Tuesday, June 26, 2007

வரலாறுகளை சிதைக்காமல் பதிவித்தல்


நிழல்களைத் துரத்தி சலித்த மணிகண்டன்
வெம்மையான பரப்புகளில் புதைந்து கொள்ள இடம் தேடியலைகிறான்
நகரத்தில் வீழ்த்தப்பட்ட ஓணானென மல்லாந்திருக்கும் குணா சிறுநீரில் விந்து கலந்திடா பால்யத்திற்க்குத் திரும்புகிறான்
தேவதையின் மடிகள் களவு போன வன்மத்தில் சுந்தரராமசாமி ரசிகைகளை தேடிக் கொல்கிறான் சுகுணாதிவாகர்
சிதறுண்ட பிணங்களைக் குறிப்பெடுத்து ஓய்ந்த தமிழ்நதி யசோதரையின் பஞ்சணைக் கண்ணீருக்கு பதில் கேட்டு புத்தரை வம்புக்கிழுக்கிறாள்
அடர்கானகங்களில் நீலியை புணர புலியின் குறிகளை வேண்டி மிருக நினைவுகளில் நிகழ் தொலைக்கிறான் அய்யனார்
சிட்டுக்குருவிகளை பிரசவிக்க முடியாது போன துக்கத்தில் கலைந்த ஆடைகளை சரிசெய்தபடி அடுத்த கதவுகளை நோக்கி நகர்கிறாள் நிவேதா
காயத்ரியின் பொங்குதல்கள் லக்ஷ்மியின் விரலிடுக்குகளில் வழிகிறது
எல்லாருக்கும் முதுகு காட்டி தனியே அமர்கிறாள் சந்திரமதி

மதி மதி வளரும் மதி வளரா மதி என உளறி கொட்டியபடி உள்ளே குதிக்கிறதொரு ஓடுகாலி

பைத்தியமாகிறது தமிழ்பரப்பு




47 comments:

சிநேகிதன்.. said...

\\பைத்தியமாகிறது தமிழ்பரப்பு\\
ரீப்பிட்டே!!!

ஸ்ரீமதன் said...

ஆஹா ஆஹா அருமையான கவிதை.மிக அருமையான சொற்பிரயோகம்.அடடா அம்சம்.என்ன சொல்றீங்கன்னு மட்டும்தான் புரியலை.:-))))

லக்ஷ்மி said...

:-/
:-S

கதிர் said...

அப்பவே சொன்னேன்ல எலுமிச்சம்பழம் தேய்ச்சி குளிய்யான்னு :))

பொன்ஸ்~~Poorna said...

யார்கிட்டயோ அடிவாங்க முதுகைத் தயாரா வச்சிருக்காப்ல தெரியுது.. நான் எஸ்கேப்.. ;)

Anonymous said...

//பைத்தியமாகிறது தமிழ்பரப்பு//

இதை படிச்ச எனக்கும் பைத்தியம் புடிக்குற மாதிரி இருக்கு:D
நல்ல வேளை என்னை பத்தி ஒன்னுமே எழுதல.

//அடர்கானகங்களில் நீலியை புணர புலியின் குறிகளை வேண்டி மிருக நினைவுகளில் நிகழ் தொலைக்கிறான் அய்யனார்
//

no comments for this one

காயத்ரி சித்தார்த் said...

என்னமோ சொல்ல வரீங்கன்னு புரியுது.. என்னனு தான் புரியல.
:(

இவங்க எல்லாம் உங்களுக்கு ஆகாதவங்களா?

காயத்ரி சித்தார்த் said...

அய்யோ நானும் இருக்கேனா லிஸ்ட்டுல?

காயத்ரி சித்தார்த் said...

எல்லாரும் சொன்னப்ப நான் நம்பல... இப்ப நம்பறேன். :)

தமிழ்நதி said...

"பைத்தியமாகிறது தமிழ்ப்பரப்பு"

தமிழ்ப்பரப்பு மட்டுமா அய்யனார்...? தாங்களுந்தான் போல. ஆளாளுக்கு வம்புக்கு இழுக்கிறீங்க சாமி. நல்லாருங்க!

Ayyanar Viswanath said...

ஸ்நேகிதன் :)

வருத்தப்படாத வாலிபன் ( நல்ல பேரு)
அட விடுங்க இந்த பேர வச்சிட்டு அதிகம் யோசிக்க கூடாது.

Ayyanar Viswanath said...

லக்ஷ்மி என் ஸ்மைலி வேல செய்யல

தம்பி ஆமாய்யா வார கடைசில கொஞ்சம் அதிகமாயிடுது

Ayyanar Viswanath said...

பொன்ஸ் அடிக்கிற பார்டிலாம் ஃப்ரண்டாயிட்டாங்க வேற யாராவது புதுசா வந்தா உங்க பேரத்தான் சொல்வேன்

/இதை படிச்ச எனக்கும் பைத்தியம் புடிக்குற மாதிரி இருக்கு:D/

நோக்கமே அதான் துர்க்கா

Vaa.Manikandan said...

அப்பூ....என்ன அப்பு...நான் குளிர்ச்சியான இடங்களைத் தேடித்தானே அலையுறேன்...சரி நல்லா இருந்தீங்கன்னா அது போதும் :)

Ayyanar Viswanath said...

காயத்ரி
/எல்லாரும் சொன்னப்ப நான் நம்பல... இப்ப நம்பறேன். :) /

என்னன்னு @@

Ayyanar Viswanath said...

தமிழ் வம்பெல்லாம் இல்ல
இதே உலகத்தில மூழ்கி இருக்கிறதால வேற மேட்டர் கிடைக்கல அதான் :)

Ayyanar Viswanath said...

/சரி நல்லா இருந்தீங்கன்னா அது போதும் /

மணி சும்மாப்பா லுலுலூலூ :)

குசும்பன் said...

எனக்கு புரிஞ்சிடுச்சு:))))))))))
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்...

Ayyanar Viswanath said...

குசும்பரே என்ன புரிஞ்சது ? :)

ALIF AHAMED said...

wow

ப்ரியன் said...

/*வேற யாராவது புதுசா வந்தா உங்க பேரத்தான் சொல்வேன்*/

அடி வாங்க பாபா இருக்க கவலை ஏன்?

பா.க.ச,
14000 வது கிளை,
சென்னை 600028.

:)

ப்ரியன் said...

என்னமோ சொல்ல வரீங்கன்னு புரியுது ஆனா அது என்னனுதான் புரியல...

Ayyanar Viswanath said...

minnal thax

ப்ரியன்
தல அட்ரஸ் கொடுத்ததுக்கு நன்றி :)

லொடுக்கு said...

ஆமா, இவங்கெல்லாம் என்ன தப்பு செஞ்சாங்க? இப்படி திட்டியிருக்கீங்க.

Anonymous said...

ராசா.. இருந்து இருந்து தேவதேவன் இப்ப தான் "கண்ணில் படும் எல்லாவற்றையும் கவிதைக்குள் கொண்டுவரும் முயற்சி"ல ஈர்டுபட்டு, வெற்றிகரமா "தோசை", "எக்ஸாஸ்ட் ஃபேன்" ந்னெல்லாம் எழுதறாரு...



நீ இவ்வளவு சீக்கிரமே ஆரம்பிக்காத கண்ணு...


ச்சும்மா கிண்டல் பா... :) நீ நடத்து...

நந்தா said...

போர்ஹோவின் ஒற்றை முத்தத்தில் கர்வம் தொலைத்த அய்யனார் தன் பிரதிகளை தமிழ் பரப்பில் தேடியலைகிறான்.

முத வரியா இதை முதல்ல சேர்த்துங்க. பின்ன குசும்பனும், துர்காவும் சேர்ந்து போட்ட லிஸ்ட்ல உங்க பேருதான முதல்ல.

Ayyanar Viswanath said...

லொடுக்கு மற்றும் ப்ரியன்

தமிழ்நதிக்கு சொன்னதுதான் தொடர்ச்சியா இவங்களையே பாத்திட்டு இருக்கறதால அப்படியே எழுதிட்டேன்.கண்ணில் படுவதை எழுதுவது

Ayyanar Viswanath said...

சித்தார்த்

தேங்க்ஸ் மேன்..

Ayyanar Viswanath said...

நந்தா நீங்களும் அவிங்களோட சேர்ந்தாச்சா :)

பாரதி தம்பி said...

அப்ப ஆங்கில பரப்பு ஸ்டெடியா இருக்கா..?

Ayyanar Viswanath said...

/அப்ப ஆங்கில பரப்பு ஸ்டெடியா இருக்கா..? /

தெரியில தல நான் தமிழ் மட்டுமே தெரிஞ்ச அப்பாவி யாக்கும்

Jazeela said...

உங்கள பத்தி ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கீங்க சரி. மற்றவர்களை ஏன் திட்டி தீர்த்திருக்கீங்க. அடர்கானகத்து அறைக்குள்ளேயே அடைப்பட்டு கெடக்காம நாலு இடத்துக்கு போயி பாருங்க எழுத புதுசா விஷயம் கிடைக்கும். ;-)

குசும்பன் said...

அய்யனார் said...
நந்தா நீங்களும் அவிங்களோட சேர்ந்தாச்சா :)

இது தானாக சேர்ந்தகூட்டம்... எங்க பின்னாடி ஏத்தனை பேர் இருக்காங்க தெரியுமா?

மிதக்கும்வெளி said...

ok

Ayyanar Viswanath said...

நாலு இடத்துக்கு போயி பாருங்க எழுத புதுசா விஷயம் கிடைக்கும். ;-)

ஜெ இன்னும் லைசன்ஸ் வாங்கல அதுவர அடர்கானகமும் லாப்டாப் ம் தான் கதி தமிழ்மண மேட்டிஸ் ஆனதால வந்த விளைவுதான் இந்த கவிதை

Ayyanar Viswanath said...

நன்றி மிதக்கும் வெளி

(உங்க கிட்ட ஓ கே வாங்க தலகீழ நிக்க வேண்டி இருக்கே :))

Ayyanar Viswanath said...

/ஏத்தனை பேர் இருக்காங்க தெரியுமா?/

தெரியாதே..குசும்பரே போதும் நிறுத்துய்யா உன் ஆட்டத்த :)

காயத்ரி சித்தார்த் said...

//ச்சும்மா கிண்டல் பா... :) நீ நடத்து... //

யாருப்பா அது? இப்டியே உசுப்பேத்திட்டே இருங்க.. இவரும் புரியாம எழுதியே அதகளம் பண்ணிட்டு இருக்கட்டும்..
அடப்போங்கப்பா! :(

மிதக்கும்வெளி said...

'சுந்தரராமசாமி ரசிகைகளைத் தேடித்தேடிக் கொல்கிறான்'

ஏதோ எனக்கு சிகப்புரோஜாக்கள் கமல் மாதிரி ஒரு பிரமையாகுது.

குசும்பன் said...

"ஓடுகாலி"

இப்பதான் பாதி வீட்டுக்கு ஓடு போட்டு இருக்கிங்க அதுக்குள்ள ஓடு காலிங்கிறீங்க சரி சரி ஒழுங்கா செங்கல், மணல் எல்லாம் இருக்கான்னு பார்த்து சொல்லுங்க...
அப்புறம் செங்கல் காலி, மணல் காலின்னு சொல்லபுடாது ஆமா!!!

Ayyanar Viswanath said...

காயத்ரி ரத்தம் பாக்காம விடமாட்டிங்க போல


சுகுணா சரியா உள்வாங்கி இருக்கீங்க :)

குசும்பரே உங்க மேல்மாடியும் காலியாமே :)

கோபிநாத் said...

\\ அய்யனார் said...
காயத்ரி ரத்தம் பாக்காம விடமாட்டிங்க போல


சுகுணா சரியா உள்வாங்கி இருக்கீங்க :)

குசும்பரே உங்க மேல்மாடியும் காலியாமே :) \\


என்ன குசும்பரே மேல்மாடி காலியமே...வாடகை எவ்வளவுன்னு சொன்ன ரொம்ப உதவியாக இருக்கும் ;))

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இதென்ன கூத்து?! நல்லாத்தானிருக்கு. நடத்துங்க. நடத்துங்க. :)

-மதி

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

// தம்பி said...
அப்பவே சொன்னேன்ல எலுமிச்சம்பழம் தேய்ச்சி குளிய்யான்னு :))
//

:))

முபாரக் said...

இப்பத்தான் படிச்சேன்... சூப்பர்

கலக்குறீங்க

இந்த மாதிரி சுகுணாதிவாகர் ஒண்ணு எழுதியிருந்தார்ல

Ayyanar Viswanath said...

நன்றி மதி :)

ஆமாம் முபாரக் ஆனா அது எனக்கு புரியல :(

பொன்ஸ்~~Poorna said...

பஞ்சனை - பஞ்சணை இல்லையா?

Featured Post

test

 test