அதிரும் இசைத் துணையுடன்
போதையில் உலவும் இந்த/எந்த கண்களும்
என் முலைத் தீண்டாமல் போவதில்லை
ஆறு வயது வரை என் அம்மாவின் முலைகளில்
பாலருந்திக்கொண்டிருந்தேன் எனும் சொற்றொடர்களை
என் மேல் குற்றங்களைத் தெளிக்க
எத்தனிக்கும் தருணங்களில்
அம்மா பயன்படுத்துவாள்.
இப்போதும் என் முலைகளின்
துணையோடுதான் உணவருந்துகிறேன்
இந்த மார்பு கச்சை
உள்ளாடைகள்
அறை வாடகை
நாப்கின்கள்
பவுடர்
லிப்ஸ்டிக்
அத்தோடு காண்டம்களையும்
வாங்க முடிவது
பெருத்து விம்மிய
என் முலைகளைக் கொண்டுதான்
போதையிலோ/போதையில்லாமலோ
உலவும் எந்தக் கண்களும்
என் முலைத் தீண்டாமல் போவதில்லை
6 comments:
நோ கமெண்ட்ஸ்
இன்றைய 5 கவுஜைகளுக்கும் முதல் பின்னூட்டமென முடிவில் இருப்பதால் இதைப் பதிகிறேன்
அடல்ட்ஸ் ஒன்லியா...
நல்லா இருங்க...
பொண்ணுங்களே இல்லாத பாருக்கு கூட்டீட்டு போனா இந்த மாதிரி கவுஜயே வராது. :)
உங்களுக்கெல்லாம் போதையேறி போச்சுன்னா உடனே கவுஜை எழுதிறணும். அப்படிதான?
ஏன் ஏன் ஏன்?
டீச்சர் ஏன் இந்த கொலவெறி :)
டிபிசிடி கிர்ர்ர்ர்ர்ர்ர்
வே தம்பி படைப்பையும் படைப்பாளியும் லிங்க் பன்ரத விடுய்யா
மஞ்சூர் சும்மா :)
Post a Comment