Tuesday, August 7, 2007

வெறுமை,கசப்பு,சலிப்பு மற்றும் தனிமை



யாரிடமாவது ஐ லவ் யூ சொன்னால்
நன்றாக இருக்கும்போலிருக்கிறது
இணக்கமான புன்னகைகளோடு
படிய வாரிய தலையில்
மல்லிகைப்பூ
மற்றும் பவுடர் பூச்சின் வாசனைகளோடு
சுடிதார் அணிந்த பெண்ணொருத்தியைப்
பார்த்து நெடுங்காலமாகிறது..

வீட்டிற்க்கெதிரிலிருக்கும் பூங்காவில்
வெறுமையாயிருக்கும்
மரபெஞ்சுகளை பார்த்துக்கொண்டிருக்க
சலிப்பாயிருக்கிறது.
பக்கத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கவாவது
எவளாவது ஒருத்தி வேண்டும்

விரல்களைப் பிடித்து கொண்டோ
பழங்கதைகளை சொல்லிக்கொண்டோ
பெருமையடித்துக்கொண்டோ
கடந்து போகும் குழந்தைகளை
சிலாகித்துக்கொண்டோவாவதிருக்க
எவளாவது ஒருத்தி தேவைப்படுகிறது.

பிலிப்பைன் தேசத்தவர்
எப்போதும் கூட்டமாகவே திரிகின்றனர்
தலைமுறையாய் இங்கிருக்கிருக்கிறார்கள் மலையாளிகள்
நாளைக்கான கனவை சுமந்தபடி
மொட்டை வெயிலில் ஒற்றையாய் அலைகிறான் தமிழன்

16 comments:

Anonymous said...

அய்யனார் ஏதேனும் புதிய முயற்சியா??? கவிதைகளில் படிமம் குறைவது போலத் தோன்றுகிறதே...

//நாளைக்கான கனவை சுமந்தபடி
மொட்டை வெயிலில் ஒற்றையாய் அலைகிறான் தமிழன்//

அய்யா இந்த மாதிரி எழுதப் போயிதான் இங்கே என் ஆளுக்கு பேரே வெச்சுட்டாங்க. இப்போ நீங்க அஅரம்பிச்சுருக்கீங்க.

உங்களுக்கு ஏற்கனவே ரசிகர் மன்றம் எல்லாம் இருக்கு. பார்த்துக்கோங்க.

ஆனால் கவிதையின் உணர்வுகளை, தனிமையின் மீதான வெறுப்பை, பெண்ணொருத்தியுன் அருகாமைக்கான ஏக்கத்தை அழகாய் வெளிப்படுத்தியுள்ளீர்கள்....

லொடுக்கு said...

'VACANCY HERE' போர்டு தொங்கவிடுறீங்க போலிருக்கு. நடத்துங்க நடத்துங்க. :)

த.அகிலன் said...

கவிதையை எழுதியவுடன் பதிவிட்டிருக்கிறீர்களா? ஏதோ குறைவது மாதிரியிருக்கிறது.(என் கருத்து)

Unknown said...

//நாளைக்கான கனவை சுமந்தபடி
மொட்டை வெயிலில் ஒற்றையாய் அலைகிறான் தமிழன்//
எல்லோரும் நாளைக்கான கனவைச் சுமந்தபடிதான் அலைகின்றனர். இல்லையென்றால் உறவுகளை விட்டு விட்டு இத்தனை தூரம் ஏன் வருகிறார்கள்.
ஆனால் தமிழன் மட்டும் மொட்டை வெயிலில் ஒற்றையாய் அலைகிறான்.
//யாரிடமாவது ஐ லவ் யூ சொன்னால்
நன்றாக இருக்கும் போலிருக்கிறது//
சரியான வழியில்தான் சிந்திக்கிறீர்கள். காலங்கடத்தாமல்
திருமணம் செய்து கொண்டு, உமது துணைவியாரிடம் ஐ லவ் யூ சொல்லுங்கள் நண்பரே!.
அப்புறம் பாருங்கள் அந்த வெறுமையெல்லாம் எப்படி பறக்கிறதென்று!.

சாலிசம்பர் said...

//யாரிடமாவது ஐ லவ் யூ சொன்னால்
நன்றாக இருக்கும்போலிருக்கிறது
இணக்கமான புன்னகைகளோடு
படிய வாரிய தலையில்
மல்லிகைப்பூ
மற்றும் பவுடர் பூச்சின் வாசனைகளோடு
சுடிதார் அணிந்த பெண்ணொருத்தியைப்
பார்த்து நெடுங்காலமாகிறது..//

தனிமையின் இசை அதிர வைக்கிறது.

குசும்பன் said...

யாரிடமாவது ஐ லவ் யூ சொன்னால்
நன்றாக இருக்கும்போலிருக்கிறது
இணக்கமான புன்னகைகளோடு
படிய வாரிய தலையில்
மல்லிகைப்பூ
மற்றும் பவுடர் பூச்சின் வாசனைகளோடு
சுடிதார் அணிந்த பெண்ணொருத்தியைப்
பார்த்து நெடுங்காலமாகிறது..

அய்யனார் ஊருக்கு போகலாமா, இததான் எங்க தலைவர் தமிழ் கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு வேனும் என்று கேட்டார் எல்லாம் நக்கல் அடிச்சீங்க:(

கதிர் said...

//"வெறுமை,கசப்பு,சலிப்பு மற்றும் தனிமை" //

ஓஹோ இதெல்லாம் தோணுச்சின்னா நீங்க பொண்ணுங்கள நினைப்பிங்க அப்படிதான. உங்களுக்கு தனிமை, சலிப்பு வரும்போதெல்லாம் உங்கள எண்டர்டெயின் பண்ண பொண்ணு வேணுமாக்கும்?

யோவ் பொண்ணுங்கலாம் என்ன விளையாட்டு பொம்மன்னு நினைச்சியா? இல்ல பொழுதுபோக்கு சாதனம்னு நினைச்சியா..

மனசுன்னு ஒண்ணு இருக்கு அதெல்லாம் பாக்கறது இல்லயா?

இத படிச்சிட்டு தாய்க்குலம்லாம் சும்மா இருப்பாங்கன்னு நினைக்கறிங்களா? இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்க போகுதுன்னு பாருய்யா.

இதை கவிதைல வகைப்படுத்தினதே தப்பு.

Balaji Chitra Ganesan said...

அருமை!

Anonymous said...

Different-ana kavithai.

செ.பொன்னுதுரை said...

//யாரிடமாவது ஐ லவ் யூ சொன்னால்
நன்றாக இருக்கும்போலிருக்கிறது//


யாராவது i love you சொன்னாலும் நன்றாகத்தான் இருக்கும்

ில்லையா

சிவா said...

அய்யனார் கவிதை உங்கள் பாணியிலிருந்து மாறு பட்டிருக்கிறதே? என்ன விஷயம் ஏதாவது விசேஷமா? கராமாவில் நிரைய பிலிப்பைன் நாட்டினர் உள்ளனர், (pare! they are free society no, from America)டீ சர்ட் போட்டுக்கொண்டு நடக்கிறார்கள் கவனம். நலம் தானே?-சிவா.

கோபிநாத் said...

\தம்பி said...
//"வெறுமை,கசப்பு,சலிப்பு மற்றும் தனிமை" //

ஓஹோ இதெல்லாம் தோணுச்சின்னா நீங்க பொண்ணுங்கள நினைப்பிங்க அப்படிதான. உங்களுக்கு தனிமை, சலிப்பு வரும்போதெல்லாம் உங்கள எண்டர்டெயின் பண்ண பொண்ணு வேணுமாக்கும்?

யோவ் பொண்ணுங்கலாம் என்ன விளையாட்டு பொம்மன்னு நினைச்சியா? இல்ல பொழுதுபோக்கு சாதனம்னு நினைச்சியா..

மனசுன்னு ஒண்ணு இருக்கு அதெல்லாம் பாக்கறது இல்லயா?

இத படிச்சிட்டு தாய்க்குலம்லாம் சும்மா இருப்பாங்கன்னு நினைக்கறிங்களா? இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்க போகுதுன்னு பாருய்யா.

இதை கவிதைல வகைப்படுத்தினதே தப்பு.\\


செல்லம்...எப்படி அய்ஸ் மேல இம்புட்டு பாசம் உனக்கு ;-))

Ayyanar Viswanath said...

நந்தா மிக்க நன்றி பா

லொடுக்கு :)

அகிலன் இத கவிதன்னு கூட சொல்ல முடியாது சும்மா ஒரு வெறுமைய வெறுமா சொல்லியிருக்கேன் அவ்வளவுதான்

Ayyanar Viswanath said...

சுல்தான்..துபாய் னா பொண்ணு கொடுக்க யோசிக்கிறானுங்களே :(

ஜாலிஜம்பர் மிக்க நன்றி

குசும்பரே நான் ஒண்ணும் சொல்லல :)

Ayyanar Viswanath said...

யோவ் தம்பி
அதெல்லாம் ஒண்ணும்நடக்காது..போய் வேற வேலய பாருல

பாலாஜி,என்பீ,பொன்னுத்துரை, வாசி

மிக்க நன்றி

Ayyanar Viswanath said...

ஆமாம் கோபி பய பாசக்கார பய

Featured Post

test

 test