
காதல் கவிதை எழுதுபவர்களை தூக்கிடலாம்
என்கிற என் கோரிக்கையை
நீ மிகுந்த சினங்களோடு மறுத்தாய்
கவிதையின் புனித தன்மைகள் குறித்த
உனது சிந்தனைகளின் மீது
நான் மூத்திரம் பெய்ய விரும்புகிறேன் கதிர்
எல்லா காதல் கவிதைகளும்
ஓர் அறியாத பெண்ணின் ஆடைகளை
உரித்துப் பார்பதற்காக மட்டுமே எழுதப்படுகின்றன
ஆண்/பெண் களின் ரகசியமறியும் கருவி
என்பதைத் தவிர
காதல் கவிதைகள் குறித்துச் சொல்ல எதுவுமில்லை
இதயத்திற்கு மேலே சுரக்கும்
முலைக் கண்களின் வெளிப்பாடன்றி
காதல் கவிதைகளென்பது
வேறெதுவுமில்லை நண்பா
ஒரு பெண்ணைக் கிளர்த்த
கவிதை எழுதுவதைக் காட்டிலும்
அவளை வன்புணர்வது
பின் நவீன கடவுளர்களின் யுகத்தில்
புனிதமென்று கொண்டாடப்படும்
இந்த பழைய
கசங்கிய
வெளிறிய
நமுத்த
நாற்றமெடுத்த
ஆடைகளைக் காட்டிலும்
நிர்வாணமென்பது
எத்தனை சுதந்திரம்..!!
7 comments:
:((
ஆமா கண்மணி ஏன் இப்படி அழறாங்க இந்தக் கவிதைக்கு, எல்லாரையும் சிரிக்கவைக்கிற அவங்களை நீங்க இந்தக்கவிதையால் அழவெச்சிருக்கவேண்டாம் அய்யனார்:))
நான் எப்பங்க மறுத்தேன்?
மக்களே இவரு கவுஜ எழுதறதுக்கு ஒரு பச்ச மண்ண இழுத்து காரணம் சொல்றாரு.
அட கொடுமையே :)
வித்தியாசமாக இருக்கிறது.
கதிர் என்ன பாவம் செஞ்சான்?
டீச்சர் :)
செல்வநாயகி
எப்பவும் சிரிப்பவங்கள அழவச்சி பாத்தா நல்லா இருக்கும் தான
கதிர்/மஞ்சுர்
சும்மா ஒரு பேரு தேவை பட்டது
:)
ஆமாம் கோபி கொடுமதான்
Post a Comment