எட்டு பெருமைகளை எழுதுங்கன்னு ரொம்ப யோசிக்க வைத்த நிர்மலா,குசும்பன்,நாகைசிவா விற்க்காக
வலைப்பதிவில் நான் பார்த்து பிரம்மிக்கும் ஒரு குணம் பெரும்பாலானோரின் வாழ்வும்,சிந்தனையும்,பேச்சும்,செயல்களும் ஒரே நேர்கோட்டில் இணைவதுதான்.அதற்க்கு உதாரணம் அடிக்கடி சுற்றி சுற்றி வரும் இவ்விளையாட்டுக்களில் காணப்படும் பொதுப்பண்புகள்.
1.இருப்பு கொள்ளாது அலையும் என் நிகழ்.
எந்த ஒரு புள்ளியிலும் தேங்கிடாத,தேங்க விரும்பாத என் சிக்கலான மனம்.அலைவும் திரிபும் என் இயல்பான குணமாய் அமைந்து விட்டது.இந்த குணத்தினால் நிறைய சிக்கல்களைத்தான் அதிகம் சந்தித்து முடிந்தது என்றாலும் கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் அற்புதம்.என் 9 வருட பணி அனுபவத்தில் இதுவரை 10 நிறுவனங்கள் மாறிவிட்டேன்.தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனங்களில்,நகரங்களில் எல்லாம் வாழ்ந்தாயிற்று.இப்பாலைக்கு வரும்போதும் எவ்வித பின் யோசனைகளும் இல்லாமல் ஒன்றிலிருந்து தப்பிப்பது மட்டுமே பிரதான நோக்கமாக இருந்தது மிகுந்த பெருமையிருந்தது.
2.வலையில் பதிவது
எனக்கான ஒரு தளம், என் தாங்கொணா தனிமையின் மீட்பு இவ்வலைப்பதிவென்று சொல்லலாம்.மிகவும் சந்தடியான இடத்திலும் நண்பர்கள் புடைசூழ வாழ்ந்திருப்பினும் நான் மிகத்தனிமையானவனாகவே உணர்ந்தேன்.ஏதோ ஒன்று உள்ளுக்குள் பூர்த்தியடையாததாகவே இருந்து வந்தது.இவ்வலையில் பதிந்த சில கவிதைகளே நிறைய நண்பர்களை கொண்டு வந்து சேர்க்கப் போதுமானதாக இருந்தது.இப்போது இந்த நிரம்பி வழியும் தனிமையிலும் மிகுந்த சன சந்தடியில் அடையாளம் தெரியும் ஒரு நபராக என்னை உணரச்செய்திருக்கிறது இவ்வலைப்பதிவும் தமிழ்மணமும். மிகுந்த பெருமைகளோடு கடந்து போகிறது என் நாட்கள்
3.புத்தகங்கள்,திரைப்படங்கள் மற்றும் என் ரசனை
மந்தையிலிருந்து தனித்து தெரிவதற்க்காக நான் நாடியது புத்தகங்களைத்தான்.தமிழின் பெரும்பாலான முக்கிய புத்தகங்களை படித்திருப்பதும் சில நூறு நல்ல திரைப்படங்களை பார்த்திருப்பதும் தொடர்ந்து இவைகளைத் தேடி அலைவதும் நான் பெருமைப்பட்டு கொள்ளும் செயல்கள்.மேலும் என் ரசனைகளின் மீது எனக்கிருக்கும் நம்பிக்கைகள் எப்போதுமே பெருமையான ஒன்றுதான்.
4 தியானம் மற்றும் உள்சார்ந்த தேடல்கள்
பிறந்த ஊரின் மகிமையோ என்னவோ அகத்தேடல்கள் ரமணரின் மூலமாக ஆரம்பித்தது பின் மெல்ல நகர்ந்து ஓஷோ,ஜேகே,புத்தர்,கொல்லிமலை சாமியார்களென முடிவற்ற ஒன்றின் பின்னால் சில காலம் அலைந்துகொண்டிருந்தேன்.எனக்கு மிக இணக்கமாகவும் என் சிறுமைத்தனங்களிலிருந்து வெளிவரவும் ஓஷோ மிகவும் உதவினார்.அவர் பிறந்த வீட்டில் விழுந்து புரண்டது, ஓஷோ சன்னியாசியாக என்னை மாற்றிக்கொண்டது இவை போன்றவை எனக்கு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் இடியே விழுந்தாலும் சற்றுத் தள்ளி உட்காரும் மனோபாவத்தையும் ஒருங்கே தந்தது.
இனி கொஞ்சம் கொசுவர்த்தி.இவையெல்லாம் அந்தந்த காலகட்டத்தில் பெருமையாக,மிதப்பாக இருந்ததென்னமோ உண்மை
5.நண்பர்கள்
எனக்கான நண்பர்கள் கூட்டம் சற்று அதிகம்தான் இதற்க்கான காரணம் வேவ்வேறு சூழலில் வாழ்ந்ததுதான். திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர்,பாண்டி, சென்னை,மதுரை,ஷார்ஜா,துபாய் என வெவ்வேறு இடங்களில் என் இருப்பு குறித்த அலைவுகளில் நான் சேர்த்து வைத்தது நல்ல நண்பர்களைத்தான்.என்னோடு முதல் வகுப்பு படித்த நண்பர்களுடன் இன்னமும் தொடர்பு இருக்கிறது.திருவண்ணாமலையில் நண்பணோடு ஏதாவது ஒரு இடம் செல்ல நேரும்போது வழியில் குறைந்த பட்சம் ஒரு பத்து பேருக்காவது ஹாய் மச்சான் இல்லைன்னா வண்டிய நிறுத்தி ஒரு பத்து நிமிட பேச்சு இல்லாமல் நான் எங்கு சென்றும் சேர்ந்ததில்லை.
6 ரொம்ப நல்ல பையன்
இப்படித்தான் ஒரு பெயர் வங்கி வைத்திருந்தேன் என் பதினைந்து வயதுவரை.பத்தாவது படிக்கும் வரை எப்பவும் நான்தான் முதல் மாணவன்.ஆனால் இறுதி தேர்வில் இரண்டாவதாகத்தான் வர முடிந்தது நல்ல மதிப்பெண்கள் என்பதால் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.இறுதித்தேர்வை விட மாணவர் மன்ற தமிழ்த்தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாக வந்தது அப்போது மிகப்பெருமையாய் இருந்தது.என் பதினாறாவது வயதிலேயே இப்பிம்பத்தை உடைத்ததுதான் என் சாதனை.
7.தமுஎச அறிமுகம் மற்றும் கலைஇலக்கிய இரவின் பரிசு
படிப்பைத்தவிர பள்ளியில் எல்லா போட்டிகளிலும் பரிசு வாங்கிவிடுவேன்.பேச்சு,கவிதை,கட்டுரை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு பரிசாவது என் பெயரில் வந்துவிடும்.சமீபத்தில் என் வீட்டில் பத்திரமாய் வைத்திருந்த 50 க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பார்த்துக் கொண்டிருந்த போது மிகப் பெருமையாக இருந்தது.சொல்லிக் கொள்ளும்படியான பரிசு 93 ம் வருட கலை இலக்கிய விழாவில் பவா.செல்லதுரை கையினால் பாரதி பற்றிய பேச்சிற்க்கான முதல் பரிசை ஒரு நள்ளிரவு குளிரில் நடுங்கியபடி வாங்கியது.மேலும் சில இலக்கிய ஜாம்பவான்களின் அறிமுகம் சிறிய வயதிலே கிடைத்தது
8.காதலுக்கு அட்வைஸர்
கல்லூரியில் படிக்கும்போது இந்த பதவி எப்படியோ வந்து சேர்ந்தது அபத்தமாய் கவிதை கிறுக்குவதும்,இளையராஜா பாடல்களை நன்றாய் தெரிந்து வைத்திருந்ததும் எப்போதும் கனவில் மிதப்பது போன்று திரிவதும் நண்பர்களை அதுவும் காதல் வயப்படும் மாணவர்களை என் பக்கம் ஈர்த்தது,எவனுக்கு காதல் வந்தாலும் என்னிடம்தான் கவிதை கேட்பார்கள்.இலவச கடிதமும் காதல் கவிதையுடன் எழுதித்தரப்படும் னு போர்டு தான் மாட்டல.இதனால் நிறைய நாள் தூக்கம் போச்சு இந்த பசங்க அரை பீரை குடிச்சிட்டு கன்னா பின்னான்னு பெணாத்துவாங்க கொஞ்சம் கூட சலிச்சிக்காம கேட்டு அவனோட உணர்வுகளை மொத்தமாய் ஒரு கடிதத்தில் எழுதி கொடுப்பேன்.ஆனா ஒரு சோகம் பாருங்க எனக்கு காதல் வந்தப்போ இதயம் முரளி மதிரிதான் நடந்துகிட்டேன்.படபடக்கும் மனசோட ஒரு பெண்ணை நேசிப்பது மிகவும் அற்புதமான ஒரு விதயம்னு அப்போது தோன்றியது.ஆனால் இந்த வயதில் சேர்த்து வைத்த இந்த அறிவுக்குப்பைகளால் காதல் மிக அபத்தமாய் கேலிக்குரிய செயலாய் தோன்றுவது நல்லதா?கெட்டதா?
நான் அழைக்கும் எட்டு பேர்
1.சித்தார்த் (கண்டிப்பா எழுதனும் ராசா)
2.மதி கந்தசாமி (திரட்டில இல்லனாலும் வந்து படிப்போமில்ல)
3.சுகுணா திவாகர் (இவர் எழுதுவாரா?)
4.டிசே தமிழன் (வேற யாராவது கூப்பிட்டுட்டாங்களோ?)
5.பொன்ஸ்(போஸ்ட் போட்டு ரொம்ப நாள் ஆச்சிங்கோவ்)
6.லக்ஷ்மி (சுவாரசியமான தகவல்கள் இருக்கும்னு நம்புறேன்)
7.ஜெஸிலா (எட்டுதான்னு இல்ல நிறையவும் எழுதலாம்)
8.கோபிநாத் (ஊர்ல இருந்தபடியே எழுது கண்ணா)
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
20 comments:
எனக்கு ஒரு காதல் கவிதை பார்சல்
:)
Super Sir
கலக்கல்.
காதல் மிக அபத்தமாய் கேலிக்குரிய செயலாய் தோன்றுவது நல்லதா?கெட்டதா?
தெரியிலீயேப்பா? நாங்க எல்லாம் இன்னும் டவுசர் போட்ட
நிஜாரூங்கோ!!!
அருமை பல விசயங்கள் நம்மோடு ஒத்துபோகிறீர்கள் அய்யனார்...
மின்னுது மின்னல் said...
எனக்கு ஒரு காதல் கவிதை பார்சல்
:)
கவிதை பேப்பர புலி வாயில வச்சுதான் அனுப்புவோம்
வசதி எப்படி....
எனக்கு ஒரு காதல் கவிதை பார்சல்
நீ அரை பீர குடிச்சிட்டு அனத்து பிறகு பாக்கலாம் :)
நன்றி அனானி
தம்பி ரொம்பத்தான் கலங்கிபோச்சு நேத்து :)
/அருமை பல விசயங்கள் நம்மோடு ஒத்துபோகிறீர்கள் அய்யனார்... /
எதில குசும்பரே
அய்யனார் said...
"எதில குசும்பரே ??"
"ஓஷோ" The real Boss
குசும்பன் said...
மின்னுது மின்னல் said...
எனக்கு ஒரு காதல் கவிதை பார்சல்
:)
கவிதை பேப்பர புலி வாயில வச்சுதான் அனுப்புவோம்
வசதி எப்படி....
///
இந்த பதிவுல புலி வரவில்லை என்று நினைத்தேன் வந்துட்டே வந்துட்டே.... :)
இன்னைக்கு இங்கண கும்மியா?
என்னன்னமோ எழுதியிருக்கீங்க சரி. நம்மளை ஏன் மாட்டிவிட்டீங்க? எட்டுப் போடாம லைசன்ஸ் வாங்கின ஆள் நான், என்னப் போய் வலையில் எட்டுப் போட சொன்னா நடக்குற காரியங்களா?
@மின்னல், அங்கே பதிவு வேறே மாதிரி போட்டுட்டு இங்கே வந்து காதல் கவிதை கேட்குதா? :P
@அய்யனார், இத்தனை அனுபவங்களுக்கும், நண்பர்களுக்கும் இடையில் "தனிமை"யை உணரும் நீங்க "தனி"யானவர் தான். நல்ல அனுபவங்கள். காதல் உண்மையான காதலருக்கு நல்லது, காதலை வெறுப்பவர்க்குக் கெட்டது. இரண்டு பக்கமும் மனம் ஒருமித்துச் சேர்ந்தால் தான் காதல். குறைகளையும், பலவீனங்களையும் சகித்துக் கொண்டு, ஏற்றுக் கொள்ளத் தெரியவேண்டும்.
நல்லாத்தான் இருக்கு.. இருந்தாலும் எங்கியோ சுருதி குறையுதே அய்யனார்?
ஜெஸிலா!
உங்க சாதனைகளுக்கு எட்டுலாம் பத்தாது..நேரம் ஒதுக்கி எழுதுங்க
நன்றி கீதா மேடம்
காயத்ரி @@@@
கலக்கல்!!
தல,ஒருவாரம் டைம் கிடைக்குமா?
மிதக்கும் வெளி
தாரளமா...ஒத்துகிட்டதே மகிழ்ச்சியா இருக்கு
அய்யனார், நீங்கள் திருவண்ணாமலையா? என்னை மிகவும் ஆகாசிக்கும் யோகி ராம்சுரத்குமார் பற்றி உங்களிடம் நிறையச் சொல்ல இருக்குமே :-). ஜெயமோகன் கூட ஒருமுறை எழுதியிருந்தார்...திருவண்ணாமலையில் .இலக்கியக்கூட்டங்கள் நடைபெறும்போது (பவா செல்லத்துரை போன்றவர்கள் ஒழுங்குசெய்வது) சில தடவைகள் ராம்சுரத்குமாரும் கலந்துகொண்டிருக்கின்றாரென்று. பின்னாட்களில் அவரை பீடத்தில் அமர்த்தி நிறுவனமயமாக்கிவிட்டார்கள் என்பது கவலைதரும் விடயந்தான். சில வருடங்களுக்கு முன் திருவண்ணாமலைக்குப் போனபோது, ரமணர்,யோகி ராம்சுரத்குமார் வாழ்ந்த இடங்களை/சமாதிகளை பார்க்க விரும்பியிருந்தேன். ஆனால் நேரமில்லாததால் அவற்றைப் பார்க்கமுடியாது திரும்ப வேண்டியதாயிற்று :-(.
......
அழைப்பிற்கு நன்றி. நேரம்/விடயம் கிடைத்தால் எழுத முயல்கின்றேன்.
ஆஹா டிசே நிறையவே பேச இருக்கு :)
இரவில கூப்பிடுறேன்
Post a Comment