இதுவரை கேட்டிராத பரிசொன்றை நீ என்னிடம் கேட்டாய்
என்னை முதன் முறையாய் முத்தமிட்டது போல இப்போது இடுவென
இருப்பதிலேயே கூர்மையான கத்தியொன்றை எடு
பழக்கத்தின் தடித்த தோலை உரித்து கொஞ்சம் முயன்று பார்ப்போம்
- மனுஷ்ய புத்ரன்
(நினைவிலிருந்து எழுதியதால் வார்த்தைகள் மாறியிருக்கலாம்)
ஒரு அழகான கடற்கரை நகரத்தில் கடற்கரையை ஒட்டிய உணவுவிடுதி யொன்றில் மிக அழகான குறும்புகள் நிறைந்த பெண்ணொருத்தியை சந்திக்கிறீர்கள்.அவளின் அழகில் கிறங்கிப்போய் பேச்சு கொடுக்கிறீர்கள்.அவளும் நன்றாய் பேசுகிறாள்.தொடர்ந்த பேச்சில் காலம் மறந்து போகிறது மதிய உணவிற்கு தயார் செய்ய வேண்டுமென உணவு விடுதி உரிமையாளரால் நினைவுறுத்தப்பட்டு வெளியில் வருகிறீர்கள்.நாளை காலை இதே நேரத்தில் சந்திப்போமென விடைபெறுகிறீர்கள்.அடுத்த நாள் மிகுந்த உற்சாகத்தோடு அவளை நெருங்கி பேசப்போய் அவள் உங்களை யாரென கேட்டால் எப்படி இருக்கும்..அப்படித்தான் நேர்கிறது ஹென்றி ராத் திற்கு.
இயற்கை,பெண்,கள்ளமில்லாத மனம் இதைத் தவிர அழகான விதயங்கள் வேறு இருக்கமுடியாதென்றுதான் தோன்றுகிறது.இத்தனை அழகாக ஒரு படத்தை எடுக்க முடியுமா என்ற அங்கலாய்ப்பு படம் பார்த்த மூன்று நாள் மிச்சமிருந்தது.ஹவாய் தீவுகளில் படம் முழுதும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.லூசியாக நடித்த ட்ரூ பாரிமூர்தான் எத்தனை அழகு குறும்பு கொப்பளிக்கும் கண்களும் அட்டகாசமான சிரிப்பும் மனதை அள்ளிக்கொண்டு போனது.
ஒரு விபத்தில் நினைவு சக்தியை இழந்துவிடும் (Short time memory loss)லூசிக்கு ஆகஸ்ட் பதிமுன்றாம் தேதி மட்டும் உறைந்துபோகிறது.அந்த நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவளின் தந்தைக்கு பிறந்த நாளும் கூட அவள் வெள்ளை நிற கால்சட்டையும் ரோஸ் நிற பனியனும் அணிந்தபடி காலை உணவுவிடுதிக்கு வருவாள்.தந்தையுடன் அன்னாசி பழம் பறித்து வர செல்வாள்.கார் ஷெட்டின் சுவற்றில் படம் வரைவாள்.தந்தைக்கு பிறந்த நாள் கேக் ஊட்டுவள் சிக்ஸ்த் சென்ஸ் படம் பார்த்து தூங்கிப்போவாள்.மறுநாள் காலையும் அவளுக்கு ஆகஸ்ட் பதிமுன்றாம் தேதிதான்.அந்த நாளை அப்படியே வைத்திருக்க அவளின் தந்தையும் சகோதரனும் அவளுக்கு தெரிந்த மனிதர்களும் எடுக்கும் முயற்சிகள் நெகிழ்ச்சியானது.
கடல் உயிரினங்களின் பயாலஜிஸ்ட்டான ஹென்றி ராத் (ஆடம் சாண்ட்லர்)முதல் பார்வையிலே லூசியிடம் மனதை பறிகொடுக்கிறான்.அவளின் பிரச்சினைகளைத் தெரிந்த கொண்டபிறகு தினம் அவளை காதலிக்கிறான்.ஒவ்வொரு நாளும் அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள படாத பாடு படுகிறான்.தினமும் புதிதாய் பழகிய பெண்ணை காதலிப்பது எத்தனை சிரமம்.இந்த கணத்தில் பறிமாறிக்கொள்ளப்படும் அன்பு அதிகபட்சம் சில மணிநேரங்கள் மட்டுமே நினைவிலிருக்கும் என்பதும் அடுத்த நாள் நேற்றைய அன்பு சுத்தமாய் நினைவில் இல்லாமல் போவதுமென்பதும் எத்தனை கொடுமையானது.
லூசியின் ஒரு நாளை படம்பிடித்து அடுத்த நாள் அவளிடம் காண்பிக்கும்போது அதிர்ந்துபோகிறாள் மெல்ல அவளின் பிரச்சினைகள் அவளுக்கு தெரிய ஆரம்பிக்கிறது.இருப்பினும் ஹென்றியை காதலிப்பதில் இருக்கும் சிக்கல்கள் அதிகமாகிறது.அவளுக்கு புதிதாய் எந்த ஒன்றையும் நினைவில் பதிந்துகொள்ள முடியவில்லை.ஹென்றியுடன் ஓர் இரவு தூங்கிவிட்டு அடுத்த நாள் காலை எழும்போது அவன் பக்கத்தில் படுத்திருப்பதை உணர்ந்து பதறிப்போகிறாள்.ஹென்றியை யார் எனத் தெரியாமல் போய் அலறிஅடித்து அவனை நையப் புடைக்கிறாள்.
ஹென்றியின் முத்தங்கள் அவளுக்கு எப்போதும் முதல் முத்தமாகத்தான் இருக்கிறது கேன் யூ கிவ் மி த் லாஸ்ட் ஃப்ர்ஸ்ட் கிஸ் என ஒரு மழை பெய்யும் நள்ளிரவில் அவன் விடைபெறும் நொடிக்கு முன் கேட்டு கலங்க வைத்தாள் லூசி.
காதலை அன்பை இயற்கைப் பின்னனியோடு மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.
பத்து நொடிகளுக்குள் நினைவில் பதிந்தது மறந்து போகும் வினோத குறைபாடுள்ள டாம் என்கிற கதாபாத்திரம் பரிதாபத்தை வரவைக்கிறது.படம் முழுக்க ஒரு புன்னகை உதடுகளில் வந்து ஒட்டிக்கொள்கிறது.ஹென்றி லூசியை திருமணம் செயதுகொள்கிறான் வீடியோக்கள் உதவியுடன் ஹென்றி அவளின் கணவன் என்பதை அடுத்த நாள் காலையில் லூசி அறிந்து கொள்கிறாள்.அவர்களுக்கு ஒரு குழந்தையுமிருக்கிறது.
9 comments:
அருமையான ஒரு...என்ன சொல்லுவது...
-விமர்சனம்..இது விமர்சனம் இல்ல..
-திறனாய்வு..இது திறனாய்வும் இல்ல்..
அய்யனார் இது என்ன அப்படின்னு தெரியல்ல..ஆனா நல்லா இருக்கு.. :))))
In a way she is lucky.
she is born everyday.
a good post Ayyanaar.
thank you.
டிபிசிடி
பகிர்தல்கள் அப்படின்னு சொல்லலாமா :)
நன்றி வல்லிம்மா
லாமே..... :) B-)
இந்த ஸ்மைலிஸ் எப்படி எனேபிள் பண்ணுறது...சொல்ல முடியும்மா
உங்களுக்கே உரித்தான நடையில் அருமையான விமர்சனம். வாழ்த்துக்கள்.
அண்ணாச்சி பழம் அல்ல அன்னாசி பழம்.
ஒரு நிமிடம் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
ட்ரூவை ரொம்ப பிடிக்கும் 'Charles Angels' அந்த மூன்று பெண்களில் இவர்தான் அழகு. உங்க கதை சுருக்கம் வழக்கம் போல் படம் பார்க்க சொல்லுது. /விழிகளில் மழையைத் தேக்கி வைத்திருப்பவளின் நினைவுக்குறிப்புகள்/ என்ற பதிவில் விமர்சனம் படிக்கும் போது பாதி புரியாததை படம் பார்த்து புரிந்துக் கொண்டேன். சுருக்கி எழுதுவதில் கதை வடிவம் கலைகிறதா அல்லது அப்படித்தான் புரிந்துக் கொள்கிறீர்களா என்றே புரியவில்லை. :-)
மஞ்சூர்
இப்பலாம் அண்ணாச்சி மேல பாசம் அதிகமாயிடுச்சி :) நன்றிங்க மாத்திட்டேன்
ஜெஸிலா
ஒரு திரைப்படத்தை அக்குவேறு ஆணிவேறா மொத்த திரைக்கதையும் சொல்றதில எனக்கு உடன்பாடு இல்லிங்க..அது படம் பார்க்கும் ஆர்வத்தை போக்கிடும்னு தோணுது
Post a Comment