Monday, October 29, 2007

பாதுகாப்புகளற்ற வெளியில் இயங்குகிறது சகலமும்



எந்த ஒன்றின் அடிப்படையில்
நாளைக்கான வாக்குறுதிகளைத்
தருவதெனப் புரியாது
திகைத்துப்போயிருக்கிறது
நம்பிக்கைகள்
ஏற்கனவே தரப்பட்டவைகளை
திரும்பப் பெறுவதெப்படி
எனத் தெரியாமல்
தனிமைக் கூட்டின் சுவர்களில்
விடாது மோதியபடி கதறித் தீர்க்கிறது
ஆற்றாமையின் புலம்பல்கள்

எல்லாவற்றின் பின்னாலும் பல்லிளித்து நிற்கிறது
தேவைகளின் பருத்த பெருநிழல்

இயங்குதலின் அடிப்படை
மாற்றமென்பதால்
மாறிக்கொண்டே இருக்கும் நிறங்களின் மேல்
எந்தத் தவறும் இல்லை
நம்பிக்கைகள்,வாக்குறுதிகள்
என்றென்றைக்குமான சாஸ்வதங்களென்று எதுவுமில்லை

இன்றைய தினத்தில் என்னை அடையாளம் கண்டு சிரிக்கிறது
நான் வழக்கமாய் சந்திக்கும்
ஓர் கருப்பு தேசத்து குழந்தை

4 comments:

நாகை சிவா said...

//ஏற்கனவே தரப்பட்டவைகளை
திரும்பப் பெறுவதெப்படி
எனத் தெரியாமல் //

அரசியலில் அப்படி யாரும் மோதி கொள்வது இல்லை. :)

//இயங்குதலின் அடிப்படை
மாற்றமென்பதால்
மாறிக்கொண்டே இருக்கும் நிறங்களின் மேல்
எந்தத் தவறும் இல்லை//

காலம் தீர்மானிக்குது, நாம் எப்படி ஆக வேண்டும் என்பதை. நாம் மறுத்தாலும் அது விடுவது இல்லை.

//ஓர் கருப்பு தேசத்து குழந்தை//

:)

கப்பி | Kappi said...

//ஓர் கருப்பு தேசத்து குழந்தை//

ஓ! இது புலி கவிதை தானா? :)

கோபிநாத் said...

இன்னிக்கு என்ன அய்ஸ் கலக்குறிங்க...;))

\\இயங்குதலின் அடிப்படை
மாற்றமென்பதால்
மாறிக்கொண்டே இருக்கும் நிறங்களின் மேல்
எந்தத் தவறும் இல்லை
நம்பிக்கைகள்,வாக்குறுதிகள்
என்றென்றைக்குமான சாஸ்வதங்களென்று எதுவுமில்லை\\

உண்மை..;)

Ayyanar Viswanath said...

புலி நேத்து ஒரே கொலவெறியா இருந்திருப்ப போல :)

கப்பி ..புலி அந்த மாதிரி ஏதாவது கவிதை எழுதியிருக்கான்னு தம்பிய கேட்டு தெரிஞ்சிக்கனும் :)

நன்றி கோபி

Featured Post

test

 test