நிசியில் அதிர்ந்த
கனவின் பின்புலம்
எதுவாகவிருந்ததென
விழித்ததும்
நினைவைத் துழாவினேன்
வழக்கமான பாம்புத் துரத்தல்களாகவோ
நீருக்குள் மூழ்கித் திணறும்
சுவாசத்திற்கான தவிப்பாகவோ
நூற்றுக்கணக்கான
பிம்ப முலைகளில்
முகம் புதைத்துத் தூங்கும்
விருப்ப விழிப்புக் கனவாகவோ
அது இல்லாமலிருந்தது
ஒருவேளை
நெடு நாள் காத்திருப்பினுக்குப் பிறகு
முலை தொட மட்டும்
அனுமதித்தவளின்
மீதிருக்கும்
முடிவிலா ஏக்கத்தின்
தொடர்ச்சியாக
அது இருந்திருக்கலாம்
மீட்கும் பேராசையில்
மூச்சடைத்து
நினைவின் அடியாழம் வரை அலசியும்
நைந்த பாசியைக் கூட பெற முடியவில்லை
நினைவுத் திரும்பாக் கனவுகளும்
கால்களையகற்ற விரும்பாக் காதலிகளும்
சமன் செய்யும் புள்ளியின் பெயர்
என் இயலாமையாக
இருக்கக் கூடும்.
(..வாசுவிற்கு)
* இம்மாத அகநாழிகை இதழில் வெளிவந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
21 comments:
கலக்கல். செமையா இருக்கு.
:)
அருமை அய்யனார்...
நன்று.
hello ayyanar,
so back in town?
அய்யனார் உங்களை சந்திக்கணும்...
ரொம்ப நாளா ஆளையே காணோமே தல?
கவிதை ரொம்ப நல்லா இருக்கு.
//கால்களையகற்ற விரும்பாக் காதலிகளும்//
வசீகரமான சொற்கள். :)
(மறுபடியும் படிப்பதால் மறுபடியும் பின்னூட்டம்)
அருமையாக இருக்கிறது கவிதை.
//நினைவுத் திரும்பாக் கனவுகளும்
கால்களையகற்ற விரும்பாக் காதலிகளும்
சமன் செய்யும் புள்ளியின் பெயர்
என் இயலாமையாக
இருக்கக் கூடும்.//
படுத்துது அய்யனார்!
கனவுகளுக்கு ஆடை கட்டாமல்,
அதன் பின்னொரு ஒளிவட்டம் வரையாமல்,மழுப்பாமல் அதே வசீகரத்தோடு சொல்லுகிறது கவிதை. அய்யனார் முத்திரையோடு. அழகு அய்யனார்.
இயலாமையே தான்!
ஆனால்
முயலாமையில் சேராது!
great ayyanar.
என்ன ரொம்ப நாள் ஆளையே காணோம்.
அட்டகாசம். இந்தியாவில் தான் இருக்கிறீர்களா இல்லை ஊர் திரும்பியாயிற்றா? உங்களடன் பேச முடியாமல் போனதில் வருத்தம் எனக்கு. உங்கள் எண்ணை store பண்ணிக்கொள்ள தவறி விட்டேன் :(
அனுஜன்யா
அன்பு அய்யனார்,
இத்தனை நாள் காத்திருப்பை உங்கள் கவிதை அர்த்தமுள்ளதாக்கியுள்ளது. சமன் செய்யும் புள்ளியின் பெயர் என் இயலாமை, அம்மா! பொருள் பொதிந்த வார்த்தைகள், கவிதை இந்த வரியில் ஆரம்பிக்கிறது மீண்டும். நினைவின் அடியாழம் வரை துழாவிய பிறகு நைந்த பாசி கூட கிட்டாதது, முத்தாய் வந்திருக்கிறது. அருமை அய்யனார்! சரியான, தெரிவான வார்த்தைகள் உங்களை பாராட்டக் கிடைக்காதது, உங்கள் கனவு மீட்புச் செயல் போல விரயமாகவே… உங்களுக்காவது ஒரு கவிதை கிடைத்தது…
அன்புடன்,
ராகவன்
இந்தக் கவிதை பிடித்திருக்கிறது, கடைசியாய் எனக்குப் பிடித்த கவிதை படித்த நினைவே இல்லை.
nice
நல்லாருக்கு அய்யனார்..
அற்புதம் அய்யனார்.
நேத்து துபாய் வந்தப்போ சந்திக்க முடியாம போயிருச்சு. அடுத்த மாதம் வந்தால் கண்டிப்பாக சந்திக்க ஆவலாய் உள்ளேன்.
அருமை அய்யனார்.
கவிதை புரிகிற மூளையே நமக்கு இல்லையோ என்று மறுகி இருக்கிறேன். எளிதில் புரிகிற அழகு மொழியில் அற்புதமாக ஒரு கவிதை!
வாழ்த்துக்கள்.
பி.கு. கனவுகளின் பின்புலம் துழாவும் வழக்கும் எனக்கும் நிறைய்ய்ய உண்டு!
நன்றி சரவணக்குமார்
நன்றி சூர்யா
நன்றி டிசே
ஆம் தோழி வந்தாயிற்று
துபாய் வாங்க தமிழன் :)
நன்றி ராஜாராம்
நன்றி காமராஜ்.
அப்படியா வால் :)
நன்றி இளவட்டம்.விடுமுறையில் இருந்தேன்.
அனுஜன்யா விரைவில் தொலைபேசியில் அழைக்கிறேன்.சின்ன சின்னதாய் வேலைகள் இருந்து கொண்டேயிருந்ததால் வலை நண்பர்களைப் பார்க்கவோ பேசவோ முடியவில்லை.பிறிதொருதரம்.
அன்பிற்கு நன்றி ராகவன்
மோகன் மிக்க நன்றி :)
நன்றி மண்குதிரை
நன்றி ரெளத்ரன்
நன்றி குப்பன் அடுத்தமுறை சந்திக்கலாம்.
நன்றி தீபா
அகநாழிகையில் ஏற்கனவே வாசித்தேன் ... உங்கள் கவிதையின் இறுக்கம் எனக்கு எப்போதுமே பிடித்த ஒன்று
Post a Comment