Saturday, August 11, 2007
சுஜாதாவால மட்டுந்தான் இப்படி எழுத முடியுமா என்ன?
இன்று மாலை காற்று அதிகமில்லாதிருந்தது இறகுப்பந்து விளையாட ஏதுவாயிருந்தது.இந்த வாரத்தில் இன்றுதான் சிறப்பாக விளையாடினோம்.நடந்தாலே வியர்க்கும் துபாயில் விளையாடினால் கேட்கவா வேண்டும். விளையாடி முடித்து திரும்பும்போது பனியனை கழட்டி பிழிந்த வியர்வையை தண்ணீர் பாட்டிலில் பிடித்தேன்.
-----------×××----------------
குசும்பன் அண்ட் கோ கராமா வருவதாய் தொலைபேசினார்கள்.எல்லோரும் பனோரமா போனபோது வாசலில் பெரிதாய் பூட்டு தொங்கியது.இன்று துபாயிலிருக்கும் அத்தனை மதுவிடுதிகளுக்கும் விடுமுறை எனத் தெரியவந்தது.வீக் எண்டல லீவா என குமைந்தபடி மீனாபிளாசாவையும் கராமா ஓட்டலையும் எட்டிப்பார்த்து அங்கேயும் பூட்டுக்களை உறுதி செய்துவிட்டு கராமா பார்க் வந்தோம்.இதுவே நம்ம ஊரே இருந்தா காந்தி ஜெயந்திக்கு கூட பிளாக்கில வாங்கலாம் என்ன இருந்தாலும் நம்ம ஊர் மதிரி வருமா? எனப் புலம்பியபடி பார்க்கில் கதையளந்தோம்.பிலிப்பைன் தேசத்துப் பெண்ணொருத்தியை இருளின் துணையோடு ஆராய்ந்து கொண்டிருந்த நம் தமிழ்பையனின் அதிர்ஷ்டத்தை எண்ணிப் புலம்பி அவரவர் காதில் புகைவிட்டுத் திரும்பினோம்.நள்ளிரவில் வாகன நெரிசல் எத்தனை எரிச்சலான ஒன்று.
-----------×××----------------
பின்னிரவில் படிப்பதற்க்குக் கவிதை உகந்தது.அனிதாவின் தனிமைப்பெருவெளி மிக இணக்கமாக இருந்தது.நிகழ்வுகளின் மென் தொடுகை,மறைந்திருக்கும் குரூரம்,கசப்பின் வேர்,என எல்லா உணர்வுகளும் கவிதையில் அழகாய் வெளிப்படிருந்தது.அணில், குளம், மரம், பேருந்து, சன்னல், நெரிசல், தனிமை என பழகிய படிமங்களினூடாய் இவர் பார்த்திருக்கும் உலகம் அற்புதம்.மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுவது அன்பின் மிகுதியென்பதைத் தவிர வேறென்னவாய் இருக்கமுடியும்?.
-----------×××----------------
விழிக்கும்போதே படிக்காமல் சேர்ந்துவிட்டிருந்த புத்தகங்களை நினைத்துக்கொண்டேன்.தற்கால மலையாளக் கவிதைகள் ஜெயமோகன் மொழிபெயர்த்திருக்கிறார்.அத்தனை கவிதைகளிலும் யதார்த்தம் நிரம்பி வழிந்தது.அழகுணர்ச்சியோ படிமங்களோ நுட்பமோ இல்லை வெற்றுச் சொற்கள் மூலம் கோபம் கொட்டி எழுதுகிறார்கள் மலையாளக் கவிகள்.ஜெமோ சொல்வது போல் தமிழ் மலையாளத்திலிருந்தும் மலையாளம் தமிழிலிருந்தும் கற்றுக்கொள்ளக் கவிதையைப் பொறுத்தமட்டில் நிறைய இருக்கிறது.நகுலன் நாவல்களை மிக மெதுவாய் படிக்கப் பிடித்திருக்கிறது.நவீனன் டைரியை மீண்டும் படித்தபோது முன்பு படித்தது போல இல்லை.
கொற்றவையின் முதல் பத்து பக்கங்கள் எரிச்சலாக இருந்தது.நான் எழுதும் கவிதைகளை புரிந்து கொள்ள முடியாத வாசகனின் மனோநிலையும் இப்படித்தானே இருக்கும் என எண்ணிச் சிரித்துக் கொண்டேன்.கானல் நதியை வாங்கிப்போன கதிர் எவன்யா இப்படி எழுதுறான்?.ஒரு மண்ணும் புரியல ஏதோ மொழிபெயர்ப்பு நாவல் போல என்று சலித்தபடி திருப்பித்தந்தான்.கதிருக்கு புனைவு பற்றி விரிவாய் ஒரு நாள் சொல்லனும்.கானல்நதியின் ஆரம்பப் பக்கங்களே அட்டகாசம்! யுவனின் எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது.குள்ளசித்தன் சரித்திரம் என் வாழ்வோடு வெகு தொடர்புடைய நாவல்.யுவன் சந்திக்க வேண்டிய நபர்களில் ஒருவர்.
-----------×××----------------
மதியம் பொன்னுசாமியில் நடப்பன பறப்பனவைகளை வதம் பண்ணித் திரும்பிய களைப்பில் கண்ணைச் சுழற்றியது.ஓஒ வென்ற தொலைக்காட்சி அதிர்வில் பதைத்துக் கண்விழித்தபோது தோனி வாண வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தான். அட நம்ம பசங்களா! என ஆச்சர்யமாய் வெகு நாட்கள் கழித்து விளையாட்டைப் பார்த்தேன்.தோனியின் தைரியம் மிகவும் பிடித்திருந்தது.டெஸ்ட் மேட்சுகளில் 90 ஐ தொட்டுவிட்டாலே ஆடு திருடிய கள்ளனைப்போல நம் வீரர்கள் விழிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.தடவி தடவி 100 அடித்து பின் அடிக்க முயன்று 103 க்கு அவுட் ஆகித் திரும்புவர்.அதுபோல இல்லாமல் தொடர்ந்து மூன்றாவது சிக்ஸ்ருக்கு பந்தை அனுப்பமுயன்ற தோனியின் அணுகுமுறை சுத்த விளையாட்டு.கும்ப்ளே அடித்த செஞ்சுரி விசேச போனஸ்.
-----------×××----------------
இளவஞ்சி பின்னூட்டம் படிய்யா மோகந்தாஸ் பதிவிலே என்று கதிர் தொலைபேசினான் வெள்ளிக்கிழமை யாருடனும் சாட்டுவதில்லை.ஆஃப் லைனில் வலை மேய்ந்தபோது இளவஞ்சியின் பின்னூட்டம் படித்து சிரித்துக்கொண்டேன்.வெங்கட்ராமன் கண்டிப்பாய் அதிர்ந்துபோய் இருப்பார்.நான்கு சுவர்களுக்குள் கயமைத்தனத்தின் மொத்த உருவமாய் இருக்கும் மனித மனம் நான்கு பேர்களுக்கு மத்தியில் புனித பிம்பங்களை புனைந்துகொள்கிறது.சயந்தன் பின்னூட்டத்தின் மூலமாக தந்திருந்த தகவல் முள்ளாய் தைத்தது.டிசே அநாமதேய பின்னூட்டங்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் ஆனாலும் அவரின் விளக்கமும் செறிவு.மொக்கை கிங்காய் ரவி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகச்சரியன தேர்வு.பொட்டி கடை கெட்ட ஆளுய்யா அதும் அவரோட சேர்ந்து லக்கி அண்ட் கோ அடிக்கும் கும்மி ச்சே கெட்ட பசங்கபா.உங்க பதிவில பின்னூட்டம் போட்ட தமிழச்சி நிசமாய்யா? இல்ல நீங்களே கிரியேட் பண்ணிங்களா?பெயரிலி யை வழக்கம்போல் மெதுவாய்த்தான் படிக்க வேண்டும்.லக்ஷ்மியின் விளக்கமும் பொன்ஸின் தொலைந்த எலியும் புன்முறுவலைத் தந்தது.எலி தான பொன்ஸ் போன போகட்டும் விடுங்க.எனக்கென்னமோ நந்தா மேலதான் டவுட் :)
-----------×××----------------
வார இறுதி நாளில் பியர் குடிக்காமலிருப்பது உடல் நலத்திற்க்குத் தீங்கானது என்ற சான்றோர் வாக்கை பொய்க்க விரும்பாமல் கராமா ஓட்டல் போனோம்.நலம் விசாரித்த பல்லுக்குக் கிளிப் போட்டிருந்த பிலிப்பைன் தேசத்துப்பெண்ணை பதிலுக்கு நலம் விசாரித்தேன் உன் கிளிப்பை எப்போது கழட்டப்போகிறாய் என்றதற்க்கு இன்னும் ஆறுமாதமிருக்கிறது என வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்.கிளிப் போட்டாலும் உன் புன்னகை வசீகரமானதுதான் என்பதற்க்குப் பதிலாய் சூடான பாப்கார்னகளை கிண்ணத்தில் நிரப்பினாள்.சில பொய்களுக்கு பலன் உடனே கிட்டி விடுகிறது.முடித்துத் திரும்புகையில் தாட்டியான ஆப்பிரிக்க தேசத்துப் பெண் வோட்கா பாட்டிலை இடுப்பில் சொருகியபடி வான்னா ட்ரை டகீலா என்றாள்.ஆள விடு ஆத்தா நாளைக்கு ஆபிசு போகனும் எனத் தமிழிலேயே சொல்லி நடையை கட்டினோம்.
-----------×××----------------
எனக்குப் பிடித்த கவிதை-அனிதா
எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்
மௌனமாய் விம்மத்துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்தான்.
ஏன் அழறீங்க என்றவன் பின் தயங்கி
அழாதீங்க என்றான்.
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்
-----------×××----------------
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
42 comments:
அதெல்லாம் இருக்கட்டும். யார் அந்த பனோரமா ராதிகா????
என்ன அய்ஸ்! எழுத ஒன்னும் கிடைக்காம நானும் காலைல உக்காந்து வியாழன் வெள்ளிய எழுதுகிட்டு இருந்தேன், டபார்ன்னு தம்பி போட்டுட்டார், பின்னாலயே நீரும் போட்டாச்சா அதனால நான் பின் வாங்கிகறேன்!
சுஜாதா கதை மாதீரீனு சொல்லமாட்டேன்.
இன்னும் நல்லா இருந்தது.
ஏனெனீல் அப்படியே அன்னூபவமா இருப்பதாலோ.:)
நேத்ட்திக்கு நாங்க கூட'தமிழ்ச்சந்தை'
சரவணபவன்னு கராமால தான் சுத்திக்கிட்டிருந்தோம்.
யாரவது தெரிந்த முகம் கண்ணில படுமோனு பார்த்தேன்.
ஒரு முகமும் தெரியாதே,என்கிறீர்களா:)))
/ "சுஜாதாவால மட்டுந்தான் இப்படி எழுத முடியுமா என்ன?"//
அதானே??? எங்க அமிரகத்து பெருங்கவிஞ்ஞர் அய்யனார் கூட தான் எழுதி காட்டுவாரு.... :)
நந்தா நீங்க நந்தினி யார்னு சொல்லுங்க அப்புறம் சொல்றேன் :)
அபிஅப்பா
பின் யாரு விக்கிறா?:) அட சும்மா எழுதுங்க
வல்லி துபாய் வந்திருக்கிங்களா? பதிவர் சந்திப்பிற்க்கு ஏற்பாடு செய்திடலாமா?
ராம் வாராதய்யா ஏதோ சும்மா பில்ட் அப் பண்ணிட்டேன்
தில்லுதான்ய்யா உனக்கு உண்மையை போட்டு உடச்சிட்டீயே
அய்யனார் கவியாரே,
உங்க பேருல சதாமின் ஆக்கிரமுப்பு காலத்துல ஒரு சமையல் கவி இருந்தாரு.கோழிக் குழம்பின் மணமென்ன,ரசத்தின் ருசி என்ன...ஆஹா...ஆஹா(அப்பாடா!ஒரு வழியா செஞ்சோற்றுக் கடனை உங்க மூலமா முடித்து விட்டேன்)
அந்த டகீலா பார்ட்டி ரொம்ப நல்லவபா! :) அசப்புல பாக்கறதுக்கு நம்ம நல்லெண்ணெய் சித்ரா மாதிரியே இருக்கும்
அதுகூட ஒருமுறை வம்பு வளத்துட்டாரு அனானி தியாகு.
சொந்த கத சோகக் கதய எழுதிட்டு சுஜாதாவோட போட்டி போடுறீங்க? எல்லாத்தையும் விட அந்த கடைசி கவிதைதான் சூப்பர்.
//மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுவது அன்பின் மிகுதியென்பதைத் தவிர வேறென்னவாய் இருக்கமுடியும்?.//
அற்புதம்!!
//கதிருக்கு புனைவு பற்றி விரிவாய் ஒரு நாள் சொல்லனும்.//
தம்பி சீக்கிரம் தப்பி தலைமறைவாய்டுங்க... அவ்ளோ தான் சொல்ல முடியும்!! :)
இப்படி அனுபவத்தையே எழுதுங்க கவுஜைக்கு இது நல்லாவே புரியுது.
அய்யனாரே உங்களுக்கு என்னை பனோரமா அழைச்சுக்கிட்டு போக விருப்பம் இல்லேன்னா நேரா சொல்லிவிடவேண்டியதுதானே! எங்கடா நாம இவன அழைச்சிக்கிட்டு போனா சித்ரா குசும்பன் பின்னாடியே போய் விடுவா என்கிற பயத்தில் பூட்டி இருந்தா ரூம் கதவ காட்டி பாரு பூட்டி இருக்கு இன்னைக்கு லீவ் என்று சொல்லி ஏமாத்திட்டியேயா!:(
பார்கில் நான் தான் கண்ண மூடிக்கிட்டு உட்கார்ந்துட்டேனேயா! (ஷேம் ஷேம் பப்பி ஷேம்)
"நான் எழுதும் கவிதைகளை புரிந்து கொள்ள முடியாத வாசகனின் மனோநிலையும் இப்படித்தானே இருக்கும் என எண்ணிச் சிரித்துக் கொண்டேன்."
யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்ன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க:)
"துபாயில் விளையாடினால் கேட்கவா வேண்டும்."
தியாகுவும், ஆனந்தும் விளாயாடிய பொழுது , பந்தை பொறுக்கி போட்டதுக்கே இத்தனை பில்டப்பா... அடங்கொக்கா மக்கா!!!
மின்னல் எப்பவும் எதையாவது உடைக்க எனக்குப் பிடிக்கும் :)
நட்டு ஒண்ணும் பிரியலியே
ஆமாய்யா தம்பி
நானும் யோசிச்சிட்டிருந்தேன் எங்கேயோ பார்த்த முகமா இருக்கேன்னு
ஜெஸிலா
சுஜாதா எழுதும் கற்றதும் பெற்றதும்க்கு இது எவ்வளவோ மேல்னு உண்மை விளம்பி ஒருத்தர் சொன்னார்:)
காயத்ரி கைக்கட்டுலாம் சரியாயிடுச்சா மறுபடி உடைக்கனுமா..குசும்பரே கவிதாயினி கை சரியாயிடுச்சாம் மறுபடி உடையா :)
நல்லாத்தான்யா வேடிக்க பார்த்திருக்க
டேங்க்ஸ் டீச்சர்
ஜெஸிலா said...
"எல்லாத்தையும் விட அந்த கடைசி கவிதைதான் சூப்பர்"
ம்ம்ம்ம் கடைசியா இதுதான் இருக்கு
"-----------×××----------------"
நிறைய - (மைனஸ்)
மூன்று X (பெருக்கல்)
ஒருவேளை கணக்கு சம்மந்தபட்ட கவிதையா இருக்குமோ? இந்த ஒரு வரி கவிதையில் என்ன இருக்கு ஜெஸிலா! எனக்கு ஒன்னும் புரியலை!
புரிஞ்சவுங்க சொல்லுங்களேன்:(
சும்மா சும்மா சுஜாதாவையே சொல்லிக்கிட்டுருக்காதீங்கப்பா... வேற எதையாவது பேசுவோம். எழுதுவோம்.(நைனா...இந்த எழுத்தை எங்கேயோ படிச்சிருக்கேனே...நீங்க நம்மூருங்களாய்யா...)
ஆடுமாடு.
http://aadumaadu.blogspot.com/
சுஜாதாவும் அவர் ராசியும்
சுஜாதா அறிவு ஜீவியாக இருக்கலாம் . ஆனால் அவர் தொடர்ந்து ஜோதிடம் குறித்த தவறான செய்திகளையே பதிவு செய்து வருகிறார்.அவர் *தன் ராசி எது என்பதிலேயே குழப்பமிருப்பதாக கூறிவருவது தெரிந்ததே. இது ஜோதிட அரிச்சுவடியை புரட்டினாலே தெரிந்து கொள்ளக்கூடிய விஷயம். ஆனால் சுஜாதாவோ தம்து சோம்பலை மறைத்து ,ஜோதிடத்தின் நம்பகத்தன்மையை சந்தேகத்துக்குள்ளாக்கிவருகிறார். முதலில் இந்த பஞ்சாயத்தை தீர்த்துவிட்டு சிவாஜிக்கு போகலாம். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் ப்ரஸ்தாபிக்கப்படுகின்றன. பகுத்தறிவாளர்கள் மற்ற நட்சத்திரம் எல்லாம் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி ஒப்புக்கு சப்பாவா என்று நக்கலடிக்கிறார்கள். உண்மையில் நட்சத்திரம் என்பது நட்சத்திர மண்டலத்தை குறிக்கிறது. அஸ்வினி என்றால் ஆகாய வெளியில் குதிரை வடிவத்தில் தென்படும் நட்சத்திர தொகுப்பாகும். நிற்க, சுஜாதாவின் ஜன்ம நட்சத்திரம் கிருத்திகை என் கிறார். ஆனால் தன் ராசி மேஷமா, ரிஷபமா என்பதில் குழப்பம் இருப்பதாக கூறுகிறார். சந்திரன் கிருத்திகை நட்சத்திர மண்டலத்தில் 24 மணி நேரம் சஞ்சரிக்கிறார். இதை 4 பாகங்களாக்கி உள்ளார்கள். கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாகத்தில் (நட்சத்திரம் உதயமான முதல் 6 மணி நேரத்தில்) பிறந்திருந்தால் அவர் ராசி மேஷமாகும். அடுத்த 3 பாகங்களில் அதாவது அடுத்த 18 மணி நேரத்தில் பிறந்திருந்தால் அவர் ராசி ரிஷபம். இந்த சின்ன விஷயத்தை கூட தெரிந்து கொள்ளாமல் வாசகர்களை குழப்பி வருவது அவருக்கு அழகல்ல. அவர் தன் பிறப்பு விவரங்களை எனக்கு மெயிலில் அனுப்பினால் அவர் ராசி எது என்று ஸ்டாம்பு பேப்பரில் எழுதி தர தயார்.
Posted by chittoor.S.Murugeshan at 5:45 AM
0 comments:
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom) Blog Archive
▼ 2007 (14)
▼ August (14)
சனி பிடிச்சா நல்லதுங்கோ !
சிவாஜியும் ஜோதிடமும்
சுஜாதாவும் அவர் ராசியும்
சிவாஜியும் ஜோதிடமும்
தந்திரபாபுவைப்பற்றி
பதவி சுகத்துக்கு குலாம் அப்துல் கலாம்
என்.டி.ஆரும் எம்.ஜி.ஆரும்
கருத்து
நேரிடை ஜனநாயகம் தேவை
சுஜாதா-சிவாஜி
இந்தியாவில் வேலையின்மை
தமிழ் எழுத்தாளர்கள் போக்கு
பாலகுமாரனின் இரட்டை வேடம்
நாய் குணம்
About Me
chittoor.S.Murugeshan
In the dictionary of the people around me I am a fool who wastes all of his energy for the reconstruction of the country.
View my complete profile
இதுல கொஞ்சம் மிஸ்ஸிங்...என்ன அது...
எனக்கு புக்கா அனுப்புறாங்க, மெயிலா அனுப்புறாங்க..அப்படின்னு அவரு அலட்டுற மாதிரி நீங்க ஏதாவது ஒர் இடத்தில, என் பதிவுக்கு எல்லாரும் வந்து பின்னுட்டம் போடுறாங்க..அப்படி எல்லாம் பண்ணாதீங்க அப்படின்னு சொல்லனும்..
அப்பறம் அந்த பிலிப்பைன்ஸ் பொண்ணுக்கு அப்படின்னு சொல்லிட்டு நிறுத்திடனும்...
ஹி ! ஹி !
நீங்க நீங்களா எழுதுங்க...
எப்படி எழுதினாலும் படிக்க வைக்க தான் உங்க ரசிகர் மன்றம் இருக்கே....
புரியாத கவிதை, கொலைவெறியொடு கதை - அதெல்லாம் அந்நியன்.
இப்ப ரெமோவா!
இனிமெல், அம்பியா என்னப்பா எழுதப்போற?
kusumbu unakku puriyalaya?....aaruthala azhatheengannu sonnathukkaga chillarai waangamal wittu irukkalam enru ninaikkirathu thaney?sariya ayyanarey?thappa iruntha jaga waangikkiren.....wera yaarawathu wilakkungappu!!!!!!
அதானே, இப்பதான் தெரியுது தேரா பக்கம் வருவேன்னு சொன்ன பார்டி கராமாவுலே ஏன் செட்டில் ஆய்டிச்சின்னு! கடைசில ஒரு சின்ன பிட் வேற.''இன்று இயலவில்லையெனில் மறுதினம் முயற்சி செய்''- பீருக்குமா
\\உன் கிளிப்பை எப்போது கழட்டப்போகிறாய் என்றதற்க்கு இன்னும் ஆறுமாதமிருக்கிறது என வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னாள்..\\
அய்ஸ் பார்த்து கிளிப்போட பல்யையும் சேர்ந்து கழட்டிட போறா;)
அய்ஸ் இனி உங்க கூட போன்ல பேசும் போது கூட பார்த்து தான் பேச வேண்டும்...
அந்த கடைசி கவிதை நல்லா இருக்கு ;-)
///பின்னிரவில் படிப்பதற்க்குக் கவிதை உகந்தது.அனிதாவின் தனிமைப்பெருவெளி மிக இணக்கமாக இருந்தது.நிகழ்வுகளின் மென் தொடுகை,மறைந்திருக்கும் குரூரம்,கசப்பின் வேர்,என எல்லா உணர்வுகளும் கவிதையில் அழகாய் வெளிப்படிருந்தது.அணில், குளம், மரம், பேருந்து, சன்னல், நெரிசல், தனிமை என பழகிய படிமங்களினூடாய் இவர் பார்த்திருக்கும் உலகம் அற்புதம்.மனிதர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகுவது அன்பின் மிகுதியென்பதைத் தவிர வேறென்னவாய் இருக்கமுடியும்?.////
இந்தக்குறிப்புகள் எனக்கு மிக நெருக்கமாய் இருப்பவை அய்யனார். நன்று.
இதைச் சேர்க்க விட்டுப்போனது மேலுள்ள பின்னூட்டத்தில்.
யாருபா அந்த முருகேஷன்??
எனக்கு ஜோசியத்து மேல நம்பிக்கை இருக்கு ஆனா ஜோசியம் சொல்றாங்க பாரு அவங்க மேல நம்பிக்கை இல்ல. :)
மிஸ்டர் முருகேஷன்
நீங்க விஜய் டீவி, ராஜ் டீவி, விண் டீவில காலைல 7.30 மணிக்கு ராசிபலன் சொல்றாங்களே அந்த மாதிரி ஆளா... சிவல்புரி சிங்காரம், அஸ்தம்பட்டி அலங்காரம் அந்த மாதிரி எதாச்சும் புரொகிராம் பண்ணி இருக்கிங்களா?
//எனக்கு புக்கா அனுப்புறாங்க, மெயிலா அனுப்புறாங்க..அப்படின்னு அவரு அலட்டுற மாதிரி//
அண்ணாச்சி ABCD நீங்க யார சொல்றிய?
குசும்பரே..:@
ஆடுமாடு (நல்லா பேரு வைக்கிறாய்ங்கயா)
எந்த ஊருங்க உங்களுக்கு?
முருகேசு
தப்பான எடத்துக்கு வந்தீட்டீங்க :(
டிபிசிடி
சுஜாதாவ நல்லா படிச்சிருக்கிங்க ..ஆனா இது சும்மா லுலுலூ
நொந்தா :)
ஆமாம் வாசி வரமுடியாம போயிடுச்சி ஆனா 12.30 க்கு உங்க ஏரியாவ கிராஸ் பண்ணோம்..இனிமே நடு ராத்திரில வந்தாலும் எழுப்பவா?
கோபி
அப்படிலாம் இல்லையா நீ தைரிய்மா பேசு ..எந்த வரி குசும்பன் சொன்னதா :)
மிக்க நன்றி செல்வநாயகி
தம்பி கரீட்டா கேட்ட..
ஏபிசிடி சொல்றது சுஜாதாவை
அப்ப நீங்க ஆனந்த விகடன் படிப்பதில்லையா... அதுல அவரு ஒரு பகுதி எழுதுறாறு...
அதுல தான் வாரம் தவறாம இந்த அல்ட்டல்...சுஜாதாவத் தான் சொல்லுறேன்...
அப்புறம்..தம்பி இந்த சின்ன வயசில இப்படி கண் கோளாறு வச்சிக்கிட்டு...சுத்தலாமா...? அது TBCD
//*தம்பி said...
அண்ணாச்சி ABCD நீங்க யார சொல்றிய?*//
என் பின்னுட்டம் எங்கே போச்சு...?
என் பின்னுட்டம் மட்டுறுத்த்ப்பட்டதா என்பதை...கமிஷன் வைத்து கண்டுபிடிக்கப்பட வேண்டும்...ஹி ஹி
//*அய்யனார் said...
டிபிசிடி
சுஜாதாவ நல்லா படிச்சிருக்கிங்க ..ஆனா இது சும்மா லுலுலூ *//
நல்ல லு லு லு..!!!!
பதிவுலகிற்கு வரும் வரை அவர் பற்றி பார்வை வேறு...இப்பொழுது அவரின் எழுத்துக்களின் நிர்வானம் கண்களைக் கூசச் செய்வது தெரிகின்றது...
// கொற்றவையின் முதல் பத்து பக்கங்கள் எரிச்சலாக இருந்தது.நான் எழுதும் கவிதைகளை புரிந்து கொள்ள முடியாத வாசகனின் மனோநிலையும் இப்படித்தானே இருக்கும் என எண்ணிச் சிரித்துக் கொண்டேன். //
அப்பாடா .. இப்போவாவது உங்களுக்குப் புரிந்திருக்கிறதே .. :))
//எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்
மௌனமாய் விம்மத்துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்தான்.
ஏன் அழறீங்க என்றவன் பின் தயங்கி
அழாதீங்க என்றான்.
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்//
:)
//"சுஜாதாவால மட்டுந்தான் இப்படி எழுத முடியுமா என்ன?" //
என்ன கொடுமை சுஜாதா இது?!
//ன்ஸின் தொலைந்த எலியும் புன்முறுவலைத் தந்தது.//
அடப்பாவிங்களா!!
//எனக்கென்னமோ நந்தா மேலதான் டவுட் :)//
எனக்கும்.. எதுக்கும் நந்தினியை விசாரிக்கணும். ;-)
Post a Comment