ஹாய் ஹாய் ஹாய் !!!
வணக்கம் உலக தமிழ் நெஞ்சங்களே !!!!!
எல்லா தடைகளையும் தாண்டி இதோ ப்ளாக்க தொடங்கிவிட்டேன் இங்கே தடைகள் என குறிப்பிட்டிருப்பது பயம்,அறியாமை அதோடு போனால் போகிறது பாவம் இணைய தமிழர்கள் என்ற நல்லெண்ணமும் கூட.நான் துபாய் வந்தபின்புதன் இப்படி ஒரு உலகம் இருப்பது தெரிய வந்தது அதற்கு முன்பு வரை கம்ப்யுடடர் என்பது என்னைப்பொருத்தவரை கணக்கு கருவி அவ்வளவுதான்.இணையத்தை எப்படி பாவிததிருப்பேன் என்பதை நான் சொல்லவே தேவையில்லை.
முதலில் கண்ணில் பட்டது சித்தார்த்தி ன் வலைப்பதிவுதான் அட இவங்க நம்ம ஆளுங்க போல இருக்கேண்ணு ஐக்கியமாயாச்சு பொன் ஸ் வெட்டி மதி போன்ற நண்பர்களின் உதவி பதிவுகளை நின்றபடியே படித்து ( நமக்கு புரியாத விஷயமெல்லம் நின்னுக்கிட்டு படிச்சாததான் ஏறும்) நேற்று கைவசம் இருந்த மூன்று கவிதை களையும் போட்டாச்சு.
விஷயத்திற்கு வருகிறேன்..இது ஏதோ அறிமுகப்படலம் என்பதால் இப்படி எல்லோருக்கும் புரியும் தமிழில் எழுதித் தொலைக்கிறேன் மத்தபடி யாருக்குமே புரியாத பின் நவீனத்துவம் மேஜிக்கல் ரியலிசம் நியோ ரியலிசம் அப்படின்னு இணைய தமிழ் மக்களை கததிகலங்கவைக்க போகிற முஸ்தீபு களுடன் வந்துள்ளேன். உதாரணத்திற்க்கு என் அடுத்த பதிவு பற் றிய முன் குறிப்பு ( புதுசா இருக்கு இல்ல!)
பா சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி - ஒரு அறிவுஜீவியின் மரணம்
ஒரு கோணம் இரு பார்வை -அகிரா குரசோவ வின் THE LOWER DEPTHS மற் றும் ஆல் பிரட் ஹீட்ச்காக்கின் the rope
இன்னொரு முக்கியமான விஷயம் என்னை விமானத்தில் ஏர்றிவிட்டு என் நண்பர்கள் அனைவரும் கூடி கும்மியடித்தார்கள் என்று செய்தி இனி ஒரு வருடத்திற்கு bicycle theif கதை சொல்றேன்னோ பாப்லோ நெருடா சில்விய பிழாத் னு புரியாத பேர் சொல்லி நம்ம உயிரா வாங்கரத்துக்கு ஆளே இல்லன்னு ரொம்ப சந்தோசப்பட்டா ங்கலாம் அவங்களை இனி ஒண்ணும் பண்ணமுடியாது அப்படிங்க்றதால அப்பாவி தமிழர்களே உங்களை குறி வ்ச்சு இருக்கேன் இம்சையரசி idlivadaai சங்க நண்பர்கள் போன்ற light heart காரர்கள் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது
( over build -up i கொடுத்துட்டமோ!!..இருக்கட்டும் பாத்து கிடாலாம் ..!!! )
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
-
இவ்வருட புத்தகத் திருவிழாவிற்கு என்னுடைய மூன்று புத்தகங்களை வம்சி வெளியிடுகிறது. தனிமையின் இசை, நானிலும் நுழையும் வெளிச்சம், உரையாடலினி என்க...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
15 comments:
//மத்தபடி யாருக்குமே புரியாத பின் நவீனத்துவம் மேஜிக்கல் ரியலிசம் நியோ ரியலிசம் அப்படின்னு இணைய தமிழ் மக்களை கததிகலங்கவைக்க போகிற முஸ்தீபு களுடன் வந்துள்ளேன்.//
அச்சிச்சோ.. சரி, சரி, என்னைப் போல ஆட்களுக்கும் புரிகிறமாதிரி எழுதினா சரி தான் :)
வாங்க வாங்க :)
ஆஹா !! முதல் வரவேற்பே நட்சத்திர வரவேற்பா..ரொம்ப நன்றி பொன் ஸ்
//இன்னொரு முக்கியமான விஷயம் என்னை விமானத்தில் ஏர்றிவிட்டு என் நண்பர்கள் அனைவரும் கூடி கும்மியடித்தார்கள் என்று செய்தி இனி ஒரு வருடத்திற்கு bicycle theif கதை சொல்றேன்னோ பாப்லோ நெருடா சில்விய பிழாத் னு புரியாத பேர் சொல்லி நம்ம உயிரா வாங்கரத்துக்கு ஆளே இல்லன்னு ரொம்ப சந்தோசப்பட்டா ங்கலாம் அவங்களை இனி ஒண்ணும் பண்ணமுடியாது அப்படிங்க்றதால அப்பாவி தமிழர்களே உங்களை குறி வ்ச்சு இருக்கேன் இம்சையரசி idlivadaai சங்க நண்பர்கள் போன்ற light heart காரர்கள் கொஞ்சம் தள்ளி இருப்பது நல்லது//
அட நீங்கபாட்டுக்கு எழுதுங்க. எழுதலைன்னாதான் நாங்கல்லாம் ஏன்னு கேட்டு கும்முவோம். ;)
நிறைய எழுதுங்க அய்யனார்.
சித்தார் பதிவிலிட்டிருந்த பின்னூட்டத்தைப் பிடிச்சுக்கிட்டே வந்தேன்.
வரவேற்புகளுடன்,
மதி
((அட நீங்கபாட்டுக்கு எழுதுங்க. எழுதலைன்னாதான் நாங்கல்லாம் ஏன்னு கேட்டு கும்முவோம். ;) )
வரவேற்பிற்க்கு நன்றி மதி ..அடி வாங்காம இருக்க முயற்ச்சிக்கிறேன் .. :)))
உங்க மாதிரி பைத்தியங்க ரொம்பப்பேர் இருக்காங்க (என்னையும் சேத்துத்தான்) அதனாலெ பயப்படாமெ தைரியமா விட்டு வெளாசுங்க.
ஆனா ஒண்ணு எழுத்துப்பிழைகள் வந்தா மட்டும் எனக்கு கொஞ்சமா கோபம் வந்துடும்....
//எல்லா தடைகளையும் தாண்டி இதோ ப்ளாக்க தொடங்கிவிட்டேன் இங்கே தடைகள் என குறிப்பிட்டிருப்பது பயம்,அறியாமை அதோடு போனால் போகிறது பாவம் இணைய தமிழர்கள் என்ற நல்லெண்ணமும் கூட.//
விட்டோமா??? ம்ம்ம்ஹூம். விடலையே. நாங்களும் பிளாக் ஆரம்பிச்சுட்டோம்ல
//மத்தபடி யாருக்குமே புரியாத பின் நவீனத்துவம் மேஜிக்கல் ரியலிசம் நியோ ரியலிசம் அப்படின்னு இணைய தமிழ் மக்களை கததிகலங்கவைக்க போகிற முஸ்தீபு களுடன் வந்துள்ளேன்//
^^%$#%^*&#@#&*@$
ஒண்ணும் பிரில தல
மொதல்ல மேஜிக்கல் ரியலிசம்
நியோ ரியலிசம் அப்படின்னா என்னன்னு ஒரு பதிவு போடுங்க. நாங்க தெரிஞ்சிக்கிறோம்.
மொதல்ல மேஜிக்கல் ரியலிசம்
நியோ ரியலிசம் அப்படின்னா என்னன்னு ஒரு பதிவு போடுங்க. நாங்க தெரிஞ்சிக்கிறோம்.
:) கூடிய விரைவில்
வாங்க வாங்க அய்யனார்! ஜோதில வந்து ஐக்கியமாகுங்க:-))
வந்துட்டேன் ..:)))
நானும் கூப்புட்டுட்டேன் வாங்க
சென்ஷி
அடியேனும் அழைக்கிறேன், வருக வருக...அறுவைகளை தருக..
as Mr.thambi commented, it would be better if you first explain the neo realism / magic realism -
yaaro
அட உங்க அறிமுக பதிவ இப்பத்தான் பார்க்கிறேன். அறிவுஜீவின்னு பறைசாற்றி தான் வந்திருக்கீங்க ;-)
//மொதல்ல மேஜிக்கல் ரியலிசம்
நியோ ரியலிசம் அப்படின்னா என்னன்னு ஒரு பதிவு போடுங்க. நாங்க தெரிஞ்சிக்கிறோம். // இத பத்தி பதிவு போட்டிருக்கீங்களா? போட்டிருந்தா சுட்டி அனுப்பி வையுங்கப்பா
ஏற்கனவே உங்க அறிமுகம் படிச்சிருக்கேன்.. இன்னிக்கு மறுபடி படிக்கிறேன்.. முன்ன மாதிரியே இப்பவும் புரியல. :)))
Post a Comment