Tuesday, September 6, 2011

இருபது வெள்ளைக்காரர்கள் – குறு நாவல் – காட்சி ஆறு



ஜவ்வாது மலை அடிவாரத்திற்கு காலை பதினோரு மணி வாக்கில் வந்து சேர்ந்தோம்.
மேலும் பதினைந்து பேர் வந்து சேர்ந்தனர். பதினைந்து பேரில் நான்கு தமிழர்கள். என்னோடு சேர்த்து மொத்தம் இருபத்தைந்து பேர். எல்லாருக்குமான சராசரி வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்து இருக்கலாம். அந்தக் கூட்டத்தில் நான் தான் சிறியவன். நான்கு தமிழ் பேசுபவர்கள் உடன் இருந்ததால் சற்றுக் கூச்சம் குறைந்தது. அதில் இரண்டு பெண்களும் இருந்ததால் சகஜநிலைக்கும் திரும்பி இருந்தேன். ஒவ்வொருவரும் ஆளுயரத்திற்கு பைகளைச் சுமந்திருந்தனர். மலை ஏறும் பாதையில் நடக்க ஆரம்பித்தோம். உற்சாகம் நிரம்பி வழிந்தது. ஒருவரை ஒருவர் அணைத்தபடி முத்தமிட்டபடி சத்தமாய் நடந்து கொண்டிருந்தார்கள். நான் சற்றுப் பின் தங்கி நடந்து கொண்டிருந்தேன். இரண்டு கிலோ மீட்டர் நடந்ததும் ஒரு குறுகலான வளைவில் திரும்பி மீண்டும் கீழே இறங்க ஆரம்பித்தோம். பாதையென எதுவும் இல்லாததால் பாறைக் கற்களும் காட்டு முற் கொடிகளும் காலைப் பதம் பார்த்தன. சரிவாக வேறு இருந்ததால் அங்கங்கே ஓரிருவர் விழுந்து சிரிப்போடு எழுந்தனர். மீண்டும் இரண்டு கிலோமீட்டர் நடந்திருப்போம். இப்போது சமதள ஒற்றைப் பாதை வரிசையான புதர் செடிகளுக்கு நடுவில் மறைந்து கொண்டிருந்தது. முற்கிளைகள் விலக்கி அவ்வப்போது முகத்தில் லேசாய் கீறல் விழ ஒருவர் பின் ஒருவராய் நடந்தோம். கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர்கள் நடந்ததும் எனக்கு முன்னால் சென்றவர்களின் உற்சாகக் குரல் கேட்டது. அவசரமாய் எல்லோரும் ஓடினார்கள். திடீரென புதர்கள் மறைந்து போயின. ஒர் அகலமான ஓடை நீர் வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. ஓடைக்கு அந்தப் பக்கம் பரந்த புல்வெளி.

இப்படி ஒரு இடத்தை நான் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. ஒரு புறம் கண்களுக்கெட்டிய தூரம் வரை செங்குத்தாய் வளர்ந்திருந்த மரங்கள். ஆளுயரக் காட்டுக் கொடிகள். புதர்களாய் மண்டியிருந்த பெயர் தெரியா முற்செடிகள். சிதறலாய் கிடக்கும் பாறைக் கற்கள். இன்னொரு புறம் எந்த மரமும் செடியும் கொடியும் இல்லாத பரந்த புல்வெளி இவ்விரண்டையும் பிரிக்கும் ஓர் அழகிய ஓடை. கண்கள் வியக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். உடன் வந்த இருபத்திநாலு பேரும் ஹோ வென சப்தமாய் கூச்சலிட்டனர். மழைக்காலம் அப்போதுதான் துவங்கியிருந்ததால் ஓடையில் நீர் சலசலப்பு சற்று அதிகமிருந்தது.

கன்றுக் குட்டிகளைப் போல் துள்ளிக்கொண்டு இருபத்தைந்து பேரும் ஓடையில் பாய்ந்தோம். பைகளோடு மொத்தமாய் நனைந்தோம். அது ஒரு மலை ஓடைதான் என்றாலும் இடுப்பு வரை ஆழமிருந்தது. ஓடையிலிருந்தபடியே பைகளை புல்வெளிக்காய் தூக்கி எறிந்தனர். அடுத்ததாய் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றி பைகள் எறிந்த திசையில் வீசத் துவங்கினர். நான் விழிகள் விரியப் பார்த்துக் கொண்டிருக்க இருபத்து நான்கு பேரும் சடுதியில் நிர்வாணமானார்கள். வெள்ளை உடல்கள் குவியலாய் நீரில் திமிறின. பிதுங்கின. குதித்தன. கும்மாளமிட்டன. கும்பலாய் கொக்குகளும் நாரைகளும் தமக்குள் கூச்சலிட்டபடி ஆற்றில் சிறகடிக்கும் சித்திரம் நினைவில் வந்து போனது. அதிர்ச்சி விலகாமல் எழுந்து புல்வெளிக்குப் போனேன். திரும்பி ஓடையைப் பார்க்க கண்கள் கூசின. சொல்லொணா உணர்வு முழுமையாய் ஆக்ரமித்திருந்தது. அவர்களுக்காய் முதுகு காட்டி அமர்ந்து கொண்டேன். கூச்சலும் கும்மாளமும் அடங்க வெகு நேரம் பிடித்தது. ஒவ்வொருவருவராய் எழுந்து புல் வெளிக்கு வந்தனர். ஜோனைப் பார்க்க மனம் துள்ளியது ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டு கண்கள் தாழ்த்தி புல்தரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். யாரோ என் தலையைத் தொட்டது போலிருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். ஒரு தமிழ்பெண் தலையை வருடிக் கொண்டிருந்தாள். இடுப்பில் மட்டும் ஆடையிருந்தது. மீண்டும் தலையைக் குனிந்து கொண்டேன். பயப்படாதே ஓரிரு நாட்களில் பழகிவிடும் என சிரித்தபடி முலைகள் பக்கவாட்டில் துள்ள என்னைக் கடந்து போனாள்.

மெக் அருகில் வந்து டெண்ட் போட உதவி செய் என்றான். ஆண்களில் பெரும்பாலும் நிர்வாணமாக இருந்தார்கள். பெண்களில் ஓரிருவர் தவிர்த்து மற்றவர்கள் ஒற்றை இரட்டைக் கச்சைகளை அணிந்திருந்தனர். தாழ்ந்த கண்ணை விலக்காமலேயே ஜோனைத் தேடினேன். ஜோன் ஆடைகள் எதுவுமில்லாமல் ஒரு புள்ளி மானைப் போல் துள்ளி துள்ளி ஓடிக் கொண்டிருந்தாள். விறைப்பை எவ்வளவு முயன்றும் கட்டுப் படுத்த முடியவில்லை. கூடாரங்களை அமைக்க ஆரம்பித்தோம். மொத்தம் பதிமூன்று கூடாரங்கள். போட்டு முடித்ததும் பசி வயிறைக் கிள்ளியது. இன்னொரு குழு அதற்குள் உணவைத் தயாரித்திருந்தது. இறைச்சியோடு வந்த மதுவகைகளைத் தவிர்த்துவிட்டு இறைச்சியை மட்டும் சாப்பிட்டேன். சாப்பிடுவதும் ஒரு திருவிழா போலத்தான் இருந்தது. மது வெள்ளமென ஓடியது. ஒரு கையில் சாப்பாடும் ஒரு கையில் மதுவுமாய் திறந்தவெளியில் புணர்ந்தனர். ஒரு சிலர் கூடாரங்களுக்குள் கும்பலாய் கலவினர். சற்று அச்சத்தோடு நானொரு கூடாரத்திற்குள் புகுந்து கொண்டு போடப்பட்டிருந்த மெத்தையில் படுத்துக் கொண்டேன். இதென்ன மிருகத்தனம் எனக் கோபம் பொங்கியது. அசூசையும் எரிச்சலும் அங்கிருந்தவர்களின் மேல் படர்ந்தது.

அதுவரை வெளிச்சமாக விருந்த வானம் திடீரென இருண்டது. பலத்த சப்தத்தோடு இடி இடிக்க ஆரம்பித்தது. பயமும் உற்சாகமுமான பெண் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. பெரும் சப்தத்தோடு மழை கொட்ட ஆரம்பித்தது. கூடாரம் எந்த நேரமும் பெயர்த்துக் கொண்டு ஓடிவிடும் எனத் தோன்றவே அவசரமாய் எழுந்து வெளியில் வந்தேன். இருபத்து நான்கு பேரும் மீண்டும் ஆடைகளைக் களைந்துவிட்டு மழையில் உடல்களோடு விளையாடிக் கொண்டிருந்தனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்தும் துரத்தியும் கத்தியுமாய் பெரும் களேபரம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பெரு மழை நடுவில் அடர்ந்துகொண்டிருந்த இருளில் அவர்களின் வெண்ணுடல் மின்னலாய் பளீரிட்டுக் கொண்டிருந்தது. கூடாரங்கள் சேதாரமடையாமல் அப்படியே இருந்தன. மீண்டும் வந்து படுத்துக் கொண்டேன். மழை வலுத்துக் கொண்டே இருந்ததே தவிர குறைந்ததாய் தெரியவில்லை. அப்படியே தூங்கியும் விட்டேன்.

மேலும்

No comments:

Featured Post

test

 test