Thursday, January 3, 2008
சிறுமி விளையாட்டு
விடியலில் தூங்கப் பிடிக்கா சிறுமியொருத்தி
இரவைச் சுருட்டி மூலையில் எறிந்துவிட்டு
வெள்ளியின் துணைகொண்டு
குளக்கரை சென்றடைந்தாள்.
புதுமணப்பெண்ணின் கிறக்கத்தையொத்தபடி
மெல்லத் ததும்பியபடித் தூங்கிக்கொண்டிருந்த
சன்னமாய் பாசி படிந்த குளத்தினை
தொட்டு எழுப்பத் தயங்கி
படிக்கட்டுகளில் அமர்ந்தபடி
பார்த்துக்கொண்டிருந்தாள்.
சூரியக் கதிர்கள் அந்தரங்கத்தை அசைக்க
பதறி எழுந்தவள்
பார்த்துக்கொண்டிருந்தவளை அருகிலழைத்தாள்.
படியிறங்கிய சிறுமி
முத்தமிடும் சாயல்களில் குளத்தின் மேற்பரப்புகளில்
உதடு வைத்து உறிஞ்ச ஆரம்பித்தாள்
சடுதியில் மாயமாகிப் போன குளம்
சிறுமிக்கான விளையாட்டு மைதானமானது.
மய்யத்தில் தாயக் கட்டங்களைக் கிழிக்க
குச்சிகளைத் தேடிச் சோர்ந்து
எண்பதாயிரம் மைல் தொலைவிலிருக்கும்
ஐம்பதாயிரம் வயது கொண்ட ஆலமரத்தினை
வேருடன் பிடுங்கி தாயக் கட்டங்களை
வரைய ஆரம்பித்தாள்
நான்கு பக்கங்களாய் விரிவடைந்த அக்கட்டங்கள்
தனக்கான காய்கள் தேடி
வெளியில் நீண்டு
உருண்டையாயிருந்த சில விண்கற்களைத் தெரிவு செய்தது
புள்ளிகள் கொண்ட பகடைகளைத்
தேடி அலைந்த சிறுமி சலித்துப்போய்
கால்களால்
வரைந்த கட்டங்களை அழிக்க ஆரம்பித்தாள்
காலில் இடறிய விண்கற்களை
எட்டி உதைத்ததில் அவை உந்தப்பட்டு
பூமியைநோக்கி விரைகின்றன
எந்நேரத்திலும் உங்களின் பூமி அழியக்கூடும்...
...ஜெஸிக்கு
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
9 comments:
வித்தியாசமான formல் ரொம்ப நல்லா வந்திருக்கு அய்யனார்.
அய்ஸ் நேரில் பார்க்கும் பொழுது விளக்கம் சொல்லுய்யா!
யாருய்யா இந்தப் பொண்ணு?
அவங்கப்பா மாதிரி அழகா இருக்கா :-)
சாத்தான்குளத்தான்
இது என்ன பெரிய விஷயம், எங்கள் ஊரில் சில சின்ன பையன்கள் இருக்கிறார்கள்,
வாழைமட்டையை, கிரிகெட் மட்டையாக கொண்டு, உங்கள் சிறுமி அனுப்பும் விண்மீன்களை மீண்டும் உங்கள் குளதிற்கே திருப்பி அனுப்பி விடுவார்கள், இந்த பூமி அழியாது. யாரும் கவலை பட வேண்டாம்
வால்பையன்
நன்றி சுந்தர்
சரிங்க குசும்பர்
அட்ரஸ் தரவா அண்ணாச்சி :)
வால்பையன் பூமிய காப்பாதினதுக்கு நன்றி
:))
\\குசும்பன் said...
அய்ஸ் நேரில் பார்க்கும் பொழுது விளக்கம் சொல்லுய்யா!\\\
சொன்னா புரிஞ்சிடுமா! ;)
இதெல்லாம் ஓவரு...அண்ணே ;)
comets ?
நன்றி.
இவ்வளவு விசாலமா யோசிச்ச நீங்க மைதானத்துல தாயக் கட்டங்களை வைச்சி விளையாடுறா மாதிரி குறிக்கிடீங்களே? விண்கற்களை எதிராளியா பார்த்து கபடியாடியிருக்கலாம் :-) ஜெஸி அழகாயிருக்கா.
அய்யனார் அருமை. பிரம்மாதம் என்று ஒற்றைச் சொல்லில் சொல்லிவிட முடியாத விஷூவலான கற்பனை. உங்கள் மீதான பொறாமை இன்னும் அதிகரிக்கிறது.
Post a Comment