந்த பூவரச மரமொன்றின் கீழிருக்கும் மரப்பெஞ்சு நமக்கெனவே உருவானதாய் சொல்லி சிலாகிப்போம்.இதற்க்கு ஏன் காதலர் பூங்கா எனப் பெயர்? நண்பர்கள் நாம் கூடத்தான் வருகிறோம் என கள்ளச் சிரிப்பை மறைத்தபடி நீ கேட்ட மாலையில் தான் கங்கா வைப் பற்றி சொன்னேன் அப்போதுதான் முதன் முதலில் என் உள்ளங்கை பிடித்தாயல்லவா?ஆங்! இன்னொரு சந்தர்ப்பம் ராமன் திரையரங்கில் அலைபாயுதே பார்த்துக் கொண்டிருந்த போது சட்டென உணர்ச்சி வயப்பட்டு என் உள்ளங்கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாய் என்ன? என்ன? எனப் பதறிக்கேட்டதற்க்கு எதுவுமில்லையென தலையசைத்தாய் ஆனால் உன் விழியோரம் துளிர்த்திருந்த நீர் அந்த இருட்டிலும் மின்னியது.
ஆகஸ்ட் இருபத்தேழாம் தேதி மதியம்தான் நான் முதலில் தங்கியிருந்த அந்த மொட்டை மாடி இருட்டறையில் உன்னை முத்தமிட்டேன். (உலகிலேயே மிகவும் பிடித்த இடமென்று அடிக்கடி சொல்வாயே) அந்த துணிவு எப்படி வந்ததெனத் தெரியவில்லை அதற்க்கு முன்பு எத்தனையோ நாட்கள் தனித்திருந்தும் எதுவும் நேர்ந்து விடவில்லை அன்று உன்னை முத்தமிட எந்த முன் தீர்மாணங்களுமில்லை வெகு இயல்பாய் நிகழ்ந்தது அது… ஒரு பூ இதழ் விரிப்பது போல.அதற்க்குப்பின் முதல் ஷிப்ட் முடித்துவிட்டு நேராய் என் அறைக்கு வந்து விடுவாய் மூன்று மணிக்கு கதவையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பேன்.எத்தனை முத்தங்கள் ஹேமா! அப்பா ஏன் அப்படி செய்தோமென இருக்கிறது.கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் முத்தம்தான்.உலகத்திலேயே உடல்மொழியை முதலில் பேசிவிட்டு காதலை உறுதி செய்தவர்கள் நாமாகத்தான் இருக்கமுடியும்.ஃபார்மலாக நீ எப்போது என்னை காதலிக்கிறேன் என சொன்னாய் என மறந்து போய்விட்டது(தேதிகளை நினைவுபடுத்திக் கொள்ள பச்சை நிற டைரியை இப்போது படிப்பதில்லை ஹேமா)
புயலும் மழையுமாயிருந்த ஒரு நாளின் இரவில் பார்த்தே ஆக வேண்டுமெனத் தொலைபேசினாய்.ஏழு மணிக்குப் போன மின்சாரம் ஒன்பது மணி வரை வந்திருக்கவில்லை.ஒரு மரம் விழும் சப்தம் கேட்டது வா! போய் பார்க்கலாம் என ரோமண்ட் ரோலண்ட் நூலகத்திற்க்காய் சென்றோமே. மின்சாரம் இல்லாத அந்த இரவில் ஒளிர்ந்த பிரஞ்சு வீதிகள் எத்தனை அழகு ஹேமா!
நூலகத்தை ஒட்டியிருந்த அசோக மரம் புயலுக்கு இரையாகியிருந்தது மிகுந்த வருத்தங்களுடன் பார்த்தபடி தெருவை கடந்து மூலை திரும்புகையில் என்னைக் கட்டிக் கொண்டாய் அந்த இருளில் உன் உதட்டில் முத்தமிட்டதுதான் என் சிறந்த முத்தமென கிறக்கமான மதியங்களில் சிலாகிப்பாய்.
டிசம்பர் இருபத்து மூன்றாம் நாள் கார்த்திகை தீபத்திற்க்கு ஊருக்குப் போகாமல் அறைத்தோழனை சரிகட்டி ஊருக்கனுப்பி உன் வருகைக்காக காத்திருந்தேன் கைக்கொள்ளாமல் அகல் விளக்குகளை வாங்கி வந்திருந்தாய்.தாழ்பாளில்லாத என் குளியலறையில் எவ்வளவு நம்பிக்கைகளோடு குளித்துவிட்டு வந்தாயென சிலாகித்தபோது பாக்கறதுன்னா பாத்துக்கோங்க என கிறங்கடித்தாய் மேலும் உன் மேல உன்ன விட அதிக நம்பிக்கை விஸ்வா! எனக்கு எனச் சொல்லி என் வன்மையான முத்தத்திலிருந்து அந்த தருணத்தை பாதுகாத்துக் கொண்டாய். பாவாடை தாவணியில் உன்னைப் பார்த்தது இல்லை என எப்போதோ சொல்லியிருந்ததை நினைவில் வைத்திருந்து கையோடு கொண்டு வந்திருந்த மல்லிகைப்பூ, கொலுசு, பாவாடை தாவணி சகிதமாய் நீ சடுதியில் மாறிப்போனாய் எப்படி இருக்கேன் என முன் வந்து கேட்ட தருணம் வெகு நாட்கள் கனவில் வந்தது ஹேமா!.
மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அறைமுழுக்க அகல் விள்க்குகளை ஏற்றி வைத்தோம் தீபத்தின் ஒளியில் ஒளிர்ந்த அறையின் நடுவில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தோம்.எண்ணெய் தீர்ந்து அகல் விளக்குகள் குளிர்ந்தபின்பும் விளக்குகளைப் பொருத்தாமல் பால்கனி சன்னல்களினூடாய் உள் விழுந்த நிலவொளி வெளிச்சத்தில் புதைந்தபடி வானம் பார்த்தோம். நட்சத்திரத்தினுள் ஒன்றைத் தெர்ந்தெடுத்து அதனிடம் சொன்னாய் ஏ! நட்சத்திரமே பார்த்துக்கொள் இதே போன்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் உன்னிடம் பேசும்போது இவரின் குழந்தையை நான் சுமந்திருப்பேன்.(நீ எப்போதும் என்னை ஒருமையில் கூப்பிட்டதில்லையே ஏன் ஹேமா?) ஏதாவது பாடுங்களேன் எனக் கேட்டதற்க்கு கண்கள் மூடி..சுவற்றில் சாய்ந்து உன் மடி மீது கால் தூக்கிப்போட்டு கனாக் காணும் கண்கள் மெல்ல பாடினேனே..செத்துடனும் போலிருக்கு விஸ்வா என உருகிப்போனாய்.. அந்த பின்னிரவில் ஈரமான தொடுகையில் விழித்துப் பார்க்கையில் நீ என்னை முத்தமிட்டுக் கொண்டிருந்தாய் ஏய் தூங்கு என கோபித்தபோது தூங்குமூஞ்சி எனச் சொல்லி நெருங்கி வந்து படுத்துக் கொண்டாய்.
நம் காதலை நீ அவசரப்பட்டு சொல்லியிருக்க வேண்டாம் ஹேமா! எவ்வளவு விரைவாய் நடந்தது அந்தப் பிரிவு.மீண்டும் வேலை மாற்றம்,உன் அக்காவின் பிரச்சினைகள்,அம்மாவின் பிடிவாதம், என் தற்கொலை முயற்சி, உன் கதறல்கள், நமது குடும்பத்திற்க்குள் நடந்த அடிதடி……..
எதுவிருப்பினும் நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
59 comments:
யாருங்க அந்த கங்கா ஏங்க இங்க வந்தான் ஏங்க அவன் சொத்து போனான் கன்பியூஸ் பன்றிங்களே
நீங்க இனிமே கவிதையெல்லாம் எழுத வேண்டாம் கதையே எழுதுங்க அதுதான் கலக்கலா இருக்கு முக்கியமா புரியுது
அய்யனார் டச் பண்ணிட்டீங்க...
பின்னூட்டமிடவும், சொல்லவும் சொற்கள் ஏதுமின்றி.........
அசத்தீருக்கீங்க அய்யனார்!
இப்படி எழுதுனா நாங்க ஓடியே போயிடுவோம்
அப்புறம் நீ என்னை விட்டு போயிருக்க வேண்டாம் மின்னல்( அல்லது தமிழ்மணம்) அப்படி பதிவு போடவேண்டியிருக்கும்
இத கேட்க யாருமேயில்லையா..???
ஹி ஹி படம் சூப்பர்
யாருய்யா அது கைய தட்டிவிட்டது
அய்ஸ் அது நான் போடல கையதட்டி விட்டுடானுவோ..!!!!
:-(
இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன் உங்களிற்க பின்னூட்டமிடுவது. மிக மிக நல்ல மொழிநடை அற்புதமாக சொக்கிப்போய் வாசிக்க வைத்த பதிவு இது
இது கதைதானே??? எதுவாய் இருந்தாலும் சட்டயை இறுக்கிப் பிடித்து ஏய்யா இப்படி எங்க உயிரை உருக்கி எடுக்கற மாதிரி எழுதறன்ன்னு கேக்கணும் போல இருக்கு.
மனசு கலங்கிடுச்சு.
மிக அருமையாக இருக்கிறது
காதல் என்பது காற்றில் பரவிய வாசத்தை போல கொஞ்ச நாள் கிறங்கடித்தாலும் அதை மீறி நிசம் நம்மை விடாமல் பிடிக்கும். வாழ்க்கையை பழகுங்கள். வாழ்த்துகள்.
நிறைய சொல்லனும் போல இருக்கு.
ஆனா என்ன சொல்லறதுன்னு தெரியல
இருந்தாலும்,ஹேமா உன்னை விட்டுப்
போயிருக்க வேண்டாம்.
பொதுவில் கதைகள் என்றால் காததூரம் ஓடிவிடுகிறவன் நான்....
கடைசியாக எப்போது சிறுகதை படித்தேன் என்பது நினைவில்லை...ஒரு வேளை வருடங்களுக்கு பிறகு படித்ததாலா தெரியவில்லை....
என்ன சொல்வது...ம்ம்ம்ம்....திரும்ப ஒரு முறை படித்துவிட்டு வருகிறேனே....!
Gud one..btw ithu unga sontha anupavama?
Cheers
Pk
இப்பதிவு மிகவும் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது; சிலவேளைகளில் கதைசொல்லியே நானாகவும் இருப்பது போன்று வருகின்ற உணர்வையும் தவிர்க்கமுடியவில்லை.
.....
பாலகுமாரனின் புத்தகஙகளை ஒருவித வெறியோடு வாசித்த/சேகரித்த நாட்களை நினைவு மீண்டும் எழுதிச்செல்கின்றது. சிலவேளைகளில் சற்று அதிகப்படியான மாயத்தோற்றமாயிருந்தாலும் பாலகுமாரனின் ஊடாகத்தான் பெண்களை ஒரளவு அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். இப்போது அவ்வகையான கதைகளைக் கடந்துவந்துவிட்டாலும், பாலகுமாரனின் எழுத்து நடை இன்னும் அலுத்துப்போய்விடவில்லை.
:-(
:(
ஹலோ என்ன நினைச்சிட்டு இருக்கிங்க?? ரொமான்டிக் லவ் ஸ்டோரி எழுதி என்ன மாதிரி ஒன்னும் தெரியாத வயசுப்பிள்ளைங்கள ஒரு வழி பன்னிடுவிங்க போல??
அய்யனார் அண்ணா ரசித்து படித்தேன்.. ரொம்ப சூப்பர்ப்..
thamizmana star neenggathaana? sollave ille????
vaazthukkal. :-D
அனானி மிக்க நன்றி இரண்டு அனானியும் நீங்கதானா?
நன்றி வினயன்
வெயிலான் நன்றி
மின்னல் :) முதல் கமெண்டு சூப்பர்யா
/*அந்த பிகர் நல்லா கீரா மச்சி! */
இந்த ஆரம்பம் விடலைத்தன்மான காதல் போல் ஒரு தோற்றம் தருகின்றது... காதல் வயப்படுகின்றது நன்பர் சொல்லியா..? விளக்குங்களென்... அப்புறம்.. ஓசுர் என்று வருகின்றது... நீங்க படித்த இடமா..இல்லை வேலை பார்த்த இடமா..?
அய்யனார் அடிக்கடி இதுபோலவும் எழுதுங்கள், மிகவும் ரசித்து படித்தேன், மிக அல்ல மிக மிக அழகாக இருக்கிறது.
லக்கி :)
அகிலன் மிக்க நன்றி உங்களின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும்
நந்தா மிக்க நன்றி :)
..உங்கள் தனி மடல் பார்த்தேன் விரிவாய் மடலிடுகிறேன்..
/வாழ்க்கையை பழகுங்கள். வாழ்த்துகள்/
:) அக்கறைக்கு நன்றி
தாமோதர் மற்றும் பங்காளி உங்களுக்கு பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிரது
சியர்ஸ் பி கே
டிசே
உணர்வுகள் எல்லாருக்கும் பொதுவாய்த்தானிருக்கிறது.உங்கள் எழுத்துக்களினூடாய் என்னைப்பார்க்க முடிகிறது.படித்திருப்பவை / பார்த்திருப்பவை எல்லாம் பொதுவாயிருக்கும்போது அனுபவங்களும் அதை சார்ந்துதானே இருக்கும் :)
பாலகுமாரன் என்னாலும் மறக்க முடியாத மனிதர்தான் டிசே கடந்து வந்து விட்டாலும் ஆரம்பத்தினை மறக்க முடியுமா ..இப்போதும் சலித்த விடுமுறை நாட்களில் கரையோர முதலைகளும் அகல்யாவும் படித்துக் கொண்டுதானிருக்கிறேன்
காட்டாறு சோகம் வேண்டாமே :)
ஸ்நேகிதன் வயச குறைத்துக் கொள்ளாதீங்க :)
அனு! நல்லவேளை.. அடுத்த வாரம் வந்து போன வாரம் நீங்களா எனக் கேட்காது போனாயே..;)
நன்றி
நல்லாதான்யா இருக்கு
நேத்து மிஸ் பண்ணிட்டேன். :(
டிபிசிடி
பார்த்தவுடன் தெய்வீக காதலெல்லாம் தமிழ் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம்..நான் பார்த்தவரை விடலை பருவத்தில் தோன்றும் கவர்ச்சி அல்லது நண்பர்களின் உசுப்பல்கள் இவைதான் காதலின் ஆரம்ப வேர்களாய் இருக்கிறது..ஓசூரில் பணிபுரிந்திருக்கிறேன் :)
சரவணா இந்த பதிவு ஏற்படுத்திய தாக்கங்கள் பிரம்மிப்பை தருகிறது..நிச்சயம் எழுதுகிறேன்
வே தம்பி அதான் நேத்து சொன்னம்ல சொன்னா கேளுய்யா
:))
நல்ல வந்திருக்கு அய்யனார். ஹேமா விட்டு போன மாதிரி தெரியலையே மீண்டும் வேலை மாற்றத்தில் பிரச்சனைகளும் சூழ்ந்துக் கொள்ள விஸ்வாதான் ஓடிட்டா மாதிரி தெரியுது :-). இதுவும் கற்பனையில் செய்யப்படதல்ல அப்படியே நினைவிலிருந்தது வந்து விழுந்திருக்கிறது அதான் உயிரிருக்கிறதுன்னு சொல்றீங்களாக்கும். பக்குவமில்லாத பதின்ம வயதில் இப்படித்தான் நட்பெல்லாம் காதலாகிப் போகும் மன உறுதி இல்லாதவர்களுக்கு.
கதை மாதிரி தெரியல.
ஆமாம் டைரியில உள்ளதெல்லாம் ஏன் எழுதுறீங்க. போகட்டும் எங்கிருந்தாலும் வாழ்க ஹேமா ன்னு பாடிடுங்க ;((
@மை பிரண்ட் கண்ணு உனக்கே ஓவராத் தெரியல.
தமிழ்மணத்துல டாப்புலதான் நட்சத்திரம் காட்டுறாங்களே சொல்லவேயில்ல அய்யனாருன்னு கப்ஸாவா
ஒத்துக்குறேன்...பார்த்த உடன் தெய்வீககாதல் பத்தி மட்டும் ஒத்துக்குறேன்...
/*அய்யனார் சைட்...
டிபிசிடி
பார்த்தவுடன் தெய்வீக காதலெல்லாம் தமிழ் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம் */
/*நான் பார்த்தவரை விடலை பருவத்தில் தோன்றும் கவர்ச்சி அல்லது நண்பர்களின் உசுப்பல்கள் இவைதான் காதலின் ஆரம்ப வேர்களாய் இருக்கிறது*/
கன்னா, நாங்களே பல பேர உசுப்பி விட்டு கல்யானம் பன்னி செட்டில் ஆயிருக்காங்கெ..
ஆனா, பைய்யன் மொதல்ல பார்த்து ஒரு மாதிரி ஆவான், அத பார்த்துட்டு நன்பர்கள் சீவி சிங்காரிச்சி பொட்டு வச்சிவிட்டுவாங்க ... மொதல்ல அவனுக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கனும்...அவங்க சொல்லி தான் கவனிக்கிறான்னா... அது அரென்ஞ்டு... வேனுமின்னா சர்வேசன் கிட்டே சொல்லி ஒரு போல் வச்சி பாக்கலாமா..? :)
/*..ஓசூரில் பணிபுரிந்திருக்கிறேன் */
ஓசூரில் எங்கு, எப்போ.. நானும் அங்கே குப்பை கொட்டி இருக்கின்றேன்...
பலரைப்போலவே எனக்கும் என்ன சொல்வதெண்ரு தெரியவில்லை. உங்கள் பதிவுகளனைத்தையும் படித்துப் பார்த்துவிட தூண்டியிருக்கிறது இப்பதிவு!
"நான் எழுத வேண்டும் தோழி
தயவு செய்து இடத்தை காலி செய்"
http://ayyanaarv.blogspot.com/2007/07/blog-post_17.html
என்னை கிளம்பு நான் கவிதை எழுதனும் என்று விரட்டிவிட்டு இப்பொழுது நானாக போன மாதிரி கதை விடுகிறாயா?
ஹேமா இதை வாசித்து இருந்தால் இப்படி தான் சொல்லி இருப்பாங்க
அய்ஸ்..
குசும்பன்
நன்றி ஜெஸிலா பதின்ம வயதில் காதலிக்காம மன உறுதி அது இதுன்னு பயமுறுத்திறீங்க :)
கண்மணி டீச்சர் நம்பகத்த்ன்மைக்கு ரொம்ப அருகில போயிட்டீங்களோ :)
நன்றி டிபிசிடி
நன்றி அருள்குமார்
குசும்பரே கிர்ர்ர்ர்..
அய்ஸ் அட்டகாசம் ;-)) பின்னிட்டிங்க ;-))
இப்பொழுதான் இதனைப் படித்தேன்...... இது நிஜமாகயிருக்ககூடாது என்று வேண்டிக்கொண்டாலும் வேறு எங்கையோ இதுபோன்ற பல நிஜங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கத்தான் செய்கின்ற...
ஏன் இதனை வாசித்துக் கொண்டிருப்பவகளில் யாருக்கேனும் கூட இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருக்ககூடும்...அவர்களின் கண்ணீர்தான் இக்கதைக்கு பாராட்டு...
நிஜம் போல எழுதுகின்ற எழுத்து கோர்வை நன்றாக யிருக்கிறது நண்பா..பாராட்டுக்கள்...
மறைக்காம சொல்லுங்க இது உண்மைதானே..?
அன்பு அய்யனார், உங்கள் பதிவுகளில் எனக்குப் பிடித்த பதிவு இதுவென்று சொல்லலாம். பாலகுமாரன் எங்களில் எத்தனை பேரைப் பாதித்திருக்கிறார் என்பது நாளாக நாளாகத் தெரிகிறது. முன்பொருகாலம் பாலகுமாரன் என்ற பெயரைப் பார்த்தால் பாய்ந்தோடி வாங்கிவிடுமளவு பைத்தியமாக இருந்தேன். கரையோர முதலைகள் ஸ்வப்னாவை மறக்கவே முடியவில்லை.
ஹேமா உண்மையா பொய்யா என்று நான் கேட்கப் போவதில்லை. சில புனைவுகளுடன் அவள் உண்மையானவள்தான் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். வாசிக்கும்போது சத்தியமாக கவலையாக இருந்தது. அவளை நீங்கள் சேர்ந்திருந்தால் நிச்சயமாக இப்படியொரு எழுத்தும் பதிவும் கைகூடியிருக்காது. ஒன்றை இழப்பதன் வழியாக மற்றொன்றைப் பெற்றுக்கொள்கிறோம் என்ற எழுதித் தேய்ந்த வார்த்தைகளைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது அய்யனார். நட்சத்திர வாரம் பிரகாசமாக இருக்கிறது.
டேங்க்ஸ் கோபி!!
நிலவு நண்பண்
நம்பகத் தன்மைக்கு வெகு அருகில் கொண்டு செல்ல விழையும் புனைவு முயற்சிகளில் ஒன்றுதான் இந்த ஹேமா..தெருவிற்க்கு இரண்டு ஹேமாக்கதைகளை கேட்கலாம்.மிக்க நன்றி
அன்பு தமிழ்நதி
உங்களின் நெருக்கடியான வேலைகளுக்கிடையிலேயும் இந்த பகிர்தல்களுக்கு மிக்க நன்றி.
மிகவும் அருமையாக உள்ளது. நம்மில் பலரின் அனுவங்களோடு ஒத்துப் போவதாலேயே இக்கதை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Naveena Agananooru pola irukku.
-enbee
அய்யனார்,
இன்று தான் இந்த கதையை படித்தேன். ரொம்ப அழகா, இயல்பா இருந்தது. புதுச்சேரியில் நடந்ததாக சொல்லப்பட்டதால் இன்னும் பிடித்துப்போனது :)
உங்கள் ஒவ்வொரு விவரிப்பிக்கிற்கும் ஒரு முறை புதுவையை நினைத்துக்கொண்டேன்
சட்டயை இறுக்கிப் பிடித்து ஏய்யா இப்படி எங்க உயிரை உருக்கி எடுக்கற மாதிரி எழுதறன்ன்னு கேக்கணும் போல இருக்கு.
மனசு கலங்கிடுச்சு.
///
சட்டயை இறுக்கிப் பிடித்து ஏய்யா இப்படி எங்க உயிரை உருக்கி எடுக்கற மாதிரி எழுதறன்ன்னு கேக்கணும் போல இருக்கு.
மனசு கலங்கிடுச்சு.
//
ரிப்பீட்டேய்....
ரொம்ப டென்ஷன் ஆக்கிட்டீங்க தல.... கதை நடை அழகு...
அன்பினை புரிவித்த எந்த ஒரு உறவும், அருகில் இல்லை என்றாலும், இதயத்திற்கு என்றும் இதம் அளிப்பது... கதையல்ல.. நிஜம்...
//எஸ் டிடி பூத் பெண்கள் என்னை எங்கு பார்த்தாலும் நமுட்டு சிரிப்பொன்றை உதிர்ப்பார்கள்.குளிக்கும்போது எட்டிப்பார்த்ததுபோல் கூசிப்போவேன்.//
ரொம்பவே தாமதமான வாசிப்பு தான். ஆனால் நன்றாக இருப்பதென மொழிவதற்கு தாமதம் தடங்கல் அல்ல.
மற்றுமொருமுறை படிக்கிறேன். ஏன்யா எழுத மாட்டேங்குறே..? எழுதி தொலைக்க வேண்டியதுதானே. மொக்கையா இப்போ நிறைய படிக்க வேண்டி இருக்கு :(
கடித இலக்கியம்!!!
Readng this after 13 years, Still feel the Jivv. Awesome writing !!
Post a Comment