Thursday, June 14, 2007

போர்ஹோவின் முத்தம்



நேற்றிரவு தின்று செரித்த பிரதியொன்று
சில விலங்குகளை உயிர்ப்பித்துப்போனது
கட்டுக்களுடைத்து வெளிவந்த
புலியின் குரூரம் மட்டும் பிரதானமாயிருந்தது
வன்மம் கொண்ட அதன் கண்கள்
தீச்சுவாலையை கக்கியபடி
உச்சிவெயிலில் இலக்கற்று அலைந்தது..


இரை தேடித்திரியும் கானக விலங்கின் வேட்கைமிகுந்து
தன்னுடலில் அதீதமான வீச்சத்தை வெளியேற்றியபடி
நகரபுழுதிகளில் அடர்வு கொண்டு
எதிர்கொண்ட விலங்குகளை மிரண்டொளியச் செய்தது..


எதிர்கொள்ள எதுவுமற்ற வெளியில்
தன் பிரம்மாண்டத்தில் திளைத்த
அதன் வாலினைப் பற்றி இழுத்து
மார்புறத் தழுவி கூரிய பற்கள் தெறிக்க
உதடுகளில் முத்தமிட்டான்
ஜார்ஜ் லூயி போர்ஹோ

ஒரு முத்தத்தில் கரைந்துபோன புலியின் கர்வம்
அவன் உடல் நுழைந்து
புதைந்து கொள்ள இடம்

தே
டி
யலை

ந்

து

பின் தோற்று

அவன் மைப்புட்டியினுள் குதித்து
தற்கொலை செய்துகொண்டது.

66 comments:

காயத்ரி சித்தார்த் said...

ஆஆ! மறுபடி புலி வந்துடுச்சு!!

-ganeshkj said...

அய்யனார், கவிதை புரியலையே :(
கவிதையின் அர்த்தம் பற்றி ஒரு outline கொடுத்தீங்கன்னா நான் மறுபடியும் புரிந்து கொள்ள முயற்சி பண்ண வசதியாக இருக்கும்..

Ayyanar Viswanath said...

கணேஷ் !!

இதன் மய்யம் ஒரு படைப்பாளியின் கர்வத்தை இன்னொரு படைப்பாளி அழிப்பதுதான்

புலி படிமம் சரியா வந்திருக்கா ன்னு தெரியல :)

ALIF AHAMED said...

இதன் மய்யம் ஒரு படைப்பாளியின் கர்வத்தை இன்னொரு படைப்பாளி அழிப்பதுதான்
///

இந்த வரி எனக்கு புரிகிறது...:)

இவர் போன பதிவில் பின்னுட்டம் இட்டுள்ளார்...!!!!

கதிர் said...

இப்படியே யாருக்கும் புரியாம எழுதிகிட்டு இருங்க, அப்புறம் உங்களையே உங்களுக்கு புரியாம போயிடும்.

Anonymous said...

மின்னலு சீக்கிரம் வாய்யா இங்கன ஒரு கும்மிய போடுவோம்.

Anonymous said...

நீ என்னை பத்தி கவிதை எழுதினா மக்கள் ரசிப்பாங்க..
இந்த மாதிரி யாருக்கும் புரியாம எழுதினா
அடர்கானகத்து புலிக்கு கூட புரியாது.

சிட்டு வேணுமா கவிதைய போடு
ஹிட்டு வேணுமா சிவாஜிய போடு

வர்ட்டா

Anonymous said...

உன் ஆபிஸ்ல எனக்கொரு சீட்டு இருந்தா சொல்லுய்யா....

வேலையே இல்லாத வேலை வேணும்னு ரொம்பா நாளா வேண்டிகிட்டு இருக்கேன்.

Anonymous said...

அண்ணே பாக்கி தராம துபாய் வந்துட்டிங்களேண்ணே இது நியாயமா???

ALIF AHAMED said...

டெஸ்டிங்

ALIF AHAMED said...

இது வேலைக்காவாது

Anonymous said...

மொறப்படி குருவுக்கு மொய் வச்சாதான் இங்கன நடக்கற கும்மிக்கு வருவாராம்.

Anonymous said...

குரு வந்துட்டிங்களா....

Anonymous said...

அல்லாரும் வந்தாச்சா..ரெடி

Anonymous said...

//இது வேலைக்காவாது //

அதெல்லாம் மொய்ப்பணம் வைக்காததினால எங்கள் தல கும்மிகளின் பேரரசன் கோபித்துக்கொண்டு போகிறார். யாராவது மணியார்டர் அனுப்புவதாக உறுதி கூறினால் திரும்ப வருவார்.

Anonymous said...

Your comment has been saved and will be visible after blog owner approval.

எங்களுக்கு ஓனர் அப்ருவல் தேவையில்லை

Anonymous said...

ஏதேதோ புலிய பத்தி எழுதற எம்பேர்லயும்தான் புலி இருக்கு ஏன் என்ன பத்தி எழுதவே மாட்டேங்கற?

Anonymous said...

ம் சிக்கிரம் டயம் இல்லை நூறு அடிச்சிட்டு போகனும் ஆனி புடுங்க

Anonymous said...

அனானிங்க ஆதரவு உனக்கு இருந்துச்சின்னா
நீ பெரிய ஆளு
இல்லன்னா
நீ ஒரு
மு
ட்
டா
ளு

தெரிஞ்சிக்கோ புரிஞ்சிக்கோ

ALIF AHAMED said...

மொய் பணமே கமாண்ட் மடுரெஷனை தூக்குறதுதான்

Ayyanar Viswanath said...

மக்கா

நல்லா அடிச்சி ஆடுங்க

நல்லா இருய்யா மின்னலு
:)

Anonymous said...

மக்கா

நல்லா அடிச்சி ஆடுங்க

நல்லா இருய்யா மின்னலு
:)

//

அய்யனார் வால்க

Anonymous said...

என்ன நடக்குது இங்க..

Anonymous said...

காயத்ரி said...
ஆஆ! மறுபடி புலி வந்துடுச்சு!!
//

இனிமேல் தைரியமா வாங்க

ALIF AHAMED said...

டிம்மி said...
என்ன நடக்குது இங்க..
///

நீ யாரு புதுசாஆ

Anonymous said...

போர்ஹோவின் முத்தம்"
///

இதுக்கு என்ன அர்தம்

Anonymous said...

பாவாஜி said...
அனானிங்க ஆதரவு உனக்கு இருந்துச்சின்னா
நீ பெரிய ஆளு
//

பாவாஜி கால காட்டுங்க

ALIF AHAMED said...

மின்னல் said...
ம் சிக்கிரம் டயம் இல்லை நூறு அடிச்சிட்டு போகனும் ஆனி புடுங்க
//

யாருய்யா இது என்ன கேட்காம நூறுனு சொன்னது

இது இப்போதைக்கு மட்டும்னு சொல்லனும் புரியுதா..:)

Anonymous said...

நானும் வாரவா ஆட்டத்துக்கு

Anonymous said...

-ganeshkj said...
அய்யனார், கவிதை புரியலையே :(
//

அய்ஸ் அட்ரஸ் சொல்லு தூக்கிடுவோம்


அய்ஸ்
கொல வெறி படை
கிடேஷன் பார்க்

Anonymous said...

புலி படிமம் சரியா வந்திருக்கா ன்னு தெரியல
//

நீ சொன்னா எல்லா படிமமும் சரியா வரும் வரனும்

கதிர் said...

//நானும் வாரவா ஆட்டத்துக்கு //

யார்டா நீ?

ALIF AHAMED said...

கும்மி விரும்பி said...
மின்னலு சீக்கிரம் வாய்யா இங்கன ஒரு கும்மிய போடுவோம்.
///

உனக்கு ஏன் இத கொல வெறி

எங்க போயிட்ட நீ ஹி ஹி

Anonymous said...

தம்பி said...
//நானும் வாரவா ஆட்டத்துக்கு //

யார்டா நீ?
//

ஐ தம்பி வந்தாச்சே ம் ஆடுங்க

Anonymous said...

போர்ஹொ கொடுத்தான் முத்தம்
விடிஞ்சதும் தெளியும் பித்தம்
அங்க என்னடா சத்தம்
கொடலபுடுங்கதுடா நாத்தம்
உனெக்கேண்டா இம்புட்டு ஏத்தம்??

Anonymous said...

தம்பி said...
நானும் வாரவா ஆட்டத்துக்கு
//

உங்களுக்கு இல்லததா
விரும்பினா
ஆடுங்க...:)

Anonymous said...

தனிமையின் இசை
//

ரொம்ப தனிமை தேடி போகத தல ஒங்கள நம்பிதான் கும்மி அடிக்கிறோம்

Anonymous said...

நீ கவிதை எழுதினா பொண்ணுங்க உன்ன சுத்தி வருவாங்க...
பொண்ணுங்க உன்ன சுத்தினா நீ
கவுஜனாகி விடுவாய்.

அதிகமா கவுஜை எழுதனவனும்
அதிகமா கவுஜ படிச்சவளும் உருப்பட்டதா சரித்திரமே இல்ல...

காலைக்காட்ட விரும்பாத காவாஜி

Ayyanar Viswanath said...

எத்தன பேர்யா இருக்கிங்க
அடப்பாவி தமிபி நீயுமா?@@@

Anonymous said...

தம்பி said...
இப்படியே யாருக்கும் புரியாம எழுதிகிட்டு இருங்க, அப்புறம் உங்களையே உங்களுக்கு புரியாம போயிடும்.
///

இதை நாங்க் வண்மையாக கண்ணடிக்கிறோம்

வாபஸ் வாங்காவிட்டால் கடூம் பின்னுட்டவிளைவுகள் ஏற்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொல்ல்கிறோம்

Anonymous said...

இந்த கவிதையை படித்ததும் எனது பத்தாம் வகுப்பு கணக்கு வாத்தியார் ஞாபகத்துக்கு வந்துவிட்டார்.
ர்ர்ர்ரொம்ப நல்ல மனிதர் ஆனால் பாடம் நடத்தினால் ஒன்றும் புரியாது.
உங்கள் இடுகைகளை படித்தால் அவரின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

Anonymous said...

அதிகமா கவுஜை எழுதனவனும்
அதிகமா கவுஜ படிச்சவளும் உருப்பட்டதா சரித்திரமே இல்ல...
//

மகளிர் அணி சார்பாக இந்த பின்னுட்டத்தை கண்டிக்கிறோம்

நாங்களும் கவுஜ எழுதுவோம்
உங்களை கிறுக்கனாக்க

கதிர் said...

//இதை நாங்க் வண்மையாக கண்ணடிக்கிறோம்

வாபஸ் வாங்காவிட்டால் கடூம் பின்னுட்டவிளைவுகள் ஏற்படும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொல்ல்கிறோம் //

நீங்க மென்மையா கண்டிச்சாலும் வாபஸ் சரி கண்ணடிச்சாலும் சரி ஆவறது ஆவட்டும்.

ALIF AHAMED said...

வாலினைப் பற்றி இழுத்து
மார்புறத் தழுவி கூரிய பற்கள் தெறிக்க
உதடுகளில் முத்தமிட்டான்
ஜார்ஜ் லூயி போர்ஹோ
//

அவனா நீயீ

Ayyanar Viswanath said...

சீடன்,ரகிகர்,கொலவெறிபடை அடப்பாவிகளா எவ்ளோ நாளா இந்த ரத்த வெறி

Anonymous said...

சொற்களுக்கிடைப்பட்ட மெளனம் அபாயம் நிறைந்தது
///

இதை எழுதியது யார்

Anonymous said...

அய்யனார் said...
சீடன்,ரகிகர்,கொலவெறிபடை அடப்பாவிகளா எவ்ளோ நாளா இந்த ரத்த வெறி
//

எங்க அய்யனாரு வேட்டைக்கு கிளம்பிடுச்சி
:)

Anonymous said...

நீங்க நிறைய கவிதை எழுதணுங்க.

கும்மியவன்

கதிர் said...

50

கதிர் said...

இதாண்டா 50

Anonymous said...

தம்பி said...
இதாண்டா 50
//

வாழ்த்துக்கள்

Anonymous said...

அனானிகளே எல்லாரும் தத்தம் பணிகளுக்கு திரும்புங்கள். அடுத்த கவிதையில் சந்திப்போம்.

நிறைய கவிதைகள் எழுதுவதாக அய்யனார் உறுதி அளித்துள்ளார்.

நம்புவோமாக

Ayyanar Viswanath said...

இதை எழுதியது யார்

நான் இல்ல பாதுகாவலா

Anonymous said...

என்ன அதுக்குள்ள 50 ஆஆஆ

Ayyanar Viswanath said...

/நிறைய கவிதைகள் எழுதுவதாக அய்யனார் உறுதி அளித்துள்ளார்.
நம்புவோமாக /

நீ மட்டுந்தாய்யா நல்லவன்

Anonymous said...

அனானி பெருந்தல said...
அனானிகளே எல்லாரும் தத்தம் பணிகளுக்கு திரும்புங்கள். அடுத்த கவிதையில் சந்திப்போம்.

நிறைய கவிதைகள் எழுதுவதாக அய்யனார் உறுதி அளித்துள்ளார்.

நம்புவோமாக
//

நீ யாரு எடையில அய்ஸ சொல்ல சொல்லு
இங்கு கும்மி அடித்தாயா
இல்ல புலியை பிடிக்க உதவி செய்தாயா
நீ சொல்லி நாங்க எப்படி கேட்பது..:)

Anonymous said...

போர்ஹோவின் முத்தம்"
//

கஸ்மாலம் பல்ல வெளக்கல

Jazeela said...

அய்யனார் கவிதைய விட பின்னூட்டங்கள் பின்னுது ;-)

57 பேர் இரசித்திருக்கும் கவிதையை நான் பார்க்காமல் விட்டுவிட்டேன் என்று ஓடோடி வந்தா... :-)

ஆனா கவிதை நல்லாவே இருக்கு.

Anonymous said...

இங்கே கும்மி நடைபெறுகிறது என்று தமிழ்மணம் ம திரட்டி மூலம் அறிந்தேன்...

நன்று...

துபாயில் கடுமையான கொலைவெறிப்படை ஒன்று உருவாகிவிட்டது என்பதற்கு அத்தாட்சி அபி அப்பா மற்றும் கோபிநாத்தின் பதிவும், இந்த பதிவும்..

நடத்துங்கய்யா..!!!

Anonymous said...

வாலினைப் பற்றி இழுத்து
மார்புறத் தழுவி கூரிய பற்கள் தெறிக்க
உதடுகளில் முத்தமிட்டான்
ஜார்ஜ் லூயி போர்ஹோ
//

// அவனா நீயீ ///

சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

டேய் நீ உருப்புட மாட்டே

Anonymous said...

நீ முதல்ல உருப்புடு. அப்புறமா நான் உருப்புடுறதை பத்தி சொல்லலாம்.

Anonymous said...

அம்பி நீ ஏன் உருப்புடப்போற

Anonymous said...

//////இதன் மய்யம் ஒரு படைப்பாளியின் கர்வத்தை இன்னொரு படைப்பாளி அழிப்பதுதான்

புலி படிமம் சரியா வந்திருக்கா ன்னு தெரியல :) ////

ஏய் நீ என்ன சொல்ல வரே ? ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே. நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கே. ஷுகாமுகாயவித்மஹே

-ganeshkj said...

நன்றி அய்யனார், இப்போது கொஞ்சம் புரிவது போல் இருக்கிறது :) "புலி" என்ற படிமம் சரியாக வந்திருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது.
உங்கள் கவிதையிலாவது "புலி" அதன் கர்வம் கரைந்து புதைந்து விட்டதே!! இலக்கிய சர்ச்சைகள், சண்டைகள், இலக்கியம் தாண்டிய தனிமனித விமர்சனங்கள் எல்லாம் கடந்து நிகழ்காலத்திலும் அது நடக்கட்டும் :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அய்யனார்,

சொல்றேன்னு கோவிக்காதீங்க.

கண்மணியக்காவப்போல கும்மிக்குத் தனிப் பதிவொண்ணைத் தயார் பண்ணிருங்களேன்.

இந்த மாதிரி இடுகைகள்ல கும்மியடிச்சா நல்லாவாருக்கு.

கவிதையைப்பற்றி.. நோ கமெண்ட்ஸ். :)

-மதி

Featured Post

test

 test