
இந்த விருட்சத்தைப் போலில்லை நான்
வேரூன்றி உயர்ந்து கிளைத்து
வெயில் வாங்கி நிழல் தந்து
எதுவுமில்லை
இந்த புல்லினைப் போலவுமில்லை
பசிய தளிராய் பனித்துளியின் இருப்பிடமாய்
பூனைகளின் தண்ணீரை சேகரித்தபடியுமாய்
இதுவுமில்லை
மழைக்காலங்களில் காட்டு மர இடைவெளிகளில்
வழிந்தோடும்
சிற்றோடை போலவுமில்லை
பெருகி படர்ந்து வழிந்து சுழித்து குறுகி நெளிந்து
சருகு முதல் சாக்கடை வரையாய் ஒன்று சேர்த்து வழிந்தபடி
இப்படியுமில்லை
பிறகெப்படி?
இதுவும் அதுவும் எதுவும்
இப்படியும் எப்படியுமில்லா
ஒரு மனிதனைப் போலிருக்கிறேன்
3 comments:
எங்களுக்குத்தான் தெரியுமே நீங்க தனியா வேற சொல்லனுமா அய்யனார் ;)
குசும்பன் எங்கிருந்தாலும் வரவும் :-)
nalla kavithai
ramesh v
Post a Comment