அவள் மென் மென்னியை
கைகளால் நெறித்துக்
கொன்றுவிடப் போவதாய்
சொல்லிக்
கொண்டிருந்தேன்
புன்னகைத்தாள்
குரல்வளையைக் கடித்துத்
துப்பிவிடப்
போவதாயும் சொன்னேன்
சிரித்தாள்
அவளின் தலையைத்
தூண்களில் மோதி
சிதைக்கப் போவதாய்
இறுகினேன்
சப்தமாய் சிரித்தாள்
கால்கள்
இரண்டையும் பற்றித் தூக்கி
180 டிகிரியில் அவளுடலைக்
காற்றில் விசிறி
முகத்தை சுவற்றில் நச் என மோதி
கூழ்கூழாக்கப் போவதாய் கத்தினேன்
நெருங்கி வந்து
என் இதழ்களைக்
கவ்விக் கொண்டாள்….
*வனமழியும் தீயின் ஊற்று அவளின் உதடுகளாய் இருக்கலாம்
19 comments:
வனமழியும் தீயின் ஊற்று அவளின் உதடுகளாய் இருக்கலாம்
akaa ! excellent !
எப்பவோ பார்த்த சினிமாவை ஞாபகப்படுத்துது. :)
வானமே அழிந்தாலும் தீயின் ஊற்று அழகுதான்!!
கடைசி வரி கலவியில் கிழிந்த உதடு போல சற்றி தடித்துதான் இருக்கிறது
இறுகினேன் - இறுக்கினேன் என்றே வாசிக்க வருகிறது யேனென்றுத் தெரியவில்லை
மீன்தொட்டிக்கு பின் புறம் இருக்கும் எழுத்துக்கள் போல கவிதைக்குள் இருக்கும் கவிதை அழகு
அவள்
உங்களைவிட
கொடுமைக்காரி
தல!
ஒரே செயலில் முடித்து விட்டாளே!
மென் தென்றல் போல வந்துரசிப் போய்விடாமல், சொல்லிச் சொல்லிச் சாகடிக்கும் கவிதைகளின் மேலான நேசம் உங்களால் அதிகமாகிறது.
நல்ல பொழுதொன்று அமைய வாழ்த்துக்கள்!
;))
நீ சொன்ன ! நான் செஞ்சேன் னு கதைய முடிச்சுட்டா !
//வனமழியும் தீயின் ஊற்று அவளின் உதடுகளாய் இருக்கலாம்//
அப்ப,உங்க கோபத்தீயை எதிர்தீ போட்டு அணைச்சுட்டாங்கன்னு சொல்றீங்க.... :))
முடிவதில்லை அய்யனார், எல்லாம் அங்கே அடங்குகிறது...
அருமை
//வனமழியும் தீயின் ஊற்று அவளின் உதடுகளாய் இருக்கலாம்//
ரொம்பப் பிடித்திருக்கிறது.
என் இதழ்களைக்
கவ்விக் கொண்டாள்….
... றாள் ...
*வனமழியும் தீயின் ஊற்று அவளின் உதடுகளாய் இருக்கலாம்- thalaippe azhagu!
*வனமழியும் தீயின் ஊற்று - நண்பரே தலைப்பே கவிதையா இருக்கு....
"வனமழியும் தீயின் ஊற்று* - நண்பரே தலைப்பே கவிதையா இருக்கு....
:)
// நெருங்கி வந்து
என் இதழ்களைக்
கவ்விக் கொண்டாள்….//
:-))
இமேஜ் ரொம்ப அழகு
பின்னூட்டங்களுக்கும் பகிர்வுகளுக்கும் நன்றி நண்பர்களே..
யப்பப்பா சாமி.. அதகளம்.
Post a Comment