Saturday, December 8, 2007

நதியைப் போற்றுதலும் தூற்றுதலும்...

நதியின் விரிவுகளை
குளுமைகளை
சலனமில்லா அடி மணற் தணிவுகளை
கரையோர சலசலப்புகளை
எங்கிருந்து வருகிறது
எங்கு முடிகிறது
எனும் புதிர்களுக்கான துவக்கங்களை
ஒருபோதும் எதிர்கொண்டதில்லை
கண்ணுக்கெதிரில் மண் குழம்பலாய்
நுரைப்படலமாய்
இரு கரைகளையும் தொட்டபடி
சுழியிட்டு ஓடிக்கொண்டிருக்கிறது
ஆறு...

......... 0 ..............

நதிகள் வற்றாதாமே
அப்படியா?
நதிகள் பிரம்மாண்டமானவையாமே
அப்படியா?
நதியோர கரைகளில்
உயரமான மரங்கள்
மிக அழகாய் பூத்திருக்குமாமே
அப்படியா?
..............
எப்போதும் இருக்கிறது
நதிகளுக்கான ஏக்கம்...

......... 0 ..............

செயற்கை நீரூற்றுக்கள்
மூத்திரம் பெய்வதை
நினைவுபடுத்துகிறது
தேவை ஒரு
நதி

......... 0 ..............

நதிகள் வற்றுவதில்லை
ஆனால் சாக்கடை கலந்த நதியுண்டு
பூக்கள் மிதக்கும் நதி மிகவும் அழகானது
ஆனால் பிணங்களும் இப்போது நதியில்தான்
மிதக்கின்றன..

......... 0 ..............

நதிகளோடு புதிர்களும்
புதிரின் பின்னால் அலைவுகளும்
அலைவின் பின்னால் சோர்வுகளும்
சோர்வின் பின்னால் வெறுமைகளும்
வெறுமைக்குப் பின்
போடா ங்கோத்தா தான்!
......... 0 ..............

3 comments:

கதிர் said...

இது கவிதையில்ல! முடியத்துவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கவுஜ! :)

ஆடுமாடு said...

ம்ம்ம்...நல்லாயிருக்கு.

ny said...

//செயற்கை நீரூற்றுக்கள்
மூத்திரம் பெய்வதை
நினைவுபடுத்துகிறது
தேவை ஒரு
நதி//

''கொண்டாடுகிறேன்''

Featured Post

test

 test