
இரு பெரும்
மலைத் துண்டுகளுக்கு
இடைப்பட்ட பிளவில்
பயணிக்கிறது
செங்கொன்றைப் பூ
தடித்த வேர்களிடமோ
தழை விரித்துப்
படர்ந்திருக்கும்
கிளைகளிடமோ
சிக்காது
நிலம் தொடும்
துல்லிய கணத்தில்
மலைகள்
நகரத் துவங்கும்
சமவெளிகள் சிதையும்
பள்ளத்தாக்குகள்
விழித்துக் கொள்ளும்
நெஞ்சு பதபதைக்க
பார்த்துக் கொண்டிருக்கும்
கடவுள்
மீண்டுமொரு சிகரெட்டைப்
பற்ற வைத்துக் கொள்கிறார்.
14 comments:
அருமை, கடவுளும் சிகரெட் புடிக்க, இணையம் பாவிக்க, டிவிட் செய்ய பழகி கொண்டு விட்டார் போல.
இயற்கை முதல் இருத்தலியம் வரை, bi-polar world order முதல் அடர் காமம் வரை எதிலும், எதுவும் பொருந்தும் அடர்த்தியான கவிதை. அக்மார்க் அய்ஸ் கவிதையும் கூட. 'அந்தர வெளிகளில்' அலசப்பட வேண்டியதும் கூட :). சென்ஷி??
//
எங்கோ ஒரு இடத்தில்
நிலம் தகர்ந்து
கடல் கொந்தளித்தது
ஒரு பூ கீழே தவழ்ந்தது//
என்று முடியும் ஆத்மாநாமும் நினைவில் வந்தார்.
அனுஜன்யா
சரிங்க.. ரைட்டு :-`(
..//மீண்டுமொரு சிகரெட்டைப்
பற்ற வைத்துக் கொள்கிறார்//..
ஐ. ஜாலி..
இருத்தலியம் அருமை
பொது இடத்தில் சிகரெட் பிடிக்க கூடாது சொல்லிவிட்டீர்களா
//சமவெளிகள் சிதையும்
பள்ளத்தாக்குகள்
விழித்துக் கொள்ளும்//
கண்ணி அவிழும் உணர்வு
அனு சொன்னது போல கவிதையின் பன்முகம் கொஞ்சம் கொஞ்சமாக விரிகிறது
மிகவும் புதுமையான சிந்தனை அருமை . பகிர்வுக்கு நன்றி !
பத்தவைக்கும் போது கையில இருக்குற பீர் பாட்டில் கீழே விழுந்துராதா!?
கடவுள் அவர் தோன்றும் கவிதைகளில் எல்லாவற்றிலும் சிகரெட் பற்றவைத்து கொள்கிறார்..
:-)
அடப் பாவிங்களா கடவுளையும்
கெடுத்துட்டீங்களா?
அழகாய் அவிழ்கிறது பலகோணங்கள்!!
எங்கோ ஒரு இடத்தில்
நிலம் தகர்ந்து
கடல் கொந்தளித்தது
ஒரு பூ கீழே தவழ்ந்தது//
படிச்சதும்
ஒரு நிமிஷம் கழிச்சி..
அதில இருந்து மீண்டேன்
நல்லா இருக்கு.
சந்தோஷம்.
எங்கோ ஒரு இடத்தில்
நிலம் தகர்ந்து
கடல் கொந்தளித்தது
ஒரு பூ கீழே தவழ்ந்தது//
படிச்சதும்
ஒரு நிமிஷம் கழிச்சி..
அதில இருந்து மீண்டேன்
நல்லா இருக்கு.
சந்தோஷம்.
ஒரு நல்ல கவிதை படித்த திருப்தி.
வாழ்த்துகள்.
Post a Comment