Monday, June 18, 2007

வலைப்பதிவர் சந்திப்பிற்க்கு கொண்டு போக மறந்த கால யந்திரம்

இவ்விழாவின் மொத்த பார்வையும் இங்கே

துபாய் வந்து ஒரு வருடமாகியிருந்தும் நண்பர்களைத் தவிர்த்து எவ்வித விழாக்களிலும் கலந்துகொண்டதில்லை.வார இறுதியை ஆரவாரமாய் கிடேசன் பார்க்கில் வலை நண்பர்களுடன் கொண்டாடிவிடுவதால் பதிவர் சந்திப்பின் மீதான இழப்புகள் ஏதுமில்லை.எனினும் நம் நக்கல் நாயகர்,ஜெஸிலா,பெனாத்தலார்,லொடுக்கு,மகேந்திரன்
இவர்களையெல்லாம் இன்னும் சந்தித்திராததால் ஆர்வமுடன் வெள்ளிமாலை இந்திய கவுன்சிலேட்டிற்க்கு தம்பியுடனும் வரவே மாட்டேன் என பிடிவாதம் பிடித்த அனானி நண்பருடனும் (ஏற்கனவே தம்பி இவரை ஒரு பட்டிமன்றத்திற்க்கு கூட்டி சென்று தமிழ் விழாக்கள் என்றாலே தலை தெறிக்க ஓடுமளவு செய்துவிட்டிருந்தார்)குறிப்பிட்ட நேரத்திற்க்கு முன்னதாகவே சென்றுவிட்டிருந்தோம்.

அரங்கில் தமிழ் பட்டாசாய் வெடித்துகொண்டிருக்க முதுகு காட்டி உட்கார்ந்தபடி அண்ணாச்சி கவிதையின் அடுத்தகட்ட நகர்வைப்பற்றி எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

பார்ப்பவர்கள் எல்லாரிடத்தும் கவிஞ்ர் தம்பி,கவிஞர் அய்யனார் என அறிமுகம் செய்து வைத்தார் பின்புதான் தெரிந்தது கவியரங்கத்திற்க்கு வருபவர்கள் எல்லாரையும் அவர் அப்படித்தான் அழைப்பாராம்

கிலியோடு வந்திருந்த தியாகு ஜெஸிலா வின் உரைநடை கவிதையில் உருகிப்போனார்

அரங்கம் அதிர பேச சென்ற அண்ணாச்சி தமக்கே உரித்தான பாணியில் வெளுத்து கட்டினார் அவரின் சொற்பொழிவிலிருந்து சில துளிகள்

* மு மேத்தா விற்க்கு சாகித்ய அகாதமி விருது மிக தாமதமாய் வழங்கப்பட்டிருக்கிறது அவரின் கண்ணீர் பூக்கள் வெளிவந்தபோதே இவ்விருது தரப்பட்டிருக்க வேண்டும்

* மேத்தாவிற்க்கு இவ்விருதை வழங்கியதின் மூலம் சாகித்ய அகாதமி விருது பெருமை அடைந்தது

* கால்நடைகளுக்கு தெரியுமா/கவிதைநடை-இது அவர் விருதுபெற்ற புத்தகத்தின் ஒரு சிறந்த கவிதை

* கவிதை மக்களுக்காக மட்டுமே எழுதப்பட வேண்டும்

* யதார்த்தம் மாந்திரீக யதார்த்தம் என்ற பெயர்களில் கவிதை எழுதுவது
யாருக்கு புரிகிறது?புரியாமல் கவிதை எழுதுவதால் யாருக்கென்ன பயன்?

இப்படி அண்ணாச்சி நிறைய உள்குத்துக்களோடு பேசி முடித்தார்.

தம்பி சிவாஜி படத்திற்க்கான டிக்கெட்டை ஒரு வாரமாக சட்டைப்பையில் வைத்துக்கொண்டு திரிந்ததின் பலனை அனுபவிக்க சிறிது நேரமே இருந்ததாலும்.எனக்கான ப்ரத்யேகப் புன்னகைகளை சுமந்திருக்கும் மது விடுதிப் பெண் நினைவில் வந்துபோனதாலும் உடனடியாக இடத்தை காலி செய்தோம்

பதிவர் ஜெஸிலா தற்செயலாய் போன் செய்ய வெளியில் வந்தபோது மூன்று நிமிடம் எங்களுக்காய் ஒதுக்கினார்.

அடுத்த முறையாவது தமிழ் விழாக்களுக்குச் செல்லும்போது பின்னோக்கி நகரும் என் காலயந்திரத்தை உடன் எடுத்துக் கொண்டு போவது என்கிற தீர்மாணத்துடன் காரிலமர்ந்தேன்.

27 comments:

Jazeela said...

//அடுத்த முறையாவது தமிழ் விழாக்களுக்குச் செல்லும்போது பின்னோக்கி நகரும் என் காலயந்திரத்தை உடன் எடுத்துக் கொண்டு போவது என்கிற தீர்மாணத்துடன் காரிலமர்ந்தேன்.// ரொம்ப தான் கூடிப் போச்சு அய்யனார் உங்களுக்கு. என்ன எதிர்பார்த்து வந்தீங்க தமிழ் கவியரங்கில்? ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா? அதுக்கு நீங்க துபாய் தமிழ் சங்க விழாவுக்குதான் போகணும்.
//பதிவர் ஜெஸிலா தற்செயலாய் போன் செய்ய வெளியில் வந்தபோது மூன்று நிமிடம் எங்களுக்காய் ஒதுக்கினார்.// நிறைய நேரம் ஒதுக்கும் அளவுக்கு நீங்க யாருமே ஒண்ணுமே பேசலையே? நான் தான் பட்டாசா வெடிச்சுக்கிட்டிருந்தேன். நீங்க என்னவோ அமைதியின் சொரூபமா நிண்டுக்கிட்டிருந்தீங்க. முன்ன பின்ன பேசியே இல்லாத கதிர் கூட நல்ல பேசினார். நீங்க நான் ரொம்ப கூச்ச சுபாவம்ன்னு பறைசாற்றிக்கிட்டீங்க. அனானிக் கூட நல்ல பேசினார் அவர் பெயரைக் கூட சொல்லி நீங்க அறிமுகப்படுத்தல. சரி பரவாயில்லை வேறு சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்காமலா போகும் அப்ப போதும் போதும்னு சொல்ற அளவுக்கு தாளிக்கிறேன் பாருங்க ;-)

Jazeela said...

//கவிதை மக்களுக்காக மட்டுமே எழுதப்பட வேண்டும்// மட்டுமேன்னு சொன்ன நினைவில்ல அப்படியே சொல்லியிருந்தாலும் தப்பில்லதான். அதுவும் மேடையில் வாசிக்கும் போது எல்லாருக்கும் புரியும் படி உரைநடைதான் வாசிக்க முடியும். உட்கார்ந்திருக்கும் அனைவரும் 'அய்யனாரா' இருந்துட்டா பிரச்சனையில்ல, புரியாததையும் சொல்லி படிமம் சொல்லி சரியா வருதா பாருங்கன்னு கேட்டிடலாம் ;-)

கதிர் said...

இதை நகைச்சுவை நையாண்டியில் வகைப்படுத்தியிருப்பதின் உள்குத்து என்ன?

கதிர் said...

இதை படிச்சி எனக்கு சிரிப்பே வரலயே! அப்புறம் எப்படி இது நையாண்டியாகும்?

யோவ் உம்ம போல பெருங்கொண்ட கவிஞ்சர் எல்லாம் இப்படிதான் செருக்கா பேசுவீங்க...

Anonymous said...

கால யந்திரம் தற்போது விற்பனைக்கு உள்ளது

கதிர் said...

என்னைப்பொருத்த வரைக்கும் ஒருத்தர் படித்தோ, மைக்ல உரக்க பேசியோ கவிதைய புரிய வைக்கவும், வளர்க்கவும் முடியாது.

அதெல்லாம் பொறுமையா உக்காந்து பேசற விஷயம். அனுபவிக்கனும்

கதிர் said...

ஜெஸிலாக்கா நல்லா கேளுங்க...
என்னமோ கால யந்திரமாமே.

இவரு முன்னோக்கி போக சொன்னது யாரு?

கதிர் said...

அண்ணாச்சி பதிவுக்கு எதிர்வினைப்பதிவா இது போட்டுருக்கிங்க.

இது கவிதை உலகுக்கே அவமானம்.

கவிஞ்சர்களே புறப்படுங்க.

Anonymous said...

யோவ் கால யந்திரக் கவுஞா,

///கால்நடைகளுக்கு தெரியுமா/கவிதைநடை-இது அவர் விருதுபெற்ற புத்தகத்தின் ஒரு சிறந்த கவிதை///

இப்படியாவே நான் சொன்னேன்?
பொதுவாகவே கவிதையைப் பத்தி சொல்லும்போது மேத்தாவின் பாணியிலேயே சொல்வதாக இருந்தால்... அப்படின்னு சொல்லிட்டு அந்த வரிகளைச் சொன்னேனே தவிர சிறந்த கவிதைன்னு சொல்லலை.

முன்னால உக்காந்திருந்த மாமி முதுகையே பாத்துக்கிட்டிருந்தா பேசுனது எப்படி காதுல விழும்? :-)

சாத்தான்குளத்தான்

கதிர் said...

//முன்னால உக்காந்திருந்த மாமி முதுகையே பாத்துக்கிட்டிருந்தா பேசுனது எப்படி காதுல விழும்? :-)//

அண்ணாச்சி...

அந்த மாமி ஏன் உங்கள மொறச்சி பாத்தாங்கன்னுதான் எனக்கு புரியவே இல்ல.

Ayyanar Viswanath said...

ஜெஸிலா

தண்ணி குடிங்க ..பதிவை எப்படி வகைப்படுத்தி இருக்கேன்னு பாருங்க
:)

Ayyanar Viswanath said...

/இதை நகைச்சுவை நையாண்டியில் வகைப்படுத்தியிருப்பதின் உள்குத்து என்ன? /

என் முன் பின்னூட்டத்தை பார்க்கவும்

Ayyanar Viswanath said...

/முன்னால உக்காந்திருந்த மாமி முதுகையே பாத்துக்கிட்டிருந்தா பேசுனது எப்படி காதுல விழும்? :-)/

நம்ம எல்லாருக்குமே ஆறுதலா இருந்த ஒரே விதயம்..இதப்போய் சபைல உடைச்சிட்டீங்களே அண்ணாச்சி :)

Ayyanar Viswanath said...

/அந்த மாமி ஏன் உங்கள மொறச்சி பாத்தாங்கன்னுதான் எனக்கு புரியவே இல்ல. /

எனக்கும் ..எனக்கும்..

Jazeela said...

அய், நீங்க கிடேசன் பார்கில போடுற தண்ணிய என்னையும் குடிக்க சொல்லி வற்புறுத்துறீங்களே உங்களுக்கே நல்லாயிருக்கா? இதை கேட்க ஆளே இல்லையா அய்யகோ!

Ayyanar Viswanath said...

/சிறந்த கவிதைன்னு சொல்லலை. /

சில கவிதைகளை நீங்க மேற்கோள் காட்டினீங்க ஒரு புத்தகத்தை விமர்சிக்க சிறந்த கவிதைகளை பயன்படுத்துவாங்க இல்லியா..அதான் நான் அப்படி நினைச்சிட்டேன்.

Ayyanar Viswanath said...

/இதை கேட்க ஆளே இல்லையா அய்யகோ! /

ஆஹா ..அவிங்களா நீங்க!!

Anonymous said...

/அந்த மாமி ஏன் உங்கள மொறச்சி பாத்தாங்கன்னுதான் எனக்கு புரியவே இல்ல. /

எல்லாம் அவங்களை விட்டுட்டு உங்க கூட கும்மியடிச்ச கோபமாத்தான் இருக்கும் :-)

மாமிங்களே இருந்தாலும் மாமாக்களுக்குத்தான் முதலிடம்.என் தாராள மனசை புரிஞ்சுக்குங்கப்பா.

சாத்தான்குளத்தான்

கதிர் said...

//இவ்விழாவின் மொத்த பார்வையும் இங்கே //

அப்ப உங்களின் இந்த பார்வை அரை குறையா?

இல்ல ஒரு பக்கம் சார்ந்ததா?

Ayyanar Viswanath said...

/இல்ல ஒரு பக்கம் சார்ந்ததா? /

ஒரு மணி நேரப் பார்வைதானய்யா
பத்து மணி வர விழா நடந்ததாம்

இளங்கோ-டிசே said...

அய்யனார், நள்ளிரவில் ஒரு புத்தகத்தையோ அல்லது திரைப்படத்தையோ தனியனாக இருந்து வாசித்தால்/பார்த்தால் இந்தக் கால இயந்திரத்திற்கு எல்லாம் தேவை இருக்காதே :-).

Ayyanar Viswanath said...

நிஜம்தான் டிசே :)

லொடுக்கு said...

//எனினும் நம் நக்கல் நாயகர்,ஜெஸிலா,பெனாத்தலார்,லொடுக்கு,மகேந்திரன்
இவர்களையெல்லாம் இன்னும் சந்தித்திராததால் //

அடடா, என்னைப் பார்க்க கூட நீங்க ஆவலா இருந்தது தெரியாம போச்சே. மன்னிக்கனும் உங்க ஆவலை நிறைவேற்றாததற்கு.

பின்னோக்கி நகரும் கால இயந்திரத்துடன் நீங்க வரும்போது சந்திக்கலாம். ;)

Ayyanar Viswanath said...

லொடுக்கு

கண்டிப்பா சந்திப்போம்..கால யந்திரம் லாம் சும்மா பூச்சாண்டி நாம தெளிவா சந்திப்போம் :)

Anonymous said...

Ada natharikala vatchkkaren ungkalai!!!

கதிர் said...

//Ada natharikala vatchkkaren ungkalai!!!//

மாமி இப்படியெல்லாம் தப்பா பேசப்படாது.

லொடுக்கு said...

இந்தப்படம் இன்னும் ஓடுதா?

Featured Post

test

 test