Saturday, August 25, 2007

பண்புடன் அறிமுக விழா மற்றும் பதிவர் சந்திப்பு



வல்லி சிம்ஹன் அம்மா துபாய்க்கு வந்திருப்பது தெரிந்ததும் தொலைபேசினேன் கனிவும் அன்பும் கலந்து நெகிழ்வான ஒரு குரலை கடைசியாய் எப்போது கேட்டேன் என நினைவில்லை.ஆனால் பேசிய பத்து நிமிடங்கள் மகிழ்வாயிருந்தது.பண்புடனுக்கான அறிமுகமும் வல்லியம்மாவை சந்திப்பதற்குமான ஒரு வாய்ப்பாகவும் வெள்ளி மாலை அமைந்தது.கராமா பார்க்கில் கூடி அறிமுக படலம் முடிந்த பின் சிவ் ஸ்டார் பவனில் அமர்ந்தோம்.உடம்பு சரியில்லாத மகி,விடுமுறைக்கு சென்றிருக்கும் பினாத்தலார் மற்றும் லொடுக்காரையும் தவிர்த்து எல்லாரும் வந்திருந்தார்கள்.புதிதாய் சுபேர் என்றொரு பதிவரும் வந்திருந்தார்.

பண்புடனுக்கான அறிமுகத்தை நான் கொடுத்தேன்.பண்புடனுக்கென்று எந்த கொள்கைகளும் கடுமையான சட்ட திட்டங்களும் தான் தோன்றித்தனமான நம்பிக்கைகளும் இல்லை.இது முழுக்க முழுக்க சுதந்திரமான ஒரு இடம்.கருத்தாடல்,கலந்துரையாடல் அவற்றோடு அன்பையும் பண்புடன் பறிமாறிக்கொள்ள ஏதுவான இடம்.செறிவான பரந்த நோக்கமுடைய நபர்கள் நிறைந்த இடமாகவும் இருக்கிறது.வயதுக்கு வராத புனிதர்கள் யாரும் இங்கில்லை என்பதையும் சொல்லிக்கொள்ள வேண்டியுமிருக்கிறது.பண்புடன் வணக்க த்தில் குழு பற்றிய தெளிவான அறிமுகமிருக்கிறது.இதுவரை யாரும் சேராதவர்கள் இதைப் பிடித்துக்கொண்டு வந்துவிடவும்.

அமீரகத்தில் பதிவர் பட்டறை நடத்துவதன் சிக்கல்களை குறித்து அண்ணாச்சி பேசினார்.சென்னை பட்டறையின் வெற்றிக்கு பின்னிருந்த உழைப்பையும்,சரியான திட்டமிடல்களை யும் அனைவரும் சிலாகித்தோம்.கையோடு கொண்டுவந்திருந்த பதிவர் பட்டறை பை,துண்டறிக்கைகள்,குறுந்தகடு என எல்லாவற்றையும் பார்த்தோம்.அமீரகத்தில் இடவசதியும் இணைய வசதியும் தற்போதைய சவால்கள்.நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் பட்டறை நடத்திவிட வேண்டும் அதற்கான இடைவெளியில் சிக்கல்களை தீர்ப்பது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இங்கே மாலன்கள் யாருமில்லை என்பதால் கருத்தாடல் பிரச்சினைகள் எதுவும் எழுவதற்கான வாய்ப்புகளில்லை.மேலதிகமாய் சென்னை வலைப்பதிவர் பட்டறை எடுத்துக்காட்டாய் இருப்பதால் புதிதாய் எதிர்கொள்ளவேண்டிய சிக்கல்கள் எதுவுமில்லை.

வானொலி அறிவிப்பாளர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பினோம்.துபாயில் தமிழ் வானொலி அறிவிப்பாளர்களின் கொலைவெறி குறித்து அபிஅப்பா மற்றும் லியோ சுரேஷ் மிகவும் வருத்தப்பட்டார்கள்.ஜெஸிலாவும் அபிஅப்பாவும் ஏற்கனவே பதிவிட்டதும் நினைவிருக்கலாம்.சுசித்ராவின் குரலோடு விடிந்த சென்னை காலைகள் சுறுசுறுப்பாக இருந்ததை மறுக்க முடியாது.குரல்வளத் தேர்வுகளோடு அவர்களின் அறிவு வளர்ச்சி குறித்தும் நிர்வாகங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம்.தமிழ்சூழலைப் பொருத்தவரை அடிப்படைத் தகுதிகள் என்பது எதற்குமே தேவையில்லாமல் போய்விட்டது அரசியல்,கலை,இலக்கியம் என எங்கும் அரைகுறைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக விரவிக்கிடப்பதாலும் வெகு சன ஊடகங்களின் திரிபுகளாலும் தமிழில் சிறந்த படைப்புகளோ படைப்பாளிகளோ வருவது மிகவும் அரிதாகிப் போய்விட்டது.இணையத்தைப் பொருத்தவரை இலவச குழுமமொன்றைத் துவங்கி விட்டாலே சிலருக்கு கொம்பு முளைத்துவிடுகிறது.இந்த கும்பல்களின் சிறு பிள்ளைத் தனமான பேச்சுகளும் செயல்களும் சிரிப்பையோடு அவ்வப்போது கோபத்தையும் வரவைக்கிறது.தானொரு குழுமத்தை நடத்தி வந்தாலும் புதிதாய் தொடங்கப்பட்ட ஒன்றினுக்கு வந்து வாழ்த்துக்களையும் அன்பையும் பறிமாறிக்கொள்ளும் மஞ்சூர் ராசா போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


வல்லியம்மாவிற்கு நினைவு பரிசாய் ஆசிப் புத்தகங்கள் வழங்கினார்.ஃபாத்தினும் கையோடு பாட்டிக்கொரு பரிசை கொண்டுவந்திருந்தாள்.ஜெஸிலா,வல்லியம்மா,சுல்தான் பாய்,லியோ சுரேஷை அனுப்பிவைத்துவிட்டு கடைக்கு வெளியே வந்து நின்றபடியே வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.திராவிடம் பெரியாரியல் திரைப்படங்கள்,மலிந்து போன வரலாற்றுத் திரிபுகள்,படைப்புத்திருட்டுக்கள் என பேச்சு நீண்டு கொண்டே போனது.லக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தொலைபேசியில் சொன்னோம்.வரிசையாய் இருபது பேருக்கு மேல் வாழ்த்துக்கள் சொல்லுவோம் என லக்கி நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.ஜி யுடனும் தொலை பேசினோம்.அண்ணாச்சியிடம் ஆள்விரட்டிகளை (புத்தகங்கள்)பறிமாறிக்கொண்டேன்.கொற்றவையை கொடுத்துவிட்டு ஐந்து புத்தகங்களைத் தள்ளிக்கொண்டு வந்தாயிற்று.திரைப்பட குறுந்தட்டுக்களும் கைமாறின.

சுபேரும் அவரின் நண்பரும் முதலில் கிளம்பி விட்டார்கள்.மின்னலும் அவரது நண்பரும் இரண்டாவதாய்.முத்துக்குமரன் நண்பன் மற்றும் குசும்பர் ஒரு வண்டியில் கிளம்பி போணார்கள்.
அண்ணாச்சியும் கிளம்பிப் போனபின் சென்ஷியும் கோபியும் டாக்சி பிடித்தார்கள்.தம்பியும் அபிஅப்பாவும் தியாகுவோடு கிளம்பினார்கள்.எல்லாரையும் அனுப்பிவைத்துவிட்டு மாடிப்படி ஏறுகையில் தோன்றியது வலையில் எழுதி நான் சாதித்தது என்னவென்றால் சில அற்புத மனிதர்களின் அறிமுகமும் சில இதயங்களின் அன்பையும் சம்பாதித்துக்கொண்டதுதான்.

16 comments:

துளசி கோபால் said...

சூப்பர்.
நானும் வந்துக்கிட்டுய் இருக்கேன்..........

ஆனா வல்லியம்மா போல மென்மைப்பேச்செல்லாம் இல்லை.
எல்லாம் யானை புகுந்த வெங்கலக் கடைதான்:-))))

லக்கிலுக் said...

//லக்கிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தொலைபேசியில் சொன்னோம்.வரிசையாய் இருபது பேருக்கு மேல் வாழ்த்துக்கள் சொல்லுவோம் என லக்கி நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.//

நன்றி நண்பர்களே! ஒரு பக்க காது தீய்ந்துப் போனது நிஜம் :-)

ஏற்பாடு செய்த கிடேசன் பார்க் வாட்ச்மேன் அபி அப்பாவுக்கு ஸ்பெஷல் நன்றி!!!

அபி அப்பா said...

வாங்க வாங்க துளசி டீச்சர்! வருகைக்காக இப்பவே காத்திருக்கோம்! அய்ஸ் அருமையா பதிவிட்டுருக்கப்பா சந்திப்பை! நன்றி!

அபி அப்பா said...

லக்கி!"இந்நேரம் ஈகிள் பார் தூள் படும்"ன்னு யாரோ சொன்னாங்க, அப்ப நானும் முத்துகுமரனும் ஒரு சேர"ஆமா மிக்சரும் பெப்ஸியும் லக்கி நல்லா வெட்டுவார்"ன்னு சொன்னோம்! இந்த காலத்தில இப்படி ஒரு பிள்ளையா என்னை போல!!!!!

லக்கிலுக் said...

//இப்படி ஒரு பிள்ளையா என்னை போல!!!!!//

என்ன கொடுமை அண்ணே இது? :-(

குசும்பன் said...

சூப்பர்:))

கேமிரா சரி இல்லாத கேமிரா என்று நினைக்கிறேன்:((((

கோபிநாத் said...

\துளசி கோபால் said...
சூப்பர்.
நானும் வந்துக்கிட்டுய் இருக்கேன்..........

ஆனா வல்லியம்மா போல மென்மைப்பேச்செல்லாம் இல்லை.
எல்லாம் யானை புகுந்த வெங்கலக் கடைதான்:-)))) \\

வாங்க....வாங்க
உங்களுடைய வாழ்த்துகளை வல்லிம்மா சொன்னாங்க

ரொம்ப நன்றி :)

வல்லிசிம்ஹன் said...

Thanks Ayyanaar.
Panbudan aRimukam nallaa seytheenga
ஆனா வல்லியம்மா போல மென்மைப்பேச்செல்லாம் இல்லை.
எல்லாம் யானை புகுந்த வெங்கலக் கடைதான்:-))))
ha haha. eppo vareenga.
en kaththal kaalamellaam mudinju pocchu ThuLasi.
Thembu illai.

Ayyanar Viswanath said...

வாங்க டீச்சர் உங்கள் வரவை எதிர்பார்த்தபடி இங்கு ஒரு பெரிய கும்பலே இருக்கு :)

நன்றி லக்கி

Ayyanar Viswanath said...

நன்றி அபிஅப்பா

/என்ன கொடுமை அண்ணே இது? :-(

பாருங்க உலகமே சொல்லுது :)

Ayyanar Viswanath said...

ஏன் குசும்பர் நீங்க புகைப்படத்தில கறுப்பா தெரியுறீங்களா :)

ஆமாம் கோபி அத சொல்ல மறந்திட்டேன் நன்றி

நன்றி வல்லிம்மா

ALIF AHAMED said...

http://anony-anony.blogspot.com/2007/08/blog-post.html

ALIF AHAMED said...

http://i189.photobucket.com/albums/z261/alif007/24082007410.jpg


இந்த இடத்தில் சுல்தான் பாய்க்கு நன்றிகள்

குசும்பன் said...

//சூப்பர்:))

கேமிரா சரி இல்லாத கேமிரா என்று நினைக்கிறேன்:(((( //

ஒன்னும் பதிலே காணோம்? என்ன நடக்குது?

குசும்பன் said...

//"பண்புடன் அறிமுக விழா மற்றும் பதிவர் சந்திப்பு" //

மொதமொதலா அய்யனார் எழுதுனது எனக்கு இன்னிக்குத்தான் பிரியுது....

:))

சென்ஷி said...

ரிப்பீட்டே :)//துளசி கோபால் said...

சூப்பர்.
நானும் வந்துக்கிட்டுய் இருக்கேன்..........

ஆனா வல்லியம்மா போல மென்மைப்பேச்செல்லாம் இல்லை.
எல்லாம் யானை புகுந்த வெங்கலக் கடைதான்:-))))//

எதிர்ப்பார்ப்புகளுடன் சென்ஷி

Featured Post

test

 test