
திரும்பவே இயலாத பிரிவொன்றின்
கடைசி நொடியில்
தளும்பல்களையும் அடைப்புகளையும்
துடைத்தோ கனைத்தோ
சரிசெய்தபடி விடைபெறலாம்.
இயலாமைகளின் உச்சங்கள் வெளிப்பட்ட
அதற்கு முந்தின கணத்தையும்
அப்படியே வைத்திருப்பது நல்லது.
அவை பின்னிரவுக் குவளைகளை நிறைக்க உதவக் கூடும்.
வன்மங்களை வாரிப் பூசிக்கொள்வதும்
கழிவிரக்கத்தை முழுவதுமாய் படரவிடுவதும் நல்லதுதான்
குறைந்தது நான்கு கவிதைகளை (இது தவிர்த்து)
எழுதிக் கொள்ளலாம்.
மற்றபடி உனக்கு பிடித்த மொழியில் இதை இப்படியும் சொல்லலாம்
அந்த விநோத பறவை தனது எச்சங்களயும்
சில அபூர்வ சிறகுகளையும் உதிர்த்துப் பறந்தது
நானொரு வேட்டைக்கான கண்ணியில்
முனைப்பாயிருந்தேன்.
12 comments:
\\நல்லதுதான்
குறைந்தது நான்கு கவிதைகளை (இது தவிர்த்து)
எழுதிக் கொள்ளலாம்.//
அப்ப இன்னும் நான்கு கவிதைகள் பாக்கி இருக்குன்னு அர்த்தமா ?
அடிக்கடி இப்படி கவிதை எழுதுங்க தொடர்ந்து புனைவும் புத்தகங்களும் எழுதி பயமுறுத்தாதீங்க..நல்லா இருக்கு
திருத்தத்திற்கு நன்றி முத்துலக்ஷ்மி :)
;))
நன்றாக இருக்கிறது. இப்படியே எழுதி பழகினால் கவிதை வந்திடும். ((-
நல்லாயிருக்கு.
// திரும்பவே இயலாத பிரிவொன்றின்
கடைசி நொடியில்
தளும்பல்களையும் அடைப்புகளையும்
துடைத்தோ கனைத்தோ
சரிசெய்தபடி விடைபெறலாம்.//
நல்லாயிருக்கு.
கவிதைன்னா நடு நடுவே மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் இருக்கணுமா என்ன?
இந்த படம் எங்க கிடைச்சது???
கோபி :)
சுகுணா :D
ஆடுமாடு : நன்றி
கார்த்திக் நன்றி
ச்சின்னபையன் : வேணும்னா போட்டுக்க வேண்டியதுதான் :)
ராம் கூகுல் இமேஜஸ் லதான் பிடிச்சேன் லிங்க கொடுக்கமுடியாததுக்கு சோம்பலதான் காரணம். அடுத்த முற மறக்காம கொடுத்திடுறேன். நினைவூட்டியதற்கு நன்றி
கவிதை பிடித்திருக்கிறது. 'துடைத்தும் கனைத்தும்' என்றும் எழுதலாமோ!
அனுஜன்யா
நல்லாருக்கு அய்யனார்..
//அந்த விநோத பறவை தனது எச்சங்களயும்
சில அபூர்வ சிறகுகளையும் உதிர்த்துப் பறந்தது
நானொரு வேட்டைக்கான கண்ணியில்
முனைப்பாயிருந்தேன்.//
நாங்கல்லாம் இத ஒத்த வார்த்தையில முடிக்கறவுங்கப்பு...
"அடங்க மாட்டியா நீன்னு" :)))
Post a Comment