
அவள் அப்படித்தான் ( 1978 )
பல வருடங்களாய் தேடிக்கொண்டிருந்த இந்த படத்தையும் இரண்டு வருடங்களாய் தேடி கொண்டிருந்த நண்பணையும் பெங்களூரில் ஒரு சேர பிடிக்க முடிந்தது.1970 களின் இறுதிவாக்கில் feminist என்ற போர்வையில் கே.பி அடித்த கூத்துக்களை கண்டு சலித்து இந்த படத்தையும் ஒரு சிறிய பயத்தோடு தான் பார்க்க ஆரம்பித்தேன்.
இளம் பிராயத்தில் தனது தாயின் நடத்தை மூலமாய் மனச்சிதைவடந்த, அதீத சுதந்திரமுள்ள,குழப்பமான, கசப்பான அனுபவங்கள் சுமந்து திரியும் மஞ்சு என்கிற பெண்ணை முன் வைக்கிறது இத்திரைப்படம்.
ஒரு அறிவு ஜீவித்தனம் படம் முழுவதும் நிரம்பி வழிகிறது.நிறைய விவாதங்களை வைத்தே திரைக்கதையை நகர்த்தி இருப்பது புதுமை சராசரி களின் மீதான சாடல்,தெளிவான சமூக பார்வை,சுவாராஸ்யமான உரையாடல்கள் என மிகத் தெளிவாக நகர்கிறது படம்.
சக துணைக்கான தேடலில் தொடர்ச்சியாய் மூன்று முறை ஏமார்ந்து போகும் மஞ்சு தனது கவிழிரக்கத்தை,ஏமற்றங்களை திமிர் பிடித்தவள் என்ற போர்வையில் மறைத்து கொள்கிறாள். பெண்களின் சுதந்திரம் பற்றிய தலைப்பில் டாக்குமெண்ட்ரி எடுக்க சென்னை வரும் அருண் மஞ்சுவை புரிந்துகொள்ள மற்றும் தன்னை புரிவிக்க எடுக்கும் முயற்சிகளில் சலித்துப் போகிறார்.பெண்களின் பேட்டிகளை பதிவு செய்திருக்கும் முறை அருமை.
விலகி,நெருங்கி,நேசித்தும் வெறுத்துமாய் ஒரு புதிய பரிணாமத்தை முன் வைக்கிறது இருவருக்குமான உறவு.சராசரி ஆணை முன் வைக்கும் தியாகு வழக்கம்போல் நிறைய கைதட்டல்கள். ருத்ரய்யா திரைப்பட கல்லூரியிலிருந்து வந்தவுடன் இந்த படத்தை இயக்கி இருக்க கூடும்.இவரின் இன்னொரு படத்தை பார்த்த்போது ஏமாற்றம்தான் மிஞ்சியது.
படம் முடிந்தவுடன் எழும் லேசான தலைவலிக்கு காரணம் வழக்கமான சினிமாவிற்க்கு பழகிய மூளையே தவிர நிச்சயம் படம் இல்லை.
இன்னும் பல வருடத்திற்கு தமிழின் தலைசிறந்த படமாக இதை சொல்லிக்கொண்டிருக்கலாம்.
5 comments:
ஒரு தீபாவளியன்று வந்த இந்தப் படம் வெளிவந்த நேரத்தில் பரவலாக பேசபட்டது, எதிர்ப்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது என்பது என்னவோ உண்மை. நடிகர்களும் அதற்கு ஒரு காரணம் என சொல்லலாம்.
ஆனால் தலைச்சிறந்த படம் என்னும் அளவிற்கு ஏதுமில்லை என தோன்றுகிறது.
ருத்ரய்யா அதற்கு பிறகு காணாமல் போனது தான் வேதனை.
//ருத்ரய்யா அதற்கு பிறகு காணாமல் போனது தான் வேதனை//
நிஜந்தாங்க இதுகுறித்த வேதனை எனக்கும் உண்டு
//1970 களின் இறுதிவாக்கில் fஎமினிச்ட் என்ற போர்வையில் கே.பி அடித்த கூத்துக்களை கண்டு சலித்து இந்த படத்தையும் ஒரு சிறிய பயத்தோடு தான் பார்க்க ஆரம்பித்தேன்.// 1970களில் மட்டுமில்லைங்க அவரோட 70ல அவர் எடுத்த கல்கியிலேயும் அதே கூத்துதான். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பாரோ தெரியலை ...
அந்த படத்தினிறுதியில் கமல் எளிய அப்பாவியான ஒரு பெண்ணை (சரிதா என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை) திருமணம் செய்து அழைத்து வருவார். அவரை ஸ்ரீப்பிரியாவிற்கு அறிமுகப்படுத்தியவுடன் இவர் 'உங்களுக்கு பெண் விடுதலை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?' என்பார். அதுக்கு அந்த பெண் அப்படின்னா என்னன்னே எனக்கு தெரியாது என இவர் உடனே அதுனாலதான் நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னுட்டு திரும்பிப்பார். ரொம்ப அருமையான காட்சி அது. நீங்க சொல்றா மாதிரி படம் ரொம்ப அருமைதான். ஆனா அதுதான் தலைசிறந்தது அப்படின்ற கருத்துல எனக்கு உடன்பாடில்லை.
//இன்னும் பல வருடத்திற்கு தமிழின் தலைசிறந்த படமாக இதை சொல்லிக்கொண்டிருக்கலாம்// உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம்தான்.
machan super
Post a Comment