Wednesday, October 10, 2007

பசங்கள நம்பாத நிவி!!!



13.08.2006 இரவு மணி 8

சாயந்திரம் வரும்போது அவன பார்த்தேன் பவி! கோரமங்களா சிக்னல் கிட்ட எவளோ ஒருத்தி அவன் முதுகில ஒட்டிட்டிருந்தா…
தெரியுமா? அந்த ராஸ்கல் போட்டிருந்த ஷர்ட் நான் வாங்கி கொடுத்தது..

யாரு? யுவனா? விடு நிவி தட்ஸ் ஆல்..விட்டது சனி ன்னு பேசாம இரு

முடியல பவி..பத்திகிட்டு வருது..எம்மேல எனக்கு ஆத்திரமா வருது..நீ வர்ர வரை ரொம்ப நேரம் குளிச்சேன் அப்பயும் எரிச்சல் போகல..

இதோ பார் நீ இந்த பாலசந்தர் ஹீரோயின் கணக்கா தண்ணில ரொம்ப நேரம் குளிக்கிற நான்சென்ஸலாம் விடு..பி ப்ராக்டிகல் நிவி..
அவன மாதிரி க்ராப்ப ஐ நெவர் சீன்.. நீ அவன விட்டது நெஜமாவே எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது..டோன் பெலிவ் திஸ் பாஸ்டர்ட்ஸ்..வேற ஏதாவது பண்ணு... படி, மியூசிக் க்ளாஸ் போ! ஏதாவது இண்ட்ரஸ்ட்ட வளர்த்துக்கோ ஜஸ்ட் ஒரு பையனோட எல்லாம் முடிஞ்சி போறதில்ல..

ஏய் நிறுத்து! டோன் அட்வைஸ் மி ப்ளீஸ்

ஓகே ஓகே அப்போ அதோ அந்த மூலையில உட்கார்ந்து அழு... ஐ நெவர் மைண்ட்

நான் ஏன் அழனும்?அதுவும் போயும் போயும் அவனுக்கா?

அப்ப ஸ்டாப் திஸ் ப்ளா ப்ளாஸ்...

ஏன் பவி உங்கிட்ட சொல்ல கூட கூடாதா?இதெல்லாம் வேற யார்கிட்ட நான் …..

ஏய் இன்னாடி இது லூசா நீ?..இதோ பார் இந்த சின்ன வட்டத்துகுள்ள இருந்து வெளியில வா! 26 வயசாச்சி உனக்கு நிறைய சம்பாதிக்கிற.. நிறைய சுதந்திரம் இருக்கு உனக்கு.. ஏன் எவனோ ஒருத்தனுக்காக உடைஞ்சி போகனும்?..பி ரிலாக்ஸ்

யெஸ்…சரி சாப்பிட எங்காவது வெளியில போகலாம் காட் டேம் ஆஸ்டல் ஃபுட்

26.08.2006 பவியின் டைரி

நிவி! என் கண்ணம்மா..நீ எப்படி என் மனசுக்குள்ள வந்த? இந்த பெங்களூரு க்கு வந்தப்ப கண்ண கட்டி காட்ல விட்டா மாதிரி இருந்தது.கோயம்புத்தூர்ல அப்பா அம்மா வோட நிம்மதியா வாழ்ந்துட்டு இந்த ஊர்,இந்த ஆஸ்டல் வாசம் வெறுப்பா வந்தது அதுவுமில்லாம இந்த பாடாவதி சாப்பாடு, மூஞ்ச எப்பவும் உர்ர்னு வச்சிருக்கிற கொலீக்ஸ் னு ரொம்ப சோர்வா இருந்தது.அப்பதான் ரூம்மேட்டா நீ வந்து சேர்ந்த உன் வெள்ளந்தியான சிரிப்புதான் உன்கிட்ட என்ன சேர்த்திச்சி. பேசும்போது எப்பவும் எதிராளியின் விரல பிடிச்சிட்டு பேசுற உன்னோட இணக்கம் உடனே உங்கூட ஒட்டிக்க தோணுச்சி..எப்பவும் சிரிக்கம்படி ஏதாவது துரு துரு ன்னு பண்ணிட்டே இருக்குற உன் சுறுசுறுப்பு, எல்லாத்தையும் விட உன் பெரிதான கண்கள் நான் ஆம்பளையா பொறந்திருந்தேன்னா உன்ன விரட்டி விரட்டி லவ் பண்ணியிருப்பேன். அட்லீஸ்ட் எனக்கொரு அண்ணன் இருந்திருந்தா அவனுக்காச்சும் உன்ன கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம்..ம்ஹிம்ம்.. எதுவும் பண்ண முடியாது..

நீ ஏண்டி இத்தனையா குழந்தையா இருக்க? இதோ பார் இந்த உலகம், இந்த சக மனிதர்கள் அத்தன நல்லவங்க இல்லமா..நம்மோட உடல் இருக்கு பத்தியா அதான் நம்மோட சாபம்.. எப்போ குனிவா? எப்படி மடக்கலாம்? எங்க தொடலாம்னு கண்கொத்தி பாம்புகளாட்டும் இந்த பாழா போன நாய்ங்க நாக்க தொங்க போட்டுட்டு அலைவானுங்க..எவனையும் நம்பாத பொண்ணே..ரிஜிட் ஆ இரு.. ஷார்ப் ஆ இரு.. நிறைய படி..தெளிவா யோசி..எங்காவது ஒருத்தன் இருப்பான் நமக்குன்னு ..நம்மள வெறும் உடலா மட்டும் பார்க்காம உள்ளங்கையில் வச்சு கொண்டாட ஒருத்தன் கிடைப்பான் அவன் நம்ம பக்கத்தில கூட இருக்கலாம் ஆனா கவனமா தேர்ந்தெடுக்கனும் ..ரொம்ப கவனமா இருக்கனும்மா வாழ்க்கையில ஏன்னா நமக்கு நிறைய சுதந்திரம் இருக்கு..

உடல்,கற்பு ன்னு இன்னும் பழைய பஞ்சாங்கமாலாம் நான் எதையும் யோசிக்கல பட் நான் பார்த்தவரை பாதுகாப்புணர்வு மட்டும்தான் நிஜம்.பொண்ணுக்கு மட்டும் ஏன் இத்தன பாதுகாப்பு தேவப்படுது அப்படின்னெல்லாம் எனக்கு தெரியல ஆனா பத்ரமா இருக்கனும்.பத்ரம் னா எதுன்னும் சரியா தெரியல என் பாட்டி, அம்மா எல்லாம் பத்ரமான வாழ்க்கைதான் வாழ்ந்திருக்காங்க நானும் பத்ரமாதான் வாழனும் அதுதான் எனக்கும் பிடிச்சிருக்கு.பெண்ணியம் பெண் சுதந்திரம் இது பத்திலாம் யோசிச்சா தல வலிக்குது.அதெல்லாம் சும்மா வெத்து விளம்பரத்துக்காக வேல இல்லாதவங்களால பேசப்படுற ஒண்ணுன்னு தோணுது.ஆனா ஒண்ணு மட்டும் நெஜம் இந்த பெண்ணியம் பேசும் ஆம்பளங்களை மட்டும் நம்பக்கூடாது.ஏன்னா பெண்ணியம் என்பது என்ன? ஆணியத்திற்கான எதிர்ப்பு.. அதுக்கு ஒத்து ஊதுறவங்களுக்கு ஆணியம் தெரிஞ்சிருக்கனும் அதாவது ஒரு ஆணாதிக்க வாதியாலதான் பெண்ணியம் பத்தி பேசமுடியும் எப்படி அன்பு இருக்கிற இடத்தில பொறாமை இருக்குதோ அதோ மாதிரி பெண்ணியம் பேசுறவனுங்ககிட்ட ஆணாதிக்கமும் மறைஞ்சு இருக்கும்

இந்த எல்லா கருமத்தையும் விட நேசிக்க தெரிஞ்ச ஒருத்தன் போதும்.அவன் குறைந்த பட்ச மனிதாபிமானம் இருக்கிறவனா இருந்தா மட்டும் போதும்.எந்த நடிப்புகளும் மிகைப்படுத்துதல்களும் இல்லாம சாதாரணமா உண்மையா இருக்குற ஒருத்தன கண்டுபிடிச்சி லவ் பண்ணனும் நிவி…

30.08.2006 இரவு 8.45

ஏய் பவி! என்ன பன்றே ஏதாவது புஸ்தகத்துக்குள்ள எப்பவும் தலைய விட்டுக்கோ.. இல்லன்னா எதையாவது டைரில கிறுக்கி தள்ளு..காட் டேம் 8 மாசத்தில ஆறு டைரில கிறுக்கி தொலைச்சிருக்க..நீ என்ன லூசா?

போடீங்..சரி இன்னா மேட்டர்? செம அழகா இருக்க இன்னிக்கு..

ஈஸ் இட் !! ஒண்ணுமில்ல சும்மாதான் அழுது வடிஞ்சிட்டே இருந்த மாதிரி இருந்தது வென்ட் சலூன்

ஓ கே

மறுபடி தலைய புஸ்தகத்துகுள்ள விடாத.. ஐ வான்னா டாக்!

ம் சொல்லு என்ன எவனையாச்சிம் லவ் பன்றியா?

மை காட்!! எப்படி தெரியும்..

எங்கூர்ல ஒரு பழமொழி இருக்கு சொல்லவா?

சொல்லித்தொல..

மொச புடிக்கிற நாய மூஞ்ச பாத்தா தெரியுமாம்

போடீங் இவள.. எரும.. சனியன்.. மாடு... ம்ஹிம்,,ம்ஹிம்ம்

சரி கூல்.. யார் பையன்?

தெரியல இன்னும் பார்க்கல

என்னாது பாக்காமலே லவ் ஆ…ஏய் இன்னாங்கடி இது அக்குரமம்

ஆமாம் பவி 2வாரமா ஆபிசுல வெட்டிதான் நியூ புராஜெக்ட் எதுவுமில்ல சும்மா ஆர்குட் ல மேயும்போது பிங் பண்ணான் பேசினோம் பேசினோம் பேசினோம்..இ ஈஸ் வெரி இண்ட்ரஸ்டிங்க்

ப்ச் போர் என்ன படிக்க விடு போய் கனவு காணூ போ!

ஏய் சொல்றத கேள் அவன் நெஜமாவே நல்லவன்

எப்படி தெரியும் உனக்கு? யு ஆர் ரியலி அ க்ராப்

ஏய் உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்க? நீ போன ஜென்மத்து பொண்ணு..

இருந்துட்டு போறேன்..நீ அவன்கிட்ட போன் நம்பர் கொடுத்திருப்பியே போ! போய் ரிங் பண்ணி பேசு!..

யா ஐ கோன்னா டூ தட்..

15.09.2006 பவியின் டைரி
நிவி நீ ஏண்டி இப்படி இருக்க?ஒவ்வொரு முறையும் இனிமே இந்த பசங்கள நம்ப போறதில்லன்னுதான் சொல்ற...ஆனா எப்படியாச்சும் எவனையாச்சும் காதலிக்க ஆரம்பிச்சுடுற ஒண்ணு தெரிஞ்சிக்கோ இந்த வேகமான உலகத்தில எப்பவும் ஒண்ணவிட ஒண்ணு பெஸ்ட் தான்.. காலம் மாறிட்டே இருக்கும் நிலையான அன்பு உண்மையான அன்புன்னுலாம் எதுவும் கிடையாது..சந்தர்ப்பத்த பயன்படுத்திக்கிறதுல யார் பெஸ்ட் அதான் முன்னால நிக்கிற கேள்வி நம்மோட பரிதாபமான சூழல் நம்ம எல்லாரையும் ஒரு இயந்திரமா ஆக்கிடுச்சி நிவி..நீ ஒவ்வொரு முறையும் கண்கலங்கிட்டு பல்ல கடிச்சிட்டு ஆத்திரமா பேசும்போது மனசு வலிக்குதுடா..

நிஜமாவே ஒரு பெண் ஆணோட மட்டும்தான் வாழ்ந்தாகனுமா?

21 comments:

Anonymous said...

அய்யனார்,

இது புனைவு இல்லையா? புனைவுக்கும், சிறுகதைக்குமுள்ள வித்தியாசம்தான் என்ன?

Anonymous said...

//நிஜமாவே ஒரு பெண் ஆணோட மட்டும்தான் வாழ்ந்தாகனுமா?//

இந்த வரிகளை மனசுல முதல்ல நினைச்சுட்டு அப்புறம் கதையை எழுத ஆரம்பிச்சீங்களோ.

//ஆனா ஒண்ணு மட்டும் நெஜம் இந்த பெண்ணியம் பேசும் ஆம்பளங்களை மட்டும் நம்பக்கூடாது.ஏன்னா பெண்ணியம் என்பது என்ன? ஆணியத்திற்கான எதிர்ப்பு.. அதுக்கு ஒத்து ஊதுறவங்களுக்கு ஆணியம் தெரிஞ்சிருக்கனும் அதாவது ஒரு ஆணாதிக்க வாதியாலதான் பெண்ணியம் பத்தி பேசமுடியும் எப்படி அன்பு இருக்கிற இடத்தில பொறாமை இருக்குதோ அதோ மாதிரி பெண்ணியம் பேசுறவனுங்ககிட்ட ஆணாதிக்கமும் மறைஞ்சு இருக்கும்.//

இது கதையில வரும் ஒரு கேரக்டர் இப்படி சொல்வது. இது புனைவு என்று சொன்னாலும் இதை மேற்கோள் காட்டி நாளை யாரேனும் எதுவும் ஆரம்பிக்கக்கூடாது என்பதற்காக எனது பதில்:

இதன் படி பார்த்தால் "பார்ப்பணீயத்தை எதிர்ப்பவர்களையும் நம்பக்கூடாது. ஏன்னா பார்ப்பணீயத்தை, அதன் கொடுமையை முழுமையாய் உணர்ந்த ஒருத்தனால் மட்டுமே பார்ப்பணீயத்தை எதிர்க்க முடியும். அவன் என்னதான் எதிர்த்தாலும் அவன் அடி மனதில் அந்த பார்ப்பணீயப் புத்தி கண்டிப்பாக ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். ஆகையால் பார்ப்பணீயம் பேசுபவனை மட்டும் நம்பாதே" என்று சொல்வதும் சரியாகத்தான் இருக்கும்.

சரி இப்போ ம்கதைக்கு வர்றேன்.

//இருந்துட்டு போறேன்..நீ அவன்கிட்ட போன் நம்பர் கொடுத்திருப்பியே போ! போய் ரிங் பண்ணி பேசு!..//

சரியான அடி. இந்த வரிகளை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. சொல்லப்போனால் இந்த வார்த்தைகளை நானே சொல்லி இருக்கிறேன்.

பவியின் டைரியில் ஒரு சில இடங்கள் நன்றாக இருக்கின்றன.

கதையின் ஆரம்பத்தில் நிவியின் எமோஷன்ஸ் அழகாக்ய் சொல்லப் பட்டிருக்கு.

ஆனால் மொத்தமா எதோ மிஸ் ஆகற மாதிரி தோணுது அய்யனார். (நான் ஒன்றும் கலாச்சார காவலனாய்க் காட்டிக் கொண்டு அதெப்படி நீ இது போன்று ஒரு கதை எழுதலாம் என்று கேட்டு இதில் ஏதோ மிஸ் ஆகிறது என்று சொல்ல வில்லை அய்யனார்.)

மங்களூர் சிவா said...

//
உள்ளங்கையில் வச்சு கொண்டாட ஒருத்தன் கிடைப்பான் அவன் நம்ம பக்கத்தில கூட இருக்கலாம்
//
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே கொலைவெறி ஏத்திபுடறாங்கய்யா

//
நிவி நீ ஏண்டி இப்படி இருக்க?ஒவ்வொரு முறையும் இனிமே இந்த பசங்கள நம்ப போறதில்லன்னுதான் சொல்ற...ஆனா எப்படியாச்சும் எவனையாச்சும் காதலிக்க ஆரம்பிச்சுடுற
//
இது எத்தனையாவது அட்டெம்ப்ட்??

சும்மா அதிருதுல said...

இந்த ரெண்டு பெண்கள் பேரையும் எடுத்துட்டு ஆண் பேரு போட்டு படிக்கவும்


நன்றீ

கோபிநாத் said...

\\நிஜமாவே ஒரு பெண் ஆணோட மட்டும்தான் வாழ்ந்தாகனுமா?\\

நல்லா தான் கேட்டுயிருக்காங்க பவி..இன்னா ஒன்னு பதில் தான் தெரியல ....ஒரே குழப்பமாகிதுப்பா... ;)

MyFriend said...

கதை நல்லா இருக்குன்னு சொல்லலாம்ன்னு வந்தேன்.. ஆனால்,

//நிஜமாவே ஒரு பெண் ஆணோட மட்டும்தான் வாழ்ந்தாகனுமா?//

இப்படி ஒரு வரி கடைசியில போட்டு குழப்பிட்டீங்க.... :-S

Anonymous said...

//நிஜமாவே ஒரு பெண் ஆணோட மட்டும்தான் வாழ்ந்தாகனுமா?\\

இதைத்தான், சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான்னு எங்க ஊர்ல சொல்வாங்க.

காயத்ரி சித்தார்த் said...

படிக்க நல்லாருக்குங்க அய்யனார்.. ஆனா ரெண்டு பெண்களுக்கு இடையிலான நட்பு, பேச்சு, ப்ரியம் எல்லாம் சரியான த்வனில வரலன்னு நினைக்கிறேன்.

பாரதி தம்பி said...

புதுசா இருக்கு. 'ஏதோ சொல்ல வர்றாப்ள போல'ன்னு படிச்சுகிட்டே வந்தனா.. படார்னு முடிஞ்சுப்போச்சு.

நாகை சிவா said...

அய்யனார் நல்லா இருக்கு....

என்ன சொல்லனும் என்பது நல்லாவே புரியுது... நீங்க போட்டு கடைசி வரியை வைத்து சிலர் குழப்பி கொள்வது போல் உள்ளது.. அதனால் அது அவர்கள் கொள்ளும் அர்த்தம் அல்ல... அந்த கடித்தின் தொடர்ச்சியாக வரும் ஒரு வரி, அதாவது ஒரு எண்ணம் அவ்வளவே....

நன்று...

இராம்/Raam said...

அய்ஸ்,


நல்லாயிருக்கு.......

Ayyanar Viswanath said...

நன்றி நந்தா மிஸ் ஆகிறது என்ன அப்படிங்கிறத கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிடுறேன்..

நேத்து நம் வலை தோழி ஒருத்தரோட இந்த பெண்ணியம் பேசும் ஆண்கள பத்தி பேசிட்டிருந்தேன்.நந்தா வோட பேச்சில இயல்பும் நிஜமான அக்கறையும் இருப்பதா சொன்னாங்க..இந்த வரிகள எழுதும்போதே நெனச்சேன் உங்கள எந்த விதத்திலியாவது காயப்படுத்துமோன்னு..

அந்த ஸ்டேட்மெண்ட் பவி யோடது என்னோடதில்ல :)

Ayyanar Viswanath said...

சும்மா அதிருதில
நண்பா பெங்களூரு பக்கம் சும்மா எட்டியாவது பார்த்திட்டு வாங்க :)

சிவா :)

Ayyanar Viswanath said...

கோபி அண்ட் அனு

என்ன குழப்பம்??? கொஞ்ச நேரம் கழிச்சி படிங்க ஏதாவது தெளிஞ்சிருக்கா பாப்பம்

காயத்ரி

ஈரோட்ல பெண்கள் இப்படி பேசிக்கமாட்டாங்கலோ என்னமோ ஆனா பெங்களூருல இப்படி இருக்காங்க ..

Ayyanar Viswanath said...

ஆழி அப்ப எதும் புதுசா இல்லியா :(

நன்றி புலி அண்ட் ராம்

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

//இந்த பெண்ணியம் பேசும் ஆம்பளங்களை மட்டும் நம்பக்கூடாது.ஏன்னா பெண்ணியம் என்பது என்ன? ஆணியத்திற்கான எதிர்ப்பு.. அதுக்கு ஒத்து ஊதுறவங்களுக்கு ஆணியம் தெரிஞ்சிருக்கனும் அதாவது ஒரு ஆணாதிக்க வாதியாலதான் பெண்ணியம் பத்தி பேசமுடியும்//

//இதன் படி பார்த்தால் "பார்ப்பணீயத்தை எதிர்ப்பவர்களையும் நம்பக்கூடாது. ஏன்னா பார்ப்பணீயத்தை, அதன் கொடுமையை முழுமையாய் உணர்ந்த ஒருத்தனால் மட்டுமே பார்ப்பணீயத்தை எதிர்க்க முடியும். அவன் என்னதான் எதிர்த்தாலும் அவன் அடி மனதில் அந்த பார்ப்பணீயப் புத்தி கண்டிப்பாக ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். ஆகையால் பார்ப்பணீயம் பேசுபவனை மட்டும் நம்பாதே" என்று சொல்வதும் சரியாகத்தான் இருக்கும்.//

நந்தா, கதைல வாற வாசகத்தின்ட தர்க்கப்படி பார்ப்பனியத்தையும் வச்சுப் பார்த்தா, பார்ப்பனியத்த வெளியில எதிர்க்கிற பர்ப்பனர்கள நம்பக் கூடாதுன்னு தான் சொல்ல வேண்டி வரும்... முற்போக்கானவர்களா அறியப்பட்ட பல பார்ப்பன எழுத்தாளர்களெல்லாம் கட்டுடைக்கப் பட்டிருக்கிறாங்களே (சு.ரா, அசோகமித்திரன்...) அதப்போல...

லக்ஷ்மி said...

//இந்த எல்லா கருமத்தையும் விட நேசிக்க தெரிஞ்ச ஒருத்தன் போதும்.அவன் குறைந்த பட்ச மனிதாபிமானம் இருக்கிறவனா இருந்தா மட்டும் போதும்.// அருமையான வரிகள் அய்யனார். பெண்ணியமோ இல்லை வர்க்கப்போராட்டமோ இல்லை ஜாதி எதிர்ப்போ எல்லாமே சமத்துவத்தை நோக்கி மனிதனை அழைத்துப் போகத்தான். இது எல்லாத்தையுமே புரிஞ்சுக்க குறைஞ்சபட்சத் தேவை மனிதாபிமானம் மட்டுமே. சித்தாந்தம் புண்ணாக்கு இதெல்லாம் மேலதிக ஜிகினாக்கள். நல்லா இருக்கு கதை. இந்த ஒரு பொண்ணு ஒரு ஆணோட மட்டுமோ இல்லை ஒரு ஆண் ஒரு பெண்ணோட மட்டுமோ வாழணுமான்றதைப் பத்தி நானே ஒரு பதிவு போடணும்னு நினைச்சிருக்கேன். போட்டுட்டு ஸ்டார்ட் ம்யூசிக்னா மக்கள் படையா வந்துடுவாங்க என்னை மொத்த. அதுக்கேத்தா மாதிரி அடிவாங்கிக்க ரெடியாயிட்டு போடலாம்னிருக்கேன். :)

Ayyanar Viswanath said...

வியாபகன் புரிதலுக்கும் பகிர்விற்கும் நன்றி..

லக்ஷ்மி
மக்கள விடுங்க ..எப்பவும் ஏதாச்சிம் சொல்லிட்டுதான் திரிவாங்க..பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்..

Jazeela said...

//ஆமாம் பவி 2வாரமா ஆபிசுல வெட்டிதான் நியூ புராஜெக்ட் எதுவுமில்ல சும்மா ஆர்குட் ல மேயும்போது பிங் பண்ணான் பேசினோம் பேசினோம் பேசினோம்..இ ஈஸ் வெரி இண்ட்ரஸ்டிங்க்// அய்யனார், இந்த நிவிய சும்மா வெட்டியா கோட்டுல கெடச்சான் புடுச்சேன்னு இருக்காம, கொஞ்சம் எனக்கு உதவியா வந்து என் வேலைய பகிர்ந்துக்க சொல்லுங்க :-). நிறைய ஆங்கில கலப்பு கேட்டா 'இயல்பா இருக்க'ன்னு சொல்லுவீங்களே. கதையின் கதாபாத்திரத்தையாவது தமிழ் பேச வையுங்கப்பா.

Ayyanar Viswanath said...

ஜெஸிலா
நிவி பெங்களூருல இருக்காங்க..அழைச்சிட்டு வர கொஞ்சம் செலவாகும்..வெள்ளிக்கிழமை ட்ரீட் கொடுக்க வரும்போது பணத்தோட வாங்க அடுத்த வாரமே கூட்டிட்டு வந்திடுறேன் :)

லேகா said...

அய்யனார்,யுவி மீதான கவியின் காதல், கதை தொடங்கியதுமே புரிந்து விடுகின்றது!!இருப்பினும் சமுதாயத்தால் தொடர்ந்து மறுக்கபட்டுவரும் ஒருபாலருக்கு இடையேயான காதலும்,பிரியமும்,ஏக்கங்களும் கவியின் டைரி குறிப்புகள் வாயிலாக சொல்லி இருப்பது நன்று. கதையை இன்னும் நீடித்து இருக்கலாம்.

Featured Post

test

 test