
கொன்றை மரங்களைப் போலில்லை
இப் பேரீச்சைகள்
மஞ்சணத்திப் பூச்செடிகளையோ
அடர்வாய் பூக்கும்
ஆவாரம் பூச்செடிகளையோ போலில்லை
இந்த தொட்டிப் பூச்செடிகள்
இருப்பினும்
இவற்றைப் பார்க்கும்போது
அவற்றை நினைக்காமல் இருக்க முடிவதில்லை
அவையாய் இல்லாமலே
அவற்றை நினைவுபடுத்துவது
இவற்றின் சிறப்பா? அல்லது
நினைவு கொள்ளும் நினைவின் சிறப்பா?
எது எப்படியோ
மரங்களும் பூக்களும் அழகானவை....
3 comments:
நன்றாக இருக்கிறது.
//எது எப்படியோ
மரங்களும் பூக்களும் அழகானவை...//
உங்கள் கவிதைகளை போல என்று சொல்லலாம்தான்.
http://aadumaadu.blogspot.com
//எது எப்படியோ
மரங்களும் பூக்களும் அழகானவை....//
என்றென்றும் :)
அந்த படத்தில் இருப்பது ஆவாரம்பூ தானே
Post a Comment