Friday, October 3, 2008
ஊரும் வாழ்வும்........
அக வாழ்வு...
பின்னந்தலையை துளைத்துப் பாயுமொரு துப்பாக்கித் தோட்டா வெகுநாள் கனவில் வந்த வண்ணமிருக்கிறது.சில பதறிய விழிப்புகளில், அத் தோட்டா வந்த திசை நனவிலியின் குழப்பமான எத்தனையோக்களின் இன்னொரு எச்சமாய் திசை தொலைத்து, தன்னை இழக்கிறது. சுற்றிலும் கண்ணாடிகளால் சூழப்பட்ட அறைகளில், தனித்தமர்ந்திருக்கையில், எங்கிருந்தோ விரைந்து வரும் குண்டுகள், மூளையை / தலையை பக்கவாட்டிலிருந்து சிதறச்செய்வதாய், சில மாயத் தோற்றங்கள் நிகழ்ந்து மறைகின்றன.கனவில் பின்னந்தலையாகவும், நினைவில் பக்கவாட்டிலுமாயும், என் தலையைத் தெறிக்க, வெகுநாட்களாய் இத்துப்பாக்கித் தோட்டாக்கள் பெரும் முயற்சி செய்துகொண்டு வருவதை, வெகு நுட்பமான என் மன உணர்வுகள் தடம் பிடித்ததை உணர்ந்து, பெரு மகிழ்வு கொண்டேன்.அவ்வப்போது தலையை கைகளினால் தடவிக்கொள்வேன்.பாய்ந்து வரும் தோட்டாக்களுக்கு சிக்காமல் என் தலையை அடிக்கடி குனிந்தோ, சாய்ந்தோ, கவிழ்ந்தோ, காப்பாற்றிக் கொள்வேன்.கூட்டமான இடங்களுக்கு செல்கையில் வெகு கவனமாய் இருப்பேன்.இந்தக் கும்பலில் எத்திசையிலிருந்து வேண்டுமானாலும் விரையலாம் என் தலையை சிதறடிக்கும் தோட்டாக்கள், அதைத் தவிர்க்கும் பொருட்டு அடிக்கடி தலையின் இருப்பை மாற்றியமைத்துக் கொள்வேன். உள்ளுணர்வு அதிகமாகத் துடிக்கையில், எவ்விடத்தில் இருந்தாலும் உடனடியாய் தரையில் படுத்துக்கொள்வேன். தோட்டாக்கள் மிகப்பெரும் ஏமாற்றமடைந்து எங்காவது தன் வலிமை இழந்திருக்கலாம்.தோட்டாக்கள் அகன்றதை உள்ளுணர்வு சொன்னதும் மிக உவப்பாய் எழுவேன். கண்ணுக்கே தெரியாத அவ்விரோதியை ஏமாற்றிவிட்டதை உணர்ந்து மகிழ்வில் கத்துவேன்.கூச்சலிடுவேன்.என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு என் செய்கைகள் கோமாளித்தனமாய்த் தெரியலாம். என்னைப் பார்த்துச் சிரிக்கலாம். பைத்தியமெனலாம். மன உளவியலின் அடிப்படையில் சில புதிய நோய்க்கூறுத்தன்மையை மேற்கோள் காட்டலாம், அல்லது புதியதொரு வாயில் நுழையாப் பெயரை துப்பறிந்து, என் இயல்புகளோடு பொருத்திப் பார்த்து, மிக நீளமான விரிவுரை ஒன்றை இச்சமூக ஆர்வலர்கள் நிகழ்த்தலாம். அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை.என் புலப்படா விரோதிகளைப் பற்றி என்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத்(புலப்படும்) தெரியாது.அவர்/வை கள் ஒரு சிறிய விசையிலிருந்து பாயும் வலிமை கொண்டவர்கள்/ன. எல்லாவற்றையும் சிதறடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்/வை. அவர்/வை களுக்கு இலக்கு என் பின் மற்றும் பக்கவாட்டுத் தலை. ஆம்! அவர்கள் / அவைகள் என்னை முன்புறமாய்த் தாக்குவதில்லை.இந்த சிக்கலான உணர்வுகளைப் புரியவைக்கவே இப்படிச் சிக்கலாய் எழுதினேன். மற்றபடி புரியாமை நிலைக்குத் தள்ளுவது என் நோக்கமல்ல.புரியாமைகளின் ஒத்திசைவின் அதிர்வுகள் மாத்திரமே பகிரத் தூண்டுவதால் இப்புரியாமையும், சிக்கலும், தலைசுத்தலும் கடேசியாய் வாந்தியும்.
பு/பிற வாழ்வு
நீல வானில் வெண்மை திரண்ட மேகங்கள் காற்றின் அலைக்கழிப்புகளுக்கேற்றார்ப்போல் தன் வடிவங்களை அமைத்துக்கொள்கின்றன.குட்டித் தும்பிக்கை கொண்ட யானையொன்று, தன் தும்பிக்கை நீளும் வித்தைகளை மிக மெதுவாய் நிகழ்த்திக்கொண்டிருக்கும். இன்னுமொரு மாலையில் வாயைப் பிளந்த முதலையொன்று, ஒரு வினோத சிறிய உயிரை மெல்ல விழுங்கிக்கொண்டிருக்கும்.படக்கதைகளென விரியும் மேக நடனங்கள், மிதக்கும் வனங்களாகின்றன.தாவும் குரங்கு,கிளையழிக்கும் யானை, மானின் முதுகில் பதியும் சிறுத்தையின் முன்னங்கால்கள், இப்படிச் சிலவாய் வனங்களின் உயிர்களை, வெகு துல்லியமாய் மேகங்கள் கொண்டிருக்கும்.வனங்களில் வழி தப்பி மீள்வதும், வானில் நினைவு தொலைந்து மூழ்குவதும் ஒரே உவப்பைத் தரவல்லது.வழமையாய் மின்சாரம் போகும் விடியல், கொசுக்களை அனுப்பி என்னை என் வீட்டின் மாடிக்குத் தூக்கி வரச் செய்யும்.நான் விழிநிறை தூக்கங்களோடு வானில் புதைவேன்.குறிகளற்ற மேகக் கலவியில் திசுக்களெங்கிலும் கிளர்வு.
இந்த முன்பகலை பார்த்துக்கொண்டிருப்பது வெகு சாந்தமானது.மாமர அடிபாகத்தில், செங்குத்தாய் அமர்ந்து, வால் தூக்கிப் பார்க்கும் சாம்பல் நிற அணில், அருகாமையிலிருக்கும் எம்மரத்திற்குத் தாவும்? என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாது.சில நேரங்களில் அது எங்கும் தாவாமல் மாமரத்தின் உச்சிக்கே மீண்டும் விரையும்.பெரிய வண்ணத்துப் பூச்சியொன்று எவ்விடத்திலும் அமராது அலைந்து கொண்டிருக்கும். வண்ணத்துப் பூச்சிகள் அமர என் வீட்டின் சிறு தோட்டத்தில் மலர்களில்லை.எனினும் வண்ணத்துப் பூச்சிகள் அலைந்து கொண்டுதானிருக்கின்றன.சிமெண்ட் தரையிலமர்ந்து தேநீர் பருகியபடி அலையும் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது தொலைபேசியில் அழைக்கும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். இவ்வண்ணத்துப் பூச்சி அமர்வதற்கான இருக்கை என்னிதயப் பூவாய் இருக்கலாம். முருங்கை மரப் பூத்தேனின் மீது, தேன் சிட்டுகளுக்கு அலாதி பிரியமாய் இருக்கக்கூடும்.சிட்டுக்குருவிகளை விட மிகச்சிறிய இப்பறவைகள் விதவிதமான வண்ணங்களில் இருக்கும். மஞ்சளும் நீலமும் கலந்த சிறுபறவைகள் என் வீட்டிற்கு வழமையானவை.தேனுண்ட பறைவகளின் உற்சாக கீச்சுகள் முன்பகலை வண்ணமயமாக்கும்.
நண்பகல் கருப்பு வெள்ளை திரைக்கானது.நெற்றிநரம்பு புடைக்க சிவாஜியின் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் வார்த்தைகளாய் இறைந்து கொண்டிருக்கும்.கைகளிரண்டையும் உயரத் தூக்கி பாபூ பாபூஊஊஊ எனக் கத்தும் ஆலயமணி ஜமீந்தார், நினைவு தப்பிய காதலியை மீன் தொட்டி சிதற சந்தித்து அதிர்ச்சியுறும் ஆண்டவன் கட்டளை விரிவுரையாளர்,வேலைக்காரன் வீட்டு அதிரசத்தை அறியாமல் உண்டு பின் உணர்ந்து வாந்தியெடுக்கும் 'பார் மகளே பார்'மேல்தட்டு பணக்காரர்,ஒச்சிடுவேன் என நாகேஷ் உடன் கலாய்க்கும் கலாட்டக் கல்யாணம் பணக்கார இளைஞன்.என சிவாஜி மிக மெதுவாய் என் நண்பகலை நகர்த்திக்கொண்டிருப்பார்.எந்தவித எதிர் குணங்களும் இல்லாத, மிக நல்ல, மிக யோக்கிய, மிக நேர்மையான, பெருங்கொண்ட சத்தியவான் எம்ஜிஆரை என்னால் 30 நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடிவதில்லை.
ரமணர் ஆசிரமத்திலிருந்து மலையிலிருக்கும் கந்தர் ஆசிரமத்துக்கு செல்லும் மலைப்பாதை என் பால்யங்களோடு மிக நெருக்கமானது.பள்ளிக்காலத்தில் என் பாடங்களை அப்பாதை வழிகளில் அமர்ந்துதான் படித்தேன். நண்பர்களோடும் தனித்தும் சுற்றித்திரிந்த மலைப்பாதை அது.கோடை விடுமுறைகளில் அப்பாதைகளில் அமர்ந்துதான் கதைப்புத்தகங்களை படித்துக்கொண்டிருப்பேன். குறிப்பாய் ரஷ்ய மொழிபெயர்ப்புகளை, ராதுகா பதிப்பக வெளியீடுகளின் பெரும்பாலான புத்தகங்களை அங்குதான் படித்தேன்.வெயிலேறத் துவங்கியதும் பாறைக்கடியில் தஞ்சம் புகுந்தபடி, பனிப்பொழியும் ரஷ்ய சதுப்பு நிலக் காடுகளில் என்னைத் தொலைத்திருப்பேன்.இந்த முறை சென்ற போது சமீப மழையால் மலை மிகப் பசுமையாய் இருந்தது.மிக அருகினில் மேகக்கூட்டங்கள், சுழன்றடிக்கும் காற்று, என மிக அற்புதமான ஒரு பொழுதில் ஓஓஓஓஒ வெனக் கத்தினேன் பாறைகளில் பட்டுத் தெறித்த என் குரல் எங்கேயோ புதைந்து கிடந்த என் ஆதி வேர்களின் மீதங்களை மீட்டெடுத்தது.மஞ்சள் கொன்றை மலர்கள் அங்கங்கே பூத்துக்குலுங்கின. மலைக்குரங்குகள் கண்ணில் பட்டன.இவ்வகை குரங்குகள் இப்போதுதான் வந்திருக்கின்றன போலும்.மலைக்குன்றின் முடிவும் புதிய ஒன்றின் துவக்கமுமான இடமொன்றில் மிக அடர்த்தியாய் மரங்கள் சூழ்ந்திருந்தன.அடர்வான மரமொன்றின் அடிவேரில் தலைசாய்த்து அமர்ந்திருந்தேன். சுழன்று சுழன்று அடித்துக்கொண்டிருந்த காற்று நிதானமானது. சொல்லில் விவரிக்க முடியா மஞ்சம்பில் கலந்த வாசனையை அக்காற்று கொண்டிருந்தது.முடிந்த வரை என்னில் நிரப்பிக்கொண்டேன்.மலை விட்டிறங்கும்போது எப்போதும் பூத்திருக்கும் இந்நித்தியப்பூவினை நீங்கள் மலையென்றும் அழைக்கலாம் என்கிற என் பழைய வாசகம் நினைவில் வந்துபோனது.
நான் நீந்திக களித்த பெரும்பாலான கிணறுகளை எப்போதோ மூடிவிட்டிருந்தனர்.வெற்றிலைக்கிடங்குகள்,கண்ணுக்கெட்டியவரையிலான பசும் வயல்வெளிகள், அடர்வான மரங்கள், ஏரியிலிருந்து நீர் வரும் அகலமான வாய்க்கால், சாலையின் இருமருங்கிலும் அடர்த்தியாய் வளர்த்திருந்த புளியமரங்கள், என எதுவுமில்லை.நகரம் பெரிதாய் ஒன்றும் வளர்ந்துவிடவில்லை ஆனால் எல்லா விவசாய நிலங்களும் ப்ளாட்டுகளாகி விட்டன.புதிதுபுதிதாய் ஏகப்பட்ட நகர்கள் முளைத்திருக்கின்றன.விவசாயிகள் நிலங்களை விற்றுவிட்டு, பணத்தை வங்கியில் பாதியும், வட்டிக்கு பாதியுமாய் இறைத்திருக்கிறார்கள்.பெருகிய பணம் டாஸ்மாக்குகளில் மிதந்துகொண்டிருக்கிறது. வேட்டி எதுவுமற்று கடைக்கருகிலேயே தூங்கிப்போகும் எத்தனையோ விவசாயிகள் முன்பொரு காலத்தில் பயிர்செய்து பசுமைகளை உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் என்பதை நம்புவதற்கு சிறிது கடினமாய் இருக்கிறது.பணம் தன் விகாரப் பற்களினால் கடித்துத் துப்புவது இயல்பு வாழ்வையும் யதார்த்த மனிதர்களையும்தான்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
25 comments:
ஏதேனும் தலைகவசம் முயற்சி செய்யலாமே
அடாடா!
நான் தான் பர்ஸ்டா
தெரியலையே
பதிவு புரியலையே
//அப்போது தொலைபேசியில் அழைக்கும் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பேன். //
சொன்னிங்க சொன்னிங்க
(ஆனா எனக்கு தான் புரியல)
//மிக நல்ல, மிக யோக்கிய, மிக நேர்மையான, பெருங்கொண்ட சத்தியவான் எம்ஜிஆரை என்னால் 30 நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடிவதில்லை.//
சில நேரங்களில் இது சில மனிதர்களுக்கும் பொருந்துகிறது
//பெருகிய பணம் டாஸ்மாக்குகளில் மிதந்துகொண்டிருக்கிறது. வேட்டி எதுவுமற்று கடைக்கருகிலேயே தூங்கிப்போகும் எத்தனையோ விவசாயிகள் முன்பொரு காலத்தில் பயிர்செய்து பசுமைகளை உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள் என்பதை நம்புவதற்கு சிறிது கடினமாய் இருக்கிறது.//
நிதர்சன உண்மை.
//.வெற்றிலைக்கிடங்குகள்,கண்ணுக்கெட்டியவரையிலான பசும் வயல்வெளிகள், அடர்வான மரங்கள், ஏரியிலிருந்து நீர் வரும் அகலமான வாய்க்கால், சாலையின் இருமருங்கிலும் அடர்த்தியாய் வளர்த்திருந்த புளியமரங்கள், என எதுவுமில்லை.//
:(((((((
உலகம் போதுமானதாய் இருக்கிறது, மனிதர்கள்தான் திருப்திப்படுவதில்லை...
வெளியெ எவ்வளவு இருந்தாலும் உள்ளே பெரும்பாலும் குழப்பங்கள்தானே நிகழ்கிறது...
\\
எந்தவித எதிர் குணங்களும் இல்லாத, மிக நல்ல, மிக யோக்கிய, மிக நேர்மையான, பெருங்கொண்ட சத்தியவான் எம்ஜிஆரை என்னால் 30 நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடிவதில்லை.
\\
எனக்கும்...
சிவாஜியின் அனைத்து உதாரணங்களும் மனதில் நிற்பவை...!
பு/பிற வாழ்வு - அழகாயிருக்கிறது...
//என் புலப்படா விரோதிகளைப் பற்றி என்னைச் சுற்றியுள்ளவர்களுக்குத்(புலப்படும்) தெரியாது.அவர்/வை கள் ஒரு சிறிய விசையிலிருந்து பாயும் வலிமை கொண்டவர்கள்/ன. எல்லாவற்றையும் சிதறடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்/வை. அவர்/வை களுக்கு இலக்கு என் பின் மற்றும் பக்கவாட்டுத் தலை. ஆம்! அவர்கள் / அவைகள் என்னை முன்புறமாய்த் தாக்குவதில்லை.//
புலப்படா எதிரிகளை துப்பாக்கி தோட்டாவிற்கு ஒப்புமையாக்கி வந்துள்ள அகவாழ்வு குறித்தான இக்கட்டுரை அருமை.புற வாழ்வு குறித்தான விவரிப்பு கவிதையின் நீட்டிப்பாய் தோன்றுகிறது!!
//இந்த சிக்கலான உணர்வுகளைப் புரியவைக்கவே இப்படிச் சிக்கலாய் எழுதினேன். மற்றபடி புரியாமை நிலைக்குத் தள்ளுவது என் நோக்கமல்ல.//
இவ்வரிகளுக்கு அவசியமே இல்லை.
//பெருகிய பணம் டாஸ்மாக்குகளில் மிதந்துகொண்டிருக்கிறது//
உண்மை தான் அய்யனார். :-))))))))))
"இந்த முறை சென்ற போது சமீப மழையால் மலை மிகப் பசுமையாய் இருந்தது.மிக அருகினில் மேகக்கூட்டங்கள், சுழன்றடிக்கும் காற்று, என மிக அற்புதமான ஒரு பொழுதில் ஓஓஓஓஒ வெனக் கத்தினேன் பாறைகளில் பட்டுத் தெறித்த என் குரல் எங்கேயோ புதைந்து கிடந்த என் ஆதி வேர்களின் மீதங்களை மீட்டெடுத்தது.மஞ்சள் கொன்றை மலர்கள் அங்கங்கே பூத்துக்குலுங்கின. மலைக்குரங்குகள் கண்ணில் பட்டன.இவ்வகை குரங்குகள் இப்போதுதான் வந்திருக்கின்றன".....
எனக்கு பொறாமையா இருக்கு....
//கிருத்திகா said...
"இந்த முறை சென்ற போது சமீப மழையால் மலை மிகப் பசுமையாய் இருந்தது.மிக அருகினில் மேகக்கூட்டங்கள், சுழன்றடிக்கும் காற்று, என மிக அற்புதமான ஒரு பொழுதில் ஓஓஓஓஒ வெனக் கத்தினேன் பாறைகளில் பட்டுத் தெறித்த என் குரல் எங்கேயோ புதைந்து கிடந்த என் ஆதி வேர்களின் மீதங்களை மீட்டெடுத்தது.மஞ்சள் கொன்றை மலர்கள் அங்கங்கே பூத்துக்குலுங்கின. மலைக்குரங்குகள் கண்ணில் பட்டன.இவ்வகை குரங்குகள் இப்போதுதான் வந்திருக்கின்றன".....
எனக்கு பொறாமையா இருக்கு....
//
ரிப்பீட்டே :)
இப்போ எங்க இருக்கிங்க??
வால்பையன்
தலைக்கவசம் நல்ல அய்டியா தான் :))
வருத்தம்தான் ஆயில்யன்
நன்றி தமிழன்
நன்றி லேகா
கிருத்திகா பொறாமையெல்லாம் வேண்டாம் ஒரு முறை போய்ட்டு வந்திடுங்க :)
சென்ஷி மற்றும் கோபி நலம் நன்றி :)
உங்களுக்கும் எதிரிகள் இருக்கக்கூடும் என்பது வாழ்வின் ஆச்சரியமான அபத்தங்களில் ஒன்று. சிறுவயதின் கதை ஒன்றில் 'மரத்தில் உள்ள பத்து பறவைகளில் ஒன்றைச் சுட்டால், மீதம் எத்தனை பறவைகள்' என்ற கேள்விக்கு கணித ரீதியில் அல்லாது தர்க்க ரீதியில் 'ஒன்றுமே இல்லை; ஏனெனில் மற்றவை சிதறி ஓடிப் பறந்து விட்டிருக்கும்' என்ற விடை இருக்கும். உங்களை நோக்கி வரும் தோட்டாக்கள் சிதறடிப்பது உங்கள் தீவிர வாசகர்களான எங்களையும் கூட; யாராயினும் அவர்களும் 'நல்லா இருக்கட்டும்'.
உங்கள் பு/பிற வாழ்வு படித்த பின்னும் இளகாத மனம் இருக்குமா! இந்த முறை நாங்கள் சுட்டிக்காட்டத் தேவையின்றி நீங்களே அழுந்த சில வரிகளை (Bold) எழுதி விட்டீர்கள். மிக இரம்மியமான வரிகள். கொன்றை மலர்கள் கொடுத்து வைத்தவை. உங்களைக் கவரும் வித்தையை அவைகளிடம் கற்க வேண்டும்.
அனுஜன்யா
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க அய்யனார்.. எனக்கும் எப்போதும் இந்த மாதிரியான ஒரு கனவு எப்போதும் வரும்.. :))
இந்தியாவில் பயணித்ததில் உருவான பழைய நினைவுகளா இந்த "பு/பிற வாழ்வு"??
அப்படியே கிருத்திகா சொன்ன கருத்துக்கு ஒரு ரிப்பீட்டு..
//பணம் தன் விகாரப் பற்களினால் கடித்துத் துப்புவது இயல்பு வாழ்வையும் யதார்த்த மனிதர்களையும்தான்.
//
உண்மை என்று சொல்வதற்கு கூச்சமாக இருக்கிறது.. இருந்தும் வேறு வழி தெரியவில்லை எனக்கு. விளக்கின் அடியில்தான் இருட்டு என்பதைப் போல இருட்டிலே தேடி கொன்டிருக்கிறோம். வெளிச்சத்திற்கு வர வழியிருந்தும் சிலர் இருட்டையே நேசிக்கிறோம்.
அனுஜன்யா
நமக்கு எதிரிகளெல்லாம் அகத்தில் தான்
புறத்திலில்லை :)
நன்றி
சரவணக்குமார்
ஆமாம்..ஊர் சுத்தின பின் விளைவுகள்தான் இதெல்லாம் நன்றி
கார்க்கி
இதில் தயங்க எதுவுமில்லை நான் உட்பட பெரும்பாலோர் அப்படித்தான் நன்றி
அய்யனார்.. ஒரு பதிவு போட்டு இருக்கேன்.. அவன் - சில தகவல்கள் [அ] சப்ப மேட்டரு... ஒரு சிறு முயற்சி.. சின்ன பிள்ள தனமா கூட இருக்கும்.. நேரமிருப்பின் படிச்சி பாருங்களேன்.. அப்படியே ஒரு பின்னூட்டம் போட்டாலும் சந்தோஷ படுவேன்..
Post a Comment