Monday, October 1, 2007

மழைக்கால கிளர்வுகள் 1 - பிரியத்தை சொல்வது...



இத்தனை பிரியங்களை இத்தனை நாட்களாய் எங்கே வைத்திருந்தாய்?
என்றதற்கு பதில்கள் எதுவும் என்னிடம் இல்லை...
பிரியங்கள் பிரியங்களாக மட்டுமே இருந்திருக்ககூடும்
அவைகள் வார்த்தைகளாவது
எந்த ஒரு நொடியிலெனத் தெரியவில்லை..

மேலும்

வார்த்தைப்படுத்துதல்களின் மீதிருந்த அவநம்பிக்கைகளும்
உனக்கான என் பிரியங்களை
சொல்ல விடாமல் செய்துவிட்டிருக்கலாம்.

மேலும்

பிரியத்தை சொல்ல சொற்களை விட
விரல்களையும் உதடுகளையும்தான் அதிகம் நம்புகிறேன் நான்

மேலும்
உன்னிடம் என் பிரியத்தை சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா என்ன?

மேலும்

உன்னிடம் பிரியமாய் இருந்ததை/இருப்பதை சொல்வதற்கென
இந்த இரவையும் குளிரையும் நிலவையும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்

மேலும்

என் பிரியங்களை வைத்துக் கொண்டு உன்னால் என்ன செய்துவிட முடியும்?
கசிந்துருகி அழுவதைத் தவிர

மேலும்
இத்தனை நாள் சொல்லாமல் விட்ட என் பிரியங்களை சொல்லும்போது
ஆச்சர்யத்தில் விரியும் உன் விழிகளை,
சிவக்கும் கன்னங்களை
நாணும் 'ச்ச்சீ' யை
பார்க்க விரும்பினதாலும்

மேலும்..
மேலும்..
மேலும்..

என் பிரியங்களை சொல்லி முடித்தவுடன் இப்போது முத்தமிட்டதை முன்பே யோசித்தும் வைத்திருந்தேன்

4 comments:

குசும்பன் said...

ஊருக்கு உன்னை விசா மாற்ற அனுப்பினா, போய் என்னத்தையா செஞ்சுட்டு வந்து இருக்க:(
நல்லா இரு!!!

நாகை சிவா said...

என்னது அய்யனார்... இந்தியா போய் இருக்காரா.... :)

அப்ப இந்த இடைப்பட்ட கேப்ல ஒரு அமீரக பயணம் போட்டு விடலாம் போல இருக்கே

//பிரியத்தை சொல்ல சொற்களை விட
விரல்களையும் உதடுகளையும்தான் அதிகம் நம்புகிறேன் நான்//

செயல்புயல்ய்யா நீ

//உன்னிடம் என் பிரியத்தை சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா என்ன?//

இது அருமை... :)

மங்களூர் சிவா said...

//பிரியத்தை சொல்ல சொற்களை விட
விரல்களையும் உதடுகளையும்தான் அதிகம் நம்புகிறேன் நான்//

:-))

கோபிநாத் said...

வாழ்க அய்யனார்.... ;-))))))

\\குசும்பன் said...
ஊருக்கு உன்னை விசா மாற்ற அனுப்பினா, போய் என்னத்தையா செஞ்சுட்டு வந்து இருக்க:(
நல்லா இரு!!!\\

என்ன சித்த ஆப்பு ஒரே கருகுன வாடை வருது..... ;)))

Featured Post

test

 test