Skip to main content

Posts

Featured Post

அரூ - நேர்காணல்

என்னுடைய மிக விரிவான நேர்காணலை அரூ இதழ் வெளியிட்டிருக்கிறது. என் ஒட்டு மொத்த இலக்கியப் பங்களிப்பையும் இருப்பையும் கேள்விகளாகத் தொகுத்த நண்பர்களுக்கு நன்றி. பாலா, சுஜா, ராம் மற்றும் சிங்கப்பூர் வாசகராக கேள்விகளைக் கேட்டிருக்கும் கதிருக்கும் நன்றி. அரூ இதழ் குழுவினருக்கு என் அன்பு.

நேர்காணலிலிருந்து :-

விருதுகளும், பட்டியல்களும் எப்போதுமே சர்ச்சைகளை உருவாக்குபவை. அதுகுறித்து உங்கள் பார்வை? பத்து வருடங்களுக்கு முன்பு விருதுகள் மற்றும் பட்டியல்கள் மீது எனக்கொரு கறாரான பார்வை இருந்தது. கொடுக்கப்படும் விருதுகள் மீதும் விமர்சகர்கள் அல்லது மூத்த எழுத்தாளர்கள் இடும் பட்டியல்கள் மீதும் நம்பிக்கை இருந்ததுதான் இந்தக் கறார் பார்வைக்குக் காரணம். எனவே எப்போது பட்டியல்கள் அல்லது விருதுகள் வந்தாலும் அவற்றின் தரம் குறித்தும் தகுதியின்மை குறித்தும் உருவாகும் சர்சைகளில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும். முரண்படல்கள் விவாதங்கள் வழியாய் தமிழ்ச் சூழலில் நிறைய பகைமையை உருவாக்கிக் கொண்டாயிற்று. மேலும் அவை கொண்டு வரும் அயற்சி அல்லது இத்தகைய பேச்சுகள் உருவாக்கும் கவன ஈர்ப்பு போன்றவற்றில் திரும்பத் திரும்ப ஈடுபட்டு…
Recent posts

தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை

தமிழ் சிறுகதைப் பரப்பில் எல்லாவித சாத்தியங்களும் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டன. ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் கூட மிகுந்து வராத இறுகிய கட்டுமாணங்கள் கொண்ட நவீனச் சிறுகதைகளிலிருந்து, சொல்லாமல் சொல்லிப் போகும் நுண்மக் கதைகள் வரை எல்லாமும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன. இனிப் புதிதாய் இதே மரபில் எழுத என்ன இருக்கிறது என்கிற வியப்பும் சோர்வும் ஒரு சேர எழும்போதெல்லாம் நான் சிறுகதை எழுதுவதை தள்ளிப்போடுவேன்.

அதே நேரத்தில் இனிமேலும் கதை என்ற ஒன்றை வழுவாத சட்டகங்களோடு எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற எண்ணமும் தோன்றும். அது வலுவடைந்து என்னை என் விருப்பத்திற்கு எழுத வைத்தது. அவை கதைகள் ஆகின்றனவா, கலையம்சம் கொண்டிருக்கின்றனவா என்பதெல்லாம் வாசகர் தீர்மானிக்க வேண்டியவை.

மேலும் நம் சிறுகதைச் சூழலில் வட்டாரவழக்கு, காமம், வாழ்வியல் என எல்லாமும் போதுமான அளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. இனிமேலும் வாழ்வை ரத்தமும் சதையுமாகப் பதிவிக்கிறேன் என்கிற பெயரில் யதார்த்தத்தைச் சுரண்டிக் கொண்டிருப்பது உண்மையிலேயே அலுப்பானது என்பதால் நான் வழமையான கதைகளை எழுதவும் முயலவில்லை. இத் தொகுப்பில் இருப்பவை யாவும் என்னுடைய அறிதல்களும் அற…

முள்ளம்பன்றிகளின் விடுதி

சென்னை புத்தகத் திருவிழா -2020 வில் முள்ளம்பன்றிகளின் விடுதி சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. வெளிவந்த முதல் நாளிலிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பு திகைப்பையும் மகிழ்ச்சியையும் சேர்த்துத் தருவதாக இருக்கிறது. அனைவருக்கும் அன்பு. புத்தகத் திருவிழாவில் ஜீரோ டிகிரி அரங்கு எண் 376 மற்றும் 377 இல் முள்ளம்பன்றிகளின் விடுதி நூல் கிடைக்கும். உடன் ஹிப்பியும் தனியறை மீன்களும் அரங்கில் கிடைக்கும்.தனியறை மீன்களின் சிறகடிப்பு

தனியறை மீன்கள் கவிதைத் தொகுப்பை நியாயமாக தனிமையின் இசை என்கிற இந்த வலைப்பக்கத்திற்குத்தான் சமர்ப்பித்திருக்க வேண்டும். பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இங்குதான் கவிதைகளை எழுதிப் பார்த்துக் கொண்டேன்.  வாசகர்களும் நண்பர்களும் கவிதைகள் வழியாகத்தான் என் உலகில் நுழைந்தனர். இதிலிருந்துதான் என் சின்னஞ்சிறு புனைவுலகு தன் சிறகுகளை விரித்துக் கொண்டது. கவிதைகள் எழுதிய காலகட்டங்களில் நெகிழ்ந்தும், சுருங்கியும், வெதும்பியும், உழன்றும் இன்னும் எல்லாவித மன உணர்வுகளிலும் கிடந்து அல்லாடினேன். சந்தேகமே இல்லாமல் அவற்றைப் பெண்களே தந்தனர். எல்லா உணர்வுகளையும் எழுதிப் பார்த்தேன். அந்த வடிவத்திற்கு கவிதை எனப் பெயர் வைத்துக்கொண்டேன். எழுதப்பட்டக் கவிதைகள் மிக அதிகபட்ச கொண்டாட்டத்தையும், கர்வத்தையும், காதலையும், காமத்தையும் கொண்டுவந்து சேர்த்தன. இலவச இணைப்பாய் ஏமாற்றம், துரோகம், பயன்படுத்துதல் போன்ற உணர்வுகளையும் பெற்றுக் கொண்டேன். எல்லாம் கடந்து மனம் சமநிலைக்குத் திரும்பியபோது தொடர்ந்து  கவிதைகள் எழுதும் விருப்பம் காணாமல் போயிருந்தது. போதும் இது என நிறுத்திக் கொண்டேன்.

’தனிமையின் இசை’, ’நானிலும் நுழையும் வெள…

ஹிப்பி தற்போது விற்பனையில்

ஹிப்பி நாவல் வெளிவந்துவிட்டது. நண்பர்கள் கீழ்காணும் இணைப்பைச் சொடுக்கி இணையத்தில் வாங்கலாம்.

https://zerodegreepublishing.com/books/new-releases/%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%be/?fbclid=IwAR1vAecoFTx9Jec7DmmohoOfAqaZ0ZYTDiscA7WK0Q-Mz-8aF6hS_Ikfz24


இயற்கையின் பிரம்மாண்டத்தோடு தனி மனித விடுதலையையும் இணைத்துப் பின்னப்பட்டிருக்கும் இந்நாவல், தமிழில் இதுவரை பேசப்பட்டிராத நிலங்களையும் மனிதர்களையும் அவர்களின் தனித்துவமான சிக்கல்களையும் காட்சிப்படுத்த முன் வந்திருக்கிறது. ஜவ்வாது மலைத் தொடரும், திருவண்ணாமலையும் வசீகரமான கதாபாத்திரங்களாக உருமாறியிருக்கும் இந்நாவலில் வெயிலும் மழையும் ஊடுபாவி வடதமிழகத்தின் இன்னொரு முகத்தை அறியத் தருகின்றது. ஹிப்பிகளும், விளிம்பு நிலை மனிதர்களும் சேர்ந்து உருவாக்கும்        இக்கதைவெளியெங்கும் கஞ்சா நெடி விரவிக் கிடக்கிறது. ஒரு புள்ளியில் நிலைபெறாத நாடோடி மனங்களில் உள்ள காமமும், போதையும், கைவிடப்பட்ட அன்பும்…

ஹிப்பி - நாவல்

தான் வாழும் அல்லது வாழ்ந்த நிலத்தின் மீதான அன்பு என்பது மனிதருக்குப் பொதுவானது. எழுதுபவனுக்கோ அவன் சார்ந்த நிலமும் மக்களும் என்றும் முதன்மையானவர்கள். உலகின் பெரும்பாலான எழுத்தாளர்கள் தாங்கள் வாழும் நிலத்தைக் குறித்து மூன்று படைப்புகள் எழுதுவதை ஒரு சாதனையாகக் கருதுவார்கள். இஸ்தான்புல்லையும்,தைவானையும், போலந்தையும், தென்கொரியாவையும் -மேதைகளின் Trilogy வழியாக அறிந்த எனக்கு என் நிலமான திருவண்ணாமலை குறித்து ஒரு ட்ரிலாஜி எழுதும் ஆசை உருவானது. அதன் முதல் கனிதான் ஓரிதழ்ப்பூ. அதைத் தொடர்ந்து இதோ ஹிப்பி . இம்முறை இன்னும் அழுத்தமாய் என்னிடமிருந்தும் இன்னும் தரமாய் எழுத்துப் பிரசுரம் வழியாகவும் ஹிப்பி நாவல் வெளிவருகிறது. சாரு நிவேதிதா, காயத்ரி மற்றும் ராம்ஜிக்கு என் அன்பு.

அம்பிலி - கடவுளின் கண்

இதயத்திலிருந்து வாழும் ஒரு மனிதனைக் குறித்த முழுமையானச் சித்திரம்தான் அம்பிலி. கள்ளங் கபடமில்லாத தூய அன்பு, உயிரைப் பிழியும் இசை, இயற்கையின் பேரெழில் மிளிரும் மகத்தான நிலக் காட்சிகள் ஆகிய இவை மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினால் எப்படிக் கரையாமல் இருக்க முடியும். பல காட்சிகளில்  உருகிப் போனேன். படத்தின் முதல் பாதியில் மூன்றாம் பிறை ’டைப்’ காதல் கதையாகி விடுமோ என்ற என் யூகம் இரண்டாம் பாதியில் தவிடு பொடியானது. கேரளத்தின் கட்டப்பனையிலிருந்து காஷ்மீர் வரைக்குமான ஒரு சைக்கிள் பயணமாக, ஓர் அற்புதமான பயணத் திரைப்படமாக அம்பிலி உருக்கொள்கிறது. இறுதியில் காஷ்மீரின் கம்பீர மலைகளுக்கு முன்பு அம்பிலியின் சின்னஞ் சிறு இதயம் நெகிழ்ந்தும் கரைந்தும் வெடித்துமாய் தன்னை அறிகிறது. கவித்துவமும் தத்துவமும் அம்பிலி - ஷெளபினின் நிகரில்லா நடிப்புமாய் பின்னிப் பிணைந்து நமக்கு ஓர் அபாரமான காட்சி அனுபவத்தை இந்தத் திரைப்படம் வழங்குகிறது.

அம்பிலியின் திரைக்கதை எழுதப்பட்ட விதம் சவாலானதுதான். முதல் ஒரு மணிநேரத்திற்கு கேரளத்தின் எழில், அம்பிலியின் சின்னஞ்சிறு நண்பர்கள், கிராமத்து வெள்ளந்தி …