Sunday, August 26, 2007
வழி நெடுகிலும் வலிகள்
கதிரை லுலு சிக்னலில் வைத்து முதன்முறை பார்த்தபோது குமார் நினைவில் வந்து போனான்.கதிரின் உயரமும் முகச் சாயல்களும் அப்படியே அவனை நினைவு படுத்தியது.சிவாவின் வெல்ல மண்டியில்தான் குமார் வேலை பார்த்தான்.பஜாரில் எல்லா ஓனரிடமும் சுறுசுறுப்பான பையன் என்ற நல்லபெயர் அவனுக்கு.காலையிலிருந்து சாயந்திரம் ஏழு மணி வரை சிவா மண்டியிலும் ஏழு மணிக்கு மேல் திருமஞ்சனகோபுர வீதியிலிருக்கும் நண்பர்கள் பைனான்சிலும் வேலை பார்ப்பான்.கரஸில் பி.காம் முதல் வருடமும் சேர்ந்திருந்தான்.'அண்ணோவ்' என வாஞ்சையாய் கூப்பிடுவான்.கல்லுரி வார விடுமுறைகளில் ஊருக்கு வந்துவிடுவேன் பாரதி,செந்தில்,பழனியோடு என்னையும் எப்போதும் சிவா மண்டியில் பார்க்கலாம்.பாரதிக்கு குமார் மேல் அளவு கடந்த பொறாமை இருந்தது
'வெல்லம் எட போடுறவன் எவ்ளோ டீசண்டா கீரான் மச்சான் நீ ஏன் இப்படி கிறுக்கனாட்டம் சுத்துற' என சிவா அவனை கிண்டலடிப்பதும் அவன் பொறாமைக்கான இன்னொரு காரணம்.குமாரை டீ வாங்க அனுப்புவதில் உள்ளூர ஒரு திருப்தியும் பாரதிக்கு இருந்தது.
குமாருக்கு என் மேல் தனிப்பட்ட பிரியம்,தினம் பார்ப்பவர்களை விட சிறுசிறு இடைவெளிகளுக்குப்பின் பார்ப்பவர்களின் மேல் தோன்றும் அன்பு எப்போதும் தனித்தன்மை கொண்டதுதானே.அவன் குடும்ப பிரச்சினைகளை எல்லாம் சொல்லுவான்.குமாரின் அப்பா மொகைதீன் பாய் பழமண்டியில்தான் வேலை பார்த்தார்.'ஒண்ணுதுக்கும் துப்பு இல்ல' என பாய் சாயந்திரங்களில் அவன் அப்பாவை திட்டிக்கொண்டிருப்பார்.குமாரின் அப்பா பிழைக்கதெரியாதவராய் இருந்தாலும் எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லை.அதுவே பெரிய ஆறுதலாய் இருந்தது.அம்மா மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் தங்கையோடு சக்தி தியேட்டர் மேட்டில் ஒரு சின்ன ஓட்டு வீடுதான் அவனுடையது.அதுவும் கூட பட்டா இல்லை என ஒருமுறை சொன்ன நினைவு.ஆனாலும் குமாருக்கு தன்மானம் அதிகம்.சம்பளம் தவிர்த்து அட்வான்ஸ் கூட கேட்டதில்லை என சிவா சொல்வான்.ஒருநாள் அரைபீர் துணையோடு
'உனக்கு ஏதாவது வோனும்னா கேள்டா ஊமையாட்டம் இருக்காத புரியுதா' என சிவா சொன்னபோது கூட 'எனுக்கின்னா கொறண்ணோவ்' என்றான்.
ஞாயிற்றுக்கிழமை சாயந்திரங்களில் மலைசுற்றும் வழியிலிருக்கும் துர்க்கம்மா கோயிலுக்குப் போவது வழக்கம்.ஆள் நடமாட்டம் குறைந்த அவ்விடத்தில் இருட்டும் வரை உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்.ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது பாரதி பரபரப்பாய் எழுந்தான் மச்சான்! ஏஏஏ!! குமார்ரா! குமார்ரா!! என கத்தியபடி டிவிஎஸ் ஐ கிளப்பினான்.என்ன ஏது எனப் புரியாமல் வண்டியை கிளப்பி பின் தொடர்ந்தோம்.குமார் தலைக்கு முக்காடிட்ட பெண்ணை பின்னால் உட்கார வைத்தபடி வண்டி ஓட்டிக்கொண்டு போனான்.பாரதி முதலில் வண்டியை விரட்டி வழிமறித்தான்.'டேய் குமாரு' என கேவலமாய் சிரித்தபடி காலை ஊனினான்.அசிங்கமாய் இருந்தது எங்களுக்கு இவன் பின்னால என்னவோ ஏதோன்னு வந்தமே என நொந்து கொண்டோம்.இருப்பினும் குமாரை இப்படி பார்க்க ஆச்சர்ய்மாய் இருந்தது.அதைவிட ஆச்சர்யம பின்னால் உட்கார்ந்திருந்தது தமிழ்செல்வி.பஜார் கவுன்சிலரின் மகள் நான்கு வட்டிக்கடை உட்பட அவளின் அப்பா கந்துவட்டி,கட்ட பஞ்சாயத்து, கட்டை கடத்தல் எல்லாவற்றிலும் பெயர் போன ஆள்.
தமிழ்செல்வி பதட்டமே இல்லாமல் இறங்கினாள்.'ஹாய் அண்ணா' என சிவாவிடம் பேச்சு கொடுத்தாள்.அவனால் எதுவும் பேசமுடியவில்லை.'சரி இருட்டிடுச்சி கிளம்புங்க' என்றான்.
பாரதியால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை மச்சான்! எப்படிடா? எப்படிடா?? என புலம்பித் தள்ளினான்.'இன்னிக்கு குடிச்சே ஆவனும்டா! என எல்லாரையும் கற்பகத்திற்கு கூட்டிப்போனான்.கேட்காமலே பீர் வாங்கிகொடுத்தான்.வழக்கமாய் பாரதி ஐந்து பைசா எடுக்கமாட்டான்.அரை பீர்தான் அவன் கெபாசிட்டி ஆனால் அன்று ஒரு பீரை குடித்துவிட்டு 'ஓ'ன்னு அழுதான்.'அந்த பொண்ண நான் லவ் பண்ணன் மச்சான்' எனத் தேம்பினான்.அடக்கொடுமையே என்றிருந்தது.சிவா மண்டிக்கு எதிர்த்த வீடுதான் தமிழ்செல்வியோடது.சிவா கடையில் உட்கார காரணமே தமிழ்செல்வி பார்க்கும் சாக்குதான் என்றபோது சிவா டென்சனானான்.ங்கோத்தா! என்ன பார்க்க வரலியா நீ! என அடிக்கப் போனான்.ஒரு வழியாய் எல்லாரும் வீட்டுக்கு போனோம்.
மறுநாள் நான் கிளம்பிப் போய்விட்டேன்.சிவாவுக்கு தொலைபேசி குமார எதும் கேட்காதீங்கடா! 'நீ மட்டும் தனியா கூட்டி போய் அட்வைஸ் பண்ணு' எனத் துண்டித்தேன்.அடுத்த வரம் வந்தபோது குமார் தயங்கி தயங்கி பேசினான்.
'அவ ரொம்ப டீப்பா கீராண்ணா..எவ்ளோ ட்ரை பண்ணி பார்த்தேன் ஆனா நான் இல்லன்னா செத்துடுவன்றாண்ணா' மொத மொறயா ஒரு பொண்ணு எங்கிட்ட இந்த மாரி சொல்லுது வுட்ரமுடியுமாண்ணா? என்றான்.'அவ அப்பா மோசமானவண்டா' உனக்கு தெரியாதா? என்றபோது 'இல்லண்ணா அவ சம்மதம் வாங்கிக்கலான்ரா ணா'..'நான் மொதல்ல பி.காம் முடிக்கனும் என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணிகொடுக்கனும்' அப்புறம் இது பத்தி அவ அவங்க அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கிதரேன்னு சொல்லியிருக்காண்ணோவ் என்றான்.'அநாவசியமா வெளியில சுத்தி எவங்கண்லயாவது மாட்டி தொலைய போற பத்திரமா இரு' எனசொல்லிவிட்டு வந்தேன்.
இறுதி வருட தேர்வுகள் நெருங்கி கொண்டிருந்ததால் தொடர்ந்து மூன்று வாரமாய் ஊருக்குப் போகமுடியவில்லை.ஒரு வெள்ளிக்கிழமை இரவு செந்தில் தொலைபேசினான்.'மச்சான் நம்ம குமாரு எகிறிட்டான் டா''இன்னாடா சொல்ர?'ஆமாம் மச்சான் நேத்து நைட்டு பொண்ண தூக்கிட்டான்'என்றதும் அதிர்ந்து போனேன்..'மச்சான் கிறுக்காடா அவனுக்கு அவங்கப்பன் மோசமான தாயோலி டா எனப்பதறினேன்.'ஆமாம் மச்சான் ஊர் ஊரா தேடுறானுங்க' 'நம்ம சிவாவ ஸ்டேசன் கூட்டிப்போயிருக்கானுங்க' என்றான்.. நான் இதோ கிளம்பி வரேன் என்றதிற்கு 'உன்ன வரவேணாம்னு சொல்லத்தான் போனே பண்ணேன்'.நீ இப்ப வராதே நெலம சரியானதும் நான் போன் பன்றேன்' என தொடர்பை துண்டித்தான்.இரண்டு நாள் நிலை கொள்ளாதிருந்தது.
மூன்றாம் நாள் சிவா பேசினான் 'மச்சான் பொண்ண இட்டாண்டானுங்கடா''குமாரு என்ன ஆனான்னு தெரியலடா' என்றதும் இதுக்கு மேல தாங்காது என்றபடி கிளம்பி ஊருக்குப் போனேன்.எல்லாரும் விபிசி தியேட்டர் எதிரிலிருக்கும் கற்பகத்திற்கு போனோம்.சிவாவும் நானும் குமாரை திட்டித் தீர்த்தோம் ''ரொம்ப அவசரபட்டுட்டாண்டா' என அங்கலாய்த்துக்கொண்டோம்.பாரதி லேட்டாய் வந்தான்.ஓரமாய் போய் தலை கவிழ்ந்து உட்கார்ந்து கொண்டான்.சிவா கோபம் தாங்காது..ங்கோத்தா! வந்திடுச்சிடா உன் ஆளு போ! போய் லவ் பண்ணு' என கத்தினான்.திடீரென பாரதி பெருங்குரலில் அழத்தொடங்கினான் 'மச்சான் நம்ம குமார கொன்னுட்டானுங்கடா' அடிச்சே கொன்னுருக்கானுங்கடா' 'பாடியை தூக்கி தண்டவாளத்துல போட்டுட்டு பொண்ண தூக்கிட்டு வந்திருக்கானுங்கடா' எனக் கதறினான்.அவரவர் நிலைகளில் உறைந்து போனோம்.
சரியாய் ஒரு வாரம் கழித்து தமிழ்செல்வி தூக்கில் தொங்கினாள்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
15 comments:
வழக்கம்போல, ஏதேதோ சம்பவங்களை உயிர்ப்புடன் நினைவுபடுத்திச் செல்லும் கதை.
அவசர அவசரமாய் எழுதினீர்களோ! சில இடங்களில், யார் யாரிடம் யாரைப்பத்தி சொல்கிறார்கள் என ஒரு வாசிப்பில் புரியவில்லை.
//எல்லாரும் விபிசி தியேட்டர் எதிரிலிருக்கும் கற்பகத்திற்கு போனோம்.//
கற்பகத்தை முதல் முறை அறிமுகம் செய்தபோது இப்படிச் சொல்லிவிட்டு இரண்டாம் முறை "கற்பகத்திற்குப் போனோம்" என்று சொல்லியிருக்கலாம்.
நான் உருவத்துல குமார் மாதிரி இருக்கலாம் ஆனால் குணத்துல கிடையாதுங்க அய்யனார். :)
ஒரு பொண்ணு வந்து "நீ இல்லாம வாழ முடியாதுன்னு சொல்லும்போதே அவனுக்கு மண்டைக்குள்ள மணியடிச்சிருக்கணும்"
மிஸ் பண்ணிட்டான்.
எம்பேரு முதல் வரில எழுதியிருக்கவே பயந்துகிட்டே வந்தேன் எங்க என்னை வச்சி நவீனக்கவுஜ எழுதிடுவீங்களோன்னு. நல்ல வேலைடா சாமி
எஸ்கேப்பு.
my god
your words made a deep pain eventhough
you are not exaggerating anything
the simple words lke
எனுக்கின்னா கொறண்ணோவ்
made a deep wound in heart
good writing da
is it true that both are dead
love
ramesh v
ம் அய்யனார் ஏதோ இதில் மிஸ்ஸிங்
அது என்னவென்று தெரியவில்ல்?
பிரியற மாதிரி எலுதுனா இன்னா
ஆமாம் அதென்னா அசிங்கமான வார்த்தை ரெண்டு தபா எலுதுறே
நீக்கிடு அய்யனார்.
அய்ஸ் பின்னூட்டம் போடும் போது எனக்கு எங்க லோக்கல் பாஷை வருது....அதனால நல்லா இருக்கு அய்ஸ் :)
அய்யனார்,
//அவசர அவசரமாய் எழுதினீர்களோ! சில இடங்களில், யார் யாரிடம் யாரைப்பத்தி சொல்கிறார்கள் என ஒரு வாசிப்பில் புரியவில்லை.//
அருள்குமார் கூறிய இந்த பிரச்சனை எனக்கும் இருந்தது. சிறிய பிரதி ஒன்றில் ஒரு பாத்திரம் நிலைபெறுமுன்னமே மளமளவென அடுத்த அடுத்த பாத்திரங்களை முன்னிறுத்துவதால் இந்த பிரச்சனை வரக்கூடும் என நினைக்கின்றேன். இருந்தும் தொய்வின்றி வாசிக்க முடிகின்றது. பேச்சுவழக்கு அப்படி வருகின்றது. ஏராளமான கதைகள் சொன்னதை சொன்னதை திருப்பி சற்று மாறுதலோடு சொல்லி இருக்கிறீர்கள். அதற்காக இதை நான் ஏற்கனவே வாசித்த உங்களின் எண்களால் நிரம்பி வழியும் சங்கமித்திரையின் அறை பல சில பதிவுகளை விட சிறந்தது என சொல்ல மாட்டேன்.
அருள்குமார்
உரையாடல்களை தனியாய் காட்டியிருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காதென நினைக்கிறேன்.பகிர்தல்களுக்கு மிக்க நன்றி
யோவ் தம்பி
நீதான் தரையிலேயே நவீன கவுஜ எழுதுறுறே அப்புறம் நான் எங்க தனியா எழுத :)
anna
its a story only :)
குசும்பர் மிக்ஸிங் சரியில்லையோ :)
தேங்க்ஸ் கோபி
யோவ் அனானி நீ யார்னு எனக்கு தெரியும்
நான் யார்னும் உனக்கு தெரியுமில்லையா :)
பேனா/பிசாசு
(என்னமா பேர் வைக்கிறிங்க)
நானும் உங்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன் :)
முடிவை கொஞ்சம் மாற்றிய 'காதல்' படம் மாதிரியே இருந்தது. ஆனா இப்போதெல்லாம் கதைல கூட மரணம் பார்த்தா அழுதுடுறேன் :-( முன்பெல்லாம் நான் அப்படி இல்லவே இல்ல. இந்த செண்ட்டி உணர்வை விட்டு வெளிவர வேண்டும் - வழி இருந்தா சொல்லுங்க :-)
ஜெஸிலா
செண்டி உணர்வு கைவசம் இருக்கும்போது நாலஞ்சி காதல் கவுஜ எழுதி போடுங்க.. எனக்கெல்லாம் அந்த உணர்வு வரமாட்டிங்குதே ன்னு ஃபீலிங்க்ஸா இருக்கு நீங்க வேற :)
Post a Comment