Saturday, August 18, 2007

சிலந்தியின் வலைப்பின்னல்கள்



சிலந்தியின் வலைப்பின்னல்களென உன் பேச்சுக்களிருக்கிறது
எப்போதும் ஏதாவது ஒரு இரையை
நேர்த்தியாய் பின்னப்பட்ட வலைகள் தக்கவைத்துக்கொள்கிறது
வலைகளை சிதைக்ககூடிய வலிமையுள்ள பூச்சிகளும்
உன் வலையிலிருந்து தப்புவதில்லை
உன்னைச்சுற்றியும் மற்றவர்களைசுற்றியுமாய்
எப்போதுமே பிணைந்தபடி இருக்கிறாய்.
கள்வெறியேறிய பைத்தியக்காரனின் சலம்பல்களைப் போன்று
எப்போதும் யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கிறாய்
அல்லது பதினைந்து பக்கங்களுக்கு குறையாது யாருக்காவது கடிதமெழுதிக்கொண்டிருக்கிறாய்.
வலைப்பின்னிய நேரம் போக குரூரமான உலகம் ஒன்றை நிறுவத்துவங்குகிறாய் உனக்கு மிகவும் பழக்கமான
கற்பனையின் துணைகொண்டு நீ புனைந்து கொள்ளும் உலகம் அபத்தமானதென்றோ சாக்கடை நாற்றமடிக்கிறதென்றோ உன்னை மேலும் கழிவிரக்கத்திலாழ்த்த எனக்கு விருப்பமில்லை.

சற்று அமைதியாய் இரேன்

9 comments:

சும்மா அதிருதுல said...

ரெடிய்யா

த.அகிலன் said...

//உனக்கு மிகவும் பழக்கமான
கற்பனையின் துணைகொண்டு நீ புனைந்து கொள்ளும் உலகம் அபத்தமானதென்றோ சாக்கடை நாற்றமடிக்கிறதென்றோ உன்னை மேலும் கழிவிரக்கத்திலாழ்த்த எனக்கு விருப்பமில்லை.//

நல்லாயிருக்கு அய்யனார் இந்த உண்மை.

Jazeela said...

//சற்று அமைதியாய் இரேன்// கும்மியடிக்க போறாங்கன்னு தெரிஞ்சே வேணாம்னு முன்கூட்டியே வேண்டுகோள் விடுத்த முதல் பதிவு இதுதான் :-)). அய்யனார் என்ன ஆச்சு உங்களுக்கு full formல இருக்கீங்க போல :-). நாங்கதான் சொல்லணும் 'சற்று அமைதியாக இருங்கள்' என்று :-)

Unknown said...

பைத்தியக்காரர்கள் கள் குடிப்பார்களா அய்யனார்??

படிமச்சறுக்கல்.

கள் குடித்ததால் பைத்தியமாவது வேறு.
பைத்தியக்காரர்கள் கள் குடிப்பது வேறு அல்லவா?.....

Anonymous said...

நன்று.
.....
/பைத்தியக்காரர்கள் கள் குடிப்பார்களா ....??/

இசை, பைத்தியக்காரர்கள் சாப்பிடுவார்கள் என்றால், ஏன் கள் குடிக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றீர்கள்? அவர்களும் மனிதர்கள்தானே :-).

LakshmanaRaja said...

//வலைகளை சிதைக்ககூடிய வலிமையுள்ள பூச்சிகளும்
உன் வலையிலிருந்து தப்புவதில்லை//

தங்களின் நிலை இது வென்று சொல்வதாய் உணர்கிறேன்.:-)

மிக அழகான உண்மையின் கற்பனை பதிவு.

வாழ்த்துக்கள்.

Ayyanar Viswanath said...

அதிருதில
யார் பெத்த பிள்ள ராசா நீ :)

நன்றி அகிலன்

Ayyanar Viswanath said...

ஜெஸிலா மறுபடியும் கிர்ர் தான் :)

இசை டிசே வின் பின்னூட்டம்தான் என் பதிலும்

Ayyanar Viswanath said...

நன்றி டிசே

நன்றி லக்ஷ்மன்

Featured Post

test

 test