Monday, December 17, 2007

துபாய் திரைப்பட விழா - நானும் பத்மப்ரியாவும் ஆசிப்பும் அடூரும்


என்னளவில் இந்தத் திரைப்படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை.ஒரு புதிய முயற்சி மற்றும் நேர்த்தியான சினிமா என்கிற அடிப்படையில் படத்தை அணுகலாம்.ஆனால் அடூர் கோபாலகிருஷ்ணன் என்கிற பெயர் ஏற்படுத்தியிருக்கும் hype ற்கான தனித்தன்மைகள் எதுவும் இத்திரைப்படத்தில் இல்லை.அடூரிடம் பார்வையாளர் அரங்கிலிருந்து கேட்கப் பட்ட முதல் கேள்வி.. இது ஆண்களுக்கெதிரான இன்னொரு பெண்ணிய படமா? என்பதுதான் அடூர் இதை மறுத்தார் இது பெண்ணியம் பேசும் படமில்லை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலான மக்களின் வாழ்வு வெவ்வேறு சிறுகதைகளாக பதிவிக்கப் பட்டிருக்கிறதே தவிர இது ஆண்களுக்கெதிரான படமில்லை என்றார்.
சமூகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன ஏன் மீண்டும் மீண்டும் பெண்ணையே சுற்றி வருகிறது சினிமா? என்கிற கேள்விக்கு தனக்கு தெரிந்த நன்கு பழக்கமான ஒன்றை பதிவிக்கவே தான் விரும்புவதாகவும் மற்ற பிரச்சினைகளைப் பேச வேறு இயக்குநகள் இருக்கிறார்கள் எனவும் எனக்கு உண்மைகளைத் திரைப்படமாக்க மிகவும் பிடித்திருக்கிறது எனவும் பதில் சொன்னார்.இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள்.. இருப்பினும் இன்னும் பெண்களுக்கெதிரான கொடுமைகள் நடக்கிறதே..இந்த நிலை எப்போது மாறும் என நினைக்கிறீர்கள்? எனும் இன்னொரு கேள்விக்கு இந்த கதைகள் 1935க்கும் 1945க்கும் இடையிலானது அப்போது கல்வித்தரம் மேம்பட்டிருக்கவில்லை.இப்போது நகரம் சார்ந்த பெண்களின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன எனினும் இந்த கிரமப்புறம் சார்ந்த பெண்களின் வாழ்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடவில்லை அந்த நிலை மாறலாம ஆனால் அந்த மாற்றங்கள் மிக மெதுவாகத்தான் நடக்கும் என்றார்.அத்தோடு மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கேரள மாநிலம் பெண்களுக்கு மேம்பட்டதாய்த்தான் இருக்கிறது பெரும்பாலான பெற்றோர்கள் ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை இருவருக்கும் சம கல்வியைத்தான் தருகிறார்கள் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என்றெல்லாம் கேரள சிறப்புகளை சொன்னார்.




தன் திரைப்படம் வெளியிடப்பட்ட திரைப்பட விழாக்கள் அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக சிலாகித்துக் கொண்டார்.அத்துடன் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க நடிகை,நடிகர்கள் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டுவார்கள் இத்தனைக்கும் நான் எத்தனை சம்பளம் என்றெல்லாம் கேட்பதில்லை சொல்லப்போனால் சொற்பமான சம்பளம்தான் ஆனால் எப்படியும் தந்துவிடுவேன் என்றார்.
சிலரின் சிலாகிப்புகளுக்குப் பிறகு வெளியில் வந்த அவரை நானும் ஆசிப்பும் ஓரம்கட்டினோம்.நான் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப் பட்டிருந்த குறியீடுகளைப் பற்றி (symbolic images) கேட்டேன். இத்திரைப்படத்தில் குறியீடுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றார்.கடைசிக் குறும்படத்தில் நந்திதாவினுடைய தாயின் மரணத்தின்போது ஒரு காய்ந்த தென்னை ஓலை கீழே விழுவது போல காண்பிக்கப்படுமே அதென்ன? என்றேன் அதற்கு அவர் தென்னை மரம் மனிதர்களோடு மிகவும் நெருக்கமானது குடும்பத்தில் மூத்தவர் இறக்கும்போது காய்ந்த தென்னை ஓலை கீழே விழுவது போல காண்பிப்பது வழக்கம் என்றார் (இதைத்தானே குறியீடு என்றேன் ..என்னவோ)The spinster குறும்படம் முடியும்போது உலை கொதிப்பது போன்ற சப்தம் வரும் இது நந்திதாவின் மனதை பதிவிக்கிறதா என்றதிற்கும் இல்லை என மறுத்துவிட்டார்.அந்த சமயத்தில் அந்த இசை இருந்தது இசையை திணிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதோடு என்னால் ஒத்துப்போக முடிந்தது.




பத்மப்ரியாவை ஆசிப் முற்றுகை இட்டார். சேரனின் தவமாய் தவமிருந்து பேச்சைத் துவங்க வசதியாய் இருந்தது. படம் மிக லெந்தியாச்சே என்றும் விருதுக்காக தனியாய் எடுக்கப்பட்டதிலும் நாந்தான் நடித்தேன் என்றுமாய் சொல்லிக்கொண்டிருந்தார்.குட்டியான கருப்புநிற ஆடையில் பத்மப்ரியா அழகாய்த்தான் இருந்தார். நடிக்கத் தெரியவில்லை.. ஆம்பளை மாதிரி இருக்கு... என்றெல்லாம் கமெண்டின அந்த இயக்குநரை ரெண்டு மிதி மிதிக்கலாம் என மனசில் கறுவிக்கொண்ட்டேன்.shall i take a picture with u priya? என்றதற்கு சந்தோஷமாய் இசைந்து என்னுடனும் ஆசிப்புடனும் படமெடுத்துக்கொண்டார். அடுத்தபடமான சந்தோஷ் சிவனின் Before the Rain க்காக ஆயத்தமானோம்.சொற்ப நேரமே இருந்ததால் ஸ்டார்பக்ஸில் லஞ்சை முடித்துக்கொண்டு இருக்கைகளுக்கு திரும்பினோம்.

20 comments:

கதிர் said...

உனக்கு டிக்கெட் எடுத்து...
கார்ல உக்காத்தி வெச்சி கூட்டிப்போயி...
காத்திருந்து பாக்க வெச்சி...
பிரியாகூட நிக்கும்போது உன்ன போட்டோ எடுத்து...
அடூர் கூட பேச வாய்ப்பு ஏற்படுத்தி தந்த அந்த நல்ல உள்ளம்...
மனிதர் குல மாணிக்கம்
அமீரக மண்ணின் தமிழ்ச்சிங்கம்
ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு நன்றி சொல்லத்தோணுதா உனுக்கு?

நான் புத்தகம் வாங்கினா மட்டும் எம்பேர கொட்ட எழுத்துல போட்டு நன்றி ஓலை கட்டணும்னு சொல்ற அப்படி கட்டலன்னா கமெண்ட் போட்டு மானத்த வாங்கற... இதெல்லாம் தெரிஞ்ச உனுக்கு நன்றி சொல்ல தெரியாதா?

அந்த அம்மணி அடிச்சாங்கன்னதுக்கு மட்டும் பொத்துகிட்டு வருது கோவம்...
நன்றி கெட்ட உலகமடா சாமி.

என்னமோ போ இதுக்கு முன்னாடி பாலச்சந்தர் படத்துல, பாரதிராஜா படத்துல நடிச்ச அத்தனை பேரும் அடி வாங்கி இருக்காங்க அவங்களையும் ரெண்டுக்கு நாலா மிதிச்சிட்டு கெளப்பிகிட்டு தூங்கு ராசா!

பொண்ணுங்கள அடிச்சா மட்டும் பொத்துகிட்டு வருதுய்யா கோவம்.

குசும்பன் said...

போட்டோவை பார்த்தா எங்களுக்கும் தான் பத்திக்கிட்டு வருது!!! நல்லா இருங்க!

குசும்பன் said...

தம்பி said...
//பொண்ணுங்கள அடிச்சா மட்டும் பொத்துகிட்டு வருதுய்யா கோவம்.///

அன்னைக்கு லியோ சுரேஷ் வீட்டில் தம்பி அடிக்கும் பொழுது மட்டும் என்னா செஞ்ச நல்லா அடி தம்பி அவனை என்று பின்னாடி இருந்து உசுப்பேத்தி விடல, அப்ப நல்லா கூவிட்டு இங்க இப்படி சொல்றீங்களே அய்யனார்!!!

Anonymous said...

///Collapse comments

தம்பி said...
உனக்கு டிக்கெட் எடுத்து...
கார்ல உக்காத்தி வெச்சி கூட்டிப்போயி...
காத்திருந்து பாக்க வெச்சி...
பிரியாகூட நிக்கும்போது உன்ன போட்டோ எடுத்து...
அடூர் கூட பேச வாய்ப்பு ஏற்படுத்தி தந்த அந்த நல்ல உள்ளம்...
மனிதர் குல மாணிக்கம்
அமீரக மண்ணின் தமிழ்ச்சிங்கம்
ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு நன்றி சொல்லத்தோணுதா உனுக்கு?///

கொடுத்த காசுக்கு மேல கூவுறானே!!!

குசும்பன் said...

///Collapse comments

தம்பி said...
உனக்கு டிக்கெட் எடுத்து...
கார்ல உக்காத்தி வெச்சி கூட்டிப்போயி...
காத்திருந்து பாக்க வெச்சி...
பிரியாகூட நிக்கும்போது உன்ன போட்டோ எடுத்து...
அடூர் கூட பேச வாய்ப்பு ஏற்படுத்தி தந்த அந்த நல்ல உள்ளம்...
மனிதர் குல மாணிக்கம்
அமீரக மண்ணின் தமிழ்ச்சிங்கம்
ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு நன்றி சொல்லத்தோணுதா உனுக்கு?///

அண்ணாச்சி எம்புட்டு செலவு ஆச்சு:))) அடுத்த முறை தம்பியை கூட்டிட்டு போகனும் சரியா?

குசும்பன் said...

///குட்டியான கருப்புநிற ஆடையில் பத்மப்ரியா அழகாய்த்தான் இருந்தார். //

பத்துநாள் பட்டினி போட்டு பழயசோறை கொடுத்தா நாட்டுகோழி பிரியாணியைவிட டேஸ்டா இருக்குமாம்!!!

கதிர் said...

//கொடுத்த காசுக்கு மேல கூவுறானே!!!//
இன்னும் பேமெண்ட்டே வர்ல நைனா!!

குசும்பன் said...

///உலை கொதிப்பது போன்ற சப்தம் வரும் //

அந்த ரெண்டு போட்டோவில் ஒரு போட்டோவை பார்த்த பிறகு எங்களுக்கும் அப்படிதான்யா இருக்கு!!!

அண்ணாச்சி ஹீரோ மாதிரி டை எல்லாம் கட்டிக்கிட்டு ஷோக்கா இருக்காரு அவரை பார்த்து பொறாமை படுவேனா!!!

நீ எப்படிய்யா பக்கத்துல நின்னுபோட்டோ எடுக்கலாம்!!!

Anonymous said...

Ayyanaar kalakireenga pongo..

ennama pose kodukireengappa...

immm...

பத்துநாள் பட்டினி போட்டு பழயசோறை கொடுத்தா நாட்டுகோழி பிரியாணியைவிட டேஸ்டா இருக்குமாம்!!!

kusumbarin anubavam appadi...

neenga ontum..manasula vachikatheenga..

கோபிநாத் said...

\\நீ எப்படிய்யா பக்கத்துல நின்னுபோட்டோ எடுக்கலாம்!!!\\

நியமான கேள்வி...அதுவும் அண்ணன் குசும்பன் பிறந்தநாள் அன்னிக்குன்னு பார்த்து இந்த பதிவை போட்டுயிருக்கிங்க...இதுல உள்குத்து இருக்கு...;))

குசும்பன் said...

ஆமாம் அது என்னா தலைப்பு துபாய் திரைப்பட விழா - நானும் பத்மப்ரியாவும் ஆசிப்பும் அடூரும்


ஏன் துபாய் திரைப்படவிழா- பத்மப்பிரியாவும் ஆசிப்பும் அடுரூம் நானும் என்று இருக்க கூடாதா?

அல்லது

உனக்கும் வேண்டாம் அவருக்கும் வேண்டாம்

ஏன் துபாய் திரைப்படவிழா- அடுரூம் பத்மப்பிரியாவும் ஆசிப்பும் நானும் என்று கூட இருக்கலாமே?

அது எப்படிய்யா நீயும் பத்மப்பிரியாவும் என்று தலைப்பு வைக்கலாம்?

பதில் வந்தே ஆகனும்.

Anonymous said...

//உனக்கு டிக்கெட் எடுத்து...
கார்ல உக்காத்தி வெச்சி கூட்டிப்போயி...
காத்திருந்து பாக்க வெச்சி...
பிரியாகூட நிக்கும்போது உன்ன போட்டோ எடுத்து...
அடூர் கூட பேச வாய்ப்பு ஏற்படுத்தி தந்த அந்த நல்ல உள்ளம்...
மனிதர் குல மாணிக்கம்
அமீரக மண்ணின் தமிழ்ச்சிங்கம்
ஆசிப் அண்ணாச்சிக்கு ஒரு நன்றி சொல்லத்தோணுதா உனுக்கு?//

நீ உண்மையிலேயே தம்பிதாண்டா! என் புஸ்தகத்தை எடுத்துக்கொடுத்து அதுக்கும் கூட உனக்கு நன்றின்னு போடணும்னு சொல்ற அய்ய்னார் இ......வ்வ.............ள....வு செஞ்சும் நன்றி போடலை பாரு. நியாயத்தை தட்டி கேட்க நீ ஒருத்தனாவது இருக்கியே இந்த உலகத்துல?

ஆனந்தக் கண்ணீருடன்
சாத்தான்குளத்தான்

கானா பிரபா said...

பதிவின் தலைப்பிலேயே நானும் பத்மப்ரியாவும் அப்படினு நெருக்கம் காட்டியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Ayyanar Viswanath said...

டம்பி & குசும்பர்ர்ர்ர்ர்ர்

கருகுன வாட வருதுய்யா போதும்யா..நாங்க பார்த்தோம் பேசினோம் போட்டோ புடிச்சிகிட்டோம் பிலாக்கிலயும் போட்டுட்டோம் இதுக்கு என்னா பண்ன ?
:))

அனானி நீங்க யார்னு தெரியுது ரொம்ப டேங்க்ஸ் :)

கோபி இவனுக்கு பொறந்த நாள்னு எனக்கு தெரிஞ்ச பிறகுதான் இத போட்டேன் இல்லன்னா மெதுவா நாளைக்கு போட்டிருப்பேன் ..

அண்ணாச்சி
நன்றி அப்படிங்கிற வார்த்தைய சொல்லித்தான் நம்ம அன்ப காமிக்கனுமா :)

தல
போட்டோவ பாருங்க என்ன விட ஆசிப்தான் நெருக்கமா நிக்கிறார் சரி பேரிலாச்சும் நம்ம பக்கத்தில இருப்பமேன்னுதான்..

selventhiran said...

அண்ணாச்சி ஒழுக்கின ஜொள்ளை போட்டோ ஷாப்பில் துடைச்சிட்டீங்களா அய்யனார்?!

அபி அப்பா said...

நல்ல வேளை தீபா வெங்கட்டா இருந்தா கொலை விழுந்திருக்கும்:-))

நாகை சிவா said...

அம்மணி ரொம்ப மெலிஞ்ச மாதிரி இருக்கே... அய்யனார் அருகில் இருப்பதால் அப்படி தோணுகிறதோ...

//பத்துநாள் பட்டினி போட்டு பழயசோறை கொடுத்தா நாட்டுகோழி பிரியாணியைவிட டேஸ்டா இருக்குமாம்!!!//

அப்படி சொல்லுடா என் தங்கம்...

Anonymous said...

ஆம்பளை மாதிரி இருக்கிற அட்டுபிகரோட போட்டோ எடுத்ததுக்கு இந்த அலும்பா

டைரக்டர்
துரைசாமி

Anonymous said...

ஆம்பளை மாதிரி இருக்கிற அட்டுபிகரோட போட்டோ எடுத்ததுக்கு இந்த அலும்பா

டைரக்டர்
துரைசாமி

Nandhakumar BALA said...

It is not fair , Mr Ayyanar, you are going for such a event, with out informing .....or calling..I could have join with you.....

any how ...nice to know that you enjoyed the event...

b.Nandhakumar

Featured Post

test

 test