Saturday, April 7, 2007

இரத்தத்தில் மிதக்கும் உடல்

உன்
ஞாபக இடுக்குகளிலிருந்து
எப்போதும் வழிந்து கொண்டிருந்த
அடர் குருதியினை
என் உதடுகள் கொண்டு
துடைக்க முயன்றேன்..

வலிகளை சுமந்தலைந்திருந்த
ரணங்களின் குருதி
என் உதடு வழி
உட்சென்று இரைப்பையை
நிறைத்துப் பின் மெல்ல
உடல் திசுக்களெங்கும்
நிறைந்தது.

சிறுமியின் மூச்சுக் காற்றை
உள்ளடக்கிய பலூனைப்போல்
உன் வலிகளின் ரத்தம்
என் உடலினை வீங்கச்
செய்திருந்தது..

இடைவிடாத உறிஞ்சுதலில்
உறைந்திருந்த காலம்
சோர்ந்த கண்களின் வழியாய்
வெளித்துப்பியது
நிகழை..

வெகு நாட்கள்
திரும்பியிராத என்
தனிமை அறை
உள்வாங்கிக் கொண்டது
பழகிய காதலியைப்போல்

இருளில் புதைந்த
என் தூக்கம்

குளிர்ச்சியின் ஈரத்தில்
திடுக்கிட்டு கண்விழிக்கையில்
மிதந்து கொண்டிருந்ததென்னுடல்
ஏற்கனவே அறையை நிரப்பியிருந்தது
உடலிலிருந்து இளகிய
உன் ரத்தம் ….

6 comments:

Anonymous said...

கவிதையே ரத்த நிறம். வாசிக்கவே பயமாக இருக்கிறது. காட்சிப்படிமம் கண்முன் விரிய அந்த வலிகளை வாசிப்பவர்களுக்குள் கடத்துகிறது இந்தக் கவிதை.

Ayyanar Viswanath said...

:)

நன்றி அனானி ..நோக்கம் அதுதான் வலிகளை கடத்துவது

Jazeela said...

உங்கள் கவிதையில் ஒருவித வேதனை தெரிகிறது. தேர்ந்தெடுக்கும் வார்த்தைகள் மிக தீவிரமாக இருக்கிறது.

//உன் வலிகளின் ரத்தம்
என் உடலினை வீங்கச்
செய்திருந்தது..// வலியில் உடல் மெலியும் இங்கு வீங்கியிருக்கிறது!? ;-)

Ayyanar Viswanath said...

வலியில் உடல் மெலியும் இங்கு வீங்கியிருக்கிறது!? ;-)

ஏற்கனவே வலிகளின் ரத்தம் உறிஞ்சி இருக்கிற உடல் வீங்கியுள்ளது

என்னமா கற்பன பன்றாங்கப்பா ன்னு திட்டுரது காதில் விழுது.:)

காட்டாறு said...

வலியின் ஆழம் வார்த்தைகளில். நன்றாக எழுதியுள்ளீர்கள்!

காயத்ரி சித்தார்த் said...

சாரி.. இந்த கவிதை எனக்கு புரியல.
விளக்கம் சொல்வீங்களா?
:(

Featured Post

test

 test