சுந்தர ராமசாமி குறித்த எனது புரிதல்களை முதலில் சொல்லிவிடுகிறேன்.ஜே.ஜே சில குறிப்புகள் நாவல் மிகவும் செறிவான ஒரு படைப்பு என்பது என் புரிதல்.நம்பகத் தன்மைக்கு வெகு அருகில் வாசகனை கொண்டு சென்ற யுக்தி தமிழில் புதிதான ஒரு களமாய் இருந்தது.புளியமரத்தின் கதையும் எனக்கு பிடித்தமான ஒரு படைப்புதான்.குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் வரும் குழந்தைகள் மிகவும் பரிச்சயமானவர்களாக இருந்தனர்.பசுவய்யா என்ற பெயரில் இவர் எழுதிக்குவித்த கவிதைகளின் மீது ஈர்ப்பில்லை.இவர் பார்ப்பனர் என்பதும் இந்துத்வத்தை வளர்க்க அரும்பாடுபட்டார் என்பதெல்லாம் சுகுணா மூலமாக அறிந்தவை.அவை நிஜமெனில் அதற்க்கான எதிர்குரல்களில் என்னுடையதும் ஒன்றாக இருக்கும்.
ஒரு படைப்பாளியை குறித்தெழும் விமர்சனங்கள் அவன் பிறப்பின் பின்புலம் சார்ந்து இருக்குமெனில் அத்தகைய விமர்சனங்களை நான் எதிர்க்கிறேன்.படைப்பாளி என்பவன் இந்த கட்டுக்களை மீறியவன்.அவன் எழுத்தை விமர்சிக்கும் தகுதி படைப்பு புரிந்தவனுக்கு அல்லது எந்த ஒரு வாசகனுக்கும் உரிமை உண்டு.ஆனால் அவன் பிறப்பை முன் வைத்து கேள்வி எழுப்புவது அபத்தமாய் படுகிறது.
சுகுணா திவாகரின் எழுத்தை கொண்டாடும் நான் அவரின் சில புரிதல்களில் வேறுபடுகிறேன்.ஒரு செறிவான எழுத்துக்கு சொந்தக்காரன் பெரும்பாலான வாசகனை தன் வசம் கொண்டிருக்கும் படைப்பாளி சக எழுத்தாளனை தூற்றும்போது அவன் மறைமுகமாக அவ்வெழுத்தாளனை கொலை செய்கிறான்.சுரா வின் எழுத்துக்களை படித்திராதோர் சுகுணா திவாகரின் கட்டுரைகளை படித்து சுரா வை புறந்தள்ளக்கூடும்.தன்னை ஒரு கலகத்தின் குரலாய் எப்போதும் முன்நிறுத்திக் கொள்ளும் சுகுணா சுரா விதயத்தில் போராளியாகவே செயல்படுகிறார்.சுராவின் எழுத்துக்களை படிக்கும் ஒருவர் இனிய தோழியாகவே இருப்பினும் அவரை கொலை செய்யக்கூட சுகுணா தயங்குவதில்லை.இந்த அளவு வன்மம் தேவை இல்லை என்றுதான் படுகிறது.
கொலை செய்யப்பட வேண்டியவர்கள் தமிழ்பரப்பில் மிகுந்துள்ள இச்சூழலில் ஏன் ஏற்கனவே இறந்த ஒன்றை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்?.வைரமுத்து,வாலி மற்றும் குறிகளை எழும்பச் செய்யும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்களான தமிழின் திரைப்பட கவிகளை ஒருபோதும் கொல்ல நினைத்ததில்லையா நீங்கள்?சுஜாதாவை தூக்கிலிட நீங்கள் ஆசைப்பட்டதற்க்கு கூட சாதிய பின்புலம் மட்டும் காரணமாக இருக்காது என நம்புகிறேன்.
தமிழ் வலைப்பதிவுக்கு வந்த போது நான் அதிர்ந்த ஒரு விதயம் என் தமிழ் சொற்கள். நான் தமிழென நம்பிக் கொண்டிருந்த அத்தனை வார்த்தைகளும் கலப்பு வார்த்தைகளாக இருந்தது சிறிது அதிர்ச்சியை கொடுத்தது.இதற்க்கான காரணத்தை ஆராய்ந்த போது நான் படித்தபுத்தகங்கள்.வெகு நேர்த்தியாய் தன் மொழியை கலந்துவிட்டிருந்த எண்ணற்ற பார்ப்பன எழுத்தாளர்கள் எனக்கே தெரியாமல் என் மொழியை சிதைத்து விட்டிருந்த அவர்களின் ஆளுமையை என்னவென்று சொல்வது.
அவர்களை சரியாய் அடையாளம் கண்டுணர்ந்து புறந்தள்ள வேண்டிய கடமை அல்லது சரியாய் அடையாளப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழ் வாசகனுக்கும் இருப்பதாக உணர்கிறேன்.இருப்பினும் பாரதியை குறித்தெழும் விமர்சனங்களுக்கும் சுரா,ஜெயமோகன் குறித்தெழும் விமர்சனங்களுக்கும் பிரதானமாய் முன்நிற்பது சாதிய பின்புலம் மட்டுமே என்பது வேதனையளிக்கிறது.
படைப்பு குறித்த விமர்சனங்களும் மறைமுகமாக சாதியை முன் வைப்பது தவறாக படுகிறது.
ஒரு படைப்பாளி இறந்தபின்பு அடையாளம் காணப்படுவது துயரமானது.வாழும்போது வறுமையில் உழலவிட்டு செத்த பின்பு சிலை வைப்பதும் விருது கொடுப்பதும் எந்த அளவிற்க்கு பிரயோசனமில்லாத செயலோ அதற்க்கு நிகரானது இறந்த ஒருவரை தூற்றுவதும்.பிரமிள் குறித்த ஞானக்கூத்தனின் விமர்சனங்கள் வெறுப்பையே தந்தது.ஞானக்கூத்தனின் கவிதை தொகுப்பை தெருவிலெறிந்து என் வன்மத்தை தீர்த்துக் கொண்டேன்.பிரமிள் படிமத்தின் தந்தை எண்ணற்ற சன்னல்களை திறந்த அபூர்வ படைப்பாளி அவரின் படைப்பு குறித்து கேள்விகளும் மட்டமான விமர்சனங்களையும் பதிவித்திருந்த ஞானக்கூத்தன் தனக்கிருக்கும் கொஞ்ச பெயரையும் கெடுத்துக்கொண்டார்.தமிழில் மட்டும்தான் இதுபோன்ற குடுமிப்பிடி சண்டைகள் மலிந்து போனதாய் படுகிறது.வெகுசன பரப்பில் நஞ்சை கலந்துகொள்ள ஆகச்சிறந்த படைப்பாளிகளை அனுமதித்துவிட்டு செறிவான படைப்பாளிகள் தங்களுக்குள் சண்டை இட்டுக்கொள்வதும் மலிந்து போன குழு அரசியலும் வெறுப்பையே தருகிறது.
விருதுகளுக்கான அரசியல் இதைவிட கேவலமாய் இருக்கிறது விருது பெறும் படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வேற்று மொழி வாசகனை சென்றடையும்போது அப்படைப்பின் தரம் அம்மொழிக்காரனை தமிழின் இலக்கிய தரத்தின் எல்லைகளை நினைத்து நகைக்கச் செய்யாதா? நம் மொழியின் சிறந்த படைப்புகள் சரியாய் அடையாளங்காணப்படாததிற்க்கும் சரியான படைப்பாளி சரியான அங்கீகாரத்தை பெறாததிற்க்கும் இதுபோன்ற ஒற்றைச் சாளர விமர்சனங்களே காரணமாயிருக்க முடியும்.
வைரமுத்துவிற்க்கு விழா எடுப்போம் மேத்தாவிற்க்கு இன்னும் பல விருதுகள் கொடுப்போம் சுஜாதாவிற்க்கு சிலை வைக்கலாம் சிங்காரத்தின் பெயரை தேடி அழிப்போம் நாகராஜனின் புதை மேடுகளில் போனால் போகட்டுமென சில பூக்களை மட்டும் மலர அனுமதிக்கலாம்.வாழ்க தமிழிலக்கியம்! வாழ்க கருத்து சுதந்திரம்!!
இது எனக்கும் சுகுணாவிற்க்குமான உரையாடல் இங்கே குளிர் காய வரும் எந்த பருப்புகளுக்கும் இடமில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
27 comments:
//வைரமுத்துவிற்க்கு விழா எடுப்போம் மேத்தாவிற்க்கு இன்னும் பல விருதுகள் கொடுப்போம் சுஜாதாவிற்க்கு சிலை வைக்கலாம் சிங்காரத்தின் பெயரை தேடி அழிப்போம் நாகராஜனின் புதை மேடுகளில் போனால் போகட்டுமென சில பூக்களை மட்டும் மலர அனுமதிக்கலாம்.வாழ்க தமிழிலக்கியம்! வாழ்க கருத்து சுதந்திரம்!!//
ரிப்பீட்டு!
//எந்த பருப்புகளுக்கும் இடமில்லை//
எனக்குமா?
//எனக்குமா?//
அதை தனியா வேற சொல்லனுமாக்கும்.
ஏய் பாசிப்பருப்பு,
நீ என்ன பெரிய பருப்பா?
//இது எனக்கும் சுகுணாவிற்க்குமான உரையாடல் இங்கே குளிர் காய வரும் எந்த பருப்புகளுக்கும் இடமில்லை.//
அப்டீன்னா எந்த பருப்புக்காக இதில போடணும். சுகுணாகூட தனியாவே உரையாடியிருக்கலாமில்ல.
//அப்டீன்னா எந்த பருப்புக்காக இதில போடணும். சுகுணாகூட தனியாவே உரையாடியிருக்கலாமில்ல. //
அதானே!
அப்போ நாங்க பேசலாம்னு நினைக்கிறேன்!
ஐயா! நான் பருப்பு வகையா, கொட்டை வகையா?
பருப்பு மற்றும் கொட்டைகளுக்கு கருத்து சுதந்திரத்தின் மீது அபார நம்பிக்கை இருப்பதாலும் தனிமனித தாக்குதல்கள் இல்லாததினாலும் உங்கள்கும்மிகள் மட்டுறுத்தப்படவில்லை
நல்லா இருங்க!!!
போடாங்கொய்யால! நாங்களே கியூவில நிக்கிறோம் நீ என்ன பெரிய முந்திரி கொட்டையாட்டம் வந்துட்ட:-))
/
இது எனக்கும் சுகுணாவிற்க்குமான உரையாடல் இங்கே குளிர் காய வரும் எந்த பருப்புகளுக்கும் இடமில்லை.
/
உரையாடல் சூடாக இருந்தால் குந்துறது தப்பா தல
இந்த பதிவர் பருப்பா கொட்டையா?
அய்யனார் said...
பருப்பு மற்றும் கொட்டைகளுக்கு கருத்து சுதந்திரத்தின் மீது அபார நம்பிக்கை இருப்பதாலும் தனிமனித தாக்குதல்கள் இல்லாததினாலும் உங்கள்கும்மிகள் மட்டுறுத்தப்படவில்லை
நல்லா இருங்க!!!
///
போன பதிவில் நான் போட்ட பின்னுட்டம் உங்க வெளியிடும் சுதந்திரத்தை குறிப்பதாக எடுத்து கொள்ளலாமா
அது
உங்கள் மீதான தாக்குதல் இல்லை நீங்க சொன்னதிலிருந்து எடுத்தது
ஆபாசமும் இல்லை (உங்கள் பாணியில் சொன்னால்)
வைரமுத்துவை விட சிறந்த கவிஞ்ஞன் தமிழ்நாட்டில் இல்லையாம்
கவிப்பேரரசு என்று பட்டம் வேறு
என்னகொடுமை
மெய் மெய்(பல்லேலக்கா..) என்று 68 தடவை எழுதுபவன் கவிஞ்ஞன்
இந்தச் சீரழிவைக் கேட்போரில்லையா
சங்கம் வளர்த்த மதுரை என்ன வளர்க்கிறது வயிறா வளர்க்கிறது
வெட்கம்
ஊமையர் சபையில் உளறுவாயனுக்கு மதிப்பு என்பது இதுதானா
/ஒரு செறிவான எழுத்துக்கு சொந்தக்காரன் பெரும்பாலான வாசகனை தன் வசம் கொண்டிருக்கும் படைப்பாளி சக எழுத்தாளனை தூற்றும்போது அவன் மறைமுகமாக அவ்வெழுத்தாளனை கொலை செய்கிறான்./
அப்படியா விதயம்? அட!
அதெப்படிய்யா நீர் ரொம்ப சீரியஸா ஒரு பதிவு போட்டாலும் அதிலயும் எப்படியாவது கும்மி அடிச்சிடுறாங்க.. ?! :)
நல்லா இருங்க ;)
//ஒரு படைப்பாளியை குறித்தெழும் விமர்சனங்கள் அவன் பிறப்பின் பின்புலம் சார்ந்து இருக்குமெனில் அத்தகைய விமர்சனங்களை நான் எதிர்க்கிறேன்.//
//கொலை செய்யப்பட வேண்டியவர்கள் தமிழ்பரப்பில் மிகுந்துள்ள இச்சூழலில் ஏன் ஏற்கனவே இறந்த ஒன்றை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்?.//
//ஞானக்கூத்தனின் கவிதை தொகுப்பை தெருவிலெறிந்து என் வன்மத்தை தீர்த்துக் கொண்டேன்.//
// நம் மொழியின் சிறந்த படைப்புகள் சரியாய் அடையாளங்காணப்படாததிற்க்கும் சரியான படைப்பாளி சரியான அங்கீகாரத்தை பெறாததிற்க்கும் இதுபோன்ற ஒற்றைச் சாளர விமர்சனங்களே காரணமாயிருக்க முடியும்.//
//வைரமுத்துவிற்க்கு விழா எடுப்போம் மேத்தாவிற்க்கு இன்னும் பல விருதுகள் கொடுப்போம் சுஜாதாவிற்க்கு சிலை வைக்கலாம் சிங்காரத்தின் பெயரை தேடி அழிப்போம் நாகராஜனின் புதை மேடுகளில் போனால் போகட்டுமென சில பூக்களை மட்டும் மலர அனுமதிக்கலாம்.வாழ்க தமிழிலக்கியம்! வாழ்க கருத்து சுதந்திரம்!!//
வழி மொழிகிறேன். எனது எண்ணமும் இதாகவே இருப்பதால், இதை ஆதரித்து ஒரு பதிவிட வேண்டியது எனது கடமையாகிறது.
பதிவிடுவதும், மறுப்பதும் உங்கள் உரிமை. நன்றி.
//ஒரு படைப்பாளியை குறித்தெழும் விமர்சனங்கள் அவன் பிறப்பின் பின்புலம் சார்ந்து இருக்குமெனில் அத்தகைய விமர்சனங்களை நான் எதிர்க்கிறேன்//
இதை நான் வழிமொழிகிறேன்!
(நானு பருப்பில்ல அய்யனார். :) பொறுப்பா ஒரு பின்னூட்டம் போட்ருக்கேன்.. பப்ளிஷ் பண்ணிடுங்க ப்ளீஸ்!)
நீங்க சொன்னது எதுவா இருந்தாலும்.. புரியற மாதிரி சொல்லிருக்கீங்க பாருங்க!! அதுக்கே தனியா பாராட்டனும். :)
//தமிழில் மட்டும்தான் இதுபோன்ற குடுமிப்பிடி சண்டைகள் மலிந்து போனதாய் படுகிறது//
மற்ற மொழிகளிலும் குடுமிப்பிடிச் சண்டைகள் உண்டு.ஆனால் தமிழில் அதிகம் என்றே தோன்றுகின்றது
//வெகுசன பரப்பில் நஞ்சை கலந்துகொள்ள ஆகச்சிறந்த படைப்பாளிகளை அனுமதித்துவிட்டு செறிவான படைப்பாளிகள் தங்களுக்குள் சண்டை இட்டுக்கொள்வதும் மலிந்து போன குழு அரசியலும் வெறுப்பையே தருகிறது//
உண்மை.
4பேர் சேர்ந்தாலே அங்கே குறைந்தது 2குழுக்கள் உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம்.அதிகம் 'பேசும்' படைப்பாளிகளிடையே குழு மனப்பான்மை வருவது இயல்பு. ஆனால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவர்கள் போட்டுக்கொள்ளும் சண்டைகளும், செய்யும் இலக்கிய 'அரசியலு'ம் வெறுப்பையே தருகின்றன :-(
டேய் பருப்புங்களா! நாம் சண்டை போட்டுகிட்டதால கவுஞ்சர்லாம் வந்து பின்னூட்டம் போட்டு இந்த பதிவ திசை திருப்பறாங்க! ஜாக்கிரதை, ஒத்துமையா வாங்க வந்து கும்மி அடிங்கப்பா!!
போலி மின்னலாரே
ஒரிஜினலாய் வாரும்
கேஎஸ்,பொன்ஸ்,காயத்ரி,நந்தா,கதிரவன்மற்றும் ஓடுகாலிக்கு நன்றிகள்
பின்னூட்டங்கள் சூப்பர்.
யோவ் அய்யனாரே! எல்லாத்துக்கும் நன்றி! எங்க சங்க தலைவருக்கு மட்டும் நன்றி இல்லியா!
//சிறு பருப்பு said...
யோவ் அய்யனாரே! எல்லாத்துக்கும் நன்றி! எங்க சங்க தலைவருக்கு மட்டும் நன்றி இல்லியா!
//
அவருக்கே அவரு எப்படி நன்னி சொல்வாரு?
அய்யனார் said...
போலி மின்னலாரே
ஒரிஜினலாய் வாரும்
///
ஐய்யா இதில் ஒரிஜினலா வந்தாதான் பதில் பதில் சொல்வேன் என்பது பிளாக்கர் அக்கொண்ட் இல்லாத பல பேரை அவமான படுத்துவது போல் பின்ன அனானி ஆப்சன் எதுக்கு உங்களுக்கு...?
வாழ்க கருத்து சுதந்திரம்....!!!
Post a Comment