Tuesday, October 9, 2007
பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் - Born in to Brothels
Born In To Brothels - Documentry (2004)
மும்பை,கொல்கத்தா போன்ற அனுமதிக்கப்பட்ட நகரங்களில் மட்டுமல்லாது இந்தியாவின் பட்டி தொட்டி மூலை முடுக்கு என எல்லா ஊர்களிலும் இருக்கிறது ஓர் சிவப்பு விளக்குப் பகுதி.
உடலை மூலதனமாக்கும் பாலியல் தொழிலாளர்களின் மீதான நமது பார்வையும் அணுகுமுறையும் ஏளன,அருவெறுக்கத்தக்க அல்லது வெறிகொண்ட உடல் பசி தீர்க்கும் தற்காலிக சதைக்கோளங்கள் என்பதாகவே இருந்துவந்திருக்கிறது. இவர்களுக்கான வாழ்வு, குடும்பம், குழந்தைகள் என்பவைகளை பெரும்பாலும் யாரும் யோசித்ததில்லை.ஆண்களை பொறுத்தவரை முலைகளாலும் யோனிகளாலும் ஆன சதைப்பிண்டம் அவ்வளவுதான். இவர்களின் வாழ்வு குறித்த புணரமைப்பு நடவடிக்கைகள் எதுவும் நமது சமூக காவலர்களால், தன்னலமில்லா தியாக தலைவர்களால், வழிகாட்டிகளால், புனிதர்களால், சமூக விடிவெள்ளிகளால் இன்றுவரை எதுவும் எடுக்கப்பட்டதில்லை.ஏன் சக மனிதர்களாக கூட நாம் பாவிப்பதில்லை.
வெளி தேசத்திலிருந்து வரும் சனா பிரிஸ்கி என்கிற புகைப்பட கலைஞர் கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப்பகுதிகளை பற்றிய வாழ்வை பதிவிக்க வருகிறார்.சிவப்பு விளக்குப் பகுதியை படமெடுப்பதென்பது அத்தனை சுலபமான காரியமில்லை என்பதால் அப்பகுதியிலேயே தங்குகிறார்.ஆனால் அங்கே அவர் காண நேரிடும் குழந்தைகளைப் பார்த்தபின் அவர்களுக்கு ஏதாவது செய்ய முடிவெடுக்கிறார்.தனக்கு தெரிந்த புகைப்பட கலையை சொல்லித்தருகிறார். எட்டு குழந்தைகளை (அவிஜித்,கோர்,கோச்சி,மானிக்,பூஜா,சாந்தி,சுசித்ரா,தபசி) தேர்ந்தெடுத்து ஆளுக்கொன்றாய் புகைப்பட கருவிகளை கையில் கொடுத்து விடுகிறார். உங்களுக்கு பிடித்ததை படமெடுங்கள் என சொல்லப்போக அந்த எட்டு குழந்தைகளுக்கும் புதிதான ஒரு உலகம் திறந்து கொள்கிறது.குறுகலான சந்துகளில் குதூகலத்தோடு புகைப்பட கருவியுடன் சகட்டு மேனிக்கு படங்களாக எடுத்து தள்ளுகின்றனர்.அவர்கள் எடுத்த புகைப்படங்களை கொண்டே புகைப்பட கலையை சொலித் தருகிறார் சனா.அவர்களின் கல்வி குறித்து கவலைப்படும் சனா கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் குழந்தைகளை சேர்த்துவிட முடிவெடுக்கிறார்.பள்ளியின் அனுமதி வாங்கி பெற்றோர்களை சம்மதிக்க வைத்து பிறப்பு சான்றிதழ்,ரேசன் கார்டுகளுக்காய் அலைந்து திரிந்து ஒருவழியாய் அவர்களை பள்ளியில் சேர்க்கிறார்.அவிஜித் எனும் சிறுவனின் அபார புகைப்பட ஞானத்தை கண்டறிந்து அவனை ஆம்ஸ்டர்டாமில் நடக்கும் புகைப்பட கண்காட்சிக்கு அனுப்பி வைக்கிறார்.அவனது பாஸ்போர்டுக்காய் அலைவது இன்னும் வேதனை.
நிஜ ஆவணப்படம் என்பது எத்தனை சிக்கலான ஒன்று?.வாழ்வை நேரடியாய் பதிவிப்பதென்பது எத்தனை கடினமானது?.இந்த குழந்தைகளின் வாழ்விற்காய் சனா உழைத்ததைப்போன்றே இந்த ஆவணப்படம் உருவாவதற்கும் அவர் அதிகமாய் உழைத்திருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட எங்கிருந்தோ வந்த வெளிநாட்டுப் பெண்ணிற்கு நம் மக்களின் மீதிருக்கும் பற்றும் அன்பும் அவர்களின் வாழ்விற்கான அர்ப்பணிப்பும் உழைப்பும் மண்ணின் மைந்தர்களான நமக்கு இன்றுவரை ஓர் எண்ணமாக கூட தோன்றவில்லையே.மணிரத்னம் கமல் வசந்த் என தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் இவர்களின் வாழ்வை காண்பித்து நிறைய துட்டு பார்த்ததும் பலமான கைத்தட்டல்களை பெற்றதும்தான் இன்றுவரை நாம் நிகழ்த்தி இருக்கும் சாதனை.அபூர்வமாய் ஜி.நாகராஜன் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வையும் அவலத்தையும் அதன் வலிகளோடு பதிவித்திருக்கிறார் என்பது மட்டும்தான் நம் சூழலில் ஆறுதலான ஒரே விதயம்.
இந்த ஆவணப்படம் கீழ்கண்ட விருதுகளை குவித்துள்ளது.
77th Academy Awards®
Best Documentary Feature
2005 IFP Independent Spirit Awards
DIRECTV/IFC Truer Than Fiction Award
2004 L.A. Film Critics
Winner, Best Documentary of the Year
2004 International Documentary Association
Distinguished Documentary Achievement Award
2004 National Board of Review
Winner, Best Documentary of the Year
2004 Sundance Film Festival
Audience Award
2004 Human Rights Watch
Nestor Almendros Prize for Courage in Filmmaking
2004 Seattle International Film Festival
Best Documentary Award
2004 Silverdocs Film Festival
Audience Award
2004 Full Frame Documentary Film Festival
Audience Award
2004 Atlanta Film Festival
Turner Broadcasting Audience Award
2004 Nashville Film Festival
Best Documentary and Audience Awards
2004 Cleveland Film Festival
Audience Award
2004 Amnesty International Film Festival
Audience Award
2004 Bermuda Film Festival
Best Documentary and Audience Awards
2004 Durango Film Festival
Best Documentary, Filmmaker's and Audience Awards
2004 Newport Beach Film Festival
Special Merit Award
2004 Artivist Film Festival
Children's Day Award
2004 Sydney Int'l Film Festival
Audience Award
2004 BendFilm
Audience Award
2004 BendFilm
Best Score
2004 Chicago Int'l Film Festival
The Gold Hugo for Best Documentary Feature
2004 Chicago Int'l Film Festival
The "Level Above the Rest" prize
2004 High Falls Film Festival
Audience Award for Best Documentary
2005 Portland Film Festival
Best Documentary
Ashland International Film Festival 2005
Best Documentary
Planete Doc Review, Warsaw 2005
Audience Award
உண்மை மிகுந்த வலிகளோடு இருப்பினும் அதன் சாஸ்வதம் அளப்பரியாதது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
16 comments:
மனவை வலி கொள்ளவைக்கின்ற விடயங்கள் குறித்து எமது சமூகம் அக்கறை கொள்வதில்லை என்பதற்கு இதுவுமொரு சாட்சி…..
ம் நல்ல பதிவு.
படித்த உடனே புரிக்கிறது (கவிதைகளைப்போலல்லாமல்).
//எங்கிருந்தோ வந்த வெளிநாட்டுப் பெண்ணிற்கு நம் மக்களின் மீதிருக்கும் பற்றும் அன்பும் அவர்களின் வாழ்விற்கான அர்ப்பணிப்பும் உழைப்பும் மண்ணின் மைந்தர்களான நமக்கு இன்றுவரை ஓர் எண்ணமாக கூட தோன்றவில்லையே.//
வெளிநாட்டுக்காரர்கள் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள் என்று தான் 'மதம் பரப்ப வந்த மிசினெறிகள்' என்று நம்மவர்கள் அன்போடு அவர்களது சேவையை கொச்சைப்படுத்துகிறார்கள்.
:(
நல்ல விடயமொன்றை தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் வித்தியாசமான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
நல்ல விடயமொன்றை தொகுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் வித்தியாசமான தகவல்களை எதிர்பார்க்கிறேன்.
பாக்க வேண்டிய படங்களில் குறித்து வச்சுக்கிட்டேன் அய்ன்ஸ்...
உண்மைதான் மருதமூரான்
நன்றி சிவா
கோவி மதம் பரப்பும் இன்னொரு நுட்பமும் அவர்களிடையே இருக்கத்தான் செய்கிறது ஆனால் இந்த சனா பிரிஸ்கி யைப்போல எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் உண்மையான சமூக அக்கறை கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
நிர்ஷன் உங்கள் பக்கம் பார்த்தேன் புதிய நல்லதொரு துவக்கம் விரைவில் படித்து மடலிடுகிறேன்
புலி நல்ல படம்யா நிச்சயமா பாரு
சினிமாவில் கதாநாயனைப் புரட்டியடிக்கின்றதைப் பார்த்துக் கண்ணீர் விடுபவர்கள் இப்படியான குழந்தைகளின் விடய்ஙகளில் கண்ணீர் விடுவதில்லை.
இப்படியான ஆவணப்படங்களை எங்கிருந்து பெற்றீர்கள்? இதற்கு ஒரு தொகுப்பினை ஏன் எம்மவர்கள் உருவாக்கவில்லை. பல குறும்படங்களுக்கு முகவரியே இல்லை
//நிஜ ஆவணப்படம் என்பது எத்தனை சிக்கலான ஒன்று?.வாழ்வை நேரடியாய் பதிவிப்பதென்பது எத்தனை கடினமானது?//
முற்றிலும் உண்மை, அய்யனார்!
சில வருடங்களுக்கு முன், இந்த ஆவணப்படத்தை நூலகத்தில் இருந்து எடுத்து பார்த்தேன். நம்ம ஊர் நூலகத்தில் இதலாம் கிடைக்காது என்பது நம் துரதிஸ்டமே!
நல்ல பதிவு!
நல்ல பதிவு..
எங்கு கிடைக்கிறது இத்தகைய ஆவணப்படங்கள். தொடர்புகள் அல்லது சுட்டிகள் இருப்பின் நாங்களும் பார்க்க ஏதுவாகும். இதற்ககாவாவது துபாய் வரனும் போலிருக்கு...
அய்ஸ்..நல்ல பதிவு ;)
படங்களுக்கு என்று தனி பதிவு ஆரம்பிங்களோன். அது இன்னும் பல பேருக்கு உதவியாக இருக்கும் ;))
நல்ல விமர்சனம்..
//உண்மை மிகுந்த வலிகளோடு இருப்பினும் அதன் சாஸ்வதம் அளப்பரியாதது.//
சட்டுன்னு மனசுல ஒட்டிகிச்சு இந்த வரி.. முன்னொருமுறை
//உண்மை சிதைவுகளாலானது அது எப்போதும் சிதைந்த வடிவத்தை மட்டுமே பெற்றிருக்க முடியும்//
அப்படின்னும் சொல்லிருக்கீங்க!! ரெண்டுமே உண்மைதானா அய்யனார்?
அனானி
ஆம் நண்பரே இதுதான் நம் சூழலாக இருக்கிறது.முகவரி இல்லாத பலவற்றினை அடையாளப்படுத்தும் நோக்கம் சமீபத்தில் எழுந்துள்ளது ..முடிந்தவரை மெனக்கெடுகிறேன்
தென்றல்
நம்ம ஊர்லயும் கிடைக்குது ஆனா என்ன கொஞ்சம் தேடிப்பிடிக்கனும்...இந்த வெளிநாட்டு வாழ்வில் இந்த மாதிரி அபூர்வ படங்கள் சுலபமா கிடைப்பது ஒருவகையில மகிழ்ச்சிதான்..நன்றி..
கண்டிப்பா வாங்க ஜமாலன் இங்க நிறைய கிடைக்கும் :)
கோபி எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது..விரைவில் தொடங்கிடலாம்
ரெண்டும் உண்மைதான் காயத்ரி.. அப்பா!! என்ன ஞாபக சக்தி இப்பலாம் யானக்கறி சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்கள :)
//மணிரத்னம் கமல் வசந்த் என தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் இவர்களின் வாழ்வை காண்பித்து நிறைய துட்டு பார்த்ததும் பலமான கைத்தட்டல்களை பெற்றதும்தான் இன்றுவரை நாம் நிகழ்த்தி இருக்கும் சாதனை.//
வணக்கம் அய்யனார்,
உனது மேற்சொன்ன கூற்றில் கமலின் பெயரை சேர்த்தது வருத்தமளிக்கிறது. "காசு பார்க்க" எடுத்தப் படமல்ல மகாநதி. அதன் சோனாகாச்சி காட்சிகள் உண்மையான பொறுப்புணர்வுடன் எடுக்கப்பட்டவை.
Post a Comment