போர், துயரம், வலி, வேதனை, இழப்பு, மரணம், விளிம்பிற்க்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படும் வாழ்வின் அவலம், அதிகாரத்தின் கொக்கரிப்பு, வெளியெங்கிலும் நுட்பமாய் பரவிகிடக்கும் சாதிய நுண்ணரசியல் இவைகளை அபூர்வமாய் செய்தியாகப் படித்துக்கொண்டோ தொலைக்காட்சியில் பார்த்தபடியோ கெந்துகி சிக்கன்களை கொரித்தபடி சூரியனின் நடு நெற்றியில் விழுந்த பனிக்கட்டியாய் உருகும் மிகச் சக்திவாய்ந்த புனிதர்கள் தமக்கு அரிதாய் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தமிழுக்காய் சேவை புரிய தமிழின் நுண்கலைகளை வளர்த்தெடுக்கத் தொடங்கிய குழுமம் அன்புடன் என நான் அறிந்திருக்கவில்லை.
என் தவறான புரிதல்களாலும் அல்லது சலிப்பின் மிகுதியால் அவ்விடத்தை எட்டிப்பார்க்க தவறியதாலும் அங்கே விவாதிக்கப்படும் கருத்துக்கள் பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை.ஆனால் அவ்வப்போது அங்கே எழுதப்படும் தமிழின் நுண்கலைகளில் ஒன்றான கவிதைகளைப் படித்து மட்டும் சத்தமாய் சிரித்துக்கொள்வதுண்டு. தியாகு தந்திருந்த சுட்டியை பிடித்துக்கொண்டு போனால் ஆசிப் விவாதித்துக்கொண்டிருந்தார் அட இவரெல்லாம் கூட இங்கு எழுதுகிறாரா?என்ற ஆச்சர்யம்தான் முதலில் எழுந்தது.
அறிவுமதியின் கட்டுரை நீக்கப்பட்டதற்க்கான எதிர்வினைக்கு அங்கே சொல்லப்பட்டிருந்த காரணங்கள் உவப்பைத் தந்தது..(புகாரிக்கு குமட்டிக்கொண்டு வந்ததாம்).இதுதான் ஒரு எழுத்தின் வெற்றி காலம் காலமாய் புதைந்து போயிருந்த எதிராளியின் அதிகாரத்தைப், பரவலாக்கலை பெயர்த்து வாந்தியெடுக்க செய்துவிட்டாலே போதும் படைப்பாளியின் கோபம்/எதிர்ப்பு மிகச் சரியாய் எதிராளியை தாக்கியிருக்கிறது என மகிழ்ந்துகொள்ளலாம்.கட்டுரையைப் படித்த பின்பு யார்யாருக்கெல்லாம் வாந்தி பேதி மற்றும் இத்யாதிகள் வந்ததோ நீங்கள் அனைவரும் அதிகாரத்தின் வழித்தோன்றல்கள் எனக்கொளக..
தமிழை இங்குபெட்டர் அறையில் வைத்து பாதுகாக்கும் இப்புனிதர்களின் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திருக்க வேண்டிய மனிதர்கள் காலப்பிறழ்வின் பழிவாங்கலால் இந்த நாகரீகமில்லாத உலகத்தில் தங்களின் புனிதங்களை காப்பாற்றிக்கொள்ள அரும்பாடுபடும் அவர்களின் அவலம் என்னைத் துயரத்திலாழ்த்துகிறது....
தவறான கட்டுரை கீழ்த்தரமான கட்டுரை என புகாரியால் விமர்சிக்கப்பட்ட கட்டுரையை இங்கே இடுகிறேன்.மேலும் அன்புடன் பற்றியெல்லாம் எதிவினையாற்ற என் வலைப்பக்கமொன்றும் புனிதத்தின் இருப்பிடமல்லவே..
-----------×××----------------
பார்ப்பன வாத்தியார்கள்
பாவலர் அறிவுமதி
ஞாநி இப்போது தமிழ்ச்சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அதனால்தான் ஆனந்த விகடனில் 'அறிந்தும் அறியாமலும்' எழுதுகிறார்.
மூன்று வயது ஆண்குறி விறைப்பது குறித்தும், மூன்று வயது பெண்குறி பிசுபிசுப்பது குறித்தும் எழுதி எழுதி... முதன் முதலாக எப்போது நீங்கள் அதைத் தொட்டது.. முதன் முதலாக எப்போது நீங்கள் இதைப் பார்த்தது என்று கேள்விகள் கேட்டு வந்த பத்திரிகையாளர் ஞாநி... கடைசியாக ஆண் - பெண் உறுப்புகளின் படங்கள் வரைந்து பாகங்கள் குறித்து விலாவாரியாக எழுதலாமா என்று கேட்டு.. ஆறுகோடித் தமிழர்களும் அதற்கு அங்கீகாரம் அளித்து விட்டதாகவும்.. இனி துணிந்து பாலியல் குறித்துப் பக்கம் பக்கமாக ஆனந்த விகடனில் எழுதப் போவதாகவும் ஏகப்பட்ட குஷியில் அறிவித்திருக்கிறார்.
அரசியல் விமர்சனங்கள் எழுத பத்திரிகையாளர் ஞாநிக்குத் தகுதியுண்டு. பாலியல் சார்ந்த சிறுகதைகள், புதினங்கள் எழுதவும் தகுதியுண்டு. ஆனால், மருத்துவர்களாகிய பெற்றோர்களின் மகன் மகப்பேறு பார்த்தது எவ்விதம் பிழையோ அவ்விதமே பாலியல் கல்வி குறித்தத் தொடர் எழுதுதல் ஞாநிக்குப் பிழை என்பதை ஞாநியும் உணர வேண்டும். நாமும் உணர வேண்டும்.
ஞாநி அடிப்படையில் பாலியல் மருத்துவம் படித்த வல்லுநரன்று. பாலியல் நூல்களைப் படித்து அல்லது பாலியல் மருத்துவர்களிடம் கேட்டுக் கேட்டு எழுதப் போகிற தொடர்தான் இந்தப் பாலியல் மருத்துவத் தொடர். இந்தத் தொடரில் அவரது பணி, மொழி பெயர்ப்பாளர் அல்லது நேர்காணல் செய்பவர் என்கிற அளவில் மட்டுமே பயன்படப் போகிறது. அப்படியானால் இந்தப் பாலியல் தெளிவுகளுக்கான அறிவுக்குச் சொந்தக்காரர்கள் வேறு நபர்கள்.
இப்படி அடுத்தவர் உழைப்பை, அடுத்தவர் அறிவைத் திருடிப் பிழைக்கும் வகையறாக்களே ஞாநியின் வகையறாக்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படிப்பட்ட ஈனப் பிழைப்பை நடத்தி வருகிறவர்கள்தாம் இவர்கள். ஏரோட்டியவர்களின் கால்களில் கட்டிய சலங்கை பத்மா சுப்ரமணியத்திற்குப் பல பட்டங்களைப் பெற்றுக் கொடுத்த உண்மையை... நாற்று நட்ட தாய்கள் பாடிய இராகங்கள் பாம்பே ஜெயஸ்ரீக்குப் பட்டம் பெற்றுக் கொடுத்த உண்மையை... உணர்ந்தவர்களுக்குத் தான் நான் சொல்கிற உண்மை புரியும்.
அன்று இசையை, நடனத்தைத் திருடியவர்கள் இன்று அடுத்தவர்களின் அறிவியல் உழைப்பையும் திருடிப் பிழைப்பு நடத்துவதின் அடையாளமே ஞாநியின் அறிந்தும் அறியாமலும், சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், மதனின் ஹாய் மதனும்!
இந்த வகையறாக்களின் கைகளில் இருக்கும் அறிவுக் குழந்தைகளின் அப்பா அம்மாக்கள் யார் யாரோ. இவர்கள் பல நூலகங்களில் திருடி வந்த குழந்தைகளை விற்கும் அசிங்கத் திருடர்கள், அருவருப்புத் திருடர்கள்.
இவர்களுடைய பணி இந்தத் திருட்டு வேலைகளோடு நின்றுவிடவில்லை. இவர்களுடைய இந்த எழுத்துகளைப் படிக்கும் தமிழர்களிடையே இவர்கள் மிகச் சிறந்த பத்திரிகையாளர்களாக, பாராட்டுக்குரிய அறிவியல் அறிஞர்களாக, "இவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற கருத்துருவாக்க மனிதர்களாக...." இவர்கள் மாறுகிற இடத்தில்தான் தமிழகத்திற்கான ஆபத்துகள் தொடங்குகின்றன. தேர்தல் நேரத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு தொலைக்காட்சிகளில் அமர்வது போன்ற ஆபத்துகள்.
சுஜாதாவின் எழுத்துகளையும், கேள்வி பதில்களையும் படித்துப் படித்து வியப்புற்ற தமிழர்கள் சுஜாதாவின் மீது மிகுந்த மரியாதை வைத்தார்கள். சங்க இலக்கியங்களான புறநானூறு, குறுந்தொகைக்கெல்லாம் உரையெழுதியதைப் பார்த்து மிகச் சிறந்த தமிழ்மேதையென்று மதிப்பும் வைத்தார்கள் (புறநானூறுக்கு அவர் எழுதிய உரையில் இருந்த அடிப்படையான தவறுகளை ஆதாரத்துடன் 'இந்தியா டுடே' இதழ் மூலம் பேராசிரியர்கள் இருவர் சுட்டிக் காட்டியும், இன்றுவரை அதற்கு எந்த விடையும் சொல்லாமல் பதுங்கிக் கொண்டது வேறு விசயம்.)
புறநானூற்றுக்கு உரையெழுதிய இந்த தமிழ்மேதைதான் 'சிவாஜி’' படத்திற்கு வசனகர்த்தா! அந்தப் படத்தில் ஒரு காட்சி எழுதிக் கொடுத்திருக்கிறார் இந்த மேதை! அங்கவை, சங்கவை பாரி மகளிராக அறியப்பட்ட பெயர்கள். இந்தப் பெயர்கள் கொண்ட, இயல்பாக இருக்கிற தமிழ்ப் பெண்களின் முகங்களில், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மணிரத்னம் போரளிகள் முகத்தில் பூசிவிட்டதைப் போல... இராமாயணத்தில் அரக்கர்கள் என்றது போல, கரியைப் பூசி தமிழ் படித்த கேணையன் சாலமன் பாப்பையா வாயால்... "வாங்க எங்கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க, வந்து பழகுங்க.. புடிச்சிருந்தா கட்டிக்கிங்க.. புடிக்கலன்னா பிரண்ட்சா வச்சிக்கிங்க" என்று பேச வைத்திருக்கிறார். ஒரு தமிழ்ப் பேராசிரியரை வைத்தே தமிழ்ப் பெண்களை இவ்வளவு கேவலப்படுத்திருக்கிறார் சுஜாதா!
நல்ல தமிழ்ப் பெண்கள் எங்கே கிடைப்பார்கள் என்பதற்கு, ‘எல்லா தமிழ்ப் பெண்களும் கால்சென்டருக்குப் போய்விட்டார்கள். ஒண்ணு ரெண்டு கோயில்ல இல்லன்னா.... யாழ்ப்பாணத்துல...’ என்றும் எழுதியிருக்கிறார் சுஜாதா. வேலைக்குப் போகிற பெண்களெல்லாம் விபச்சாரிகள் என்று பெரியவாள் சொன்ன குரலை சுஜாதாவின் குரல் அப்படியே எதிரொலிக்கிறதா இல்லையா? படித்த தமிழ்ப் பெண்களையெல்லாம் இப்படிக் கேவலப்படுத்தி எழுதியுள்ள சுஜாதாவைப் பற்றி... இந்த உரையாடலைப் பயன்படுத்திய இயக்குநரைப் பற்றி, நடிகர்களைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்து விட்டு வருகிற தமிழர்களைப் பற்றி என்ன சொல்வது!
'யாழ்ப்பாணம்' என்ற சொல்லை முன்பொருமுறை மணிரத்னம் தனது படத்திலும் பயன்படுத்தியிருந்தார். வருகிற ஒருவரை எங்கிருந்து வர்ற என்று கேட்க, தெற்கே என்று சொல்ல... யாழ்ப்பாணத்திலிருந்தா.. என்று கேட்பான், தமிழ்நாட்டில் நடக்கும் கதையில்! இந்தப் படத்திலும் அப்படியே.. ஊறுகாய் போல 'யாழ்ப்பாணம்' பயன்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்து எம்தமிழ் உறவுகள் படுகிற வேதனை குறித்து இந்த சுஜாதாவிற்கு என்ன கவலை இருக்கப் போகிறது? அங்கே வயதுக்கு வந்த பெண்களை... பையன்களை வைத்துக் கொண்டிருக்கிற தாய்களின் வலிகுறித்து இந்த ஆளுக்குத் தெரியுமா? வெள்ளை வண்டி சோகம் புரியுமா? 'யாழ்ப்பாணம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களின் கடின உழைப்பு ஊதியத்தை ஏமாற்றிப் பிடுங்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும். (சிங்களவர்களை விட தம் வாழ்விற்கு இவர்கள் மிக மோசமான எதிரிகள் என்கிற உண்மையை உணராமல், எம் புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் தமிழர்களுக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த மிக மோசமான படத்தைப் பார்க்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு வலிக்கிறது. ஆனாலும், சுவிசின் துர்க்கா வாழ் தமிழ் உறவுகள் ஒட்டுமொத்தமாக இதனை நிராகரித்திருப்பது ஆறுதலாக இருக்கிறது).
அப்புறம்... 'வாங்க வந்து வடைய தட்டுங்க...' என்று தொலைக்காட்சி புகழ் உமாவிற்கு வசனம் கொடுத்திருக்கிறார் சுஜாதா. அறிவுள்ள அந்தப் பெண் இந்த உரையாடலைக் கூச்சமின்றி பேசிக் கொடுத்திருக்கிறார்!
'ஆதி' என்று சொல்லி இன்னொரு சொல்லைச் சொல்லப் போக, விவேக்கின் வாயை ரஜினி மூட, கபோதி என்று சொல்ல வந்தேன் என்று வசனம் எழுதியிருக்கிறார் சுஜாதா! இதையே இந்தியன் படத்திலும் 'ரெண்டெழுத்துக் கொழுப்பு’ என்றும் 'கேணக்கூ'....என்றும் எழுதி ஒரு பெரிய நடிகரின் வாயால் உச்சரிக்க வைத்தவர்தான் இந்த சுஜாதா!
அந்த உறுப்பு வழியாகத்தானே சுஜாதா அவரது மரியாதைக்குரிய அம்மாவின் வயிற்றிலிருந்து உலகிற்கு வந்தார்! இந்த உரையாடலை எழுதியவர்.... வாயை அடைத்தவர்... இயக்கியவர் இவர்களும் இதன் வழியாகத்தானே உலகிற்கு வந்தார்கள்! அந்த உறுப்பு அவ்வளவு கேவலமானதா? கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா?
ரவுண்டு ரவுண்டா நா ஒண்ணுக்கு உடுறேம்பாரு... அப்படி நீ உடுவியா என்று ஒரு சிறுவன் சிறுமியிடம் கேட்பதாக எழுதிய சுஜாதாதான் இன்று ஆனந்த விகடனில் கற்றதும் பெற்றதும் எழுதுகிற அறிவியல் மேதை! குங்குமம் இதழில் இவர் கூறுகிறார்... தமிழர்கள் கடல்வணிகம் செய்தவர்கள் இல்லையென்று! 'கட்டுமரம்' என்கிற சொல்லையே - உலகத்திற்குக் கொடுத்த தமிழர்களுக்குக் கடல் வணிகம் தெரியாதாம்!
இன்னொரு அறிவியல் மேதை ஹாய் மதனிடம்... மல்லிகை மன்னன், மதுரை-17 என்ற நபரிடமிருந்து ஒரு கேள்வி...
ஆண்களுக்கு மட்டும் காம உணர்சி கடைசி வரையிலும் குறையாமல் இருப்பதன் மர்மம் என்ன? இப்படிக் காமம் தொடர்பான கேள்விகளுக்குக் கிளுகிளுப்பான பதில்களாக நூலகங்களில் திருடித் திருடி எழுதுகிற மதன்... ஒருமுறை இறையன்பு கேட்ட. "வந்தார்கள் வென்றார்கள் எழுதியது போல சோழப் பேரரசுவின் பின்புலத்தில் ஒரு வரலாற்று நாவல் எழுதினால் என்ன?" என்ற கேள்விக்கு, "தமிழர்களுக்கென்று ஏதடா வரலாறு...?" என்று எகத்தாளமாகப் பதில் சொன்னவர்.
நாடற்ற வந்தேறியாகிய இவரிடம் மிகப்பெரும் தமிழுணர்வாளரே தமிழர்களின் கருத்துருவாக்கச் சிந்தனையாளனாய் ஏற்றுக்கொண்டு கேட்ட கேள்விக்குக் கிடைத்த மரியாதையிது. தன் இனமக்களை ஊருக்குத் தள்ளிய புறம்போக்குச் சேரிகளில் வாழவைத்துவிட்டு எங்கிருந்தோ ஏய்க்க வந்த நாய்களையெல்லாம் வரவேற்று அழகழகாய் மாடமாளிகைகள் கட்டிக் கொடுத்து பிரம்மதேயங்களாய் ஆயிரமாயிரம் காணி நிலங்களை எழுதிக் கொடுத்து உழைக்கத் தேவையில்லையென்று உட்கார வைத்தே சாப்பிட வைத்த சோழ மன்னர்களுக்கு இவர்கள் காட்டுகிற நன்றியைப் பார்த்தீர்களா? ஆனால் இதற்காக மதனுக்குக் கிடைத்த மரியாதையை varalaru.com கண்டு மகிழ்க...
சுஜாதாவாக இருந்தாலும் மதனாக இருந்தாலும் ஞாநியாக இருந்தாலும்.. இவர்களை பயன்படுத்திக் கொண்டு ஆனந்த விகடன் தமிழர்களிடம் வணிகம் செய்து வயிறு கழுவுகிறதே தவிர, சமூகப் பொறுப்புணர்வோடு தமிழர்களுக்கென்று எந்த ஒரு நல்ல நோக்கத்திலும் பயன்பட நினைக்கவில்லை.
இவர்களைத் தமிழர்களிடம் நம்பகத்தனமான அறிவாளிகளாகக் காட்டி... அதன் வாயிலாகத் தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை, விழுமியத்தை, அரசியலை அழிப்பதே.. இடறி விடுவதே.. ஆனந்த விகடனின் சூழ்ச்சிப் பணியாக இருந்து வருகிறது. கம்பராமயணத்தை.. மகாபாரதத்தை அழகுத் தமிழில் வாலியை விட்டுத் தொடர்களாக எழுதி மகிழ்ந்த ஆனந்த விகடன் திருக்குறளை மட்டும் சென்னைத் தமிழில் எழுதி இழிவுபடுத்தியது (இதையே பகவத் கீதையை நகர தலித் மொழியில் நாம் எழுதியிருந்தால் என்ன துள்ளு துள்ளியிருப்பார்கள்!)
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
8 comments:
அனானி
சொந்த பெயரில் வரவும்
அத்துடன் என் எதிர்வினை அன்புடனின் நிலைப்பாட்டைக் குறித்துதானே தவிர தனிப்பட்ட எதுவுமில்லை.. சந்தடி சாக்கில் உங்கள் பழைய பகைகளைத் தீர்த்துக்கொள்ள இங்கே இடமில்லை
அப்படி போடு போடு அமுக்கி போடு....(அய்யனார் ரெண்டு நாளா கஷ்டபட்டு டைப் செஞ்ச அதனால கும்மி அடிக்காம போகிறேன்)
நன்றி குசும்பர்
தங்கள் உணர்வுகள் நியாயமானவை. ஆனால் படித்த (திராவிட) மக்களே சிவாஜி போன்ற திரைபடங்களுக்கு ரத்தின கம்பளம் விரிக்கையில் என்ன செய்ய?முதல்வன் திரைபடத்தில் அம்மாவின் இறப்பிற்கு சொல்லியழ எவ்வளவோ இருக்க பாலூட்டிய அம்மாவின் மார்பை தேடி திரிய விட்டவர்தானே இந்த வக்கிர சுஜாதா.
இன்னும் சில காலத்தில் திராவிடர்களாகிய நாம்தான் ஆடு மாடுகளை ஓட்டி கொண்டு மத்திய ஆசியாவில இருந்து கைபர் போலன் வ்ழியாக இந்தியா வந்ததாக சுஜாதா ஒரு historical fiction(!) எழுதலாம்,aanantha vikatan athai thodaraga veliyidalaam, சங்கர் போன்ற வெகுஜன இயக்குனர்கள் அதை இயக்கலாம். யாருக்கு தெரியும்?
as i am not working with my system, i am unable to give my comment in Tamil.
Even i wanted to write a lot about this GREAT GREAT '' '' gnani'' ''.Today only i happened to read your post.it exactly tells what i wanted to tell.
You know something, i have stopped reading 'vikadan'.
எனக்கு இது போல கருத்துக்கள் படிக்கும் போது நீங்கள் பார்பனர்களை இழிவு படுத்த அல்லது குற்றம் குறை மட்டும் சொல்லவேண்டும் என்பது போல இருக்கிறது,
அறுவைசிகிச்சை செய்வது பற்றி அவர் (ஞானி) சொன்ன கருத்திற்க்கும் அதற்க்கு அறுவுமதி சொல்லும் நியாயத்திற்கும் என்ன தொடர்பு இருக்கு, ஜாதி அரசியல் நடத்தும் கட்சிக்காக ஓட்டு சேகரிக்க சென்றவ்ர்தானே அவர், கேட்டா தமிழ் தமிழ்னு சொல்லுவீங்க, தமிழனை ஏமாற்ற கிடைத்த ப்ரம்ம அஸ்திரம் அது, இருப்பினும் அவர் பட்டறையில் தோன்றியவர்கள் மிக அதிகம் என்றே நினைக்கிறேன், அஜயன் பாலா அதே ஆ.வி யில் வரலாற்று நாயகர் எழுதுகிறார், செழியன் உலகசினிமா எழுதினார், நா.முத்துகுமார், பழனிபாரதி என எத்தனையோ பேர்.
இருந்தாலும் எப்பவோ பல 1000 வருடங்களுக்கு முன்னால் நடந்த தவற்றிக்காக இன்னும் பார்பனர்களை கேவலபடுத்தும் பேச்சிக்கள் எதற்க்கு,
எப்படி உங்கள் கண்ணுக்கு மட்டும் ஞானி, மதன் பார்ப்பனர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க முடிகிறது, பாரதியை பற்றி விமர்சித்த அசுரனாகட்டும்,வ.வே.சு அய்யரை விமர்ச்சிப்பவர்களாகட்டும் நீங்கள் விமர்ச்சிக்க ஒரே காரணம் அவர் பார்ப்பனர் என்பதற்காக மட்டுமே. மதன், ஞானி ஒன்றும் யாரும் கடவுள் என்று சொல்லவில்லையே, அவர்களும் மனிதர்கள் மனிதன் என்றால் தவறு செய்யத்தான் செய்வான், அந்த தவறை எப்படி நீங்கள் ஜாதியுடன் முடிச்சி போட முடிகிறது, இதெல்லாம் பார்க்கும் போது எங்கே ஜாதி ஒழிந்துவிடுமோ என பயத்தில் அதை நீறூ பூத்த நெருப்பாகவே வைத்திருக்க நீங்கள் (உங்களை போன்றோர்) நினைப்பது போல உள்ளது.
omsrii@gmail.com, எனக்கு எப்படி என் பெயரில் அனுப்புவது என தெரியவில்லை அதனால என் மடல் ஐடி தந்துள்ளேன். எதாவது பதிலிட்டால் என் மடலுக்கும் சேர்த்து அனுப்பவும்.
கவிஞர் அறிவுமதி போன்ற தெளிவு மிகுந்த நல்ல மனிதர் ஒருவரின் பதிவை நீக்கியிருக்கிறார்களென்றால்... அவர்களின் 'அறிவை'என்ன சொல்வது?
சுஜாதாவின் கந்தளுர்வச்ந்தகுமரன்படிக்கவிலையாஅதில் யவனன் ஒருவ்ன் எங்கள்நாட்டுபொன்களைவிட உங்கள்பொன்களின்முலைகள்பொரிதுஎன்றுஎழிதியிருப்பர்
http://arunasathasivam.blogspot.com/
Post a Comment