Tuesday, January 15, 2008

தூங்கும் புத்தகம்



விடைபெறும் தருணத்தில்
அவளிடமிருந்து ஒரு புத்தகம் வாங்கி வந்தேன்
திருப்பித் தர வேண்டிய நிர்பந்தங்களில்
வைத்த இடம் மறந்துபோயிற்று
மாடிப்படி
கழிவறை
கொல்லை மரத்தடி
ஓடு வேய்ந்த கூரைத் திட்டு
பாட்டியின் பழைய பெட்டி
உரல்
அம்மிக்கல்
மரக்கிளை
வாயில்படியென
எந்த இடுக்கிலும் இல்லை
தேடிப்பிடித்த கனமான சுத்தியலொன்றைக் கொண்டு
என் மண்டையைப் பிளக்க ஆரம்பித்தேன்
உள்ளே வழு வழுப்பான அட்டையுடன்
மிக வசீகரமான தாள்களோடு
தூங்கிக் கொண்டிருந்தது
அதே புத்தகம்...

19 comments:

Anonymous said...

புரியலை, ஆனா புரிஞ்சுடுமோன்னு பயமாயிருக்கு

Anonymous said...

புரியலை, ஆனா புரிஞ்சுடுமோன்னு பயமாயிருக்கு

Boston Bala said...

பிடித்திருக்கிறது. நன்றி

காட்டாறு said...

புத்தகம் எங்கேயெல்லாம் அமர்ந்து படிக்கிறீங்கன்னு தெரிஞ்சி போச்சி அய்யனார். :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருக்கு, அய்யனார்.

ஆடுமாடு said...

நல்லா இருக்கு சார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\புரியலை, ஆனா புரிஞ்சுடுமோன்னு பயமாயிருக்கு// :))

கூட யாரு தங்கி இருக்கா.. சொல்லி வைங்க.. பக்கத்துல இருக்கற சுத்தி மாதிரி ஆயுதங்களை எல்லாம் உள்ள வச்சு பூட்ட சொல்லி.. :)

Anonymous said...

யாரு பெத்த புள்ளையோ... சீக்கிறம் குணமாகட்டும்னு மாங்காட்டு அம்மன் கிட்ட வலையுலக மக்கள் சார்பில் வேண்டிக்கிறோம். சீக்கிறம் குணமானா.. தம்பி கோபிக்கு மொட்டையும், மொக்கை குசும்பனுக்கு காது குத்துதலும் உங்க செலவில நல்லா செஞ்சிடுங்க...


முடிஞ்சா தீச்சட்டி தூக்குங்க... சரியாய்டும்



:D நான் அவனில்லை ;)

cheena (சீனா) said...

கவிதை அருமை. புத்தகம் படிக்க இத்தனை இடங்களா? ம்ம்ம்ம்
அவளிடமிருந்து வாங்கியதால் மண்டையினுள் தூங்குகிறது. வாழ்த்துகள்

Ayyanar Viswanath said...

நன்றி பாபா

கவிதை என்பதை விட சொந்த செலவில் சூன்யம் எனச் சொல்வது பொருத்தமாயிருக்கும் காட்டாறு :)

சுந்தர்:நன்றி

ஆடுமாடு:மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்

முத்துலக்ஷ்மி:இந்த ஆயுதங்கள எல்லாம் கூடவே இருக்கு நான்னாஅ தொலைச்சாத்தான் உண்டு ..நன்றி..

Ayyanar Viswanath said...

அனானி:என்ன ஒரு பாசம் :)

சீனா:நன்றி

manjoorraja said...

தலையணைக்கடியில் என்ற வார்த்தையையும் சேர்த்திருக்கலாம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

அது சரி என்ன புத்தகம் அதையும் சொல்லலாமில்ல...

Aruna said...

புத்தகம் ஒளித்து வைக்க இவ்வளவு இடங்களா? சூப்பர்!
அருணா

மிதக்கும்வெளி said...

தோடா.... அப்ப உன் மண்டைக்குள்ள ஏதோ ஒண்ணு இருக்குங்கிற. நான்கூட ஒண்ணுமில்லைன்னுல்ல நினைச்சேன். ((-.

Ayyanar Viswanath said...

மஞ்சூர் : ஆமாம் அது விட்டுப் போச்சி :)

கிருத்திகா : புத்தகம் உங்க வசதிப்படி என்னவா வேணா இருக்கலாம்

நன்றி அருணா

சுகுணா : நமக்கே தெரியாம சில இதுக்கள் உள்ள உட்கார்ந்திடுது இல்லையா அதுமாதிரிதான் :)

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

தீவிர கனவு ஒன்றின் விளைவு போல முடியும் கவிதை.. மிக அருமை.. சுலபமான வார்த்தைகளில் கூட தீவிரமான எண்ணங்களை விளைவிக்க முடியும் என்று புரிய வைக்கிறீர்கள்.

KARTHIK said...

மற்ற கவிதைகளை விட இது படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது.

திரைபடம் பதிவு நல்லாருக்கு.

ஹரன்பிரசன்னா said...

நன்று.


//என் மண்டையைப் பிளக்க ஆரம்பித்தேன்//

இங்கே கவிதையை முடித்திருக்கலாம்.

Featured Post

test

 test