Sunday, November 1, 2009

In the mood for love

13 comments:

Toto said...

நிஜ‌மான‌ த‌னிமையின் இசை இது.. மீண்டும் ஒரு முறை கேட்க‌ வைத்த‌த‌ற்கு ந‌ன்றி, அய்ய‌னார் ஸார்.

-Toto
www.pixmonk.com

தமிழன்-கறுப்பி... said...

நானும்...

குப்பன்.யாஹூ said...

புரியலை எனக்கு சரியா.

படிக்கட்டு வழியில் பால் வாங்கப் போகும் போது காதல் மலர்கிறதா.

மாதவராஜ் said...

திரும்ப திரும்ப கேட்கச் சொல்கிறது. எதோ ஒன்று நம்மிலிருந்து வெளியில்லாம் நிறைவது போன்ற இழப்பும், சுகமும் கலந்த உணர்வுக்கு ஆட்படுத்துகிறது. பகிர்வுக்கு நன்றி. எந்தப் படத்தில் இந்தக் காட்சி?

ரௌத்ரன் said...

என்ன மாதிரி மனநிலைல இந்த இசையை தேடினீர்கள் அய்யனார்...தூக்கம் வராத நடுராத்திரியில் இப்பட குறுந்தட்டை பேய் போல துழாவி எடுத்து பார்த்த அனுபவங்கள் எனக்கு(ம்) உண்டு :)

ங்கொக்க மக்கா...எல்.எஸ்.டி ஏத்திக்கிட்டு இசை அமைத்திருப்பாரோ என நினைக்க வைக்கும் இசை...இந்த பின்னணி இசைக்காகவே பல முறை படத்தை பார்த்திருக்கிறேன்...இப்படமே ஒரு போதை தான்.

3 iron படத்தில் கிளைமேக்ஸில் வருமே ஒரு பாடல் அதுவும் மிகவும் பிடிக்கும்.(கிடைத்தால் அனுப்புங்கள்)நேற்று பார்த்த A Short film about love லும் பின்னணி இசை பிரமாதம்.பியானோவை உருகி உருகி காதலித்திருந்தார்கள்.

The good bad and the ugly மற்றும் Once upon a time in the west கூட இசைக்காகவே திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் படங்கள்...வீடு படத்தில் அந்த தாத்தா குடையை பேரூந்தில் தவற விட்டு இறங்கி கையறு நிலையில் நடக்கும் பொழுது இளையராஜா அவருடைய ஆல்பம் பீஸ் ஒன்றை உருவி போட்டிருப்பார்...பிரமாதமாய் இருக்கும்.போதும் போதும்..இதுவே தனி பதிவாகிவிடும் போல :)

Ayyanar Viswanath said...

மிக்க நன்றி toto

லவ் மூடா தமிழன் :)

குப்பன் யாஹூ மற்றும் மாதவராஜ் இந்த மயக்க வைக்கும் இசைக் காட்சி
Wong_Kar-wai இயக்கத்தில் வந்த in the mood for love என்கிற திரைப்படத்தின் ஒரு பகுதி.பின்னணி இசையும் கவிதை போன்ற காட்சியமைப்புகளும் அத்தனை சீக்கிரம் மனதை விட்டு அகலாது.

Ayyanar Viswanath said...

ரெளத்ரன்

இந்த திரைப்படத்தை இந்தியாவிலிருந்தபோது பார்த்ததைவிட கிட்டத்தட்ட அதே மாதிரி வாழ்வியல் சூழலில் பார்க்கும்போது மிக நெருக்கமாக இருந்தது.ஒரு நாள் முழுக்க இத்திரையிசையைக் கேட்டுக் கொண்டிருந்தேன் கிட்டத்தட்ட பைத்திய மனநிலைக்கு இவ்விசை கொண்டு சென்றது.

short film about love ஆ :) ஆம்! ஒவ்வொருமுறையும் தபால் அலுவலகம் சென்று திரும்பும் அப்பதின்மனின் முகவும் தவிப்பும் இசையில் மிகப் பிரமாதமாக வெளிப்பட்டிருக்கும்.

காதலை துக்கத்தை நெகிழ்வை இளகலை வார்த்தைகளற்ற இசை நமக்குள் ஏற்படுத்தி நம்மையும் கரைத்துக் கொள்வது எத்தனை பெரிய அற்புதமாய் இருக்க முடியும்!

தேவ் டி படத்தின் சந்தாவும் அவளின் அலைவுகளோடு தொடரும் பாயல் பாடலும் இதே மாதிரி ஒரு கரைவைத்தான் நேற்று ஏற்படுத்தியது.

visitor படமும் அதனுடன் பயணிக்கும் ஆப்பிரிக்க டரம் இசையும் ஒரு வித குழைகுழை மனநிலைக்குத் தள்ளிவிட்டது.visitor படம் பார்த்தீர்களா? இல்லையெனில் உடனே பார்க்கவும்.

3iron இசையை அனுப்புகிறேன்.

நந்தா said...

ரசிகன்யா நீ. இசை கொல்லுது. திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கேன்.

சும்மா படம் பேரா சொல்லி கடுப்பேத்தாத. உனக்கு டிவிடி தர்றேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டுப் போனதை இன்னும் நான் மறக்கலை.

ராகவன் said...

அன்பு அய்யனார்,

ஒற்றை வயலினும் ஒரே தாளகதியில் இறங்கும் அந்த லயமும் மனதை என்னமோ செய்தது. இன் த மூட் பார் லவ், பெயரை சில பிரேம்களில் நியாயப்படுத்தும் இந்த ரீரெக்கார்டிங் படத்தின் மிகப்பெரிய பலம். பகிர்வுக்கு நன்றிகள் பல அய்யனார்!

அன்புடன்
ராகவன்

Ayyanar Viswanath said...

நந்தா நினைவில இருக்கு நிச்சயம் தர்ரேன் :)

நன்றி ராகவன்

யாத்ரா said...

கதவைச் சாற்றிவிட்டு அறையில் நாள் முழுக்க இந்த இசையை ஒலிக்க விட்டு மனம் கரையக் கரைய மனசவிட்டு நாள் முழுக்க அழணும் போல இருக்கு அய்யனார், இப்பவே என் கண்கள் கலங்குவதை தடுக்கவியலவில்லை, இப்பவே நிறய முறை கேட்டுட்டேன், இன்னும் இந்த இசையை கேட்டுட்டே இருக்கப்போறேன், ரொம்ப நன்றி அய்யனார்

யுவன் பிரபாகரன் said...

Wong Kar Wai யே இசை அமைச்சிட்டாரோ :))

Ayyanar Viswanath said...

யாத்ரா
உருக்கும் இசை இது சரியான புரிதலுக்கு நன்றி..

யுவன் இசை அமைத்தது Wong Kar Wai இல்லை :)

Featured Post

test

 test