Sunday, June 3, 2007

ஆற்றின் உட்பரப்பு




சுழியிட்டு நுரை தளும்ப
ஓடிக்கொண்டிருக்கும்
இவ்வாற்றில் நேற்றிரவு
ஒரு பிணம் மிதந்து சென்றது.

கருக்கலில் குளிக்க வந்த
நடுவயதுக்காரி
நீரின் குளுமையில் சிலிர்த்து
நழுவவிட்ட பச்சை நிற இரவிக்கை
தனக்கான இரகசியங்களைக்
கரைத்தபடி சுழன்று கடந்தது

முற்பகல் தென்றலுக்கு
கரையோர கொன்றை மரங்களிலிருந்து
உதிர்ந்த சிவப்பு நிறப் பூக்கள்
நெருப்பினை நினைவூட்டியபடி
மேற்பரப்பில் விரிந்தும் குவிந்துமாய்
வண்ணங்களைக் கரைத்து நிறமிழந்தது

உச்சி வெயிலில் நீருக்கு குனிந்த
செம்மறியாட்டு குட்டி மட்டும்
பிரதிபலித்த தன் பிம்பத்தினூடாய்
உற்று நோக்கியது
அடிப்பரப்பின் தணிவுகளை

தணிந்த மாலையில்
திரும்பிக் கொண்டிருந்த சிறுவன்
பட்டுத் தெறிக்கும்படி ஒன்றுக்கிருந்து
புன்முறுவலோடு ஓடிப்போனான்

காட்சிகளை விழுங்கியபடி
சலனமற்று விழித்திருக்கும்
ஆற்றின் உட்பரப்பு

17 comments:

காயத்ரி சித்தார்த் said...

ஹை! முதல் பின்னூட்டம் நான் தானா! கவிதை நல்லாருக்கு. ஆனா யாரோட சாயலோ தெரியுதே?! :))
படம் செம கலக்கல்.. கவிதைய விட அது நிறய பேசுது.

(ஹேய் எல்லாரும் ஓடி வாங்க! அய்யனார் புரியற மாதிரி ஒரு கவிதை எழுதிருக்கார்... :))))

ALIF AHAMED said...

சூப்பர் கவிதை (கவுஜ இல்லை)

அய்ஸ் இந்த கவிதை யார் எழுதியது ...???

//
ஹேய் எல்லாரும் ஓடி வாங்க! அய்யனார் புரியற மாதிரி ஒரு கவிதை எழுதிருக்கார்... :))))
//

ரிப்பிட்டே

மஞ்சூர் ராசா said...

காயத்ரி சொல்வது போல சமீபத்தில் படித்த ஒரு கவிதை ஏனோ நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

தமிழ்நதி said...

'ஆற்றின் உட்பரப்பு' 'நதியின் ஆழத்தில்'போல இருக்கிறது அய்யனார். இரண்டு பேரும் ஒரே விதமாகச் சிந்திக்கிறோமோ... சாயலற்றதாக இருப்பது சாத்தியமில்லையே. எனக்கு ஆறு,நதி,கடல்,குளம்,மழை,ஏரி,நீர்வீழ்ச்சி என நீரின் வடிவங்கள் எல்லாம் பிடிக்கும். உங்களுக்கு மேலதிகமாக மற்றுமோர் 'நீர்'வடிவம் பிடிக்குமென நினைக்கிறேன் :)

Ayyanar Viswanath said...

காயத்ரி
பாசக்கார குடும்பத்தில் பேரை பதிவித்து கொள்ளவும்..அபிஅப்பாவை அணுகவும் :(

Ayyanar Viswanath said...

/அய்ஸ் இந்த கவிதை யார் எழுதியது ...???/

சத்தியமா நான் தான் மின்னலு

Ayyanar Viswanath said...

நன்றி கப்பி

Ayyanar Viswanath said...

மஞ்சூர் சாயல்களை தவிர்க்க முடியறதில்லங்க.ஆனா முயற்சிக்கிறேன்
மிகவும் நன்றி

Ayyanar Viswanath said...

/மேலதிகமாக மற்றுமோர் 'நீர்'வடிவம் பிடிக்குமென நினைக்கிறேன் :) /

தமிழ் கர்ர்ர்ர்.புர்ர்ர்ர்

Anonymous said...

//சுழியிட்டு நுரை தளும்ப
ஓடிக்கொண்டிருக்கும்
இவ்வாற்றில் நேற்றிரவு
ஒரு பிணம் மிதந்து சென்றது//

scary starting

//கருக்கலில் குளிக்க வந்த
நடுவயதுக்காரி
நீரின் குளுமையில் சிலிர்த்து
நழுவவிட்ட பச்சை நிற இரவிக்கை
தனக்கான இரகசியங்களைக்
கரைத்தபடி சுழன்று கடந்தது//

no comments for this one

//முற்பகல் தென்றலுக்கு
கரையோர கொன்றை மரங்களிலிருந்து
உதிர்ந்த சிவப்பு நிறப் பூக்கள்
நெருப்பினை நினைவூட்டியபடி
மேற்பரப்பில் விரிந்தும் குவிந்துமாய்
வண்ணங்களைக் கரைத்து நிறமிழந்தது
//
nice narration pa

//உச்சி வெயிலில் நீருக்கு குனிந்த
செம்மறியாட்டு குட்டி மட்டும்
பிரதிபலித்த தன் பிம்பத்தினூடாய்
உற்று நோக்கியது
அடிப்பரப்பின் தணிவுகளை//
semari aadu ithu varaikum naan paarthathe illai.nice lines


//தணிந்த மாலையில்
திரும்பிக் கொண்டிருந்த சிறுவன்
பட்டுத் தெறிக்கும்படி ஒன்றுக்கிருந்து
புன்முறுவலோடு ஓடிப்போனான்

காட்சிகளை விழுங்கியபடி
சலனமற்று விழித்திருக்கும்
ஆற்றின் உட்பரப்பு //

unique poems..good one...

Anonymous said...

அய்யனார் said...

சத்தியமா நான் தான் மின்னலு
////

நீங்க தான் இதை எழுதியது...:)

கானகத்தில் துயில் கொண்ட புலியை எழுப்பி விட்டது யாரு...???


M

Anonymous said...

//கானகத்தில் துயில் கொண்ட புலியை எழுப்பி விட்டது யாரு...???//

நான்தான் மின்னல்!!

Anonymous said...

Most of ur poems are thought provoking and contemplative.

But i had to spend enough time with each and every line to satisfy myself with some meaning, still left in confusion of what u wanted to convey.
but still u dont have to compromise, since i am struggling to understand. - ranjith

Ayyanar Viswanath said...

ranjith

thank you for your time..

This is one form of poetry called 'padimam' its up to you..the poetry gives you freedom to dicide ,to understand,to conclude..

or u want to know my original views u can ping me at any time
Partucularly this poem i said about our inner form ..the mind..its remains stable ..its calm ..its witnessing the things..thats the core of this poem..the river is called padimam

கண்மணி/kanmani said...

நல்லாயிருக்கு.
காயத்ரி சொன்னமாதிரி என்னை மாதிரி மண்டுகளுக்கும் புரியும் எளிய நடை.

Anonymous said...

i did not compare the river with mind but i know a person who has taken river as watching with silence the whole civilization and growth of humans uptoday life.

even kalki used a comparison of moon observing the after effects of the war at vaathabi in sivakaamiyin sabatham.
but in both the cases the time scales are much longer so i thought u also have done that in ur poem.
i did not think of the mind witnessing the changes in a small time scale.
ur padimam has made a padimam into my mind too. - ranjith

Ayyanar Viswanath said...

thanks ranjith

டீச்சர் ஏன் ? ஏன் ???
இவ்வளவு தன்னடக்கம்???..தன்னடக்க செம்மல் னு பட்டம் ஏதாவது கொடுக்கனுமா :)

Featured Post

test

 test