Thursday, August 23, 2007
முதல் முத்தம்
ஒரு பின்பனிக்கால விடியலில்
பனியில் குளித்த ரோஜாவினையொத்த
உன் இதழ்களில் முத்தமிட்ட தருணமொன்றில்
சில பறவைகள் விழித்தெழுந்தன
தொலைவில் அபூர்வமாய் மலரும் மலரொன்றின் விதை
தனக்கான வெடிப்புகளின் முடிவில் துளிர்க்கலாம்
தன் முதல் துளிரை
காட்டு மர இடுக்குளில் இடப்பட்ட முட்டைகளிலொன்று
ஓடுடைத்து மெல்ல எட்டிப்பார்க்கலாம்
தனக்கான உலகத்தை
பாதைகளற்று அலைந்து திரிந்த சிற்றாறு
இத்தருணங்களில்
நதியின் விரிந்த கரங்களில் தஞ்சமடையலாம்
இன்னும் பிரபஞ்சத்தின் எத்தனையோ
முதல் நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதற்க்கான
சாத்தியக்கூறுகளுமிருக்கிறது
எப்போதும் அதிகாலையிலேயே
விழித்துவிடுகிறார்கள்
குழந்தைகள்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
5 comments:
கவிதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது இருக்கட்டும்
இந்த எளிய தமிழை எப்போ கொண்டு வருவீங்க
Yeppadi Ayyanar, unala mattum ippadi.....romba poramaya irrukku....
AYYANARDASAN
இந்த கவிதைதான் பண்புடனிலும் வந்ததா? அங்கப் போட்ட பின்னூட்டத்தையே இங்கேயும் போடவா :-))
சீக்கிரம் கொண்டுவந்திடலாம் மின்னல்
யார்பா நீ தாசா
ஜெஸிலா உங்களை தடுக்க முடியுமா? அடிச்சி ஆடுங்க எனக்கு எதையும் தாங்கும் இதயமாச்சே :)
Kavithai Arambiththathum ninaicchen.
Ithu kuzhanthai sambanthappattathu enRu.
nallaa irukkupaa.
ellorum aduththakattaththai Arambam seyvathileye irukaanggaLA:0)))))
Post a Comment