Monday, October 20, 2008

பசப்பு



நிலை தவறிய போதையில்
குறைந்த வெளிச்சத்தில்
ஒளிர்ந்தவளை அழைத்து வந்தேன்
இப்போது வெளிச்ச ஒளிர்வில்
அவள் இருட்டியிருந்தாள்
நீள மறுக்கும் குறியினை
மறைத்து
கவிதை சொன்னேன்
நானொருத் தனிமைப்பறவை
தீராத இவ்விரவினை துணையோடு விரட்ட
அழைத்து வந்ததாய்
வார்த்தைகளைத் தூவினேன்
அவளறியா வண்ணம் அவள் தோழிகளின்
எண்களைத் திருடிக்கொண்டேன்
அதிகாலையில் பணமில்லாமல்
போனதாய் பதபதைத்தேன்
அடுத்த வார இறுதியில் தருவதாய்
சத்தியமிட்டேன்
இணைப்பாய் நெற்றியில்
முத்தமிட்டேன்
இதுவரைச் சந்தித்திராதவன் நீயென
நெகிழ்ந்து விடைபெற்றாள்
இரண்டு வாரம் கழித்து
தொலைபேசி
என் பிறப்பைச் சந்தேகித்தாள்
நான் சத்தமாய் சிரித்துக்கொண்டேன்..

17 comments:

MSK / Saravana said...

Me the first??

MSK / Saravana said...

கலக்கலா இருக்கு.. :)

ஆனா இது எப்படி புனைவு ஆனது?? கொஞ்சம் சொல்லுங்க..

Sridhar Narayanan said...

வரவர எனக்கெல்லாம் புரியற மாதிரி எழுதறீங்க. அப்ப இது கவிதைதானா? :))

எதுவாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது. காலப் பரிமானங்களிடையே நிகழ்வுகளின் பாதிப்புகள் முற்றிலும் மாறிப் போவதை இறுதி வரி சொல்கிறதோ?

கார்க்கிபவா said...

:(

வால்பையன் said...

//நீள மறுக்கும் குறியினை
மறைத்து//

//அவளறியா வண்ணம் அவள் தோழிகளின்
எண்களைத் திருடிக்கொண்டேன்//

ஏதாவது முரண்பாடு தெரியுதா!

வால்பையன் said...

//ஆனா இது எப்படி புனைவு ஆனது??//

மற்றவர் அனுபவங்களை சொல்லும் பொது அதற்கு புனைவு என்று பெயரிடலாம்
சரிதானே அய்யனார்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்கு அய்யனார்.

கடைசி வரியில் ஏன் சிரிப்பு? பிறப்பைச் சந்தேகப்பட்டதுக்கா :))

Ken said...

வெளிச்ச ஒளிர்வில்
அவள் இருட்டியிருந்தாள்
நீள மறுக்கும் குறியினை
மறைத்து
கவிதை சொன்னேன்


nala iruntha sari nee

anujanya said...

கடன் எங்கும் பாக்கி வைக்கலாம் போலும்!

//காலப் பரிமானங்களிடையே நிகழ்வுகளின் பாதிப்புகள் முற்றிலும் மாறிப் போவதை இறுதி வரி சொல்கிறதோ?//

என்ன ஸ்ரீதர், நீங்களும் பி.ந.பாணியில் பின்னூட்டம் போடறீங்க! எனக்கென்னவோ ஒரு கல்லுளிமங்கனின் கள்ளச் சிரிப்பு என்று தோன்றியது. அதாவது தெரிந்தே செய்து, அவளின் எதிர்பார்த்த எதிர்வினையை இரசித்த சிரிப்பு என்று கொண்டேன்.

அனுஜன்யா

KARTHIK said...

// வரவர எனக்கெல்லாம் புரியற மாதிரி எழுதறீங்க. அப்ப இது கவிதைதானா.//

எனக்கும் தான்

நல்லாருக்கு அய்ஸ்

Ayyanar Viswanath said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே விரிவாக பின்பு...

King... said...

அண்ணன் கடைசி வரி மாறியதற்கு காரணம் என்ன அதுவே நன்றாகத்தான் இருந்தது...

King... said...

ஏன் தல நேற்றுப் பார்க்கும் பொழுது கடைசி வரி வேறமாதிரில்ல இருந்திச்சு இதை விட அது தாக்கத்தோட இருந்ததா நினைக்கிறேன்...!

இதுவும் சூப்பராத்தான் இருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

\\
என் பிறப்பைச் சந்தேகித்தாள்
நான் சத்தமாய் சிரித்துக்கொண்டேன்..
\\

நானும் பாத்திருந்தேன் நேற்று அது ஆமோதிப்பாய் தலையசைத்தேன் அப்படிங்கிற மாதரி இருந்திச்சு...

தொலைபேசியில் சந்தேகித்ததால் இருக்குமோ...இந்த மாற்றம்...:)

கார்க்கிபவா said...

என்ன ஆச்சு நண்பரே? பல நாட்களாக ஆளையேக் காணோம்?

MSK / Saravana said...

//கார்க்கி said...
என்ன ஆச்சு நண்பரே? பல நாட்களாக ஆளையேக் காணோம்?//

இதை கேட்கத்தான் நானும் வந்தேன்.. ஆளையே காணோம்.. பதிவு போடுங்க ப்ளீஸ்..

Sundar சுந்தர் said...

:)

Featured Post

test

 test