Saturday, June 28, 2008

சிமோந்தி ஜார்ஜினா :வடிவ நிரூபணம்


திசையெங்கிலும் விரவி இருக்கும் இவ்விருள் மெல்லிதான பயத்தை வரவழைக்கிறது. மின்மினிப் பூச்சுகளின் வெளிச்சங்கள்... சில் வண்டு்களின் கிர்ர்கள்... சாதாரணங்களிலிருந்து விலகலை வரவழைக்கின்றன.நட்சத்திரங்களற்ற வானம் கருமை பூசி இன்னும் கலவரத்தைத் தூண்டுகிறது.இந்த இரவில்,இந்தத் தனிமையில், சன்னமாய் பெருகிக்கொண்டிருக்கும் இந்தப் பதட்டங்களை என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொன்டிருக்கிரேன்.அப்படிச் செய்திருக்க வேண்டாம்தான் ஆனால் ஒரு கோபத்தில், ஒரு வெறுப்பின் உச்சத்தில் அவ்வாறு செய்துவிட்டேன்.சென்ற நொடியை மீள்பதிவிக்க முடியாமலின் சோகத்தின் உச்சத்தில் இயலாமைகள் கழிவிரக்கங்களாக மாறிக் கொல்கின்றன.எதற்கிந்த வாழ்வு? எதற்கிந்த பிறப்பு? என எல்லாவற்றின் மீதும் சலிப்பு சாதுவாய் படரத் துவங்குகிறது.தப்பித்தல்கள் சாத்தியமே இல்லை என்றான ஒரு நொடியில் நான் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தேன்

சாரா இரவு சரியாய் 11.47 க்கு சமையலறையிலிருந்த மிகவும் கூரான கத்தியினை எடுத்துத் தன் மணிக்கட்டை அறுத்துக்கொண்டாள். **தன் பெயரை தானே ஒரு முறை உச்சரித்துக்கொண்டாள். எப்போதுமே அவளின் பெயர் அவளுக்கு மிகவும் பிடித்தமானதாய் இருந்தது.** அரூபன் அவளை கூப்பிடும் விதம் அவளுக்கு பிடித்தமானது..ஒரு நாளில் நூற்று எண்பத்தி எட்டு முறை அவளை சாரா எனக்கூப்பிடிருந்தான்.அந்த நாளின் இரவிக்கலவிக்குபின்,அவன் அயர்ந்து தூங்கிய பின்பு சாரா அவனை நூற்றி எண்பத்தி எட்டு முறை முத்தமிட்டாள்.தனக்கு பிடித்தமானவர்களிடம் அவள் எப்போதுமே வெறுப்பாகத்தான் நடந்து கொண்டாள் அல்லது அவளுக்கு அன்பை வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியவில்லை அரூபன் தூங்கியபின் முத்தமிடுவது,தனியாய் கனவுவது, புலம்புவது, என அவளின் நிகழ் எப்போதுமே குரூரங்களாலும், கழிவிரக்கங்களினாலும் நிரம்பியதுதான். மணிக்கட்டிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த இரத்தம் சமயலறை பேசினில் நவீன ஓவியத்தின் சாயல்களில் திசையெதுவுமற்று விரவத் தொடங்கியது.

இந்த இரண்டு பத்திகளும் மிகக் கவனமாய் எழுதப்பட்டவை அல்ல.ஆனால் எழுதி முடித்தவுடன் ஒரு அசாதாரணத்தை என்னால் உணர முடிந்தது.முன் பத்தி திசையில் தொடங்கி தற்கொலையில் முடியும் பின்னது தற்கொலையில் தொடங்கி திசையில் முடியும்...
(என்னைத் தொடர்ச்சியாய் படிக்கும் தோழிகளால் இதைக் கண்டறிந்து கொள்ள முடியுமெனினும் இந்த அபத்தக் குறிப்பிற்கு வாசகிகளிடம் மன்னிப்பு..) என்னுடைய முப்பத்தி இரண்டாவது காதலியான சிமோந்தி ஜார்ஜினாவிடம் முந்தா நாள் விடியலில் என் எழுத்துக்கள் அவற்றின் வடிவங்களை அவைகளே தீர்மானிக்கின்றன எனச் சொல்லியபோது அவள் இடைவிடாமல் பதிமூன்று நிமிடம் சிரித்தாள்.அவளின் வெற்றுடம்பின் ஒவ்வொரு இணுக்கும் சிரிப்பில் அதிர்ந்ததை அதனோடு ஒட்டியிருந்த என்னுடம்பால் உணர்ந்து கொள்ள முடிந்தது.அவளுக்கு புரிவிக்கவே இவ்விரண்டு பத்தியை சூரியன் உதிக்க ஒரு நிமிடத்திற்கு முன்பாக எழுதிக் காண்பித்தேன்.படித்து முடித்த அவள் அப்போதுதான் உதித்த சூரியனை துரத்தியடித்திவிட்டு இருட்டையும் என்னையும் இழுத்திப் போர்த்திக் கொண்டாள்..

** இந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளை எழுதியது என் பிரியத்திர்குரிய ----------- (இன்னமும் எவ்வித பெயரிட்டு என அழைப்பதில் குழம்பியிருப்பதால் இப்போதைக்கு இடைவெளி எனக் குறிப்பிடுகிறேன்)

பதிவு சிறியதாக இருப்பதால் சல்மா hayek ஐ பற்றிக் கொஞ்சம் பேசட்டுமா..அவளின் புகைப்படத்தை வேறு பதிந்திருப்பதால் பேசித் தொலைக்கிறேன்.Desparado கரோலினா (சல்மா) அறிமுகக் காட்சியை வெகுநாட்கள் மறக்கவியலாமல் தவித்தேன்.கிதாரின் தந்திகள் அதிர அந்த சாலையின் எதிரில் சல்மா அறிமுகமாகும் காட்சியை எத்தனை முறை பார்த்தேனென கணக்கு வைத்துக் கொள்ளவில்லை.சமீபத்தில் வேறு Frida வையும் பார்த்து தொலைத்தேன்.debonair புத்தக அழகிகளை கோபி கிருஷ்ணன் காதலித்ததில் ஒன்றும் வியப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.

11 comments:

தமிழன்-கறுப்பி... said...

///இந்த இரண்டு பத்திகளும் மிகக் கவனமாய் எழுதப்பட்டவை அல்ல.ஆனால் எழுதி முடித்தவுடன் ஒரு அசாதாரணத்தை என்னால் உணர முடிந்தது.முன் பத்தி திசையில் தொடங்கி தற்கொலையில் முடியும் பின்னது தற்கொலையில் தொடங்கி திசையில் முடியும்...///

ஆமால்ல நான் முதல் தடவை வாசிக்ககிறப்போ கவனிக்ல தல...

தமிழன்-கறுப்பி... said...

//(என்னைத் தொடர்ச்சியாய் படிக்கும் தோழிகளால் இதைக் கண்டறிந்து கொள்ள முடியுமெனினும் இந்த அபத்தக் குறிப்பிற்கு வாசகிகளிடம் மன்னிப்பு..) //

சரி சரி...

தமிழன்-கறுப்பி... said...

//என்னுடைய முப்பத்தி இரண்டாவது காதலியான சிமோந்தி ஜார்ஜினாவிடம் முந்தா நாள் விடியலில் என் எழுத்துக்கள்///

32 வதா என்ன கொடுமை சார் இது:)

தமிழன்-கறுப்பி... said...

///படித்து முடித்த அவள் அப்போதுதான் உதித்த சூரியனை துரத்தியடித்திவிட்டு இருட்டையும் என்னையும் இழுத்திப் போர்த்திக் கொண்டாள்..///

ம்ம்ம்...

King... said...

///என்னைத் தொடர்ச்சியாய் படிக்கும் தோழிகளால் இதைக் கண்டறிந்து கொள்ள முடியுமெனினும் இந்த அபத்தக் குறிப்பிற்கு வாசகிகளிடம் மன்னிப்பு..) ///

:)புரிகிறது...

King... said...

///முந்தா நாள் விடியலில் என் எழுத்துக்கள்///

ஏன் இதனை முந்தா நாள் என்று எழுதினீர்கள் அது உங்கள் எழுத்து நடையிலிருந்து வேறுபடுகிற வடிவம்...

seethag said...

'''நண்பகலில் ஒற்றையனாய் பயணிக்கும் தருணங்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவை
''


என் வீட்டில் வரவெற்ப்பறையில் இரண்டு நாட்களுக்கு முன் எதோ சில காரணங்களால் அழகான அமைதியை அனுபவித்த போது நினைத்த வரிகள்.....அந்த சில மணிநேரங்களில் உலகிலேயே நான் அதிக அதிர்ஷ்டசாலி போன்ற எண்ணம்..

அதே சமயம், உங்களுடய இந்த பதிவில் உள்ள எழுத்தில் நிறைய மன நலம் சம்பந்தமான எண்ணங்கள் எழுந்தது..எழுத்தின் அழகையும் மீறி

சென்ஷி said...

:)

KARTHIK said...

//மின்மினிப் பூச்சுகளின் வெளிச்சங்கள்... சில் வண்டு்களின் கிர்ர்கள்... சாதாரணங்களிலிருந்து விலகலை வரவழைக்கின்றன.நட்சத்திரங்களற்ற வானம் கருமை பூசி இன்னும் கலவரத்தைத் தூண்டுகிறது //

//சென்ற நொடியை மீள்பதிவிக்க முடியாமலின் சோகத்தின் உச்சத்தில் இயலாமைகள் கழிவிரக்கங்களாக மாறிக் கொல்கின்றன.//

அருமையான மொழிநடை அய்யனார்.

இராம்/Raam said...

//பதிவு சிறியதாக இருப்பதால் சல்மா hayek ஐ பற்றிக் கொஞ்சம் பேசட்டுமா..அவளின் புகைப்படத்தை வேறு பதிந்திருப்பதால் பேசித் தொலைக்கிறேன்.Desparado கரோலினா (சல்மா) அறிமுகக் காட்சியை வெகுநாட்கள் மறக்கவியலாமல் தவித்தேன்.கிதாரின் தந்திகள் அதிர அந்த சாலையின் எதிரில் சல்மா அறிமுகமாகும் காட்சியை எத்தனை முறை பார்த்தேனென கணக்கு வைத்துக் கொள்ளவில்லை.சமீபத்தில் வேறு Frida வையும் பார்த்து தொலைத்தேன்.debonair புத்தக அழகிகளை கோபி கிருஷ்ணன் காதலித்ததில் ஒன்றும் வியப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.//


ஹ்ம்ம்.... Breaking Up'ம் பார்த்து தொலைங்க.... :)

Ayyanar Viswanath said...

தமிழன்,கிங்,சீதா,சென்ஷி,கார்த்திக் மற்றும் ராம் பின்னூட்டங்களுக்கு நன்றி

Featured Post

test

 test