Saturday, September 1, 2007

வகைத் தொகையில்லா சில உரையாடல்கள்-2



என்னுடலில் உன் இதழ் தீண்டா இடங்கள்
ஏதேனும் மிச்சமுள்ளாதா?
என்ற என் கேள்விக்கு மிகுந்த வெட்கங்களோடு
இல்லையெனும் விதமாய்
நீ தலைகவிழ்ந்து தலையசைத்தாய்
உன்னுடலில் என் இதழ் தீண்டா இடங்கள் பற்றி கேட்டபோது
ச்சீய் என வெட்கி மறுத்தாய்

நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா
அப்படியே போயிருப்பினும்
இத்தனை சீக்கிரம் வேறொருவனை
திருமணம் செய்துகொண்டிருக்க வேண்டாம்
அப்படியே செய்துகொண்டிருப்பினும்
இத்தனை சீக்கிரம் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டிருக்க வேண்டாம்
அப்படியே பெற்றுக்கொண்டிருப்பினும்
அவளுக்கு அபர்ணா எனப் பெயர் வைத்திருக்க வேண்டாம்

இப்போது பார்
அ வில் தொடங்கும் பெயர் வைத்திருக்கிறாயே
என மகிழ்ந்து
வழக்கத்திற்கதிகமாய்
இந்தப் பின்னிரவிலும்
என் கண்ணாடி குவளையில்
இன்னும் மதுவை நிரப்புகிறேன்.

8 comments:

கண்மணி/kanmani said...

ஹேமாவுக்காக வருந்துகிறேன்.[இல்லை ச்சூம்மா இந்த கவிதைக்காரனிடமிருந்து நீ தப்பித்ததற்காக;)]

கதிர் said...

யோவ் ஒரு கட்டிங் எக்ஸ்ட்ரா அடிக்கறதுக்கெல்லாம் "அ" பேர் வச்சிட்டாங்க "ஆயா" பேர்ல வச்சிட்டாங்கன்னு ரீசன் கவுஜயா?

உங்களயெல்லாம் கேக்கறதுக்கு ஆள் இல்லாம போச்சு.

செல்வநாயகி said...

என்னவோ தெரியவில்லை அய்யனார், உங்களின் இந்தக்கவிதைக்கு மட்டும் ஒரு பதில்க்கவிதை எழுதவேண்டும்போல் தோன்றுகிறது:)) மற்றபடி பழையபடி கவிதை அய்யனார் அவதாரமா இந்த வாரயிறுதியில்?

கோபிநாத் said...

ஒவரா அடிச்சா இப்படி தான்

மஞ்சூர் ராசா said...

காதல் கவிதையை பத்தி இன்னொரு இடத்தில் வேறுவிதமாக எழுதிய அதே கைகளா இந்த கவிதையையும் எழுதியது?

அது சரி இது என்ன கவிதை?

கதிர் கேட்கிறதா?

Ayyanar Viswanath said...

டீச்சர் யார் அந்த ஹேமா? ;)

போய்யா வெண்ண :)

Ayyanar Viswanath said...

செல்வநாயகி
ஆஹா நீங்களுமா ..இங்க எதிர்கவுஜ எழுததான் ஒரு கூட்டமே இருக்கே ..ஆமாங்க வீக் எண்ட் ரொம்ப போரடிச்சதின் விளைவுதான் உங்களுக்கெல்லாம் இந்த தண்டனை

Ayyanar Viswanath said...

மஞ்சூர் இது காதல் கவிதையா :(

Featured Post

test

 test