நீங்கள் ஒரு குழந்தையைக்
கொஞ்சிக்கொண்டிருக்கிறீர்கள்.
அதன் பனியொத்த உதடுகளை
நிமிண்டுகிறீர்கள்.
இப்போது குளித்து முடித்த
அதன் தேகத்தை தழுவுகிறீர்கள்.
கன்னததில் அழுந்த
முத்தமிடுகிறீர்கள்.
நல்லது இப்போது
நீங்கள் ஒரு கலவியை முடித்துவிட்டீர்கள்.
சுகுணா திவாகர்
நான்காம் வகுப்பு முடிந்த கோடை விடுமுறையில் பக்கத்து வீட்டு செல்வியோடு தாயமோ பல்லாங்குழியோ விளையாடிக்கொண்டிருந்த ஒரு மதிய நேரத்தில்தான் அது நிகழ்ந்தது. செல்வியின் வீடு நீளமான, குறுகலான அமைப்பைக் கொண்டது.மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்களுக்கடியில் இருந்தபடிதான் செல்வியின் தாத்தா அப்படிச் செய்தார்.குறுகுறுப்பையும் அருவெருப்பையும் சாக்லேட் கொண்டு மறக்கடிக்க செய்ய அவர் முனைந்திருந்தார்.சுருட்டு நாற்றமும் ஊத்தை வாயுமாய் அவரின் முகம் என் முகத்தில் என் உதடுகளைத் தேடி துழாவி முத்தம் மாதிரி ஒன்றை இட்ட நொடியில் எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது.அவரின் நடுங்கும் விரல்கள் என் பாவாடையினுள் துழாவியபடியிருந்த சில நிமிடங்களின் முடிவில் அவர் உடல் விநோதமாய் குலுங்கிற்று. திமிறியடித்து அவர் பிடியிலிருந்து ஓடி வந்த நான் பிறகு அந்த வீட்டுப் பக்கம் போகவில்லை.கம்பளிப் பூச்சியின் ஊறல்களைப் போலிருந்தது என்பது பழகிய ஒன்றாய் தெரிந்தாலும் எனக்கு அப்படித்தான் இருந்தது.என் அம்மாவிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை.பள்ளி முடிந்து வீடு வந்ததும் விளையாடப் போவதையும் நிறுத்திவிட்டேன்.வயதான தாத்தாக்களைப் பார்த்தாலே மெல்லிய பயம் ஒன்று எனக்கே தெரியாமல் படரத் துவங்கியது.
ஆரம்பப் பள்ளி முடிந்ததும் பக்கத்து ஊரிலிருந்த மேல் நிலைப் பள்ளிக்குப் போகத் துவங்கினேன்.மெல்ல அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தேன் எனினும் அவ்வப்போது என்னை யாரோ நசுக்குவது போன்ற கனவுகளில் பதறியடித்து விழித்துக் கொண்டிருந்தேன்.எட்டாம் வகுப்பு வரை எந்த சிக்கலும் இல்லாமல்தான் போய்க் கொண்டிருந்தது. ஒருமுறை மழையில் நனைந்து கடுமையான ஜீரம் வந்தது.என் அம்மா வீட்டுக்குப் பக்கத்திலிருந்த டாக்டரிடம் அழைத்துப் போனாள்.அந்த டாக்டருக்கு நடுத்தர வயதுதான் இருக்கும்.பரிசோதனை செய்வதாய் சொல்லியபடி ஸ்டெதாஸ்கோப்பினால என் மார்புகளில் அழுத்தினான். பின் மெல்ல இரண்டு பக்கத்திலும் அழுத்துவதும் கைகளால் உடல் முழுக்க அமுக்குவதுமாய் என்னை நெளியச் செய்தான்.உச்சமாய் அவனது விரல்கள் எனது அந்தர இடங்களைத் துழாவியபோது அவமானத்திலும், கூச்சத்திலும், வெறுப்பிலுமாய் குமைந்து போனேன்.அதற்குப் பின் எந்த காய்ச்சலுக்கும் வலிக்கும் நான் டாக்டரிடம் போகவே அஞ்சினேன்.தாத்தாக்களின் சித்திரத்தை விட டாக்டர்களின் சித்திரம் என்னை அதிக வெறுப்பில் தள்ளியது.
ஒன்பதாம் வகுப்பின் பாதியில் என் உடலைப்பற்றிய ரகசியங்கள் எனக்குப் பிடிபடத் துவங்கியது.மாதந்திரப் பிரச்சினைகளை நினைத்தாலே கோபமும் எரிச்சலுமாய் வந்தது.பள்ளி, நட்பு, வீடு, அம்மா என எல்லாவற்றையும் தாண்டின ஏதோ ஒரு வெறுமை எனக்குள் எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது. பத்தாம் வகுப்பில் செந்தில் பழக்கமானான்.எதிர் வீடு என்பதாலும் நன்றாய் படிப்பான் என்பதாலும் நாங்கள் இருவரும் என் வீட்டில் சேர்ந்தே படித்தோம்.என் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போடுவது, லேபிள் ஒட்டி, பெயர் எழுதுவது எல்லாமே செந்தில்தான். இறுதித் தேர்வுகள் நெருங்கின சமயத்தில் இரவு வெகுநேரம் கண்விழித்துப் படிக்க வேண்டியிருந்தது. கணக்குப் பரிட்சைக்கு முந்தின நாள் இரவு எதிர்பார்க்காத சமயத்தில் என்னை கீழே தள்ளி முத்தமிட்டான்.அவன் பிடியிலிருந்து விலகி எழுவதற்குள் உயிரே போய்விட்டது.ஏனோ அவனை என்னால் அடிக்க முடியவில்லை.கீழே கிடந்த அவனை ஒரு முறை உற்றுப்பார்த்துவிட்டு வெளியே போய்விட்டேன்.
பத்தாம் வகுப்பிற்கு பிறகு எனக்கு படிப்பில் ஆர்வம் போய்விட்டது. வீட்டிலேயே இருந்துவிட்டேன்.அம்மாவிற்கு உதவியாய் எப்போதாவது வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்குப் போவதோடு என் பதினமங்கள் முடிந்துபோனது.அம்மாவின் தூரத்து உறவினர் முறை வந்த சம்பத்திற்கும் எனக்கும் என் பத்தொன்பதாவது வயதில் திருமணமாகியது.சம்பத் பாண்டிச்சேரியில் ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தான்.எனக்கும் சம்பத்திற்கும் பத்து வருட வித்தியாசம்.சம்பத் முரட்டுத் தனத்தின் மொத்த உருவம்.அந்த இரவில் பைத்தியம் பிடித்த வெறிநாயினைப் போல் என் உடலினைக் குதறினான். அடிப்படையிலேயே எதிர்த்து நிற்கும் திராணி எனக்கில்லாமல் போய்விட்டதால் சம்பத்தோடு வாழ்வதில் எனக்குப் பெரிதாய் சிக்கல்கள் எதுவும் வந்துவிடவில்லை.
கிருத்திகா வந்தவுடன் என் வாழ்க்கையே மாறிப்போய் விட்டது.என் அத்தனை நாள் காத்திருப்புகளும்,தவங்களும் இவளுக்காகத்தானோ? என நினைத்துக் கொண்டேன்.என் கசப்பும் தவிப்புமான குழந்தைமைகளின் கருநிழல் என் குழந்தையின் மீது படிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதே என் முழு நேர வேலையாய் இருந்தது.மிகக் கவனமாய் அவளைப் பார்த்துக் கொண்டேன்.எல்லா விஷமக் கண்களையும் அறிந்து வைத்திருந்ததால் அவளுக்கான பசுமையான உலகத்தினுள் அவளை சுதந்திரமாய் செயல்பட வைக்க என்னால் முடிந்தது.கிருத்திகா நன்றாகப் படித்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் மிகக் கவனமுடன் நான் அணுகியதால் அவளுக்கும் எனக்குமான இடைவெளிகளில் அன்பையே நிரப்பி வைத்திருந்தோம். கல்லூரி முடிந்து பட்டத்தோடும் காதலனோடும் வந்த என் மகளை நான் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டேன்.ஒருவருடத்தில் கிருத்திகாவும் அரவிந்தும் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள்.சம்பத் போய் சேர்ந்த பிறகு இந்த தனிமை வாசம் அலுப்பாய் இருக்கிறது.செய்யப்பட எதுவுமே இல்லாத ஒரு முழுநாளை வைத்துக் கொண்டு என்ன செய்ய?
என் வீட்டின் முன்பக்கத்து இரும்பு கேட்டுகள் தளர்த்தப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தேன்.பக்கத்து வீட்டு சந்துரு நுழைந்தான். குண்டுக் கன்னமும், குறுகுறு கண்களும், நல்ல நிறமுமாய் அழகான சிறுவன்.அவனை அருகில் கூப்பிட்டு மடியில் அமர்த்தினேன்.கன்னங்களை முத்தமிட்டேன். ஏதோ ஒன்று நிகழ்வதை என்னால் தடுக்க முடியவில்லை. அவன் மூச்சு திணறுவது தெரிந்தும் இறுகக் கட்டிக்கொண்டேன் பாட்டி! பாட்டி!! என்கிர அவன் அலறல்களைப் பொருட்படுத்தாது நிதானமாய் அவன் கால்சட்டையின் பட்டன்களை விடுவித்துக் கொண்டிருந்தேன்.
(சிறுவர் மனநல நிபுணர் சீதாவிற்கு..)
18 comments:
சாணக்யாவின் கதை ஒன்று நினைவில் வருகிறது. டிசெவுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது சொல்லியிருந்தார்.
சாணக்யாவின் அந்தக் கதையைப் படித்த பிறகு அவருடைய கதைகள் பிடிப்பதில்லை என்று - பார்த்து டிசெ இந்தப் பதிவைப் படித்துவிடப்போகிறார்!
சரியான மொழியில் சொல்லப்பட வில்லை என்று தோன்றுகிறது (பெண் மொழி கைகூடுவது சுலபமில்லையே).
கனமான விஷயம். இன்னும் கொஞ்சம் சிரமப் பட்டிருந்தால் நன்றாக வந்திருக்கக் கூடும்.
அய்யனார் மனோதத்துவ ரீதியில் எழுதப்பட்டிருக்கிற அருமையான கதை. உங்கள் கதையின் முதல் இரண்டு பாரா, உமா மகேஸ்வரியின் மரப்பாச்சியை ஞாபகப்படுத்தியது. குழந்தைகளின் அதே வலியை உணர்த்தியது. நல்ல கதை. வாழ்த்துகள்.
பாலியல் கல்வி பள்ளிகளில் தேவையா? இல்லையா?என்பன போன்ற விவாதங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் நம்மைப்போன்ற இளைஞர்களின் பங்களிப்பு விழிப்புணர்வூட்ட இச்சமூகத்திற்கு அவசியமாகிறது. சமூகத்தின் மனவளர்ச்சி சிதைவடையக்கூடாது என்பது எனது அவா.ஆனால்,குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை பேசியிருக்கும் இந்தக் கதையின் போக்கை எளிதில் தீர்மானிக்க முடிகிறது மட்டுமல்லாமல் கதையோடு ஒன்ற முடியவில்லை. உங்கள் நடை மிஸ்ஸிங் அய்யனார்.//கனமான விஷயம். இன்னும் கொஞ்சம் சிரமப் பட்டிருந்தால் நன்றாக வந்திருக்கக் கூடும்//i agree wid sundar
தான் பாதிக்கப்பட்டதைப்போல தன் மகள் பாதிக்கபடாமள் வளர்த்த விதமும், கதை சொன்ன விதமும் சரி ஆனால் கடைசியில் தாத்தாவும் டாக்டரும் பக்கத்து வீட்டுப்பையனும் செய்ய நினைத்ததை பாட்டியே பிற்காலத்தில் செய்வாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடைசி பத்தி மொத்தக் கதையையும் சிதைத்து விட்டதாக படுகிறது வேறு எதாவது முடிவு வைத்திருக்கலாம். அந்த முடிவு அதிர்ச்சியை மட்டுமே குறிவைத்து எழுதப்பட்டுள்ளது போன்றே எனக்கு படுகிறது.
சாணக்யாவின் கதைகள எதுவும் படிச்சதில்ல மோகன்..டிசே நம்மாளு பாத்துக்கலாம் :)
சுந்தர் இதொரு முன்னோட்டமாக கூட இருக்கலாம்.மிக விரிவாக எழுதப்பட வேண்டிய (குறூ நாவல் / நாவல்) ஒன்று...
தம்பி இந்த லிங்க்லாம் படி
http://en.wikipedia.org/wiki/Pedophile
pedophile என்கிற மனநோயினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
ட்விஸ்ட் டர்ன் வட்டம் அரை வட்டம் போன்ற மூன்றாந்தர டெக்னிக்குகளை பயன்படுத்துவதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு இருந்தது இல்லை.:)
//ட்விஸ்ட் டர்ன் வட்டம் அரை வட்டம் போன்ற மூன்றாந்தர டெக்னிக்குகளை பயன்படுத்துவதில் எனக்கு எப்போதுமே உடன்பாடு இருந்தது இல்லை.//
இதுதான் அசல் நச் :-)
அய்யனார் வணக்கம். கதையின் முதல் இரண்டு பாராவை படித்ததும் உமா மகேஸ்வரியின் 'மரபாச்சி' கதை ஞாபகத்துக்கு வந்தது. அடுத்த பாராக்கள் வேறு தளத்துக்கு சென்றது. மனோரீதியான விளைவுகளைச் சொல்லும் நல்ல மனோதத்துவ கதை. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி
சந்திரசேகர்
இந்த முடிவை எதிர்பார்த்தீர்களா?..
இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு சொந்த துயரங்களே காரணமாயிருந்திருப்பது சமீபத்தில் தெரிய வந்தது.அந்த உந்துதல்தான் இதை எழுத காரணமாயிருந்தது.மேலும் கவித்துவ மொழிநடையை இது போன்ற கதைகளில் பிரயோகிக்கவும் எனக்கு தயக்கமாக இருந்தது....அந்தந்த களத்திற்கேற்றார்போல் மொழி மாற்றமடையவேண்டும் என்கிற கருத்து என்னிடம் இருந்து வருகிறது...
எதுவிருப்பினும் உண்மையான பகிர்தலுக்கு நன்றி
ஆடுமாடு
மரப்பாச்சி படித்ததில்லை..உமா மகேஸ்வரியின் சில கவிதைகளோடு நிற்கிறது.கிடைத்தால் படிக்கிறேன்..
பகிர்வுக்கு நன்றி
/மிக விரிவாக எழுதப்பட வேண்டிய (குறூ நாவல் / நாவல்) ஒன்று.../
செய்யுங்கள். நன்றாக வரக்கூடிய subject இது.
வயதான பிறகு அவள் செய்வது... இதே போன்று ஆதவன் நாவல் ஒன்றில் வரும் (ஒரு எழுத்தைப் படித்தால் இன்னொன்று நினைவிற்கு வருவது தவிர்க்க இயலவில்லை)-))
தம்பி,
பாட்டியின் இந்த நடத்தை உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இது நடக்ககூடிய ஒன்றே.
ப்ரச்சினையே, child sex abuse victimsக்கு சிகிச்சை அளிக்க பல வழிமுறைகளுண்டு. ஆனால் perpetrators க்கு உதவிகள் மிகவும் குறைவு..சமூகத்தின் negative attitude கூட காரணமாக இருக்கலாம்.
குழந்தைப்பருவத்து perpetrators இன்னும் பாவம்.யாருக்கும் வேண்டாதவர்களாகிவிடுகிறார்கள்.
பெண்குழண்தைகளுக்கோ இன்னும் பல்வேறு குழப்பங்கள். அய்யனார் சொன்னது போல இது குறுனாவலாக எழுதப்படவேண்டியது.
அய்யனார், நான் உங்கள் பதிவில் தம்பிக்கு எழுதியதர்க்கு மன்னிக்கவும்.
விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் இந்தக்கதை அமைந்துள்ளது..சிந்திக்க இது ஏதுவாக இருக்கும் என்பது என் எண்ணம்.அரசியல் வாதிகள் கவனிப்பார்களா?இந்தியாவில் முதலில் இதைப்ப்பற்றி ஆய்வு செய்ய முயன்றவரகளை அன்றய பிஜேபி முதலில் தடுத்தார்கள்.போராடி ஆய்வு நடத்தியபோது அதன் முடிவுகள் மனதை தாக்குவதாக இருண்ததாக dr. sekar seshadri சொல்லுவார்.
வணக்கம்
பின்நவீனத்துவத்தை பற்றி நீங்க எப்படி தெரிஞ்சுகிட்டீங்க
அது சம்பந்தமான நாவல் பற்றி தெரிவிக்கவும்
நன்றி
நல்லா எழுதியிருக்கீங்க அய்யனார்... இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டுருந்தீங்கன்னா... கதையின் முடிவு அதிர்ச்சியா தெரிஞ்சிருக்காதுன்னு நெனைக்கிறேன். ஏன்னா.. சாத்தியமானதை தான் எழுதியிருக்கீங்க... தனக்கு துன்பம் ஏற்பட்டதால், தன் குழந்தையை பேணி வளர்க்கும் எண்ணம், திரும்பவும் தனிமையில் தள்ளப் படும் போதோ அல்லது தனிமையாய் இருக்கும் போதோ, தன் துன்பத்தில் இன்பம் காணுமின்னு விஞ்ஞான ரீதியா கன்ஃப்ர்ம் செய்திருக்காங்க. இதற்குத் தான் கவுன்சிலிங் போன்றவை சிதைந்த உள்ளத்தை மேலும் சிதைவுற விடாமல் தடுக்க இயலும். நெறையா எழுதலாம்....
//(சிறுவர் மனநல நிபுணர் சீதாவிற்கு..)\\
அய்யோடா, ஆனாலும் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள்.
ayyanar,
couldnt write in tamil. sorry!
// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
சரியான மொழியில் சொல்லப்பட வில்லை என்று தோன்றுகிறது (பெண் மொழி கைகூடுவது சுலபமில்லையே).
கனமான விஷயம். இன்னும் கொஞ்சம் சிரமப் பட்டிருந்தால் நன்றாக வந்திருக்கக் கூடும்.//
i feel the same.
and, i agree with thambi, ayyanar.
you have to read niruba's book. she had even posted some of the stories in a blog.
http://www.puluthi.blogspot.com/
the ending seems forced.
-Mathy
From Niruba's thoguppu.
http://peddai.net/?p=9
-Mathy
Hai Ayyana.....
How are u ? Story is Super
Post a Comment