தனிமையின் இசை பெருகி வழிய ஆரம்பித்துவிட்டதால் எங்கே முங்கி விடுவோமோ என பயந்து சக சாகாக் களிடம் பேச்சு கொடுத்து பார்த்தேன் பற இல்லைனா போளோ என்று பதில் வர அட ஆள உடுங்கப்பா என்று orkut பக்கம் ஓரம் கட்டினேன் அட ..அட .அடேடே orkut தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எல்லாம் பரவி இருக்கிறது.பள்ளி மற்றும் கல்லூரி பட்டாம் பூச்சிகளும் சிங்க குட்டிகளும் மொய்த்து கிடக்கிறார்கள் ஒரு தனி உலகம் தனி மொழி இளமையின் வண்ணம் பூசிய ஓர் அற்புத உலகம்
gtg,tc,fyn,whasup,thof , இதெல்லாம் orkut ன் மந்திர சொற்கள் பெரும்பாலும் எல்லா உதடுகளும் முணுமுணுக்க கூடிய வார்த்தைகள் நமக்கு வயசாயிடுச்சோ அப்படின்னு சின்னதா ஒரு பயம் அடிமனசுல ..இருந்தாலும் தைரியமா களத்துல இறங்கினேன் என்ன ஆச்சரியம் எல்லா பட்டம் பூச்சிகளும் reading books அப்படின்னு passion ஆ சொல்லி இருக்காங்க அப்படியே உச்சி குளிர்ந்து போச்சு..ஆஹா இதோ வருது ஆரோக்கியமான அடுத்த தலைமுறை ன்னு பூரிப்பு அடங்கரத்துக்குள்ள மக்களே சின்னதா ஒரு விஷயம் நெருடுச்சு..என்னடா எல்லாம் சொல்லி வச்சாமாதிரி இந்த 4 புத்தகத்தையே சொல்லி இருக்காங்க அப்படின்னு மைல் டா ஒரு சந்தேகம்.
அது என்ன புத்தகங்கள் னா THE ALCHEMIST, davincicode, sidney sheldon all books, dan brown all books நானும் எப்படி எப்படியோ தேடி பாக்கறேன் பெரும்பாலும் எல்லாம் இதைத்தான் எழுதி இருக்காங்க நான் கொஞ்சம் positive ஆண ஆளு சரி நாமாத்தான் ரொம்ப பின் தங்கித்தோம் போலன்னு the alchemist புத்தகம் படிச்சேன் எலே மக்கா நான் என்னாதத சொல்றது... ஏதாவது சொன்ன யாராவது அடிக்க வந்துருவங்காளோ ன்னு பயம் வேற இப்படித்தான் எசக்கு பிசகா ஒரு பட்டாம் பூச்சிக்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டேன்.
அட ஒண்ணும் இல்லீங்க இவ்ளோ ENGLISH BOOKS படிக்கிறீங்களே ஒரே ஒரு தமிழ் புஸ்தகம் படிக்க கூடாதா அப்படின்னு ஒரு ஆதங்கதுல 10 ENGILSH புஸ்தகம் படிச்சா ஒரே ஒரு தமிழ் புத்தகம் படிக்க கூடாதா அப்படின்னு கேட்டு தொலைச்சேன் போறத வேளை நண்பர்களே ஒரு மிகப்பெரிய மடல் ..கடுமையா திட்டி அதுல சில வரிகளை இங்கே கொடுக்கிறேன்
"உலகத்தின் புனித எண்(Divine Number):- 1.618 என்பது தங்களுக்கு தெரியுமா, இவ்வெண்ணின் மகத்துவம்?ஏன் என்று தெரியுமா? அப்படி தெரியுமென்றால்.... எந்த தமிழ் நூலை படித்து தெரிந்து கொண்டீர்கள்"
DAN BROWN IS MARVELLOUS!!!! U KNOW HIS KNOWLEDGE OF WRITING BOOKS, HIDING THINGS, PUZZELS, WORD PLAYS, SECURITY SYSTEM, NETWORKS, CODING, DECODING(EVERYTHING THING IS POSSIBLE, IMPOSSIBLE JUST TAKES LONGER), CIPHER TEXT, TRANSLATORS, SCIENCE, ACTION AND REACTION, MATERIALS, SOMETHING FROM NOTHING FORMULA, HISTORY, BIBLE KNOWLEDGE(ITS NOT A BOOK FROM SKY, ITS WRITTEN BY HUMAN HANDS), RESEARCH, ILLUMINATIES, SECRET COMMUNITY, PRIORY OF SION, MARY MAGDALENE, AMBIGRAM TECHNIQUES ? STILL............ MORE..........
ஐயகோ என் தமிழ் தாய் ஈன்ற மக்களே dan brown என்ற எழுத்தாளர் எழுதுவது fiction அதுவும் thriller fiction படிக்க சுவாரஸ்யம் வேண்டும் என்பதற்காக இவர்கள் சேர்க்கும் பிட்டூகளை ஏதோ உலகின் வேதம் என்பது போல் நினைத்து கொள்ளாதீர்கள் நம் தமிழில் ராஜேஷ் குமார் சுபா மற் றும் மூன்றந்தார துப்பறியும் நாவல் எழுதும் எழுத்தாளர்களுக்கும் dan brown க்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
இந்த விளம்பர மோகம் எங்கிட்டு செல்லுமோ எம் தமிழ் மக்களை...
"அது இருக்கட்டும் the alchemist பத்தி ஒண்ணுமே சொல்லலியே " ..
அட ஆள உடுங்கப்பா வாங்குன வரைக்கும் போதும்
ஆனால் ஒன்று நமது தமிழ் வலைப்பதிவில் மின்னும் அத்தனை பட்டம் பூச்சிகளுக்கும் தனியே ஒரு விழா எடுக்கலாம் அனைவருக்கும் ஒரு ஜே !!
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
11 comments:
கொஞ்சம் தமிழில் சொல்லுங்கப்பா...
ஒண்ணுமே புரியலெ....
This is good analysis article and true abt this girls.
உண்மை தான் :) டான் பிரவுனுக்குத் ராஜேஷ் குமார், சுஜாதா மர்மக் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை!
(கொஞ்சம் தமிழில் சொல்லுங்கப்பா...
ஒண்ணுமே புரியலெ.... )
:))) தமிழிலேயே சொல்ல முயற்சிக்கிறேன்..வருகைக்கும் விமர்சனத்திற்க்கும் நன்றி
((This is good analysis article and true abt this girls. ))
thanks pa
(
உண்மை தான் :) டான் பிரவுனுக்குத் ராஜேஷ் குமார், சுஜாதா மர்மக் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை )
பொன்ஸ் ( இப்போ சரியா வருது :))
நன்றி..சின்னதா ஒரு பயம் இருந்தது யாரையாவது இந்த பதிவு காயப்படுத்துமோ ன்னு ..இப்போ இல்லை..
தேவையா இதெல்லாம்! சொன்னா மட்டும் கேட்டுற போறாங்களா? :)
thozhare,
mudhalil enaku vendiyathu oru mannipu, indha inaya thalathil ennal tamizhil pathivu seyya katru kollavillai,irundhalum en karuthukalai solliye aaga vendumendra ekkam mattum, thozhare naanum alchemist paditha nangai thaan, aanal sadhguru vin athanaikum aasaipadu,nam jayakanthanin thogupugalum,thabu shankarin kavithaigalil irukum jeevanai verethilum kandathu illai, ippothu ungal varigalail oru uyirottam, tamizhin isai thozhare
arulmozhi
ஜீப்பர் பதிவு அய்யனார் :)
//டான் பிரவுனுக்குத் ராஜேஷ் குமார், சுஜாதா மர்மக் கதைகள் எவ்வளவோ பரவாயில்லை!//
ஓஹ், அப்படியும் ஒரு எழுத்தாளர் இருக்காரா? தெரிய வெச்சதுக்கு நன்றிங்கோவ்வ்.
இப்ப ORKUTடா!! வெளங்கிரும் ;)
எல்லா இடங்களிலும் இது போன்ற பீட்டர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதே நேரம் கல்கி, சுஜாதா போன்றவர்களுக்கான குழுமங்களும், மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களும் உள்ளன. எனவே அவற்றைத் தேடி சேர்ந்து கொண்டீர்களானால் தமிழ் நூல்களின் தொகுப்பு, விவாதம் என எல்லாமே உண்டு.
எல்லோரும் ஆங்கில நாவல்களின் பின்னால் செல்வதில்லை. ராஜேஸ்குமார் நாவல்களை மிஞ்சிய த்ரில்லர் நாவல்களா வேண்டும்??
//அது இருக்கட்டும் the alchemist பத்தி ஒண்ணுமே சொல்லலியே " ..
அட ஆள உடுங்கப்பா வாங்குன வரைக்கும் போதும்//
:-)))))))))))
Post a Comment