துபாய் திரைப்பட விழா:திரைப்படங்களுக்கு முன்பு சில புகைப்படங்கள்
நான்காவது சர்வதேசத் திரைப்படவிழா துபாயில் கடந்த 9ம்தேதியிலிருந்து துவங்கி 16ம் தேதி வரை நடைபெற்றது.திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களில் ஒன்றான மதினாத் செளக் மிக அழகான,வசதியான இடம். துபாயின் மிக செழிப்பான இடங்களில் ஒன்று.ஏழு நட்சத்திர ஓட்டல் மற்றும் ஜீமைரா ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நடுவில் இருக்கும் இந்த மதினாத் செளக் பாரம்பரிய அராபிய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டது. முழுதும் மரத்தினாலான பழைய கட்டிடங்களின் சாயலை ஒட்டிய மிக அழகான மால்.திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆசிப்பும் நானும் மாலை சுற்றி வந்தோம் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.காமிரா எதுவும் கொண்டு போகாததால் கைவசமிருந்த மொபைல்களிலே எடுத்தோம்.
இதெற்கெல்லாம் ஒரு பதிவா... எழுத ஆரம்பித்தவுடன் எல்லாவற்றையும் எழுதிவிட வேண்டும் என்ற ஒரு வேகம் இருக்கும். அதற்காக பில்லா படம் பார்த்ததையும் நாம் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையுமா ஒரு பதிவாகப் போட வேண்டும் (என் பதிவு என்ன வேண்டுமானாலும் போடுவேன் என்று சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்...)
எலேய் தம்பி கதிரி நாங்க போட்டோ போட்டா மட்டு உழவர் சந்தை கேமிரா வாடகை கோட் என்று லந்த கொடுக்கிற இங்க பாரு!!! இந்த மொபைல் எங்கன வாங்கியது திருவிழாவிலா?:)) நல்லா கேளு
//வாடகை கோட் என்று லந்த கொடுக்கிற இங்க பாரு!!! இந்த மொபைல் எங்கன வாங்கியது திருவிழாவிலா?:)) நல்லா கேளு//
குசும்பா உன் குரல் என் காதுகளுக்கு எட்டியது. நீயாவது பரவாயில்லை உழவர் சந்தையில் காசு கொடுத்து வாங்கினாய் ஆனால் அய்யனாரின் மொபைல் கம்பெனியால் ஓசியில் கொடுக்கப்பட்டது. அதில் போட்டோ எடுத்து பிஸ்து காமிக்கிறார். தெளிவான புகைப்படத்திலேயே தெளிவற்ற தன் முகம் தெளிவற்ற புகைப்படத்தால் தெரியாதிருக்கட்டும் என்ற உள்குத்தும் இதில் அடங்கும் என்பதை நீ அறியமாட்டாய்.
அட பாவிங்களா நான் எப்பய்யா பொங்கியெழுந்தேன்? அவ்வ்வ்வ் தம்பிகிட்ட முன்னாடியே சொன்னேன் சரி போடுன்னு சொன்னான் அப்புறம்தான் போட்டேன்.. நான் பொங்கவில்லை நான் பொங்கவில்லை நான் பொங்கவில்லை!!!
15 comments:
அன்புள்ள அய்யனார்,
இதெற்கெல்லாம் ஒரு பதிவா... எழுத ஆரம்பித்தவுடன் எல்லாவற்றையும் எழுதிவிட வேண்டும் என்ற ஒரு வேகம் இருக்கும். அதற்காக பில்லா படம் பார்த்ததையும் நாம் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையுமா ஒரு பதிவாகப் போட வேண்டும் (என் பதிவு என்ன வேண்டுமானாலும் போடுவேன் என்று சொல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்...)
தல
மலையாளத்து இயக்குனர்களைப் பிரத்தியோகமாகப் படம் எடுத்துப் பதிவில் போட்டதுக்கு நன்றி ;)
முதல் படத்தில் மோட்டுவலையை பார்த்து கொண்டு தனிமையில் அமர்ந்து இருக்கும் நபர் யார்? பட விழாவுக்கு வந்த ஹீரோவா? யார் அவர்?
எலேய் தம்பி கதிரி நாங்க போட்டோ போட்டா மட்டு உழவர் சந்தை கேமிரா வாடகை கோட் என்று லந்த கொடுக்கிற இங்க பாரு!!! இந்த மொபைல் எங்கன வாங்கியது திருவிழாவிலா?:)) நல்லா கேளு
சுந்தர்
சும்மா தோணுவத எல்லாம் எழுதிட்டிருக்கேன் அவ்வளவுதான்.. இந்த தீவிரத் தன்மை,ஒழுங்கு இதெல்லாம் இன்னும் சாத்தியப்படல் :)
தல
அமீரகத்தின் இருஅறிவுஜீவிகள் னு தலைப்பு வைக்கலாம்னு தோணி விட்டுட்டேன் :)
எலே குசும்பா
எல்லாரையும் கிண்டலடிக்கிற நீ..ஆனா டம்பி உன்ன கலாய்ச்சா மட்டும் பொங்கியெழுற ..இப்ப தெரியுதா :))
//வாடகை கோட் என்று லந்த கொடுக்கிற இங்க பாரு!!! இந்த மொபைல் எங்கன வாங்கியது திருவிழாவிலா?:)) நல்லா கேளு//
குசும்பா உன் குரல் என் காதுகளுக்கு எட்டியது. நீயாவது பரவாயில்லை உழவர் சந்தையில் காசு கொடுத்து வாங்கினாய் ஆனால் அய்யனாரின் மொபைல் கம்பெனியால் ஓசியில் கொடுக்கப்பட்டது. அதில் போட்டோ எடுத்து பிஸ்து காமிக்கிறார். தெளிவான புகைப்படத்திலேயே தெளிவற்ற தன் முகம் தெளிவற்ற புகைப்படத்தால் தெரியாதிருக்கட்டும் என்ற உள்குத்தும் இதில் அடங்கும் என்பதை நீ அறியமாட்டாய்.
//அமீரகத்தின் இருஅறிவுஜீவிகள் னு தலைப்பு வைக்கலாம்னு தோணி விட்டுட்டேன் :)//
பாத்தியா உனுக்கே இது ஓவரா பட்டதுனாலதான் வைக்கல, இப்பனாச்சும் புரிஞ்சிக்கணும்.
nathiyum, nathikarai yora buildings
raja kaalathai ninaivu paduthiyathu..
azhagaga irunthathu.... including posture....
suyam illaatha vuyir undoa...
சொளக் //ithai eppidi padikkanum?...
படங்கள் எல்லாம் நீங்களா எடுத்திங்க!!! ?
\\ கானா பிரபா said...
தல
மலையாளத்து இயக்குனர்களைப் பிரத்தியோகமாகப் படம் எடுத்துப் பதிவில் போட்டதுக்கு நன்றி ;)\\
தலையின் உள்குத்தை வழிமொழிக்கிறேன் ;))
கோபிநாத் said...
படங்கள் எல்லாம் நீங்களா எடுத்திங்க!!! ?///
இல்ல அடூர் கோபாலகிருஷ்னன் எடுத்தாரு:))))
எலே குசும்பா
எல்லாரையும் கிண்டலடிக்கிற நீ..ஆனா டம்பி உன்ன கலாய்ச்சா மட்டும் பொங்கியெழுற ..இப்ப தெரியுதா :))///
அட பாவிங்களா நான் எப்பய்யா பொங்கியெழுந்தேன்? அவ்வ்வ்வ் தம்பிகிட்ட முன்னாடியே சொன்னேன் சரி போடுன்னு சொன்னான் அப்புறம்தான் போட்டேன்.. நான் பொங்கவில்லை நான் பொங்கவில்லை நான் பொங்கவில்லை!!!
அருமையான படங்கள் அய்யனார் :)
அருமையான புகைப்படங்கள்
நன்றி
Post a Comment