Wednesday, July 25, 2007
மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் ஓஷோ -சில உரையாடல்கள் 2
அடுத்த நாள் சனிக்கிழமை காலை 4.30 எழுந்து குளித்து 6 மணிக்கு டைனமிக் தியானம் தொடங்கப்பட்டது.இருப்பதிலேயே மிகவும் கடினமான மிகவும் சக்தி வாய்ந்த தியானமாக டைனமிக் கருதப்படுகிறது 5 இடைவெளிகளில் மாறிக்கொண்டே இருக்கும் இசை, முதல் 10 நிமிடங்கள் சுவாசத்தை மிகவும் வேகமாக உள்ளிழுத்து விடவேண்டும்.ப்ரீத் ஃபாஸ்ட்..ப்ரீத் ஃபாஸ்ட் என்கிற ஓஷோ வின் உற்சாக குரலும் துள்ள வைக்கும் இசையும் முழுமையான சுவாசம் நடக்க ஒத்துழைக்கும்.அடுத்த 10 நிமிடங்கள் ஜிப்ரிஷ் பைத்திய நிலைக்குப் போய் உள்ளடைப்புகளை வார்த்தைகளாய் வெளித்துப்பல்.அடுத்த 10 நிமிடங்கள் ஜம்ப் அண்ட் ஊ எம்பிக் குதித்து அடிவயிற்றிலிருந்து ஊ என குரலெழுப்ப வேண்டும்(மிகவும் கடினமானது இந்த முறைதான்) நான்காவது ஸ்டாப் எனும் ஓசைக்குப் பின் அந்தந்த நிலைகளிலே உறைந்து போக வேண்டும்.சகலமும் அடங்கி சொந்த வீட்டில் புதைந்து கொள்ளும் மனம்.இது 15 நிமிடங்கள்.ஐந்தாவது நிலை கொண்டாடுதல் மாறும் இசைக்கேற்ப மெல்ல உடல் தளர்த்தி நடனம் இதுவும் 15 நிமிடங்கள். இறுதியில் உடலை தரையில் கிடத்தி விடுதல்.தியானத்திற்க்குப் பின் காற்று போன பலூன் போல ஆகிவிடும் உடல்.ஒரு புள்ளியில் உறைந்து போகும் மனம்.
காலை உணவு இடைவேளைக்குப்பிறகு நாத பிரம்மா தியானம்.திபெத்திய முறையான இத்தியானம் காந்த சக்தியை தூண்டவல்லது.பின்னனியில் மணி சப்தம் ஒலிக்க உடம்பை ஒரு வெண்கல மணியாய் கருதிக்கொண்டு அடிவயிற்றிலிருந்து சப்தம் எழுப்ப வேண்டும். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஒலி எழுப்பும்போது சுவாசத்தை உள்ளிழுக்க கூடாது.உடல் முழுக்க ஒரு அதிர்வு ஏற்படும் உடலின் எல்லா சக்கரங்களும் இயங்க ஆரம்பித்து உடலின் அதீத காந்த சக்தியை உணரச் செய்யும் தியானமிது.சக துணையுடன் அதாவது மனைவியுடன் இத்தியானத்தை செய்வது மிகுந்த பலனளிக்கும்.அடுத்து ஓஷோவின் ஒலிநாடா ஏதாவது ஒரு தலைப்பில் அவர் பேசிய பிரசங்கத்தை கேட்கலாம்.அதுமுடிந்த பின் நட்ராஜ் தியானம்.வழக்கம்போல் உடலதிர ஆட்டம் இறுதியில் தியானம்.ஓஷோவின் தியானமுறைகளைப் பொறுத்த வரை நாம் எதையும் மெனக்கெட்டு செய்யவேண்டியதில்லை அதுவே நிகழும் உடம்பை,மனதை தியானத்திற்க்கு தயார் படுத்திக்கொள்ளுதலே நம்முடைய வேலை.அதாவது காற்று வர சன்னலைத் திறப்பது போல்.
ஓஷோவின் தியானத்தில் நடனத்திற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.சிரிப்பு தியானம்,நாத பிரம்மா,நட்ராஜ்,நோ மைண்ட்,குண்டலினி,விர்லிங்,கெளரி சங்கர்,சக்ரா,மண்டலா,நோ டைமென்சன் இப்படி தியான முறைகளை ஓஷோ வடிவமைத்துள்ளார் நடைமுறை வாழ்விற்கேற்ப உடல் மனம் எல்லாம் இயங்க செய்யும் அதி அற்புத தியான முறைகள்.வாழ்வு,மரணம்,காதல்,காமம்,இன்பம்,துன்பம்,தனித்தன்மை,போராட்டம்,தியானம் என்பது குறித்த சரியான புரிதல்கள் இவரிடம் மட்டும்தான் உள்ளது.ஆனால் கவனம் மேலோட்டமான வாசிப்பும் அரைகுறை தியானமும் உங்கள் கவனத்தை திசைதிருப்பலாம்.ஓஷோ மிகவும் ஆபத்தான மனிதரும் கூட.வலையில் உலவும் சில கிறுக்குகள் கூட அவரின் சன்னியாசிகள் எனக்கேள்விப்பட்டபோது சிரிப்புதான் வந்தது.
0----------------0-----------------
முதல் முகாம் முடித்து விட்டு வந்து நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.தியானத்தன்மையின் நீட்டிப்பை எப்போதும் விரும்பியது மனம்.மூளையில் யதார்தத்தின் பிரச்சினைகள் படிய ஆரம்பித்தது, இழந்ததை இடைவிடாது யோசித்தபடி இருக்கும் மனத்தை நிகழில் ஒட்டவைக்கப் போராட வேண்டியிருந்தது.மனம் அலைவுறுவது தெரியாத வரை எந்த பிரச்சினையுமில்லை.அது நிகழின் சுவையை தெரிந்து கொண்டுவிட்டால் அலைவுக்கும் நிசப்சத்திற்க்குமுள்ள வேறுபாடுகளைத் தெரிந்துகொண்டுவிட்டால் சிக்கல்தான்.அடுத்த இரண்டு மாதங்களிலேயே அடுத்த தியான முகாமிற்க்கு சென்றேன்.அந்த முகாமில் சன்னியாசத்திற்க்கான உறுதியுமெடுத்துக்கொண்டேன்.சன்னியாசம் வாங்கிய அனுபவத்தை தனிப்பதிவாய் எழுத வேண்டும்.
ஒவ்வொரு தியான முகாம் முடிந்து திரும்பும்போதும் தொண்டையிலிருந்து மூன்று நாளைக்காவது குரல் சுத்தமாய் வராது.
0--------------0-----------------
ஹாய்டா!
ஹே வீணா!
நாளைக்கு எனக்கு ஆஃப் டே வர்ரியா மேட்னி போலாம்..சரியா 1.30 க்கு ஆபிஸ் வந்தின்னா ரெட்ட கால் போட்டு உன் பைக்ல உட்காருவேன் 5 நிமிசம் லேட்டானாலும் ஒரு சைட்தான் ஓ கே வா?
வீணா! நாளைக்கு செந்தில் வீட்ல தியானம் பன்றோம் அவங்க வொய்ஃப் லாம் இருப்பாங்க நீயும் வாயேன்
என்னாஆஆஆஅது தியானமா??
ம்..ஓஷோ ..நாதபிரம்மா பண்ணப்போறோம்..
ஏய் ச்ச்சு அதெல்லாம் கேன்சல் பண்ணு ..ஒழுங்கா வா
இல்ல வீணா! நீ வர்ரதா இருந்தா செந்தில் வீட்டுக்கு வா! நான் கிளம்பறேன்.
0----------------0----------------------
மூன்று முகாம்களுக்குப் பிறகு ஓஷோ பிறந்த வீட்டிற்க்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் குச்வாடா எனும் குக்கிராமத்திற்க்கு நண்பர்களுடன் சென்றேன்.அருகிலிருக்கும் மிக அழகான ஆசிரமத்தில் ஒரு வாரம் தங்கினோம்.தினம் அவரது வீட்டில் நாத பிரம்மா தியானம் செய்தோம்.மறக்கவே முடியாத அற்புத அனுபவங்களாக இருந்தது அந்த நாட்கள்.அத்தனை அனுபவங்களையும் தொடர் கட்டுரைகளாக எழுதவும் உத்தேசம்.மேலும் இராஜ யோகம்,வேதாத்திரி மகரிஷி,ப்ராணிக் ஹீலிங்க் மேலதிகமாய் சென்னையடுத்த திருமுடிவாக்கத்தில் தம்ம சேது தியான மையத்தில் 10 நாட்கள் தங்கி விபாஸனா தியானம் மற்றும் தம்மம் பயின்றதென என் அலைவுகளைனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசையுமிருக்கிறது.எப்போதும் விழிப்பான என் சோம்பலை தூங்கச் செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிக்க வேண்டும்.
கோயம்பத்தூரில் ஞான் ரிக்தா என்பவர் தியான முகாம்கள் நடத்தி வருகிறார்.வெகு சிறப்பாய் இருக்கும்.இந்த தியான முகாம்களில் கலந்துகொள்ள நமது பதிவர்கள் ஓசை செல்லா அல்லது ஆனந்த் நிரூப்பை தொடர்பு கொள்ளவும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
பண்பாடு,கலாச்சாரம்,நாகரீகத்தின் வளர்ச்சி,நகரீயமாதலின் வளர்த்தெடுப்புகள் முதலில் தேடி அழிப்பது நாம் வாழும் சூழலின் வழக்கு மொழியையைத்தான்.நமக்...
20 comments:
//ஓஷோ மிகவும் ஆபத்தான மனிதரும் கூட.வலையில் உலவும் சில கிறுக்குகள் கூட அவரின் சன்னியாசிகள் எனக்கேள்விப்பட்டபோது சிரிப்புதான் வந்தது.//
adappaavi manusaa ennaiya sollaliye?!
ஹூம்!! ஏகப்பட்டது வைத்திருக்கிறீர்கள் போலும்.
தொடருங்கள்.. படிக்காவது செய்கிறோம்.
சன்னியாசம் ஏன்? என்பதையும் சொல்லுங்கள்.
எப்போதும் விழிப்பான என் சோம்பலை தூங்கச் செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிக்க வேண்டும்.
சீக்கிரம் தூங்கச்செய்யுங்கள்.
உங்களில் பல அனுபவங்கள் உணர்வு பூர்வமமானவைகள்,அதனை எழுத்து வடிவில் உணர காத்திருக்கிறோம்.
என்னது டைனமிக் தியானமா? பேரே சரி இல்லயே!
தல உங்கள சொல்லுவனா? உங்கள பத்திதான் வலைக்கே தெரியுமே
நன்றி குமார்
தம்பி :)
எப்போதும் விழிப்பான என் சோம்பலை தூங்கச் செய்துவிட்டுத்தான் எழுத ஆரம்பிக்க வேண்டும்.
it is really super pa
becasue my teen age I read Osho
book that time all my friends and family members seen as a stranger of the world.
hello ayyanar, unkal pathivai padithathillai entu ninaikiren but i have read your feed back in many sites. dideernu parthaa OSho - viduvena - niraya kartu irukireerkal - nalla muyarchi
where are you - what is your age
(athai mattum solla koodaathu)
unkal adutha thodarum, munpathivum padikka uthesam
avan
அய்யனார், தலைப்பிலிருந்த பலம் உள்ளடக்கத்தில் இல்லையோ என்றே தோன்றுகிறது. முதல் பகுதி படிக்கும் போது இரண்டாவது பகுதியில் நிறைய இருக்குமென்று நினைத்தேன். ஒருவேளை அதிகம் எதிர்பார்த்துவிட்டேனோ? தவறாக ஏன் புரிந்து கொள்ளக் கூடாது- உண்மையில் ஓஷோவின் சிறப்பு என்ன என்பதை எங்காவது சொல்லிருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். உரையாடல்களில் உங்களை தான் அதிகம் காண முடிந்ததே தவிர ஓஷோவையல்ல.
// மூன்று முகாம்களுக்குப் பிறகு ஓஷோ பிறந்த வீட்டிற்க்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. //
ஓஷோ - மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது அவரின் சிஷ்யர்களாலே.
பல்வேறு பெயர்களில் (டைனமிக் தியானம் ??) இப்போது தியானங்களும் ,போதனைகளும் விற்கப்படுகிறது.
சிந்தனாவாதிகளின் கருத்துகள் நிறுவனமயமாக்கப்படும் போது , அவர்களின் கருத்துகள் கல்லறைக்குள் அனுப்பப்பட்டுவிடுகிறது.
இப்படி டைனமிக் குரூப்புகள் உருவாக்கப்படும்போது ஓஷோ அடுத்த கடவுளாக்கப்படுவார். அவரின் வீடு புனிதமாக்கப்படும்.
****
ஒஷோ "என்னை விட்டு விலகிப் போங்கள்" என்று ஏதாவது புத்தகம் எழுதி இருக்கிறாரா? :-))) அப்படி இருந்தால் ஒஷோ இரசிகர்கள் அதையும் படிக்கலாம்.
இயேசு,புத்தன்,பெரியார் ...இவர்களுக்கு நேர்ந்த கதி இவருக்கும். :-((
*****
//சிரிப்பு தியானம்,நாத பிரம்மா,நட்ராஜ்,நோ மைண்ட்,குண்டலினி,விர்லிங்,கெளரி சங்கர்,சக்ரா,மண்டலா,நோ டைமென்சன்//
?????
// நாளைக்கு செந்தில் வீட்ல தியானம் பன்றோம் அவங்க வொய்ஃப் லாம் இருப்பாங்க நீயும் வாயேன் //
இல்லை, முடியாது.
எனது தெருவில் உள்ள குப்பைகளை அள்ளிவிட்டு , வாட்ச்மேன் பையனுக்கு கணக்குப் பாடமும் , civic -Sense பாடமும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
:-))
****
நேற்றைய ஓஷோவில் தொடங்கி இன்றைய வாழும் கலை சிரி.சிரி.சிரி பாபா வரைக்கும் எத்தனை தியானக் குழுக்கள் இந்தியாவில்?
அப்படி இருந்தும் ஏன் இந்தியா இன்னும் இப்படி உள்ளது?
பணம்,கார் ,வசதி தாண்டி மனது மகிழ்சியாய் இருக்க வேண்டும் என்று தேடும் கும்பலுக்கு ஆன்மீக/தியானா விசயங்களை சப்ளை செய்கிறது. அவ்வளவே.
ஒரு பாமரனுக்கு காவடி ஆட்டம்,தீச்சட்டி என்றால் அடுத்த வர்க்கத்தினருக்கு தியானங்கள்.
*****
சினிமா பார்ப்பது, கதை படிப்பது, சுற்றுலா போவது போன்று இது ஒரு பொழுது போக்குத்தான்.
தியானங்கள் செய்து ஒருவன் மனம் மகிழ்ச்சியாய் இருப்பதும்.
அதைத் தாண்டி இதில் ஒரு சிறப்புகளும் இல்லை. < டிஸ்கி: என்னளவில் :-)) >
***
ஒஷோ மட்டும் அல்ல மற்ற அனைத்து சிந்தனாவாதிகளும் படிக்கப்பட, அறிந்து கொள்ளப்பட வேண்டியவர்கள். ஆனால் ஒன்றைப் படித்து அங்கேயே நின்றுவிடக்கூடாது.அதை உள்வாங்கிக்கொண்டு அதையும் தாண்டி பிரயாணிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படிப் படித்து பல இடங்களில் மக்கள் அப்படியே நின்றுவிட்டதால்தான் இன்று பல மதங்கள் உள்ளன. இந்த தியானக் குழுக்களும் அப்படி ஆகி வருகிறது.
புதுவைக்குயில் நன்றி
அனானி
27 / துபாய்
ஜெஸிலா
ஓஷோ மந்திரத்தில் மாங்காய் வரவைத்தார்,இரட்டை கால்களில் நின்றார்,மூக்கில் மூச்சு விட்டார் இப்படியாக புனித பிம்பங்களை கட்டமைக்கும் வியாபார விளம்பரங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.மேலும் அவரின் புகழை உலகறியச் செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிவயப்பட்ட பிரச்சார பீரங்கியுமில்லை நான்.என் தனிப்பட்ட வாழ்விற்க்கும் ஒஷோவிற்குமான தொடர்பை பதிவித்திருக்கிறேன் அவ்வளவுதான்.
ஒரு சாமியார் கட்டுரை என்பது அவர் புகழை பரப்பும் பிரச்சாரமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பழகிய மூளையின் தவறே தவிர வேரெதுவுமில்லை :)
பலூன் மாமா விரிவான பகிர்தல்களுக்கு நன்றி
/ஓஷோ அடுத்த கடவுளாக்கப்படுவார். அவரின் வீடு புனிதமாக்கப்படும்./
இதைப்போன்றெதுவும் நடந்துவிடாது :)
மேலும் உள்ளிருக்கும் புத்தரை விழிப்படைய செய்வதுதான் ஓஷோவின் நோக்கமாக இருந்தது.புத்தரையோ கடவுள் எனும் பிம்பத்தை வழிபடுவதையோ தவிர்த்து தன்னைத்தானே வழிபடுவதின் ரகசியத்தை சொன்னவரும் அவர்தான்.அந்த வீடு மிக அழகான வீடு..ஒரு குக்கிராமத்தின் மச்சு வீடு.. சாணமிட்டு மெழுகிய தரையும்.. சப்தமே இல்லாத மோனமும் ரம்மியமாய் இருக்கும்..அந்த அழகுணர்ச்சிதான் கவர்ந்ததே தவிர புனித பிம்பம் எனும் நோக்கில் இல்லை..
/சிரிப்பு தியானம்,நாத பிரம்மா,நட்ராஜ்,நோ மைண்ட்,குண்டலினி,விர்லிங்,கெளரி சங்கர்,சக்ரா,மண்டலா,நோ டைமென்சன்//
????
ஓஷோ வடிவமைத்த தியான முறைகளின் பெயர்கள் 115 தியான முறைகளை வடிவமைத்துள்ளார்.
/பணம்,கார் ,வசதி தாண்டி மனது மகிழ்சியாய் இருக்க வேண்டும் என்று தேடும் கும்பலுக்கு ஆன்மீக/தியானா விசயங்களை சப்ளை செய்கிறது. அவ்வளவே. /
இது நிதர்சனம்தான் என்றாலும் ஒஷோ தியான முறைகள் அவ்வளவு எளிதல்ல..பின்னி பெடலெடுத்து விடும்..:)
தேடுதலும் வேட்கையும் இல்லாதோர் ஓஷோ வை நெருங்க கூட முடியாது.புத்தகங்களைப் படித்து வாய் வலிக்க பேசிக்கொள்ளலாம் அவ்வளவே...
அய்யனார்,
//ஒரு குக்கிராமத்தின் மச்சு வீடு.. சாணமிட்டு மெழுகிய தரையும்.. சப்தமே இல்லாத மோனமும் ரம்மியமாய் இருக்கும்..அந்த அழகுணர்ச்சிதான் கவர்ந்ததே தவிர புனித பிம்பம் எனும் நோக்கில் இல்லை.. //
:-))
இது போல் ஆயிரம் வீடுகள் இந்தியாவின் கிராமங்களில் உள்ளன.
அழகுணர்ச்சி மட்டுமே காரணம் என்றால் அந்த அழகை கொட்டாம்பட்டி குப்புசாமி வீட்டில்கூட காணலாம்.என்ன குப்புசாமி இப்படி தியானங்கள் சொல்லித் தருவது இல்லை.
*அந்த வீட்டிற்கு * உங்களைப் பயணிக்க வைத்தது ஒஷோ என்ற ஒரு பிம்பம்தான்.
சமாதிகளுக்கும் , அடையாளங்களுக்கும் கூட்டம் வரும்போது என்ன நடக்கிறது என்பது தெரிய வேண்டும். உங்களின் காலத்திற்குப்பிறகு அதுவும் ஒரு புனிதமாக்கப்படலாம். :-((
//இது நிதர்சனம்தான் என்றாலும் ஒஷோ தியான முறைகள் அவ்வளவு எளிதல்ல..பின்னி பெடலெடுத்து விடும்..//
இது ஒரு துறையில் சிறப்பாக (expert) இருப்பவர்கள் அதைக் கற்றுக் கொள்ளவரும் ஒரு அப்பரண்டீஸிடம் சொல்லும் மிகச் சாதாரண வார்த்தை.
ஒஷோ தியான முறைகள் மட்டும் அல்ல. உலகில் எல்லா விசயங்களும் அதன் அளவில் கடினமானவையே.
கல்லுடைப்பது கூட அதற்கான நெளிவு சுழிவுகளை உள்ளடக்கியது. தேடுதலும் வேட்கையும் இல்லாதோர் கல்லைக்கூட நெருங்க முடியாது என்றுகூட சொல்லலாம். :-))).
யாருக்கு எது தேவையோ அதைத் தெரிவு செய்து முயல்கிறான். நான் தெரிவு செய்த விசயம் மட்டும் கடினமானது என்று சொல்ல முடியாது. :-))
தேவைகள் முடிவகும்போது கடினமான பாதைகள் எல்லாம் சுலபமாக கடக்கப்படும்.
****
// புத்தகங்களைப் படித்து வாய் வலிக்க பேசிக்கொள்ளலாம் அவ்வளவே... //
அதே...
புத்தகங்களைப் படித்து விட்டு சுஜாதாவின் வாசகர் வட்ட ரேஞ்சில்( பெண்ணியத்தால் சுவத்தில் ஒண்ணுக்குப் போக முடியாது) ஒரு குழு பேசிக் கொண்டுள்ளது.
இதுபோல் செய்முறைகளைக் கற்றுவிட்டு மற்றஒரு குழு அனுபவங்களைப் பகிர்கிறது...
அவரவர்களின் அனுபவம் பகிரப்படுதல் நல்லதே.
படிப்பவர்கள் சில சமயங்களில் இதில்தான் எல்லாம் உள்ளது என்று நாளை ஒஷோ-சர்டிபைடு தியானிஸ்டுகளாகி ..அடுத்த கட்டமாக ஒஷோ -வீடு தரிசனம் போக ஆரம்பித்துவிட்டால்..என்ன செய்வீர்கள்?
படித்து விட்டு பேசுவதில் உள்ள அபாயம் இது போல் ஆன்மீக/தியான அனுபவப் பதிவுகளிலும் உள்ளது. :-))
பேசாமல் ஒரு டிஸ்கி போட்டு விடுங்கள். இது எனது அனுபவம். தியான ரிசல்ட் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம் என்று. :-))
/யாருக்கு எது தேவையோ அதைத் தெரிவு செய்து முயல்கிறான். நான் தெரிவு செய்த விசயம் மட்டும் கடினமானது என்று சொல்ல முடியாது. :-))/
இது உண்மைதான் ஆனால் பின்னிப் பெடலெடுத்து விடும் என நான் பதில் சொன்னது
/பணம்,கார் ,வசதி தாண்டி மனது மகிழ்சியாய் இருக்க வேண்டும் என்று தேடும் கும்பலுக்கு ஆன்மீக/தியானா விசயங்களை சப்ளை செய்கிறது. அவ்வளவே. / இந்த கேள்விக்கே
பணக்காரன் மகிழ்வாய் இருக்க மற்ற இடங்கள் வழிவகை செய்யலாம் ஆனால் ஒஷோ கட்டமைத்த தியானங்களில் சாத்தியமில்லை இஃதொரு அப்பரண்டிசிற்க்கு சீனியர் சொல்லும் மனோநிலை இல்லை ..உண்மை :)
/படிப்பவர்கள் சில சமயங்களில் இதில்தான் எல்லாம் உள்ளது என்று நாளை ஒஷோ-சர்டிபைடு தியானிஸ்டுகளாகி ..அடுத்த கட்டமாக ஒஷோ -வீடு தரிசனம் போக ஆரம்பித்துவிட்டால்..என்ன செய்வீர்கள்? /
நல்ல விசயம்தான்..என்ன ரஜினி படம் காத்து வாங்கும்..தொப்புள் நடிகைகளின் சினிமாக்கள் சீந்தப்படாது..தமிழ்மணத்தில் மொக்கைகள் குறையலாம்..அட மக்கள் சிந்திக்க ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்க்கில்லை..
/இது எனது அனுபவம். தியான ரிசல்ட் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம் என்று. :-))
நான் எழுதுவதை அப்படியே உள்வாங்கி கொள்ளும் வாசகர் வட்டம் இருக்குமெனில்..நான் எழுதுவதை உலகப் பொது நீதி என எல்லாம் ஒத்துக் கொண்டால் இது போன்ற திஸ்கிகள் அவசியமாகப் படலாம்.உண்மை அதுவாக இல்லாததினால் இங்கே எழுதப்படும் எல்லாமே தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது சுய புலம்பல்கள் :)
//... தமிழ்மணத்தில் மொக்கைகள் குறையலாம்.. //
மிஸ்டர் ஓசை செல்லா இங்க இன்னொருத்தர் புதுசா கிளம்பி இருக்கார்.மாலன்,தமிழச்சி வரிசையில் அய்யனாரைம் பின்னிப் பெடலெடுக்க அழைக்கிறேன். :-))
அய்யனார் உங்கள் தகவலுக்காக: :-))
தமிழச்சிக்கு வந்த சோதனை!!! வேதனை... வேதனை!!
http://osaichella.blogspot.com/2007/07/blog-post_24.html
இப்படிச் சொல்லீட்டேங்களே மாலன் ??!!
http://osaichella.blogspot.com/2007/07/blog-post_08.html
****
அய்யனார்,
//நல்ல விசயம்தான்..என்ன ரஜினி படம் காத்து வாங்கும்..தொப்புள் நடிகைகளின் சினிமாக்கள் சீந்தப்படாது..//
சிந்தனாவதிகளின் வீடுகள் புனிதமாகிப்போனால்(முக்கியத்துவம் தரப்பட்டால்) மற்றொரு அய்யப்பன்,திருப்பதிகள் போல் பக்தர்களின் கூண்டாரமாகிவிடும் என்ற அர்த்ததில்தான் சொன்னேன். இந்த இடங்களுக்குச் செல்லும் பக்த கோடிகள் எல்லாம் சினிமா நடிகையின் தொப்புள் பார்க்காதவர்கள் அல்ல.
உதாரணம்: வலைப்பதிவுகளில் சிவாஜி பற்றி எழுதிய 99.9 % மக்கள் எதோ ஒரு மத நம்பிக்கை உள்ளவர்களே.மேலும் இவர்கள் திருப்பதி போன்ற புனித தலங்களை விரும்பிச் சென்று கூட்டமாக்குபவர்கள்.
நீங்கள் சொல்லும் ஒஷோவின் வீடும் நாளை இப்படிக் கட்டமைக்கப்பட்டுவிட்டால் மக்கள் அந்த புனித இடத்தையும் திருப்பதி,அய்யப்ப லிஸ்டில் சேர்த்துக் கொள்வார்களே தவிர ... தொப்புளைவிட மாட்டார்கள் . :-))
//இங்கே எழுதப்படும் எல்லாமே தனிப்பட்ட அனுபவங்கள் அல்லது சுய புலம்பல்கள்//
:-))
****
கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி அய்யனார்.
/மிஸ்டர் ஓசை செல்லா இங்க இன்னொருத்தர்/
பலூன் மாமா ஓசை செல்லா ஒஷோ சீடராம் அதுனால என்ன விட்டுடுவாராம்:)
/சிந்தனாவதிகளின் வீடுகள் புனிதமாகிப்போனால்(முக்கியத்துவம் தரப்பட்டால்) மற்றொரு அய்யப்பன்,திருப்பதிகள் போல் பக்தர்களின் கூண்டாரமாகிவிடும் என்ற அர்த்ததில்தான் சொன்னேன்/
உங்களின் முதல் பின்னூட்டத்திலேயே இதைப் புரிந்து கொண்டிருப்பினும்..சில அதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாமே என்றுதான் போட்டு வாங்கினேன் :)
இரண்டு நாட்களுக்கு முன்பு உங்களைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம்.தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களில் ஒருவர் என் மனதின் ஓரமாய் ஒரு தகவலை போட்டு வைத்திருந்தேன்.
இரண்டே நாட்களில் வந்து விட்டீர்கள் :)
கருத்துக்களை பகிந்ந்து கொண்டதற்க்கு மிக்க நன்றி பலூன் மாமா
அய்யனார்,
பின்னூட்டமிட எத்தனித்து அது நீண்டு கொண்டே போனதால்..தனிப்பதிவாக எனது வலை பூவில் இட்டிருக்கிறேன்
தொடுப்பு http://enn-ennangal.blogspot.com/2007/07/blog-post_26.html
பரத் தாமத்திற்க்கு மாப்பு
நாளை இதுகுறித்து உங்கள் பதிவில் விவாதிக்கலாம் ..செல்லாவின் மறுமொழி திருப்திகரமாக இல்லை
முரண்கள் நிறைந்த கருத்துக் குவியல்களான அவரது பேச்சில் உள்ள நகைச்சுவை உணர்வு மிகவும் பிடிக்கும். அதோடு, எடுத்துச் சொல்லும் மேற்கோள்களும், சரளமாகத் தொடர்ந்து வரும் சிந்தனைத் தொடரும் மலைக்க வைப்பவை.
இன்னொன்று: ஜீஸசை அவர் கேலி செய்தது போல் யாரும் செய்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
/ஜீஸசை அவர் கேலி செய்தது போல் யாரும் செய்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்./
ஆமாம் ஐயா..ஜீசஸை மட்டுமல்ல இவர் கிண்டலடிக்காத சாமிகளே இல்லை ..மதங்கள் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள் இவைகளுக்கெதிரான எள்ளலும் கேலியும்தான் இவருக்கு அதிக எதிரிகளை உருவாக்கியது
Post a Comment